இலங்கையர்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

ஊரடங்கு சட்டம் மற்றும் பயண தடைகள் தளர்த்தப்பட்டாலும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டால் அவற்றில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு கூட்டங்கள் கூட்டுவது, அல்லது கலந்துக்கொள்வது சட்டவிரோத செயலாகும். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என்பது கட்டாயமாகும்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் போன்று மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானைக் குட்டி மீட்பு!!

ஒரு மாத யானைக் குட்டி..

வவுனியா போகஸ்வெவ – பதவியா பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் தனிமையில் ஒர் யானைக்குட்டி நிற்பதாக இன்று (24.05) அதிகாலை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர்,

அவ்விடத்தில் வேறு யானை நிற்கின்றதா என ஆராய்ந்த பின்னர் தனிமையில் நின்ற குட்டி யானையினை மீட்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஒரு மாதமாகிய குறித்த குட்டி யானைக்கு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

 

வவுனியா ஓமந்தையில் மர்மபொருள் தேடிய படையினர் : சிறிய குடத்துடன், தகடு மீட்கப்பட்டதாக தகவல்!!

வவுனியா ஓமந்தையில்..

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்றைய தினம் பாரியளவிலான தே டுதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபர் ஒருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வி சாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் இன்றையதினம் காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது 16 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறிய குடத்துடன் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த காணியை சுற்றி பா துகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர்,

புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள் கிராம சேவையாளர், முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கப் பல மாற்று நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது என விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் உலகிலுள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளன.

சுகாதாரத் தரப்பு ஆலோசனையுடன் ஏனைய விமான நிலையங்களையும் திறக்கத் திட்டமிட்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு : விமானப் பயணங்கள் இனி எப்படி இருக்கப் போகின்றன?

விமானப் பயணங்கள்..

கொரோனா தொற்று தணியாத நிலையில், கொரோனா உயிர்கொல்லி வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பயணிகள் விமானசேவைகள் ஆங்காங்கு சில நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த விமான சேவைகள் நிச்சயமாக முன்னரைப் போல் இருக்கப் போவதில்லை.

சமூக இடைவெளி பேணப்பட்ட நிலையில், தகுந்த பாதுகாப்புடன்- அதேவேளை நிறைந்த பயணிகளுடன்தான் எதிர்காலத்தில் விமான சேவைகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதுகாப்புடன் கூடிய தங்களது விமான சேவைகள் எவ்வாறு இருக்கும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, எதிர்காலத்தில் விமானப் பயணங்கள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பதை கட்டியம் கூறுவதாக இருக்கின்றது..

கொழும்பு, கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!!

போக்குவரத்து சேவைகள்..

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடு பூராகவும் பகுதியளவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மே மாதம் 26ஆம் திகதி முதல் மீள் அறிவிப்பு வரை தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

26ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹாவை மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து சேவை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!!

ஊரடங்கு உத்தரவு..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26ஆம் திகதி) முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த தினம் முதல் நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு!!

எரிபொருள் விலை குறைப்பு..

லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று 5 ரூபாயில் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க லங்கா IOC நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிற்கு அபாய வலயங்களிலிருந்து பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட மக்கள்!!

பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட மக்கள்..

கொரோனா தொற்று அ ச்சம் காரணமாக இலங்கையில் சில மாவட்டங்கள் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை அவர்களின் இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஒரு தொகுதியினர் இன்றையதினம் (22.05.2020) இரவு 7.00 மணியளவில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் வவுனியா , மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 25க்கு மேற்பட்ட மக்கள் அபாய வலயங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு அந்தந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் குறித்த பேருந்தில் வருகை தந்த வவுனியாவை சேர்ந்த மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பினர்.

கோவில் அர்ச்சகர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றி கூறிய 10 வயது சிறுமி : அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்த செயல்!!

10 வயது சிறுமி..

தமிழகத்தில் 10 வயது சி றுமிக்கு பா லியல் தொ ல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். மடிப்பாக்கம் உள்ளகரம் கிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (59).

இவர் சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி பின்புறம் உள்ள ஒரு அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், நேற்று தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வ யது சி றுமியை வீட்டிற்கு அழைத்து பா லியல் தொ ல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதி ர்ச்சியும், ஆ த்திரமும் அ டைந்த பெற்றோர், சிவக்குமாரை வீட்டில் வைத்து பூ ட்டிவிட்டு, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த பொலிசார், சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மகளிர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.

காயமடைந்த தந்தையை 1,200 கி.மீ சைக்கிளில் வைத்து பயணித்த சிறுமி : கிடத்தது மிகப்பெரிய வாய்ப்பு!!

1,200 கி.மீ சைக்கிளில்..

காயப்பட்ட தந்தையை சைக்கிளை மித்து 1,200 கிலோ மீற்றர் கடந்து வீடு வந்து சேர்த்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தின கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளி மோகன் பஸ்வானை அவரது மகள் ஜோதி சைக்கிளில் வைத்து ஓட்டி வீட்டில் வந்து சேர வைத்துள்ளார்.

ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட அதேநேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள். குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் திகதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் திகதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர். வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த விவகாரம் ஊடங்கங்கள் மூலம் பலருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்திய சைக்கிளிங் ஃபெடரேஷன் அவருக்கு உரிய முறையில் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆன்கன் சிங், “லாக் டவுன் முடிந்தவுடன் அவரை டெல்லிக்கு வரவழைத்து சில பரிசோதனைகளை வைக்க இருக்கிறோம்.

அதில், அவர் தேறும்பட்சத்தில் டெல்லியில் வைத்து அவருக்குப் பயிற்சிகள் கொடுக்க இருக்கிறோம். இன்று காலை அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். அவரும் ஆர்வமாக இருக்கிறார்.

1,200 கி.மீ சைக்கிள் மிதிப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தச் சிறுமியிடம் திறமை இருக்கிறது. உரிய முறையில் பயிற்சி கொடுத்தால் நிச்சயம் பெரிய அளவில் வருவார். 14 – 15 வரையிலான வயதில் சைக்கிளிங் செய்யும் வீரர், வீராங்கனைகள் நம்மிடம் 10 பேர்தான் இருப்பார்கள்’’ என்றார்.

திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை : பின்னர் கருவுற்ற 29 வயது பெண்ணுக்கு பெறப்பட்ட விபரீதம்!!

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை..

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில், 8 மாத கர்ப்பிணி, மூச்சுத் திணறலால் உ யிரிழந்த நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளது. சேலம் மாவட்டம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.

இவர் மனைவி தேவி (29). இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் தேவி கருவுற்றார்.

தற்போது, 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு, காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. நேற்று முன்தினம் இரவ 10 மணிக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின் செயற்கை கருத்தரித்தல் செய்து கொண்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கிளம்பினர்.

பெரம்பலுார் அருகே வந்தபோது, மூ ச்சுத் தி ணறல் அதிகமாகவே நள்ளிரவு 12 மணிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிகாலை, 1:10 மணிக்கு, தேவி உ யிரிழந்தார். காய்ச்சல், சளி தொந்தரவுடன், மூச்சு தி ணறலும் இருந்ததால், அவரது ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தேவியின் உறவினர்கள் கூறுகையில், தேவியின் மரண செய்தி அ திர்ச்சியளிக்கிறது, அவருக்கு மூ ச்சு தி ணறல் ஏற்பட்ட போது, திருச்சி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறி விட்டனர்.

கொரோனாவை காரணம் காட்டி, அங்கு சிகிச்சைக்கு வர வேண்டாம் என தெரிவித்ததால், தேவியின் இ றப்புக்கு, அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என கூறியுள்ளனர்.

உடல் முழுவதும் நீல நிறமாக மாற்றம் : இளம்பெண் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம்!!

இளம்பெண்..

கேரளாவில் இ ளம் பெ ண் ஒருவர் பா ம்பு க டித்து உ யிரிழந்த நி லையில், அவரது ம ரணத்தில் ம ர்மம் நீடிக்கிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்பவருக்கும், தனியார் கம்பெனியில் கிளர்க் வேலை செய்யும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம், பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கிக் கொண்டிருந்த உத்ரா, கா லில் ஏ தோ க டித்ததாக ச த்தம் போட்டு அ லறியு ள்ளார்.

இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் சோ தித்ததில் அவரை அணலி வகை பா ம்பு க டித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உத்ரா சி கிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 16 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஜ்சார்ஜ் ஆன உத்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால், தன் தா ய் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் திகதி மீண்டும், பா ம்பு க டித்ததால், உ டல் மு ழுவதும்  நீல நி றமாக மா ற, வா யில் நு ரை  தள்ளியப டி உத்ரா ப ரிதாபமாக இ றந்து கி டந்துள் ளார். ஏற்கனவே பா ம்பு க டித்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் மீண்டும் பா ம்பு க டித்து உ யிரிழந்ததால், இந் த ச ம்பவம் கேரளாவில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதற்கிடையில், உத்ராவின் உறவினர்கள் கா வல் நிலை யத்தில் ஒரு பு கார் அளித்தனர். அதில், உத்ரா ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாகவும், அ வரது க ணவன் வீட்டுக்கு வந்து சென்ற பிறகுதான் இரண்டாவது மு றையாக பா ம்பு க டித்து மர ணமடை ந்தார். இதுகுறித்து வி சாரணை நடத்க வேண்டும் என்று பு காரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உத்ராவின் உறவினர்கள் கூறுகையில், உத்ரா இருந்தது இரண்டாவது மாடியில் உள்ள ஏ.சி அறை. அந்த அறையின் ஏர்ஹோல் முதல் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்கள் எதுவும் திறக்கும் வழக்கம் இல்லை. உத்ரா ம ரணம் அ டைவதற்கு முன் தினம் அவரது கணவர் சூரஜ் அங்கு வந்தார்.

அன்று இரவு இருவரும் ஒரே அறையில்தான் படுத்திருந்தார்கள். சூரஜ் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து வெளியில் சென்றுவிட்டார். உத்ராவை அவரது அம்மா எழுப்பியபோது அவரிடம் அ சைவு இ ல்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது காலில் பா ம்பு க டித்ததற்கான அ டையாளம் இருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சென்று பார்த்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் மூர்க்கன் வகை பா ம்பு கி டந்தது க ண்டுபிடிக்கப்பட்டது

உத்ரா இ றந்துவிட்டது தெரிந்ததும் அங்கிருந்த சூரஜ் நடந்துகொண்ட விதம் எங்களுக்கு ச ந்தேகத்தை ஏ ற்படுத்தியது. க ணவன் வீட்டில் வைத்து முதன்முறை பா ம்பு க டிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே ப டுக்கை அ றை அருகில் உத்ரா ஒரு பா ம்பை பார்த்துள்ளார்.

உத்ரா ச த்தம் போ ட்டு அ லறியதைத் தொடர்ந்து அங்கு வந்த சூரஜ், பா ம்பை வெறும் கைகளால் பி டித்து சா க்குப் பை யில் போ ட்டு எ டுத்துச்சென்றுள்ளார். இந்தச்  சம்பவத்தை உத்ரா ஏற்கெனவே கூறியிருந்தார்.

திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார், நிலம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சூரஜ் வ ரதட்சணை கேட்டு, ம னத்தளவில் உத்ராவுக்கு டா ர்ச் சர் கொடுத்திருக்கிறார்.

இதனால் தி ட்டமிட்டு சூரஜ் இந்தச் ச ம்பவத்தை  நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே, வெறும் கையால் பா ம்பை பி டித்த சூரஜ், பா ம்புகளை கையாளும் வித்தை படித்திருக்கலாம் என்ற ச ந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர். பொலிசார் வி சாரணையில் இந்த வழக்கின் ம ர்ம மு டிச்சுகள் அவிழும் என்பதால், பொலிசார் இது குறித்து தீ விரமாக வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி..

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது சம்பந்தமாக எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து இளைஞனை காதலித்து திருமணம் செய்த பெண் : 2 வயது சி றுமிக்கு நடந்த து யரம்!!

முதல் திருமணத்தை மறைத்து..

தமிழகத்தில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளைஞரை இளம் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், உண்மை தெரிந்த காதலன், ஆ த்திரத்தில் அந்த பெண்ணின் கு ழந்தையை கொ லை செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு லாவண்யா என்ற 20 வயது மகள் உள்ளார். இந்நிலையில், லாவண்யா, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து வர, இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின் இருவரும், கே.வி.குப்பம் சீதாராம் பேட்டையில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், லாவண்யா தனது சகோதரியின் 2 வயதுப் பெண் குழந்தை ஒன்று தாய் வீட்டில் இருப்பதாகவும், தன் மீது அதிகம் பிரியம் வைத்திருப்பதால் அக்குழந்தையை வாங்கி வரும்படி கணவர் பிரவீன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் படி பிரவீன் குழந்தையை தூக்கி வர, லாவணயா அந்த குழந்தைகள் அன்புடன் நான்கு நாட்களாக பராமரித்து வந்துள்ளார். இதைக் கண்ட பிரவீன்குமாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்று லாவண்யாவிடம் கேட்க, இருவருக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் ஒரு கட்டத்தில், லாவண்யா தான் ஏற்கனவே சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு பிறந்தது தான் இந்த குழந்தை, கணவரிடம் சண்டை போட்டு தாய் வீட்டிற்கு வந்த நேரத்தில் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் கூறி திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆ த்திரமடைந்த பிரவீன் குமார், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி, தினமும் ம து கு டித்து, போ தையில் வந்து ச ண்டை போட்டு வந்துள்ளார். அப்படி கடந்த செவ்வாய் கிழமை இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட, கோ பத்தின் உச்சிக்கு சென்ற பிரவீன்குமார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை பிடித்து தூ க்கி வீ சியதால், சு வற்றில் மோ திய கு ழந்தை அ ந்த இ டத்திலே ப ரிதாபமாக உ யிரிழந்தது.

இதையடுத்து, கு ழந்தையின் கொ லையை ம றைக்க தி ட்டமிட்ட லாவண்யாவும், பிரவின்குமாரும் சேர்ந்து, ச டலத்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, குழந்தை குப்புற விழுந்து ம யக்கம் அ டைந்ததாக கூறியுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினர். இது குறித்து லாவண்யா தன்னுடைய முதல் கணவரிடம் குழந்தை இ றந்தது பற்றி கூற, அவருக்கு தன்னுடைய குழந்தையின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பி ரேதபரிசோதனை அறிக்கையில், குழந்தையின் த லையில் ப லத்த காயம் ஏற்பட்டு இ றந்தது தெரியவந்துள்ளது. அதன் பின் பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், இருவரும் நடந்ததை ஒப்புக் கொள்ள, பொலிசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் தொடரும் த ற்கொ லைகள் : மேலும் ஒரு இளம் பெண் தூ க்கிட்டு த ற்கொ லை!!

கந்தசாமி கோமிதா..

மட்டக்களப்பு நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் ம ரம் ஒ ன்றில்  தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளன.

த ற்கொ லையில் பல ச ந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண் அப்பகுதியில் ஆடு மேய்த்துவந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், சம்பந்தப்பட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளம்பெண் உயரமான மரத்தில் எப்படி ஏறினார் என்ற ச ந்தேகமும் எழுந்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.