கொழும்பில் எப்போது ஊரடங்கு சட்டம் அகற்றப்படும்? சுகாதார துறை வெளியிட்ட தகவல்!!

ஊரடங்கு சட்டம்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மிக விரைவில் தளர்த்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இலங்கையில் கொரோனா வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடற்படையினர் மத்தியிலேயே கொரோனா பரவலே காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு வெகு விரைவில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடற்படையினருக்கு மேலதிகமாக அதிகமான கொரோனா நோயாளிகள் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையை பொறுத்தவரையில் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்நிலையில் தீவிர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகள் விடுவிக்கப்படும் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பணிப்பாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

புதிய 35 கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரம்!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் நேற்று மாத்திரம் புதிதாக 35 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1027ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 35 பேரும் கடற்படை சிப்பாய்கள் என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 586 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 569 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 209 பேர் கடற்படையினராகும். தொற்றுக்குள்ளாக 445 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் : இலங்கையர்களுக்கு நிம்மதி தரும் தகவல்!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். இலங்கை சமூகத்திற்குள் நோயாளிகள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 நாட்களாக ஒரு நோயாளியேனும் சமூகத்திற்குள் இருந்து பதிவாகவில்லை என அவர் கூறியுள்ளார். இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம்!!

புதிய நடைமுறை அறிமுகம்..

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. உள்வரும் விமான பயணிகளுக்கு தங்களின் பயண இலக்கிற்கமைய தறையிறங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகளுக்காக இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து நெரிசல்களை குறைத்து, பாதுகாப்பான முறை ஊடாக மிகவும் பலனுடைய மற்றும் திறமையான சேவை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனைக்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வேலைத்திட்டங்களுக்கமைய பயணிகள் நாட்டில் தரையிறங்குவதற்கு முன்னர் உரிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தல், விமான ஒன்று இலங்கைக்கு வருவதென்றால் அரை மணி நேரத்திற்குள் பெயர் பட்டியல் ஒன்று விமான நிலைய அதிகாரிக்கு வழங்குதல்,

அனைத்து பயணிகளுக்கு கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெறல், பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புதல்,

விமான நிலையங்களுக்கு அடிக்கடி கிருமி நாசினி தெளித்தல் மற்றும் சமூக இடைவெளியை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!!

சிரட்டை கைத்தொழிலாளர்கள்..

கொவிட்- 19 இன் தாக்கம் காரணமாக வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா, பூம்புகார் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிடம் பெற்ற பயிற்சிகளை அடிப்படையாக கொண்டு 20 குடும்பங்கள் சிரட்டை கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இருந்து பெறப்படும் கழிவு சிரட்டைகளைப் பயன்படுத்தி பூ, கடவுள் உருவம், உண்டியல், இதயம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை உறப்பத்தி செய்து வந்தனர்.

அதனை வவுனியா நகரில் விற்பனை செய்து அந்த வருமானத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தினர்.

ஆனால், தற்போது கொவிட்-19 இன் தாக்கம் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், சுற்றுலா பயணிகளின் வருகையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப் பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.

இதனால் சிரட்டை கைத்தொழிலாளர்கள் அத் தொழிலை கைவிட்டு வாழ்வாதாரத்திற்காக போ ராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மாமா உயிரிழந்த அதிர்ச்சியில் திடீர் மரணமடைந்த மருமகன்!!

மாமா உயிரிழந்த அதிர்ச்சியில்..

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாமா உ யிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத மருமகன் திடீர் மரணமடைந்த செய்தி ஒன்று நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இருவரும் கினிகத்ஹேன, சமன்புர பிரதேசத்தை சேர்ந்த 70 மற்றும் 35 வயதுடைய இருவராகும்.

மரம் வெட்ட சென்று விபத்துக்குள்ளானமையினால் மாமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது மகளை திருமணம் செய்தவர் மாமனாருக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணியளவில் மாமனார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் 4 மணி அளவில் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை மருமகனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை கேட்ட மருமகனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார. உயிரிழந்த நபரின் மகள் குறித்த வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றுகின்ற நிலையில் அவர் இந்த செய்தியை கேட்டு கடும் அ திர்ச்சியடைந்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் அம்பான் சூறாவளி : 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

அம்பான் சூறாவளி..

நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றிரை தாண்டிய அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் நிலை கொண்டுள்ள அம்பான் சூறாவளி இன்றைய தினம் வடகிழக்கு ஊடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையில் மாலை நேரத்தில் மேற்கு வங்காள கடற்கரை ஊடாக பயணிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் அழுத்தம் காரணமாக நாட்டின் தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் விசேடமாக மேற்குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னலினால் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

13 வயது சிறுவனின் குழந்தைக்கு தாயான திருமணமான பெண் : 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!!

திருமணமான பெண்..

திருமணமான பெண் ஒருவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் உறவு கொண்டு அவனது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Berkshireஐச் சேர்ந்த Leah Cordice (20), 13 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி அவனது குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

பின்னர் தன்னை அந்த சிறுவன் வ ன்கொ டுமை செய்ததாக கூறிவிட்டார் Cordice. ஆனால், அந்த சிறுவனுடனான சந்திப்பு ஒரு முறையல்ல கிட்டத்தட்ட ஐந்து முறை தொடர்ந்துள்ளது.

அத்துடன், தன்னை சந்தோஷமாக வைத்துக்கொண்டதற்காக அந்த சிறுவனுக்கு மீனும் சிப்ஸும் வாங்க பணமும் கொடுத்துள்ளார் Cordice.

இதற்கிடையில், தனது குழந்தையை பிரிந்ததால், தான் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளான் அந்த சிறுவன். மறுபக்கம், Cordiceஇன் கணவர் Daniel அந்த குழந்தை தன் குழந்தை என எண்ணி அதை அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.

அவரும் தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்துவிட்டது தெரியவர, ஏமாற்றமடைந்து மனைவியைப் பிரிந்துவிட்டார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, Cordiceக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : நாளை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை!!

போக்குவரத்து சேவை..

கொரோனா வைரஸ் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளை வரம்பிற்குள் மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய நாளை முதல் அதிக அவதானம் மற்றும் அவதானமிக்க பிரதேசங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களுக்கு இடையில் பேருந்து பயணிக்க அனுமதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பொது போக்குவரத்து சேவைகள் பணிகளுக்காக செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் நிலைமைக்கமைய எதிர்வரும் நாட்களுக்குள் கொரோனா தொடர்பான சிறப்பான நிலைமை நாட்டினுள் காணப்பட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையை போன்று போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரயில் போக்குவரத்து தொடர்பில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கமைய ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளும் அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள் வருகை தராமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில பயணிகள் தாங்கள் பயணிப்பதற்காக பேருந்துகள் இல்லை என கூறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பொது போக்குவரத்து சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது அத்தியாவசிய சேவைக்காக மாவட்டங்களுக்குள் மாத்திரம் சேவை மேற்கொள்ளப்படுகின்றது.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்கு அல்லது வேறு மாவட்டங்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவு இன்னமும் அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைக்கமைய மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பொது போக்குவரத்து சேவை ஆரம்பித்தவுடன், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆசனங்களுக்கமைய மாத்திரம் போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்தின் போது முக கவசம் அணிவது கட்டாயமாகும். பேருந்திற்குள் கிருமி நாசி வைத்திருக்க வேண்டும்.

பயணிகள் நின்ற நிலையில் பயணிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படாது. அதற்கான சட்டங்களை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

தங்கையைக் காதலித்ததால் இ ளைஞனை கொ லை செய்த அண்ணன்!!

த ங்கையைக் கா தலித்ததால்..

ஆத்தூரில், த ங்கையை ஒ ருத லையாகக் கா தலித்து வந்த இ ளைஞரை, அ ண்ணன் ச ரமாரியாக எ ட்டி உ தைத்ததில் 19 வ யது இ ளைஞர் ப ரிதா பமாக உ யிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய ம கன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படித்தை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

இவர், சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.
எதிரில் மோட்டார் சைக்கிளில் சிமெண்ட் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்த இ ளைஞர் ஒ ருவர், தி டீரென்று அருண்குமாரை வ ழிமறி த்து கையா ல் ச ரமாரி யாக அ டித்துள் ளார்.

எ திர்பாராத இச் ச ம்பவத்தால் நி லைகு லைந்த அருண்குமார், கீ ழே ச ரிந்து வி ழுந்தார். ஆனாலும் அ வரை வி டாமல் நெ ஞ்சு, வ யிற்றுப் ப குதியில் அ ந்த இ ளைஞர் ச ரமாரி யாக உ தைத்துள்ளார். அ டித்த இ ளைஞருடன் வண்டியில் வந்த மற்றொரு ந பரும், ச ம்பவ இ டத்தில் இருந்த சி லரும் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து அருண்குமார் வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காததுபோல் படுத்துத் தூ ங்கியுள்ளார். உ டலில் வெ ளிப்புற கா யங்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது பெற்றோருக்கும் ச ந்தேகம் எழவில்லை. இதைப்பற்றி பெற்றோரிடம் சொன்னால் வி வகாரம் வேறு மாதிரி ஆகிவிடும் எனக்கருதி அருணும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மாலையில் அவர், திடீரென்று வ யிற்று வ லி ஏற்பட்டதாகத் தந்தையிடம் கூறவும், அவர் அருண்குமாரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தபிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 06.45 மணியளவில் சிகிச்சை ப லனியின்றி அருண்குமார் உ யிரிழந்தார்.


இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் உமாசங்கர், எஸ்ஐ நிர்மலா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வி சாரித்தனர். அருண்குமாரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

காவல்துறை வி சாரணையில், அ ருண்குமாரை அ டித்த வர் ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்பது தெரிய வந்தது. சதீஸின் சித்தப்பா தங்கதுரை.

கொ லையுண்ட அருண்குமார், சதீஸின் த ங்கை முறையான தங்கதுரை ம களை ஒ ருத லையாக கா தலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தன் கா தலை ஏற்றுக்கொள்ளும்படி அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

த ங்கை மீதான ஒருதலைக் கா தலை உடனடியாக கைவி டுமாறும், இது ஊருக்குத் தெரிந்தால் எல்லோருக்கும் மா னம் போய்விடும் என்றும் சம்பவத்தன்று சதீஸ் எ ச்சரித் துள்ளார். அதற்கு அருண்குமார் ம றுத்ததால்தான் ஆ த்திரத்தில் அருண்குமார் அவரை கை யால் அ டித்தும்,

கா லால் சர மாரியாக எ ட்டி உ தைத் து அ டி த்திருப் பதும்தெரிய வந்துள்ளது. ம ருத்துவர்கள் ப ரிசோதனையில் சதீஸ்குமார் அ டி த் ததில், அருண்குமாரின் மண்ணீரல் பெரிய அளவில் பா திக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர் உ யிரிழந்திரு ப்பதும் தெரிய வந்தது.

இச் ச ம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் தொடர்ந்து வி சாரித்து வருகின்றனர். மேலும், கொ லைக்குக் கா ரணமான சதீஸ் தி டீரென்று த லைம றைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தே டி வருகின்றனர். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழ் பல்கலை தமிழ் மாணவிக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர்விருது : குவியும் வாழ்த்துக்கள்!!

தர்சிகா விக்கினேஸ்வரன்..

அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி.

திருகோணமலை நகரைச்சேர்ந்த தர்சிகா விக்கினேஸ்வரன் என்ற மாணவிக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யு த்தநிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

எனினும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

கல்வியில் திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.அவர் அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜா ரவிச்சந்திரன் மேற்கொண்டிருந்தார்.

கிளென் திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தைப் பெற்றிருக்கும் தர்சிகா விக்கினேஸ்வரன், புவித்தொழில்நுட்பப் பொறியியல் கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார். பேராசிரியராக வரும் நம்பிக்கையுடன் அவர் கலாநிதி பட்டக்கல்வியைத் தொடரவுள்ளார்.

எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல : புருசனும் சரியில்ல : இளம் மனைவியின் வி பரீத முடிவு!!

போரதீவு கிராமத்தில்..

அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உ யிரிழந்த இளம் குடும்பப் பெ ண்ணின் ம ரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு ம ரணித்துள்ளதுள்ள சம்பவம் அப்பகுதியில் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உ யிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சா க வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்ற. எல்லோரும் நான் சந்தோசமா இருக்கன் எண்டுதான் நினைப்பிங்க.

நான் சந்தோசமா இல்லை. வாழ்க்கை நிம்மதியா வாழனும் என்டுதான் நினைச்சன். வாழமுடியல்ல எல்லோரும் நல்லா இருக்கனும் என்டு நினைச்சன். எனக்கு கடவுள் நிம்மதியான வாழ்க்கையை குடுக்கல.எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல. கிடைச்ச புரிசனும் சரியில்ல.

இப்படி கேவலபட்டு வாழ்றது அவசியமில்ல. ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறுத்து போகலாம். இது வாழ்க்கை புள்ளா நீடிக்க போகிறது. இப்படி வாழ்க்கை வேணாம் என்டு. அம்மா இருக்கிற இடத்துக்கு நானும் போறன்.

என்ன தேவல்லாத யாருக்கும் எந்த பி ரச்சனையும் வராது. இது நான் சுயமாக எடுத்த முடிவு. என் ஆத்மா என் புருசனுக்காக இறுதியாக பேசுகிறது. நீ ம து அருந்து விட்டு செய்த செயலால் இன்று இந்த உலகை விட்டு சென்று விடுகிறேன்.

கனவில் கூட நினைத்திருக்மாட்டாய். என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டாய்… திருமணம் முடிக்க முதலோ பிறகோ நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது. நான் உன்னிடம் கு டிக்க வேண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை.

அளவாக கு டிக்க சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை.. அளவுக்கதிகமாக கு டித்து தினமும் பி ரச்சனை செய்தாய் ச ந்தேகபடும் வார்த்தைகளை உதித்தாய். உன் கு டிக்காவும் ச ந்தேகத்துக்காகவும் எனது உ யிரை து றந்தேன்.

உன்னை திருத்தவே நான் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது.. என்னுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது.. நான் கோவத்தினாலும் பிடிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த கு டிதான்.. குடி குடியை கெடுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு குடியே இல்லாமல் ஆக்கிவிட்டாய்.. இப்போது சந்தோசம் தானே. நீர் உன் அம்மாவோடும் உன் அக்காவோடும் சந்தோசமாக இருங்கள்.

ஏன் என் ஒன்று விட்ட அக்காவை உன் அண்ணன் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. சரி அது ஒருபுறம் இருக்கட்டும் உன் அம்மாவையும் அக்காவையும் பிறகு உன்னிடம் சொல்கிறேன்.

அளவுக்கு மீறியதால் உன் கு டியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது.. நான் எவ்வளவு சந்தோசமாக வாழவில்லை யென்றாலும் உ யிரோடு வாழ்ந்திருப்பேன்? உலை வாயை மூடலாம்.. ஊர் வாயை மூட முடியாது.. த வறு செய்தது நீ.. அதற்கு நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்.. க ழுத்தில் தூ க்கு  மா ட்டி வி ட்டு உன்னை தொலைபேசியில் கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூ ங்கி செ த்திருவேன் என்று ஒரு வார்த்தை சொன்னேன்.

அந்த கு டி சனியனை தூக்கி போட்டு விட்டு சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லியிருக்கலாம்.. அதற்கு கூட உன் கு டி எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை கடவுளும் கொடுக்கவில்லை.. நீயும் கொடுக்கவில்லை..

யார் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை யாரும் வாழ போறதில்லை நானே.. திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும்.. மீதி காலம் முழுவதும் என் அம்மோவோடு வாழ சந்தோஷமாக செல்கிறேன்.

வெளிநாட்டில் வாழும் குடி கார கணவன்மாரே உங்கள் மனைவி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாஅப்படி என்றால் உங்கள் மனைவியுடன் இருங்கள்.

உங்கள் மனைவியினை தனியாக விட்டு விட்டு நீங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு என் கணவர் போல் ச ந்தேகங்களோடு சம்பாதிக்கின்ற பணம் எங்களுக்கு வேண்டாம். கு டிகார கணவர்மார் நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன்…

அன்பு புருஷா நீ இல்லாத வேளையிலும் எனது இ றுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். இ றப்தற்கு முன் இளம் குடும்பப் பெண் சுயமாக எழுதிய கடிதம்

இலங்கையில் 1000ஐ தாண்டிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை!!

கொரோனா தொற்று..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கமைய இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி இலங்கையில் 1020 கொரோனா தொற்றாளர்கள் என பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படையினரில் 209 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஏனையோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 28 பேரும் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாஎல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுள் ஏற்கனவே 10 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை வைத்தியசாலை மற்றும் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரின் மருத்துவ மாதிரிகள் பெறப்பட்டு இன்று (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து 28 கடற்படையினர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதுடன் அவர்கள் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவல் இலங்கையில் ஆரம்பத்தில் மிக மிக குறைவாகவே காணப்பட்டு வந்தது. திடீரென இவ்வாறு ஆயிரத்தை தாண்டுவதற்கு காரணம் தனிமைப்படுத்தல் முகாமில் நோயாளர்களைப் பராமரித்து வந்த படையினராலேயே என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!!

வெள்ளநீர் புகுந்ததால்..

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடமொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் முன்னெடுத்து வருகிறார்.

அத்துடன், வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வகையில் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வடி காண்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

எரிபொருள் விலையை குறைக்க முடியாது : பந்துல குணவர்தன!!

எரிபொருள் விலை..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பல கோடி ரூபா கடனில் இருப்பதால், எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியாதுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் கிடைக்கும் அனைத்து வருவாயும் கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய அரசாங்கத்திற்கு கிடைக்கும் மேலதிக நிதியை விசேட வங்கிக் கணக்கில் வைப்புக்கு செய்து, 200 பில்லியன் ரூபாவை சேமிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியை கொண்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை செலுத்தி முடிக்க முடியும் எனவும், இதன் பின்னர் எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பலனை மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றங்களுக்கும் செய்யப்பட மாட்டாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கே நாடு முழுவதும் அதிகளவான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இருக்கின்றன.

வேறு நிறுவனங்களிடம் எரிபொருள் விலை அதிகமாக இருக்குமாயின் அந்த நிறுவனத்தில் எரிபொருளை கொள்வனவு செய்யாது அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் எரிபொருளை கொள்வனவு செய்தால், மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோ சடி செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

30 லட்சம் ரூபா..

முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோ சடி செய்ததாக தெரிவிக்கப்படும் ச ந்தேகநபரை கொழும்பு கு ற்றத்தடு ப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் செய்த மு றைப்பாட்டின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சத்தை பெற்றுக்கொண்ட செவனகலயைச் சேர்ந்த ஒருவர் இதுவரை முகக்கவசங்களை தரவில்லை என்று செய்யப்பட்ட மு றைப்பாட்டின் கீழேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை மு றைப்பாட்டாளரின் மு றைப்பாட்டுக்கு இணங்க கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிராம் ஹெ ரோய் னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.