பாடசாலை மாணவர்களுக்கு முக கவசம் அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதி சுகாதார இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிந்தால் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும். அத்துடன் அலர்சி போன்ற நோய்கள் ஏற்பட கூடும். உரிய மருத்துவ முறையிலான முக கவசத்திற்கு பதிலாக பல்வேறு முக கவசங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமையே அதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலையில் இருந்து செல்லும் போதும் அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் முக கவசம் அணிவிக்க பெற்றோர் தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதி ஒருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு த ற்கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் கு தித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.
நீரிழ் மூ ழ்கிய யு வதியை மேலே இ ழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யு வதியை கா ப்பாற்றியுள்ளார்.
எனினும், கா ப்பாற்றுவதற்காக முதலில் கு தித்த நபர் கா ணாமல் போ யுள்ளார். 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு கா ணாமல் போயுள்ளார்.
பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
பளை நகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கில் திடீரென எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த விமான படைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியுடன் மோதியுள்ளது.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குளியை சேர்ந்த அந்தோனி அஞ்சலஸ் வயது 51 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். கண்டி – குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும்மெனவும், அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்படவுள்ளதாகவும் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு சற்று முன்னர் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூன்று பெண்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
குறித்த சன நெரிசலில் சிக்குண்டு மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், வி பத்தில் உ யிரிழந்த ந பர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் கு ழப்ப நி லை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று குறித்த நபர் பிரதேசத்திற்கு வந்தமையினால் ம க்கள் அ ச்சமடைந்து, அவர் மீது வ ன்மு றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மீகொடை, நடுஹேன, முத்துஹேனவத்தை வீதி பிரதேசத்தில் இரவு 11.45 மணியளவில் மேஜர் ஒருவர் பயணித்த மோட்டார் வா கனத்தில் மோ துண்டு கு றித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கா யமடைந்த நபரை மேஜர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் குறித்த நபரின் நிலைமை ஆ பத்தாக இருந்தமையினால் அன்று இரவே கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் அவர் உ யிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் வி சாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி உ யிரிழந்த ந பரின் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.
உ யிரிழந்த ந பரின் அ டையாளத்தை உ றுதி செ ய்ய முடியாமையினால், எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு அந்த பிரசேத்தில் உள்ளவர்களிடம் வி னவியுள்ளார். அதனை பார்த்தவர்கள் புகைப்படத்தில் இருப்பவர் “களுத்துறை மாமா” என குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் களுத்துறை மாமா என்ற 79 வயதுடைய நபரின் 6 பிள்ளைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு ச டலத்தை பொலிஸாரினால் காண்பிக்கப்பட்டுள்ளது. உ யிரிழந்தவர் தனது தந்தை என ம கனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த ந பரின் ச டலம் கடந்த மாதம் 17ஆம் திகதி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி நடவடிக்கைகள் 18ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குறித்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
எனினும் அவர் பே ய் என நினைத்த மக்கள் அவரை க டுமையாக அ டித்துள்ள னர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் அவரது பிள்ளைகளையும் பொலிஸார் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ள கிளிநொச்சி இளைஞனின் முயற்சி தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியல் வாழும் குறித்த இளைஞனின் நீண்ட நாள் முயற்சி அண்மையில் கணிசமான அளவு பூரணம் அடைந்துள்ளது. குறித்த மோட்டார் வாகனத்தை செலுத்தக் கூடிய வகையில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளார் குறித்த இளைஞன்.
குறித்த இளைஞன், கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சாக உழைத்து இன்று கழிவு பொருட்களைக் கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றினை வடிவமைத்துள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற அருள்தாஸ் றொசான் என்ற 20 வயதுடைய இளைஞன் சிறுவயதிலிருந்தே இவ்வாறான வடிவமைப்பு தொடர்பில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
குடும்ப பொருளாதாரம் பின்னிலையில் இருந்தபோதிலும், மகனின் முயற்சியை தட்டிக்கொடுத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். அதன் விளைவாக கிடைத்த இந்த வெற்றி தனக்கு மகிழ்வினை தருவதாக தெரிவிக்கும் தாயார், தான் பெருமை அடைவதாகவும் குறிப்பிடுகின்றார்.
குடும்ப பொருளாதாரம் இவரது முயற்சிக்கு நீண்ட கால தடையாக இருந்தபோதிலும் தாயாரின் ஒத்துழைப்பும், தட்டிக்கொடுத்தலும் இளைஞனின் இந்த வடிவமைப்புக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது. உயர்தர கல்வியை நிறைவு செய்ய குறித்த இளைஞன் தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்று வருகின்றார்.
குறித்த வடிவமைப்பின்போது பொருளாதாரம் சார்ந்த பல தடைகள் தனக்கு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் நோயாளர்களை பரமரிப்பதன் ஊடாக கிடைக்கம் வருமானத்திலிருந்து குடும்ப செலவையும் பார்த்து, எனக்கு சிறு சிறு தொகையை தாயார் வழங்கியதன் ஊடாகவே இன்று இவ்வாறான முன்னுற்றத்தை அடைந்துள்ளதாக அந்த இளைஞன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான வடிவமைப்பு எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளதாகவும், இதனை மாதிரியாக வைத்து வேறு வாகனங்களையும் வடிவமைக்க முடியும் எனவும் குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
மிக குறைந்த செலவில் முச்சக்கர வண்டிக்கும் குறைவான தொகையில் இவ்வாறான வடிவமைப்பை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றா்ர.
தனது நண்பர்கள் பலரை ஏற்றியவாறு பயணித்தபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் குறித்த வாகனம் பயணிப்பதாகவும் தெரிவிக்கும் இளைஞன், 500 கிலோ எடைவரை வாகனத்தில் ஏற்ற முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.
குறித்த வடிவமைப்பு 75 வீதம் பூரணமடைந்துள்ளதாகவும், வயரிங் உள்ளிட்ட சில வேலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதற்காக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தையும், ஏனைய வாகன கழிவுகளையும் பயன்படுத்தியே இதனை வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பொருளாதார தடை இல்லாதிருந்தால் குறித்த வடிவமைப்பை பல சில வருடங்களிற்கு முன்பாகவே முடித்திருப்பேன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனை போன்று வடிவமைப்புக்களை தன்னால் மேற்கொள்ள முடியும் எனவும், அதற்கு உற்பத்தி நிறுவனங்கள் உதவினால் குறைந்த செலவில் இவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
குறித்த இளைஞனின் இந்த முயற்சி தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் நேரில் சென்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (21.05.2020) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இ.போ.ச பேரூந்துகள் மட்டுப்படுத்தபட்டு சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்தன.
இந் நிலையில் இன்றிலிருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் நபர் ஒருவர் ப சிக் கொ டுமை தா ங்க மு டியாமல், சா லையில் அ டிபட் டு கி டந்த நா.யின் ச டலத்தை சா ப்பிடும் வீ டியோ கா ட்சி வெ ளியாகி பா ர்ப்போர் நெ ஞ்சை ப தற வை க்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. சில தளர்வுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டாலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக க டும் க ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நாய் ஒன்று வி பத்தின் காரணமாக அ டிபட் டு சாலையில் இ றந்து கி டக்கிறது. அதை நபர் ஒருவர் பசி தா ங்க மு டியாமல் அந்த நா யின் ச டலத்தை சாப்பிடுகிறார்.
அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அதை சாப்பிடாதே என்று கூறியும், அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார். இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை குடிக்கிறார்.
இந்த ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சி க்கி த விக்கும், ஏராளமானோர் பசிக் கொ டுமை தா ங்க மு டியாமல் இ றப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாக நடந்துள்ளது.
வீட்டில் ஒன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூ க்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் பத்மபிரியா ஹரிப்பிரியா இருவரும் இரட்டையர்கள்.
இருவரும், காட்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு தற்போது முடித்துள்ளனர். தொடர்ந்து 12ஆம் வகுப்பிற்கான பாடங்கள் ஒன்லைனில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று காலை, ஒன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை கவனிக்க போகிறோம் என்று கூறிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர்.
வீட்டின் கீழ்தளத்தில் கவுரியும், இரட்டை சகோதரிகளின் சகோதரன் பத்மகுமாரும் இருந்தனர். காலையில் போனவர்கள், நேரமாகியும் 2 பேரும் மாடியில் இருந்து வரவில்லை என்று உணவருந்த கவுரி இருவரையும் அழைக்க சென்றுள்ளார்.
அவர்கள் இருந்த அறை உள்பக்கம் பூட்டபட்டிருந்தது. ஜன்னலும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதனால் பதட்டமடைந்த கவுரி, உடடினயாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து ஜன்னலை உடைத்து பார்த்தபோது 2 பேருமே வேற வேற பக்கம் தூ க்கில் ச டலமாக தொ ங்கிக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்ததும் கவுரி க தறித் து டித்தார். உடனடியாக காட்பாடி பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிசார் இருவரின் உடல்களையும் மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமான வழக்கும் பதிவு செய்து எதற்காக இவர்கள் த ற்கொ லை செய்து கொண்டார்கள் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதில் கவுரி சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. எனவே பிள்ளைகள் தான் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்ற அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர்.
அவர்கள் சரியாக சமைப்பதில்லை என்று கவுரி அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பராம். அதனால் அம்மாவுடன் ஏற்பட்ட த கராறில் இவர்கள் த ற்கொ லை செய்துகொண்டிருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகிறார்கள். எனினும் முழு விசாரணை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் தங்கள் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அந்த புதுமணத் தம்பதி இலங்கை அகதிகள் முகாமி உள்ள ஈழத்தமிழர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவருக்கும், குளித்தலை அருகில் இருக்கும் புனவாசிப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு, சிவக்குமார் 1500 பத்திரிக்கைகள் அடித்து, தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்துள்ளார். அதே போன்று மகாலட்சுமி வீட்டில் 1000 பத்திரிக்கைகள் அடித்து, கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திடீரென்று இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதால், 20 பேரைக் கொண்டு இவர்களின் திருமணம் எளிமையாக நடந்தது. இதனால் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஏதேனும், ஒரு நல்ல காரியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சிவக்குமார் யோசித்து வந்துள்ளார்.
இதைப் பற்றி தனது மனைவி மகாலட்சுமியிடம் தெரிவிக்க, அதற்கு மகாலட்சுமி, எங்கள் ஊரின் அருகில் இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 150 ஈழத்தமிழர்கள் வசிக்கிறாங்க. அவர்கள் அனைவரும் கூலி வேலை பார்ப்பவர்கள்.
தற்போது ஊரடங்கு அமுலில் இருப்பதால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு இந்த தொகையை வைத்து ஏதேனும் பொருட்கள் வாங்கிக் கொடுத்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதுவும் நல்ல யோசனை என்று மனைவியை பாராட்டியதுடன், அவர் இரும்பூதிப்பட்டியில் உள்ள 150 ஈழத்தமிழர் குடும்பங்களுக்கும் பத்து நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை, இருவரும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவிய போது, அவர்கள் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்திய போது, எங்கள் திருமண பந்தம் முழுமையடைந்ததாக தோன்றியது என்று கூறியுள்ளனர்.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் விருந்துகளின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமகாலத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் கூட்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியிடங்களுக்கான செயற்பாட்டு வழிகாட்டுதல்களை பட்டியலிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் முகமூடி அணிந்து ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியதுடன், கட்டிப்பிடிப்பதும் கைகுலுக்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழையும் அனைத்து விருந்தினர்களின் உடல் வெப்ப நிலையையும் சரிபார்க்க வேண்டும் எனவும் மண்டபத்தில் காற்றோட்டம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்கள் பாத்திரங்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அங்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவரை பா லியல் வ ன்புண ர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையில் பிறந்த அமெரிக்கர் ஒருவரை அமெரிக்க புலனாய்வு சேவை தேடிவருகிறது.
சமிந்த பிரபாத் பள்ளியகுரு என்ற இந்த அமெரிக்கர் 2020 மார்ச் 7ஆம் திகதி ஒஹியோ என்ற இடத்தில் 6 வயது சி றுமி ஒருவரை பா லியல் வ ன்பு ணர்வுக்கு உட்படுத்தியதாக கு ற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் 21ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் பள்ளியகுருவை இறுதியாக கலிபோர்னியாவில் மெக்சிக்கோ எல்லைப்புறத்தில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இலங்கைக்கும் அடிக்கடி வந்து செல்பவராவார். எனவே அவரை கண்டவர்கள் உடனடியாக அமெரிக்கா எப்பிஐ புலனாய்வு சேவையினருக்கோ அல்லது அருகில் உள் அமரிக்க தூதரகத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது. உலகை அ ச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான பீஜீங் பல்கலைக்கழக ஆய்வத்தில் விஞ்ஞானிகள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மருந்து மூலம் கொரோனா வைரசில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிராக குறுகிய காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரஸ் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் என்று சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விஞ்ஞானி சன்னிஜி தலைமையிலான குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. முதலில் விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் இந்த மருந்து 19 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. வைரசுக்கு எதிராக இந்த மருந்து தீவிரமாக போ ராடுகிறது. உடலில் கொரோனா வைரஸ் பரவுவதை அதிரடியாக தடுக்கிறது. மேலும் உடலில் உள்ள நுண்ணுயிர் எ திர்ப்பு சக்தியையும் நடுநிலையாக்குகிறது.
இந்த மருந்தை கொரோனா பாதித்த ஒருவருக்கு செலுத்தும் போது அடுத்த 5 நாட்களில் அந்த வைரசின் எண்ணிக்கையான 2500-க்கும் கீழ் குறைகிறது. இந்த மருந்து தொடர்ந்து சோதிக்கப்பட்டு மேலும் மேன்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
வவுனியா சுகாதார திணைக்களத்தினால் வவுனியா நகர்ப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வவுனியா மன்னார் வீதி, ஹொறவப்பொத்தான வீதிகளில் நடைபாதைகளில் அமர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களிடம் விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முறைகள் தொடர்பாக வியாபாரிகளிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் நிலத்தில் வைத்து மரக்கறி விற்பனை செய்வதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டதுடன், உயரமான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையில் பொதுசுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர் , பொலிஸார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.