வவுனியாவில் 35 லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் மீட்பு : ஒருவர் கைது!!

கசிப்பு ஸ்பிறிட்..

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாரால் இன்று (25.05.2020 கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா, பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக பிரியந்த அவர்களின் வழிகாட்டலில் பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி வி.என்.மாரசிங்க தலைமையில்,

உப பொலிஸ் எஸ்.பி.சுபசிங்க, சார்ஜன்ட் (35885) ஜயந்த, கொன்ரபிள்களான (82663) பிரசாத், (85081) லலித், (37760) சமீதரன், (80721) நளிந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் கோவில்புதுக்குளம் 7 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றினை சோ தனை செய்த போது விற்பனைக்கு தயாராக இருந்த 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது பொலிசாரால் மீட்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் குறித்த வீட்டில் வசித்த 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!!

தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்படவுள்ள நிலையில் நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில்,

தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன்முறையாக நாளை முதல் தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும், சுகாதார விதிமுறைகளில் தொற்று நீக்கி, முகக்கவசங்கள், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் என்பன அடங்கும்.

அத்துடன் நாளை முதல் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவானது இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு நிறுவன சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நாளை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போதும் மக்கள் அதிகமாக கூடும் விருந்தகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பவே பயணிகள் ஏற்றப்படுவர். முச்சக்கரவண்டிகளில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணம் செய்யலாம்.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனையகங்களில் ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் நின்றே பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
முடிதிருத்தம் நிலையங்கள் சுகாதார ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலேயே இயங்கும்.

இதேவேளை தேசிய அடையாள அட்டைகளின் இலக்கங்களுக்கு ஏற்ப வெளியில் செல்லும் நடைமுறை நாளையுடன் முடிவுக்கு வருகிறது. எவரும் எல்லா நாட்களிலும் வெளியில் சென்று அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எ ச்சரிக்கை!!

பொலிஸார் எ ச்சரிக்கை..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் நாளை முதல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எ ச்சரித்துள்ளனர். பிரதி பொலிஸ்மா அதிபா அஜித் ரோஹன இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வரிசையில் நிற்கும்போது அல்லது பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு 6 மாத சி றைத்தண் டனையை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேருந்துகளில் நாளை முதல் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றப்படுவர் என போக்குவரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வோருக்கு எ திராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

அதிகரித்து வரும் எலிக் காய்ச்சல் : கண்டியில் இரண்டு பேர் உ யிரிழப்பு!!

எலிக் காய்ச்சல்..

எலிக் காயச்சல் ஏற்பட்டுள்ளதாக ச ந்தேகத்தின் பேரில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 பேரில் 12 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் உ யிரிழந்துள்ளதாகவும் இவர்கள் இளைஞர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எலி காய்ச்சலில் பாதிக்கப்படும் நபர்களை சிகிச்சையளிப்பதன் மூலம் 80 வீதமானோரை குணப்படுத்தலாம். நோய் அறிகுறிகள் தென்பட்டும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதன்மூலமே உ யிரிழப்புகள் அதிகரிக்கும்.

எலி காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியா உடலுக்குள் சென்று இரண்டு நாட்களில் இருந்து 14 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். முதல் வாரத்தில், குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

பொதுவாக, பெரியவர்களைவிட கு ழந்தைகளுக்கு நோயின் தீ விரம் குறைவாக இருக்கும். அதன் பின்னர் சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும்.

இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் பா திப்பதால் பாதிப்பு ஏற்படும். சுமார் 4 முதல் 30 நாட்கள் வரை நோயின் அறிகுறிகள் நீடிக்கும். கல்லீரலும், சிறு நீர் நிறம் மாறுதல், சிறுநீரகமும் அதிகமாகப் பாதிக்கப்படும்.

இலங்கையில் எலி காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றனர். இரண்டாவதாக காலி மாவட்டத்தில் அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஏனைய மாவட்டங்களிலும் தற்போது எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை!!

திருமண ஏற்பாடு..

எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வு போன்று ஏனைய அனைத்து நிகழ்வுகளும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமையவே மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் திருமண நிகழ்வு நடத்தும் போது திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் குறித்து தீர்மானிப்பதே முக்கிய விடயமாகும்.

முன்னர் போன்று நண்பர்கள் உட்பட அனைவரையும் அழைத்து திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாது.

திருமண நிகழ்விற்கு குறைந்த பட்சம் நூறு மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிதல் உட்பட சுகாதார நடைமுறைகளை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் திருமணம் நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரியிடம் அதற்கான அனுமதியை பெறுவது கட்டயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் பிறந்த 3 குழந்தைகள்!!

ஒரே பிரவசத்தில்..

வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஓரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த பெண் கடற்டை சிப்பாயின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தமையினால் தங்கள் குழந்தையை நேரில் பார்க்க முடியாத நிலைமை கணவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளை பார்வையிடும் சந்தர்ப்பத்தை கணவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 3 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் : சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா பரவல்..

இலங்கையில் சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அரசாங்கத்திடம் தான் அறிவித்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்தல், மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பும் நடவடிக்கை, உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றால் 3 வாரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும்.

அப்படி தலை தூக்கினால் தேர்தல் மாத்திரமல்ல ஒன்றையும் செய்ய முடியாது. தேர்தல் நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் சுகாதார அதிகாரி என்ற ரீதியில் அதற்கான வாய்ப்புகளையே நான் கூறினேன்.

முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என நான் கூற மாட்டேன். எனினும் இதே முறையில் சென்றால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் என எனக்கு தெரியும்.

சில அரசியல்வாதிகள் அதை திறவுங்கள் இதை திறவுங்கள் என்று கூறுகின்றார்கள். எனினும் எங்கள் பணியை செய்ய விடுங்கள். நாங்கள் அவற்றினை சரியாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் அரச, தனியார்துறை பணியாளர்களுக்கு விசேட அறிவிப்பு!!

விசேட அறிவிப்பு..

கடந்த மே 11ஆம் திகதி அரச மற்றும் தனியார்த்துறை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்ட சுகாதார ஒழுங்குவிதிகள், நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அரச மற்றும் தனியார்துறை பணியாளர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை போன்று நாளை கடமைகளுக்கு சமூகமளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அலுவலங்களுக்கு பிரவேசிக்கும் முன்னர் கைகளை கழுவுதல், போக்குவரத்தின்போதும் அலுவலகத்திலும் சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் நடவடிக்கைகளை அவசியமாக முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

அரசாங்கம் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துவதை காரணம் காட்டி பொதுமக்கள் சுகாதாரப் பா துகாப்பு திட்டங்களை குறைத்துவிடக் கூடாது. இது மீண்டும் கொரோனா பரவலுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என்று பபா பலிஹவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!!

இளம் குடும்பஸ்தர்..

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி (15.05.2020) வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பயணித்த போது,

எதிர் திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி அதே திசையில் பயணித்த பட்டா ரக வாகனத்துடனும் மோதி மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைநடத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்ரி (வயது 39) என்ற இளம் குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்த மற்றை நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ம னைவியை தி ட்டமிட்டு வி ஷப் பா ம்பை க டிக்க வை த்த க ணவன் வ சமாக சி க்கினார்!!

கே ரளாவில்..

கே ரளாவில் பா ம்பால் க டிபட்டு உ யிரி ழந்த இ ளம் பெ ண் ச ம்பவத்தில் க ணவன் உ ண்மையை ஒ ப்புக்கொ ண்டதால், அ வர் ம ற்றும் கூ ட்டா ளிகள் சி லர் கை து செ ய்யப்பட் டு ள்ளனர்.

கே ரள மா நிலம் கொ ல்லம் மா வட்டத்தில் அ ஞ்சல் ப குதியை சே ர்ந்த 25 வ யது ம திக்கத்தக்க உத்ரா எ ன்பவரின் ம ரணம் தொ டர்பில் அ வரது க ணவர் மீ து ச ந்தேகம் வ லுத்ததால், பொ லிசார் ந டத்திய கி டுக்குப்பி டி வி சாரணையில் உத்ராவின் க ணவர் சூரஜ் உ ண்மையை ஒ ப்புக் கொ ண்டுள் ளார்.

க டந்த 7 ஆ ம் தி கதி கொ ல்லத்தின் அ னச்சலில் இ ருக்கும் இ ல்லத்தில் உத்ரா எ ன்பவர் பா ம்பு க டியால் ப ரிதாபமாக இ றந்தார். ஏ ற்கனவே, இ தற்கு மு ன்பு பா ம்பு க டியில் இ ருந்து உ யி ர் த ப்பி ய இ வ ரை மீ ண்டும் பா ம்பு க டித்ததால் இ து கு றித்து பெ ண்ணின் வீ ட்டார் கா வல் நி லையத்தில் பு கார் அ ளித்தனர்.

இ தையடுத்து பொ லிசார் ந டத்திய தொ டர் வி சாரணையில், சூரஜ் அ றிமுகமான ந பர் ஒ ருவரிடமிருந்து வி ஷப் பா ம்பு ஒ ன்றை வா ங்கி உ த்தராவை க டிக்க வை த்துள்ளார். இ தற்காக சி ல பா ம்பு பி டிப்பவர்களி டமிருந்து இ ரண்டு பா ம்புகளை சு மார் 10,000 ரூ பாய்க்கு வா ங்கிய ஆ தாரங்களை பொ லிசார் க ண்டு பிடித்து ள்ளனர்.

அ துமட்டுமி ன்றி, வி சாரணையின் போ து, ​​சூரஜுக்கு பா ம்புகளை கை யாள்வதில் மு ன் அ னுபவம் இ ருப்பதும், க டந்த மூ ன்று மா தங்களில் யூ டியூபில் ப ல மு றை பா ம்புகள் கு றித்து ஆ ய்வு செ ய்ததும் க ண்டறியப் பட்டது.

இ வரது கூ ட்டாளி களில் இ ருவர் போ லீசாரால் கா வலில் வை க்கப்பட்டனர். க டந்த பி ப்ரவரி மா தம் 26-ஆ ம் தி கதி பா ம்புகளை கை யாளும் சுரேஷ் எ ன்பவரிடம் இ ருந்து சூரஜ் பா ம்பை வா ங்கியுள்ளார்.

அ தன் பி ன் அ ந்த பா ம்பை பி ளாஸ்டிக் பா ட்டில் ஒ ன்றில் வை த்து த னது வீ ட்டில் உத்ரா இ ருக்கும் நே ரத்தில் வெ ளியில் வி ட்டுள்ளார். அ ந்த ச மயம் உத்ரா உ டனடியாக த னியார் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ  ல்லப்பட்டு அ திசயமாக உ யி ர் த ப்பி னார்.

இ தையும் சூரஜ் தா ன் பி ளான் போ ட்டு செய் துள்ளார். அ ந்த ச மயத்தில் பா ம்பைக் க ண்டு உத்ரா ச த்தமிட் டதால், அ வர் பா ம்பை வி ரட்டுவது போ ன்று ந டித்துள்ளார். அ தன் பி ன் கா லை வ ரை உத்ரா அ ருகிலே த ங்கியுள் ளார்.

அ தன் பி ன் பா ம்பு க டித் தது கு றித்து கு டும்பத்தில் இ ருக்கும் ம ற்றவர்களிடம் எ ச்சரிக்க, அ ந்த பா ம்பு க ண்டுபிடிக்கப்பட்டு கொ ல்லப்ப  ட்டது.

இ தைத் தொ டர்ந்து ந டத்தப்பட்ட வி சாரணையில், சூராஜ், சுரேஷ் ம ற்றும் ம ற்றொரு ந பர் இ ன்று ஞா யிற்றுக்கி ழமை கை து செ ய்யப்ப ட்டனர். இ தில் சூரஜின் நோ க்கங்களை சுரேஷ் அ றிந்திருந்து ள்ளார்.

கு ற்றச்சாட் டுகளை மு தலில் ம றுத்த சூரஜ், க டுமையான வி சாரணையின் பி ன்னர் ஞா யிற்றுக்கிழமை (இ ன்று) கு ற்றத்தை ஒ ப்புக்கொ ண்டார். அ வரது கை து ஞாயிற்றுக்கிழமை பி  ற்பகல் ப திவு செ ய்யப்பட்டது. அ வர் தி ங்களன்று(நாளை) நீ  திமன் றத்தில் ஆ ஜர்படுத்த ப்படுவார் எ ன்று அ ங்கிருக்கும் உ ள்ளூர் ஊட கங்கள் கு றிப்பிட்டுள்ளன.

இளைஞனின் தவறான செயலால் கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை : நடந்தது என்ன?

கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை..

தமிழகத்தில் இளைஞன் ஒருவரின் தவறான செயலால் இரண்டு இளம்பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (29).

இவரும் முதுநிலை பட்டதாரியான சண்முகப் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட லெனின் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சண்முகப்பிரியாவிடம் தனிமையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, கர்ப்பமான சண்முகப்பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லெனினிடம் கேட்க அவர் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லியுள்ளார்.

ஆனால், சண்முகப்பிரியா கர்ப்பத்தைக் கலைக்காத நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் சண்முகப்பிரியாவால் ஊருக்கு வர முடியவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்ட லெனின் ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவுக்கு லெனின் திருமணம் செய்த விடயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சண்முகப்பிரியா, லெனின் என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். அவரால் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகாரளித்தார்.

சண்முகப்பிரியா பொலிஸ் புகார் கொடுத்ததையறிந்த லெனின் விஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் நேற்று சண்முகப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த லெனின், சிகிச்சை பலனின்றி இ றந்து விட்டார். இது சண்முகப்பிரியாவின் குடும்பத்தை பெரும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், லெனின் செய்த தவறான செயலால் இன்றைக்கு இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. இதில், கொடுமை என்னவென்றால் சண்முகப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது தெரியாமலேயே லெனின் இ றந்துவிட்டார்.

லெனினை நம்பி காதலித்த சண்முகப்பிரியா மற்றும் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு லெனினை கரம் பிடித்த ஐஸ்வர்யா என இரண்டு பெண்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

விஷப் பாம்புகள் குறித்து இணையத்தில் தேடிய கணவன் : இளம் தாயார் ம ரணத்தில் அ திர்ச்சித் திருப்பம்!!

விஷப் பாம்புகள் குறித்து..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் பா ம்பு க டித்து இ றந்த சம்பவம் தொடர்பில் வி சாரணை மேற்கொண்டுவரும் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது உத்ரா என்பவரின் மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்ராவின் கணவர் சூரஜ் என்பவரை சுற்றியே தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சூரஜ் ஆபத்தான பா ம்புகள் தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்ததாகவும், இவர் பா ம்புகளை உ யிருடன் பி டிக்கவும், அதை பத்திரமாக பா துகாக்கவும் தெரிந்த நபர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் பா ம்புகள் பி டிப்போருடன் இவருக்கு தொடர்புள்ளனவா என்பது குறித்தும், பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ம களை தி ட்டமிட்டு கொ லை செய்தது சூரஜ் என உத்ராவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது வி சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த அன்று படுக்கை அறையின் ஜன்னல் திறந்த நிலையில் இருந்ததாகவும், அது வழியாக உள்ளே புகுந்த பா ம்பு உத்ராவை க டித்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.

ஆனால், குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கையில் கிடந்த உத்ராவை பா ம்பு க டித்த சம்பவம் நம்பும் வகையில் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பகல் ஒரு குழந்தையின் தாயாரான உத்ராவை படுக்கை அறையில் இ றந்த நி லையில் மீ ட்டுள்ளனர். தொடர்ந்து அறையில் பதுங்கியிருந்த விஷ நாகம் ஒன்றையும் பொதுமக்கள் கொ ன்றுள்ளனர்.

மார்ச் 2 அன்று சூரஜின் குடியிருப்பில் வைத்து உத்ராவை பா ம்பு க டித்த நிலையில், அது தொடர்பான சிகிச்சையில் இருந்துவந்த உத்ராவை மீண்டும் பா ம்பு கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் : காரணத்தை வெளியிட்ட சுகாதாரதுறை!!

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த 24 நாட்களாக சமூகத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை. இதன் காரணமாக சமூக மட்டத்திலான வைரஸ் பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அண்மைக்காலமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருபவர்களும், வெலிசர கடற்படையினர் மட்டத்தில் அதிகரித்த பரவல் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்றும் புதிய 28 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குவைத் நாட்டிலிருந்த அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதாரதுறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வரையான காலப்பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 674 முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை 600 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 293 கடற்படையினர் முழுமையாக குணமடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திரா சில்வா இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் தாலி ஏறியவுடன் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : கவலையில் கணவன் மற்றும் குடும்பத்தார்!!

மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..

தமிழகத்தில் கழுத்தில் தாலி ஏறியதும் மணப்பெண் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கெங்கவல்லியைச் சேர்ந்த 28 வயதான உறவினருக்கும் இன்று திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 21ம் திகதி சென்னையில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்தனர். அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனைச் சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் திருமணம் முடிந்ததும் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் சமூக இடைவெளியில் 5 பேருடன் திருமணம் நடத்திக் கொள்ளவும், அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி இன்றுகாலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் அவர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார்.

பல்வேறு கனவுகளுடன் புதுமண தம்பதி திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டிய நேரத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மணமகன் உள்பட உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு : நீதிபதியிடம் அளித்த ம ரண வாக்குமூலம்!!

திருமணமான 9 மாதத்தில்..

தமிழகத்தில் மூன்று மாத க ர்ப்பிணிப் பெ ண் ஒ ருவர் ம ண்ணெண் ணெய் ஊ ற்றி தீ க்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவத்தில் அப் பெ ண் ம ரண வா க்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்து அரங்கமங்கலம் ஊராட்டி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெரு வைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி NLC நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகளான வனிதா(25), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வனிதாவிற்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வினிதாவுக்கு அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் தங்க நகை, கட்டில் , பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் இது போதாது என்று ராஜன் கார் வேண்டும் என சீர்வரிசையாக கேட்டுள்ளார்.

இதற்கு வினிதாவின் பெற்றோர் காருக்கு பதிலாக 1.50 லட்சம் ரூபாய் பணம் கையில் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து அடிக்கடி கு டித்து வி ட்டு வீட்டுக்கு வந்து மனைவி வினிதாவிடம் தொ டர்ச்சியாக த கராறில் ஈடுபட்டு அ டித்து து ன்புறு த்தி வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர் வினிதாவிடம் கூறியதை அடுத்து அவர் அதை அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கிடையில், ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வினிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறியதுடன், கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை.

அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கணவனும், மாமியாரும் அ டித்து து ன்புறுத் தியுள்ளனர். இதனால் , வினிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார் . வினிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் க ணவன் ம னைவி இடையே மீண்டும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜன், வினிதாவிடம் உன் அ ப்பாவிடம் போய் பணம் வாங்கி வா இல்லாவிட்டால் செ த்துவிடு என்று கூற,

இதனால் வி ரக்தியடைந்த வினிதா வீ ட்டில் இருந்த ம ண்ணெ ண்ணெய் எடுத்து தனது உ டலில் ஊ ற்றி தீவை த்து கொ ண்டுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று ப ரிதாபமாக இ றந்துவிட்டார்.

சிகிச்சையின் போது, வினிதா நீதிபதியிடம் அளித்த ம ரண வா க்குமூலத்தில் , கணவர் மற்றும் அவரது கு டும்பத்தினர் கூடுதல் வரதட்சிணை கேட்டு து ன்புறுத் தியதால் தீக்கு ளித்து தற்கொ லை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வினிதா வின் தாயார் செல்வி காவல்நிலையத்தில் அளித்த புகாரை வைத்து, கணவர் ராஜன் , தந்தை சேட்டு , தாய் கஸ்தூரி , சகோதரன் ராமச்சந்திரன் , சகோதரிகள் ராஜேஸ்வரி , அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரானாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளை!!

கொரானாவால்..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு இன்று திருமணம் ஆன நிலையில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பணிபுரிந்து வந்த கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த ஜனவரி மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த 21-ஆம் திகதி சென்னையில் இருந்து சேலம் வந்தவருக்கு மாவட்ட எல்லையான நத்தக்கரை சோதனைச்சாவடியில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே நிச்சயித்தபடி, குடும்பத்தினர் முன்னிலையில் இன்று வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து புதுமாப்பிள்ளையை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த சுகாதாரத்துறையினர், புதுப்பெண்ணையும், திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.