மனைவி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இ ளைஞர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மகனான பிரபு(27)-வுக்கும் தாமினி என்பவருக்கு திருமணமாகி 7 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், கு டும்ப பி ரச்சனை காரணமாக, தாமினி கோ பித்துக் கொண்டு தாய்விட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடந்த மே 20-ஆம் திகதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அப்போது தாமினி குடும்பத்தினர் அ டித்ததில், பிரபுவின் தாய் மல்லிகாவிற்கு த லையில் கா யம் ஏற்பட்டுள்ளது. மேலும், பெண் வ ன்கொ டுமை சட்டத்தில் புகார் கொடுத்தால் உங்கள் அனைவரையும் பொலிசார் சிறையில் வைத்துவிடுவார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மி ரட்டியுள்ளனர்.
இதனால் ம னமுடைந்த பிரபு கடந்த மே 21-ஆம் திகதி தூ க்கு போ ட்டு த ற்கொ லைக்கு மு யன்றார். இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
இதற்கிடையில் பிரபு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், பிரபு திருமணம் ஆனதில் இருந்தே பெண் வீட்டார் மூலம் பல பி ரச்சினைகள் வந்தன. என் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப் பட்டார். நான் பலமுறை அழைத்தும் என் வீட்டுக்கு வர மறுத்தார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது என் மனைவியின் உறவினர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மி ரட்டினர். எனவே, என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு வழியின்றி த ற்கொ லை செய்கிறேன்.
நான் கோழை அல்ல. அப்பாவி ஆண்களுக்கு எதிரான, பெண் வ ன்கொ டுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என குறிப்பிட்டுள்ளார்.
இதை வைத்து பிரபுவின் தாய் மல்லிகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரபுவின் மனைவி தாமினி, இவரது தந்தை கருணாநிதி, உறவினர்கள் சந்திரா, அமுதா, உதயகுமார், தனலட்சுமி, ஜோதீஸ்வரன் ஆகியோர் மீது அரியமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வேளாண்துறை பெ ண் ஊ ழியர் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண்ட நிலையில் அது குறித்து பொலிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதிராணி. இவர் ரெட்டியப்பட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணி புரிந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் தி ருமணமாகி 2 கு ழந்தைகள் உ ள்ளனர். அருண்குமார் ஆந்திர மாநிலத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதனால் மதிராணி தனது மாமனார், மாமியாருடன் புளியம்பட்டியில் வசித்தார்.
சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து அருண்குமார், தனது மனைவி மதிராணி செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெகுநேரமாகியும் போனை எடுக்காததால் ச ந்தேகம் அடைந்த அருண்குமார், தனது தந்தையை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டுள்ளார்.
இதையடுத்து அருண்குமாரின் தந்தை மற்றும் தாய் மதிராணியின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் கண்ட கா ட்சி அ திர்ச்சியை ஏ ற்படுத்துவதாக இ ருந்தது.
அ ந்த அ றையில் மதிராணி தூ க்கில் பி ணமாக தொ ங்கி னார். உடனே இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அங்கிருந்தவர்களிடம் வி சாரணை நடத்தினர்.
மேலும் மதிராணியின் உ டலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், அரசு அலுவலர் மதிராணி பணிச்சுமை காரணமாக த ற்கொ லை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (24.05.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.
லண்டன் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதி உதவியுடன் வெளிச்சம் அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து கேவிட்-19 சுகாதாரத்தை மேம்படுத்தல் (கிருமி நீக்கும் செயற்பாடு) இடம்பெற்றது.
முதியோர் இல்ல பொறுப்பான நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினதும் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சிவன் முதியோர் இல்லத்தில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டன்பார் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற திடீர் விபத்தில் நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அதிக வேகத்தில் ‘ஒற்றை சில்லை பயன்படுத்தி’ மோட்டார்சைக்கிள் செலுப்பட்டுள்ளதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டன்பார் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான (30 வயது) புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொடும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த விடயங்களாக,
கேள்வி-தற்போது வீடுகளில் இருக்கின்ற 43 இலட்சம் மாணவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்ன?
கல்வி அமைச்சர்- அனைத்து மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் கிடைத்த சிறந்ததொரு சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்ள எமது தன்னம்பிக்கையை அதிகரித்து எவ்வாறு செயற்படவேணடும் என்பது மிக முக்கியமாகும். இதுபோன்ற நீண்டகாலம் இந்த 43 இலட்சம் மாணவர்களும் பாடசாலையை விட்டு விலகி வீடுகளில் இருக்கவில்லை.
குறிப்பாக வீட்டுச் சிறையில் இருக்கின்றனர் என்று கூறலாம். இந்த சிறுவர் பராயத்தை அவ்வாறு வீடுகளில் கடத்துவது மிகவும் கடினமாகும். எமது பாடசாலை வாழ்க்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது.
கேள்வி- நீங்கள் எப்போது எதற்காக? எவ்வளவு காலம் வீடுகளில் முடங்கி இருந்தீர்கள்?
கல்வி அமைச்சர்- 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது எமக்கு இவ்வாறான ஒரு அனுபவம் கிடைத்தது. நான் அப்போது 4 அல்லது 5 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். நான்கு மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்தது.
எமக்கு அந்த அனுபவம் உள்ளது. அதனால் இந்த சவாலை வெற்றியாக மாற்றிக்கொள்ள தன்னம்பிக்கையை கட்டியெழுப்பவும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விடுமுறை காலத்தை பயன்படுத்துமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
கேள்வி-பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமை என்ன?
கல்வி அமைச்சர் – பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் தற்போது உறுதியாக எதனையும் கூற முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதலாவது போராட்டமாகவே நாங்கள் பாடசாலைகளை மூடினோம்.
இலங்கையை சேர்ந்த தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு 48 மணிநேரத்துக்குள் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் இறுதி போராட்டம் தான் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதாகும்.
கொரோனா தடுப்பின் முதல் நடவடிக்கை பாடசாலை மூடப்பட்டதாகும். இறுதி நடவடிக்கை பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற அழிவை பாருங்கள். ஐரோப்பிய நாடுகளை நாங்கள் சொர்க்க நாடுகள் என்று கருதினோம். குறிப்பாக இத்தாலியில் முதல் 1000 உயிரிழப்புக்களின் பின்னரே பாடசாலைகள் மூடப்பட்டன. மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவர்.
கேள்வி -உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன?
கல்வி அமைச்சர் – உயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகளே எம்மிடம் உள்ளன. ஒன்று உயர்தரப் பரீட்சையை தாமதிப்பதாகும். இரண்டாவது கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதாகும். இவைதான் எமது முன் காணப்படுகின்ற இரண்டு மாற்று தெரிவுகளாகும்.
ஆனால் கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதிலும் ஒரு சிக்கல் உள்ளது. காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்றிருப்பர்.
ஆதனால் இரண்டாவது தெரிவு அவர்களுக்கு பாதகமாக அமையலாம். மேலும் முதலாவது முறை எழுதும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் இறுதி பகுதிகள் இலகுவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். அது எனக்கு தெரியாது.
கேள்வி- அப்படியானால் என்ன செய்யப்போகின்றீர்கள்?
கல்வி அமைச்சர் – மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன்.
கேள்வி – கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து?
கல்வி அமைச்சர் – இந்த நாட்டின் பிரஜையானமை எந்தளவு தூரம் அதிஷ்டமானது என்பதனை நான் எண்ணிப்பார்க்கின்றேன். சொர்க்க நாடுகள் என்ற வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ விரும்பினோம்.
மீனின் முதுகில் ஏறியாவது இத்தாலி செல்ல மக்கள் விரும்பினர். ஆனால் அங்கு வாழும் இலங்கையர்கள் இலங்கை வர திண்டாடுகின்றனர். எனவே இலங்கையனாக இருப்பது தொடர்பில் எமக்கு எவ்வளவு தைரியம் கிடைக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி-நீங்கள் கல்வியமைச்சராகிய பின்னர் வடக்கு கிழக்கு கல்வி நிலை குறித்து மதிப்பீடு செய்தீர்களா?
கல்வி அமைச்சர் – வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையானது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. மிக நீண்டகாலமாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
இதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதிகார பகிர்வு 13 ஆவது திருத்தம் குறித்து பேசிக்கொண்டிருந்தனரே தவிர இந்த பிள்ளைகளின் கல்வி குறித்தும் கவனம் செலுத்தவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தைக் கூட நான் கண்டதில்லை.
மிகவும் மோசமான நிலைமையே காணப்படுகின்றது. எந்த அளவீட்டை எடுத்துப் பார்த்தாலும் வீழ்ச்சியே உள்ளது. ஆசிரியர்கள் பாடசாலை வசதிகள் என்பனவற்றை பார்த்தால் தெரியும். வசதியுள்ள சில பாடசாலைகள் இருக்கலாம்.
ஆனால் பொதுவான நிலை அவ்வாறானதல்ல. ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. மதவாச்சியிலிருந்தே இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிபர்கள் தலையிட்டு ஆசிரியர்கள் அல்லாதவர்கயை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
ஆரம்ப பாடசாலைகளில் ஆசிரியர்களில் ஆசிரியர்கள் 50 வீதமானவர்கள் பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். தொண்டர் அடிப்படையில் கற்பிக்கின்றனர். எவ்வாறான மோசமான நிலைமை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
கேள்வி – இந்த நிலையை சரிசெய்ய என்ன செய்யப்போகின்றீர்கள்?
கல்வி அமைச்சர் – கட்டாயமாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லை. மாத்தறை யாழ்ப்பணம் என்ற பேதம் இல்லை. மாணவர்கள் சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்று நான் பார்க்கமாட்டேன். நான் 43 இலட்சம் மாணவர்களின் தந்தை என்றே கருதுகின்றேன். நான் அதிகாரிகளை அழைத்து தொடர்ச்சியாக கலந்துரையாடிவருகின்றேன்.
நேற்றும் ( கடந்த வியாழக்கிழமை) என அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் இரண்டு மேலதிக செயலாளர்கள் அனைவரும் வடக்கு மாகாண அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். மாகாண செயலாளர் பணிப்பாளர் அதிபர்களுடன் இந்த பேச்சுக்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. எனவே எங்கள் முழு அவதானமும் இந்த விடயத்தில் செலுத்தப்படும்.
சமமான நிலை ஏற்படுத்தப்படும். தமிழ் மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும் சிங்கள மொழி மூல மாணவர்கள் தமிழ் கற்கவும் இவர்கள் இருவரும் ஆங்கிலம் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டதாரி நியமனங்கள் நடைபெறுகின்றன. அதில் வடக்கில் உள்ள பட்டதாரிகளை அந்த மாகாணத்திலேயே ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்க திட்டமிட்டுள்ளேன்.
கேள்வி- 2010 ஆம் ஆண்டு நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இனி இந்த நாட்டில் இளைஞர்கள் விரக்தியடைய இடமளிக்கக் கூடாது என்று கூறினீர்கள். 2009 ஆம் ஆண்டின் பின்னரான 11 வருடங்கள் எவ்வாறு உள்ளன?
கல்வி அமைச்சர் – வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கல்வித்துறை போன்ற பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதனை நாம் நேர்மையாக ஏற்கவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத்துறையில் திறமையுள்ள பிள்ளைகள் எவ்வளவு பேர் உள்ளனர்? வடக்கு மாகாணததில் தொழிற்பயிற்சி இல்லாத பிள்ளைகள் உள்ளனர். வேலையின்மை பிரச்சினை கணவனை இழந்த குடும்பத் தலைவிகளின் நெருக்கடி என ஏனைய மாகாணங்களுக்கு இல்லாத பல பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாமும் பொறுப்புக் கூறவேண்டும்.
கேள்வி -எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவீர்களா?
கல்வி அமைச்சர் – தற்போது கூட நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்துகின்றோம். ஆனால் அதனை உயர்ந்த மட்டத்தில் செய்யவேண்டும். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பறவை இனம் ஒன்று புந்தல தேசிய வனப்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி குஞ்சுகளை பொறித்துள்ளன.
இந்த பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனப் பகுதியின் பொறுப்பாளர் அஜித் குணதுங்க தெரிவித்துள்ளார்.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பறவை இனங்கள் தமது வாழ்விடங்களாக பயன்படுத்தும் புந்தல தேசிய வனப் பகுதிக்குள் ஜீப் வண்டிகள் செல்ல வேறு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வனப் பகுதி மூடப்பட்டுள்ளது. மீண்டும் வனப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டாலும் சுற்றுலாப் பறவைகளின் பாதுகாப்பு கருதி ஜீப் வண்டிகள் செல்வதற்கான வழிகள் மூடப்படும் என அஜித் குணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பறவை இனம் 148 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் முட்டையிட்டு தனது குஞ்சுகளை பொறித்துள்ளமை சிறப்பம்சமாகும் என சுற்று சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மாஜரீன் மற்றும் பாம் ஒயில் என்பவற்றுக்கான இறக்குமதி வரிகளை அதிகரிக்க தீர்மானித்தமை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் காரணமாக தேசிய மாஜரீன் உற்பத்தியாளர்கள்,
அதன் விலைகளை அதிகரிக்க தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார். இதனால், பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இன்று (24.05.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பா துகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார்.
அதன் பின்னர் அச் சிறுவன் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று தவறுதலாக கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட குழியினுள் (நீர் நிரம்பிய நிலையில்) வீழ்ந்து நீரில் முழ்கியுள்ளான்.
சென்ற சிறுவனை கா ணவில்லை என கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பா துகாப்பு உத்தியோகத்தர் சிறுவன் குழியினுள் உ யிருக்கு போ ராடுவதனை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சமயத்தில் உயிரிழந்துள்ளார். சிறுவனின் ச டலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாயின்றி இரண்டு வயதிலிருத்து தந்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்த சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்கும் 8வயதுடைய நிரோஐிதன் சிமியோன் என்ற சிறுவனை இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (23.05) இச்சிறுவனின் 8வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமை என்னவென வினவிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் தற்போது உறுதியாக எதனையும் கூற முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதலாவது போ ராட்டமாகவே நாங்கள் பாடசாலைகளை மூடினோம்.
இலங்கையை சேர்ந்த தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு 48 மணிநேரத்துக்குள் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் இறுதி போ ராட்டம் தான் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதாகும். கொரோனா தடுப்பின் முதல் நடவடிக்கை பாடசாலை மூடப்பட்டதாகும். இறுதி நடவடிக்கை பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும்.
ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற அழிவை பாருங்கள். ஐரோப்பிய நாடுகளை நாங்கள் சொர்க்க நாடுகள் என்று கருதினோம்.
குறிப்பாக இத்தாலியில் முதல் 1000 உயிரிழப்புக்களின் பின்னரே பாடசாலைகள் மூடப்பட்டன. மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 26ம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்குச் சொந்தமான பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்தில் ஈடுபடும் போது கட்டணங்களை வழமை தொகையை விடவும் அரை மடங்கு அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இலங்கையினுள் இருந்த பாரிய கொரோனா கொப்புகள் அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை கொப்புகள் மாத்திரமே உள்ளதாகவும், அதுவும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன் பரவலின் ஆபத்து நீங்காதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் நாட்டில் தொழில் புரிந்து வரும் ஆயிரத்து 51 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.
கட்டாரில் 42 ஆயிரத்து 213 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி கத்தாரில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 79 வீதமானவர்கள் தொழிலாளிகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள். ஏனைய 21 வீதமானோர் தொழில் சார்ந்த நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இலங்கை திரும்ப ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளர்.
ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது தொழில்களை இழக்க நேரிடக்கூடிய அபாயத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் வரையில் இவ்வாறு தொழில்களை இழக்க நேரிடலாம் எனவும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கமே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
200 பில்லியன் பணத்தை அச்சிட்டமையானது நாட்டின் பணவீக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் எனவும், ஏனெனில் உள்நாட்டு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேல் கொத்தமலை நீர்த் தேக்கத்தல் கு தித்து த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த யுவதியை காப்பாற்ற சென்ற நிலையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன.
லிந்துலை ரத்னகிரி கொலனியில் வசித்து வந்த 28 வயதான ஹமீட் றிஸ்வான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
பிரதேச மக்களின் சோ கத்திற்கு மத்தியில் பௌத்த சமய கிரியைகளுக்கு அமைய லிந்துலை பாமஸ்டன் ரத்னகிரிய பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
பாமஸ்டன் ரத்னகிரிய விகாரையின் விகாராதிபதி கொடிகமுவே தம்மவில தேரர் சமய கிரியைகளை மேற்கொண்டார்.
மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்து த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த யுவதியை காப்பாற்ற சென்ற றிஸ்வான், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
றிஸ்வானின் தாய் பௌத்த சமயத்தவர் என்பதுடன் தந்தை ஒரு இஸ்லாமியர். இளம் குடும்பஸ்தரான றிஸ்வானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி வருகின்றனர். 12 வயதான மூத்த மகள் லிந்துலை சிங்கள மகா வித்தியாலத்தில் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். றிஸ்வானின் 11 வயதான மகன் அதே பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
றிஸ்வானின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
நீரில் மூழ்கியதில் மூச்சு அடைப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக சட்டவைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் தொற்றுநோய் முடிவடையும் சரியான காலத்தை முன்னறிவிக்கும் விதமாக ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
அதற்கமைய, நவம்பர் 11ம் திகதிக்குள் அமெரிக்கா கொரோனா வைரஸ் இல்லாத ஒரு நாடாக மாறுவதோடு, அதே நேரத்தில் செப்டம்பர் 30ம் திகதிக்குள் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இல்லாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 25ம் திகதிக்குள் இந்தியா 100 சதவீதம் கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவு-உந்துதல் தரவு பகுப்பாய்வு முறையால், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இருந்து மே 22-க்குள், ஜூன் 1-க்குள் 99 சதவீதமும், ஜூலை 25 க்குள் நாடு 100 சதவீதமும் கொரோனா வைரஸிலிருந்து விடுபடும்.
கொரோனா வைரஸ் தோற்றால் பெரும் அழிவை சந்தித்த அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து எப்போது விடுபடும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 27-க்குள் அமெரிக்கா கொரோனா வைரஸிலிருந்து விடுபடும், அதே நேரத்தில் 2020 டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் வைரஸ் உலகிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்.
சிங்கப்பூர் பல்கலைக்கழக அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 97 சதவீதம் மே 30-க்குள் முடிவடையும், ஜூன் 17-க்குள் 99 சதவீதமும், 2020 டிசம்பர் 9 க்குள் 100 சதவீதமும் முடிவடையும்.
பிரான்சில், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் மே 6-க்குள் முடிவடையும், மே 18-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 5 க்குள் 100 சதவீதமும் முடிவடையும். இத்தாலியில், மே 8 க்குள் 97 சதவீதமும், மே 21-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 25 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.
இதற்கிடையில், மே 4ம் திகதிக்குள் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் வழக்குகளில் 97 சதவீதமும், மே 16 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 7 க்குள் 100 சதவீதமும் சரிவைக் காணலாம். இங்கிலாந்தில், மே 16-க்குள் 97 சதவீதமும், மே 27 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 14 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.
எவ்வாறாயினும், வைரஸின் சிக்கலான தன்மை மற்றும் ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை நெறிமுறைகள் உள்ளிட்ட பிற காரணிகளால் இயற்கையின் கணிப்புகள் நிச்சயமற்றதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இன்றைய கொரோனா வைரஸ் தாக்க புள்ளி நிலவரப்படி, அமெரிக்காவில் 1,600,937 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் 95,979 இறப்புகள் உள்ளன.
பூட்டப்பட்ட சில மாதங்களைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதையும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதையும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா அதிகரிப்புக்கு மீண்டும் வழிவகுக்கும் என்று நிபுணர்களும் சுகாதார அதிகாரிகளும் உலக சுகாதார அமைப்பினரும் எச்சரிக்கை விட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனுமதி வழங்கியவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை முழு நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும். சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இலங்கை பாதுகாப்பான நாடாக கருதுகின்றது.
கொரோன தொற்றுநோயை இலங்கை கையாண்ட விதத்தில் இந்த வெளிநாட்டு நாடுகள் அனைத்தும் நம்பிக்கை கொண்டுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா பரவாமல் பாதுகாப்புடன் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.