இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென பாரியளவு அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை 6.45 மணி நேரம் வரையான தகவல்களுக்கு அமைய இந்த எண்ணிக்கை தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்றைய தினம் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதலாம் இணைப்பு : புதிய கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1206 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 4.30 வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் காரணமாக இலங்கையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர்.

அத்துடன், 712 பேர் குணமடைந்துள்ளனர். 484 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆபத்தான நிலைமையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என வேல்ட் மீற்றர் இன்ஃபே இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சாப்பாட்டிற்காக தினமும் பிச்சையெடுத்த பெண் : திருமணத்தால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!!

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலித் பிரசாத். பெரும் வியாபாரியான இவர் கொரோனோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வருமானமில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் மக்களுக்கு உதவும்வகையில் உணவு பொட்டலங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உதவியாக அவரது டிரைவரான அனிலும் உடன் சென்றுள்ளார். அப்போது ஒரு பகுதியில் தினமும் தொடர்ந்து ஒரு பெண் வந்து உணவு பொட்டலங்கள் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் அனிலுக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அந்த பெண்ணிடம், நீ ஏன் தினமும் பிச்சை எடுக்கிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு அவர் என் பெயர் நீலம், எனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் என் சகோதரர் என்னை தாயுடன் விரட்டிவிட்டார்.

பிழைப்பதற்கு வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சை எடுத்து வருகிறேன் எனக்கூறி க ண்கலங் கியுள்ளார். இதனைக் கேட்டு அவர் மீது இரக்கம் கொண்ட அனில் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து தனது முதலாளியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது முதலாளி இருவருக்கும் நேற்று திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் நீலம் கடவுள் என்னை கைவிடவில்லை என ஆனந்ததுடன் கண்கலங்கியுள்ளார்.

நள்ளிரவில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி சாலையில் அலறிக்கொண்டு ஓடி வந்த விதவைப் பெண்!!

விதவைப் பெண்..

தமிழகத்தில் கா தலியை ந ள்ளிரவில் எ ரித்துக் கொ லை செ ய்த ரவுடியைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). கறிக்கடை தொழிலாளியான இவருக்கு மனைவியும் 10 வயதில் மகளும் உள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால் கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். காவல்நிலையங்களில் செந்தில்குமார் ஒரு சரித்திரக் கு ற்றவாளியாகப் பதிவாகியுள்ள நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது.

அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பார்வதி. இவரது கணவர் முருகன் இ றந்துவிட்டார். ஆந்திராவில் உள்ள சித்ரதுர்காவில் கல்குவாரியில் விதவைப் பெ ண்ணான பார்வதியும், செந்தில்குமாரும் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் சொந்த ஊர் திரும்பிய பின், பார்வதிக்கு மேலும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமார் பார்வதியுடன் அ டிக்கடி த கராறில் ஈடுபட்டு வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு அய்யம்புதூரில் உள்ள பார்வதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செந்தில்குமார் பார்வதியுடன் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார்.

இருவரும் ச ண்டை போ ட்டுக் கொண்டே தெருவுக்கு வந்து விட்டனர். அந்த நேரத்தில், மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த ம ண்ணெண் ணெயை பார்வதி, மீ து ஊ ற்றிய செந்தில்குமார், அவர் மீது தீ வை த்து வி ட்டு ஓ டிவிட்டார்.

உ டல் மு ழுவதும் தீப்ப ற்றி எ ரிந்ததால் அ லறியபடி ஓ டிய பார்வதியின் ச த்தம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் ஓ டிவந்து தீயை அணைத்தனர். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பார்வதி திங்கள் அதிகாலையில் உ யிரிழந்தார்.

இதையடுத்து கொ லை வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் கொரோனா தொற்று சந்தேகநபர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டி விபத்து!!

நோயாளர் காவு வண்டி விபத்து..

கொரோனா தொற்றுக்கு இலக்காகியதாக ச ந்தேகிக்கப்படும் நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி, டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ். தென்மராட்சி A9 வீதியின் மீசாலை புத்தூர் சந்திக்கருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு வி மானப்ப டையின் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மூவரை அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியுயே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் இதன்போது உ யிர் சே தமோ, கா யங்களோ யாருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனையடுத்து கொரோனா தொற்று சந்தேகநபர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தை தடுத்து வைத்துள்ள கொடிகாமம் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கிணற்றில் 9 ச டலங்கள் : உ டம்பில் காணப்பட்ட கா யங்கள் : அம்பலமான கொ டூர ச தித்திட்டம்!!

ஒரே கி ணற்றில்..

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ஒ ரே கி ணற்றில் இ ருந்து 9 ச டலங்கள் மீ ட்கப்பட்ட ச ம்பவத்தில் அ திர்ச்சி பி ன்னணி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் கோரிகுண்டா பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடம் அருகே அமைந்துள்ள கி ணறு ஒ ன்றில் இ ருந்து கடந்த வியாழனன்று 4 ச டலங்கள் மீ ட்கப்பட்டன.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ச டலம் மி தந்த நி லையில், கி ணற்றின் த ண்ணீரை இறைத்து, மேற்கொண்ட சோ தனையில் 4 ச டலங்கள் மீ ண்டும் மீ ட்கப்பட்டன. வாரங்கல் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் மாநிலம் மு ழுவதும் அ திர்வலை களை ஏ ற்படுத்தவே,

மாநில உள்விவகார அமைச்சகம் தலையிட்டு, உடனடி அறிக்கை சமர்ப்பிக்க கோரியது. இந்த நிலையில், த ற்கொ லையாக இருக்கலாம் என க ருதியிருந்த இச்சம்பவம் தி ட்டமிட்ட கொ லை என வி சாரணையில் தெரியவந்துள்ளது.

இ றந்தவர்களில் ஆறு பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர். மசூத் ஆலம், இவரது மனைவி நிஷா, இவர்களின் பிள்ளைகள் ஷாபாஸ், சோஹைல், புஸ்ரா, இ வரது மூ ன்று வ யது மகன் ஆகியோர் மேற்கு வங்கத்தில் இருந்து வேலை தேடி புலம்பெயர்ந்தவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக மசூத் ஆலம் தெலங்கானாவில் வாழ்ந்து வருகிறார். இந்த வி வகாரத்தில் தற்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரை ச ந்தேகத்தின் அ டிப்படையில் கை து செய்து விசாரித்ததில், உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சஞ்சய் குமார் தமது ந ண்பர்கள் சிலருடன் இ ணைந்து இந்த 9 ந பர்களையும் கி ணற்றில் த ள்ளி கொ லை செ ய்துள்ளதை ஒ ப்புக்கொண் டுள்ளார்.

மட்டுமின்றி, டெல்லியில் குடியிருக்கும் மசூத் ஆலத்தின் ம ருமகன் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே தா ம் கொ லை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உணவில் தூ க்க மா த்திரை கலந்து அளித்து, அவர்கள் மய க்கமடைந்த பின்னர், கி ணற்றில் வீ  சியதாக தெ ரிவித்துள்ளார்.

சஞ்சய் குமாரின் ஒ ப்புதல் வா க்குமூலத்தை அடுத்து, டெல்லியில் உள்ள மசூத் ஆலத்தின் மருமகனை கைது செய்யும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். அதன் பின்னரே இந்த கொ லைகளின் முழு பின்னணி வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது.

வவுனியா நகரில் நீண்ட நேரம் உயிருக்கு போ ராடிய மாடு : அசமந்தமாக செயற்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள்!!

வவுனியா நகரில்..

வவுனியா நகரில் விபத்துக்குள்ளாகி நீண்ட நேரமாக உயிருக்கு போ ராடிய பசு மாட்டினை கா ப்பாற்றாது கால்நடை வைத்திய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, பூட்சிற்றி முன்பாக தாய் பசு ஒன்று இரவு விபத்துக்குள்ளான நிலையில் கா யத்துடன் வீதியோரத்தில் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தது. அதன் கன்று அதன் அருகில் நின்று தாயை நினைத்து த வித்துக் கொண்டிருந்தது.

இதன்போது அங்கு சென்ற நகரசபை உறுப்பினர் பி.யானுஜன் குறித்த மாட்டினை பார்வையிட்டு இது தொடர்பில் வவுனியா கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

அவர்கள், மாட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே மாட்டிற்கு சிகிச்சையளிக்க முடியும் எனத் தெரிவித்து அலட்சியப் போக்குடன் பதிலளித்தனர்.

இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் மாட்டினை குணப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சையளிக்குமாறு கால்நடை வைத்திய அதிகாரியிடம் மீண்டும் தொலைபேசியில் தெரிவித்தனர்.

ஆனால் உரிமையாளர் இல்லாமல் வர முடியாது எனவும் மருந்து அவர்கள் மருந்து வாங்கி வந்தால் சிகிச்சையளிக்கலாம் எனவும் கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிசார் குறித்த மாட்டின் உரிமையார் யார் என்பதை தேடி அவர்களுக்கு, நகரசபை உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் துணையுடன் தெரியப்படுத்தினர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த உரிமையாளர் மாட்டினை மீட்டு கால்நடை வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டினர்.

அப்போது அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட மருந்தைப் பெற்று வந்து கால்நடை வைத்தியரிடம் கொடுத்தையடுத்து மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தி சுமார் இரண்டரை மணித்தியாலம் கடந்த நிலையில் உரிமையாளர் வந்த பின்னரே குறித்த மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது.

கால்நடை வைத்திய அதிகாரிகள் ஒரு உ யிருக்கு கொடுக்கும் பெறுமதி இதுவா என பலரும் இதன் போது விசனம் தெரிவித்தனர்.

திருகோணமலையில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்!!

திருகோணமலையில்..

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார்.

இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ல்தலத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பாடசாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை முன்னெடுப்பு!!

வவுனியா பாடசாலைகளை..

வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இன்று காலை பாடசாலை ரீதியாக பெற்றோர்கள் அழைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைக் கால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டது.

அத்துடன் பாடசாலையில் சிரமதானம் நாளை முதல் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புக்களை வழங்குமாறும் ஒவ்வொரு தினங்களிலும் வகுப்பு ரீதியாக செயற்படுத்தி சிரமதானங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை மீளத் திறந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஜூன் மாதம் திறக்கவுள்ள பாடசாலையில் க்டந்த 2 மாத காலமாக பூட்டியிருந்த பாடசாலையில் இம்மாதமே சிரமதானம் செய்து சுத்தப்படுத்துவது பாராட்டதலுக்குரியது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சி றுமி பா லியல் து ஷ்பிரயோ கம் : 14 வ யது சி றுவன் கைது!!

சி றுவன் கை து..

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் 14 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிர யோகம் மே ற்கொண்ட கு ற்றச்சா ட்டில் 14 வ யது சி றுவன் ஒ ருவன் நே ற்று கை து செ ய்யப்ப ட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள ம ருமகள் மு றையிலான சி றுமியை அதே பி ரதேசத்தைச் சோந்த 14 வ யது சி றுவன் கா தலித்து வ ந்துள்ளதாகவும், கிரான்வேம்பு ப குதியிலுள்ள சி றுவனின் ச கோரனின் வீ ட்டிற்கு சி றுமியை அ ழைத்துச்செ ன்று பா லியல் து ஷ்பிர யோகம் மே ற்கொண்டுள்ளதாக பொ லிஸாரின் ஆ ரம்பக ட்ட வி சாரணைகளிலிருந்து தெரி யவந்துள்ளது.

இ தனையடுத்து கு றித்த சி றுமி உ றவினரிடம் தெ ரிவித்ததையடுத்து பொ லிஸ் நி லையத்தில் நே ற்று மு றைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நி லையில் பா திக்கப்பட்ட சி றுமி வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதுடன், கை து செ ய்யப்பட்ட சி றுவனை நீ திமன்றில் ஆ ஜர்படுத்த ந டவடிக்கை எ டுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனாவிற்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் அயராது உழைக்கும் விவசாயப் பெண்!!

பழனியப்பன் பிரியதர்சினி..

கொவிட் – 19 தாக்கத்திற்கு மத்தியிலும் எதிர்கால பொருளாதாரத்திற்காகவும், தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும் உழைக்கும் ஒரு குடும்பப் பெண்ணே வவுனியா, பாரதிபுரம், பாடசாலை வீதியில் வசிக்கும் பழனியப்பன் பிரியதர்சினி.

வீட்டுடன் இணைந்த 2 ஏக்கர் காணியை பயனுள்ளதாக மாற்றி அந்த வருமானத்தில் தமது குடும்ப செலவை போக்கி, உழைக்கும் மக்களுக்கு முன்னுதாரணமானவாராக திகழ்கின்றார் பிரியதர்சினி.

வீட்டுத் தோட்டமாக மரக்கறிகள், பழவகைகள், வாழைகள், கீரைவகைகள், பூ வகைகள், நெல் உள்ளிட்ட தானியங்கள் என அனைத்து வித பயிர்செய்கையையும் இயற்கையான பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகின்றார்.

ரோஜா போன்ற பூக்கன்றுகளுடன் இணைந்து மரக்கறி வகைகளையும் ஊடு பயிர்களாக செய்கை பண்ணியுள்ளார். தோட்டத்துடன் இணைந்ததாக ஆடு, கோழி என்பவற்றை வளர்ப்பதுடன் அதன் கழிவுகளையும் பசளையாக பயன்படுத்தி வருகின்றார்.

அத்துடன் நிலத்தில் சிறிய வட்டத் தொட்டி அமைத்து அதில் அசோலா என்ற பாசி வகைத் தாவரத்தை வளர்த்து அதனை பயிர்களுக்கு பசளையாகவும், கோழி, ஆடு, மாடு என்பவற்றுக்கு தீனியாகவும் தவிட்டுடன் கலந்தும் வழங்கி வருகிறார்.

இதனால் தாவரங்கள் செழிப்பாக வளர்வதுடன் விளைச்சலின் அளவும் அதிகரித்துள்ளது என்கின்றார். அசோலா தாவரம் காரணமாக கோழி தொடர்ந்தும் முட்டை இடுவதாகவும், மஞ்சள் கரு பெரிதாக உள்ளதாகவும் கூறும் பிரியதர்சினி மாட்டின் பாலின் அளவும் ஒரு லீற்றர் அளவில் அதிகரித்துள்ளது என்கின்றார்.

வீடு மற்றும் அதன் சுற்றுபுறக் காணி முழுவதும் சோலையாக வைத்து சிறந்த வருமானத்தைப் பெற்று வந்த பிரியதர்சினிக்கு 2018ம் ஆண்டு சிறந்த வீட்டு தோட்ட செய்கையாளர் என்ற மாவட்ட மட்ட விருதும், மாகாண மட்டத்தில் சிறந்த தோட்ட செய்கையாளர் விருதில் முதலாம் இடத்தையும் பெற்றதுடன், தேசிய ரீதியில் 7வது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

சிறந்த விவசாய முயற்சியாளரான பிரியதர்சினியை கொவிட் 19 தாக்கமும் விட்டு வைக்கவில்லை. கொவிட் தாக்கத்தையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தாலும், போக்குவரத்து பிரச்சனையாலும் இங்கு அறுவடை செய்யப்படும் மிளகாய், கத்தரி, பூசணி உள்ளிட்ட மரக்கறி வகைகளை விற்பனை செய்ய முடியவில்லை என்பது இவரது கவலை.

இதனால் எதிர்கால பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு தற்போதைய அறுவடைக்கால தோட்டங்களை அழித்து இயற்கை முறையில் ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய அரசாங்கத்தால் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சௌபாக்கிய திட்டம் மூலம் வழங்கப்படும் விதையினங்களையும், வேறு கிராமிய பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நட்டத்தை இன்னும் மூன்று மாதத்தில் ஈடுசெய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இயற்கையான பசளைகளைப் பயன்படுத்தி புதிய பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ளார். கச்சான், கொள்ளு, வாழை, மிளகாய், கத்தரி, பூசணி என மீண்டும் தன்னம்பிகையுடன் வீட்டுத் தோட்டத்தை அழகுறச் செய்யும் பிரியதர்சினியின் முயற்சி பாராட்டுக்குரியது.

நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை : யாழில் யு வதி த ற்கொ லை!!

யாழில்..

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற ம ன வி ரக்தியில் இ ளம் யு வதி ஒ ருவர் த னக்கு தா னே தீவை த்து த ற்கொ லை செ ய்துகொண்டு ள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதான இ ளம் யு வதியே உ யிரிழந்துள்ளார். ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யு வதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

எனினும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடியில் தற்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று வீட்டில் ம ண்ணெண் ணெய் ஊ ற்றி த னக்கு தா னே தீ வைத் துள்ளார்.

தீக்காய த்திற்கு உ ள்ளான யு வதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த யு வதி மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் உணவு வகைகளின் விலைகள் உயர்வு!!

உணவு வகைகளின் விலைகள்..

உணவு வகைகளின் விலைகள் உயர்வடையும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.பேக்கரி உற்பத்திகள் மற்றும் ஏனைய உணவு வகைகளுக்கான விலைகள் இவ்வாறு உயர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் விலை இரு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் விலை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் உணவு வகைகளுக்கான விலைகளை உயர்த்த நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சோற்றுப் பொதிகள், சிற்றுண்டி வகைகள், கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார். பொருட்களுக்கான வரி உயர்வினால் இவ்வாறு உணவு வகைகளுக்கான விலைகளை உயர்த்த நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலங்கையருடன் கட்டுநாயக்க வந்த விமானம்!!

ஒரு இலங்கையருடன்..

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடுதிரும்ப முடியாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 6.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவர் எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியற்றி வரும் நிலையில்,

மேலதிக பயிற்சிக்காக தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருந்த போது கொரோனா நெருக்கடி காரணமாக நாடுதிரும்ப முடியாது இருந்தார். இதனையடுத்து இன்று மாலை டுபாயிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமானநிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.

யாழில் சி றுமிகள் து ஷ்பிர யோகம் : தே டப்பட்டு வந்த மூவரில் ஒருவர் கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம், குடத்தனையில் சி றுமிகள் இ ருவரை பா லியல் ரீ தியான து ன்புறு த்திய கு ற்றச்சா ட்டில் மூ ன்று பே ர் தே டப்பட்டு வந்த நிலையில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த 10ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வ யது சி றுமிகள் இ ருவர் த மது ஆ ண் ந ண்பர்களுடன் க தைத்துக் கொ ண்டிருந்துள்ளனர்.

அ ங்கு வ ந்த மூ வர், இ ளைஞர்கள் இ ருவரையும் அ ச்சுறு த்தி அ வர்களை து ரத்திவிட்டு, சிறுமிகள் இ ருவரையும் பா லியல் ரீ தியாக து ன்புறுத்தியி ருந்தனர். அ தன் பி ன்னர் சி றுமிகள் இ ருவரையும் க ட்டிவை த்துவிட்டு ஊரவர்களை அ ழைத்து ப ச்சை ம ட்டையால் அ டித்துள் ளனர்.

சி றுமிகள் இ ருவரும் த ம து ந ண்பர்களு டன் த காத உ றவில் இ ருந்தனர் எ ன்று கூ றி பொ லிஸாருக்கு அ ந்த இ ளைஞர்கள் மூ வரும் தக வல் வ ழங்கியிருந்தனர்.

சி றுமிகளை மீ ட்ட பொ லிஸார் ப ருத்தித்துறை ஆ தார வை த்தியசாலையில் சே ர்த்தனர். ச ட்ட ம ருத்துவ ப ரிசோத னையில் சி றுமிகள் த மக்கு நட ந்தவற்றை வா க்குமூலம் வழ ங்கியுள்ளனர்.

ச ட்ட ம ருத்துவ ப ரிசோத னையை மு ன்னெடுத்த ச ட்ட ம ருத்துவ அ திகாரி கனகசபாபதி வாசுதேவா, சி றுமிகள் இ ருவரும் பா லியல் ரீ தியாக து ன்பு றுதலுக்கு ட்படுத்தப்பட் டுள்ளனர் எ ன்று அ றிக்கை வ ழங்கியிருந்தார்.

இ தனையடுத்து சி றுமிகளை து ன்புறு த்திய மூ வரும் பருத்தித்துறை பொ லிஸாரால் தே டப்பட்டு வ ந்தனர். அ வர்களில் ஒ ருவர் நே ற்று மா லை கை து செ ய்யப்பட்டுள்ளார்.

ச ந்தேக ந பர் வி சாரணைகளின் பி ன்னர் பருத்தித்துறை நீ தவான் நீ திமன்றில் மு ற்படுத்தப்படுவார்கள் எ ன்று பொ லிஸார் தெ ரிவித்தனர். ஏ னைய இ ருவரும் தே டப்படு கின்றனர்.

லண்டனில் 13வயதுச் சிறுமி விளையாடிக்கொண்டிருக்கும்போது நேர்ந்த துயரம்!!

13வயதுச் சிறுமி..

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் யாழ்ப்பாணம் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால ம ரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார். இவர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு க ழுத்தை இ றுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உ யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியா உட்பட பல மாவட்ங்களில் ஊடரங்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (25.05.2020) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்துடன் வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தினர் இணைந்து கேவிட்-19 சுகாதாரத்தை மேம்படுத்தல் கிருமி நீக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்திருந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் பாதசாரிகள் நடைபாதை , ஆசனங்கள் , கம்பிகள் போன்றவற்றிற்கு கிருமி நீக்கி ம ருந்து தெளிக்கப்பட்டது.

இச் செயற்றிட்டம் வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.சு.அமிர்தலிங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள் , வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஸ்ரீனிவாசன் , வவுனியா மாவட்ட சி றுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றிருந்தன.