பே ஸ்புக்கில் பரவிய செய்தியால் இளம் குடும்பஸ்தர் த ற்கொ லை : யாழில் சம்பவம்!!

இளம் குடும்பஸ்தர்..

முகநூலில் பரப்பட்ட தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான குறித்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, முகநூல் கணக்கில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த த ற்கொ லை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம்,செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள், சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் பேஸ்புக் ஒன்றில் இன்னொரு பெண்ணுடன் தவறாக இருக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் த ற்கொ லை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) சட லமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முறை தவறிய நட்பால் நடந்த விபரீதம் : மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

முறை தவறிய நட்பால்..

தமிழகத்தில் கணவனை கா ணவில்லை என்று மனைவி புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, மனைவியே கொ லை செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எ ரிக்கப்பட்ட நி லையில் ச டலம் ஒ ன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந்தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை பொலிசார் தூசி தட்ட ஆரம்பித்தனர்.

அதில், 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் கா ணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா என்ற 34 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதனால் பொலிசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கும், பின்னும் கூறியதால், பொலிசார் அவரின் மொபைல் போனில், கடந்த ஜுலை மாதத்தில் வந்த அழைப்புகளை எல்லாம் பார்த்துள்ளனர். அப்போது அதில் சிவராஜ் என்பவருடம் இவர் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிசார் தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசாரிடம் சுதா அளித்த வாக்குமூலத்தில் முந்திரி தோப்பில் எ ரிந்த நி லையில் பிணமாகக் கிடந்தது எனது க ணவர் தான். அவரை கொ லை செய்ய காரணமாக அமைந்தது எனது முறைதவறிய நட்பு தான் என்று கூறியுள்ளார்.

நானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.

எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார்.

அதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம்.

அப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

கணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். அடிக்கடி சிவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுவிட்டது.

கணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் ஒன்றாக இருப்போம். இதைக் கண்டு ச ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் என் கணவரிடம் கூற, அவர் என் மீது உள்ள நம்பிக்கையில், அதை நம்பவில்லை.

அதன் பின் 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அ திர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆ த்திரமடைந்த நானும், சிவராஜும் சேர்ந்து கணவரை வீட்டிலே அ டித்து கொ லை செய்து, அ வரது உ டலை வீட்டில் ம றைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொ லையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.

இப்படி நீண்ட ஆலோசனையில் முடிவில் அந்த முந்திரி தோப்புக்குக் கொண்டு வந்தோம். ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த பெ ட்ரோலை அ வர் உ டல் முழுவதும் ஊ ற்றி தீ வைத்து எ ரித்த பின்னர் எங்களுக்கு ஒன்னும் தெரியாததுபோல் வீட்டுக்குச் சென்று விட்டோம்.

இதையடுத்து 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் கா ணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்தேன். 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சிக்கமாட்டோம், நமக்கு யார் மீதும் ச ந்தேம் இல்லை என்று நிம்மதியாக இருந்தோம், பொலிசார் கண்டுபிடித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிள்ளைகளை கணவரிடம் விட்டு வேலைக்கு சென்ற மனைவி : வீடு திரும்பிய போது ஏற்பட்ட அதிர்ச்சி!!

வீடு திரும்பிய போது..

தமிழகத்தில் மூ ன்று கு ழந்தைகளை கொ லை செ ய்துவிட்டு த ந்தை த ற்கொ லை செ ய்துகொண்ட ச ம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (37) கூலி தொழிலாளி. இவர் சாமியாடியாகவும் இருந்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (32) இவர்களுக்கு, ராஜேஸ்வரி (12) ஷாலினி (10) சேதுராமன் (8) என மூன்று பிள்ளைகள்.

நேற்று காலை, கோவிந்தம்மாளுக்கும், ஆறுமுகத்திற்கும் ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவிந்தம்மாள், பிள்ளைகளை கணவரிடம் விட்டு தனியார் தொழிற்சாலைக்கு துப்புரவு பணிக்கு சென்றுவிட்டார்.

பணி முடித்து மாலை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகள் ராஜேஸ்வரி ம யங்கி கி டந்தார். ம களை எ ழுப்ப முயற்சித்தபோது இ றந்திருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தார். கணவர் மற்றும் இரு கு ழந்தைகள் வீட்டில் இல்லாததால் பீ தியடைந்த கோவிந்தம்மாள் அருகாமை வீட்டாருடன், அவர்களை தே டிய நிலையில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வடமங்கலம் பகுதியில் விவசாய கிணற்றின் அருகே உள்ள மரத்தில் ஆறுமுகம் துா க்கில் தொ ங்கிய நி லையில் இருந்தார். தகவலறிந்து சென்ற பொலிசார் குழந்தைகளை கா ணாததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி தீவிர தே டுதல் ப ணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் ஷாலினி மற்றும் சேதுராமன் உ டல்களை மீட்டபோது, இருவரும் ஒரே கல்லில் க யிறால் கட்டப்பட்டது தெரிந்தது. இதையடுத்து பொலிசார் உ டல்களை கைப்ப ற்றி, பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஆறுமுகம், கூலி வேலை செய்தது மட்டுமின்றி, சாமியாடி குறி சொல்பவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை, தம்பதி இடையே ஏற்பட்ட த கராறில் கோவிந்தம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், மனைவி கோ பித்து தன்னை விட்டு எங்கோ சென்று விட்டார் என நினைத்து குழந்தைகளை கொ லை செய்து ஆறுமுகம் த ற்கொ லை செய்திருக்கலாம்.அல்லது, சாமியாடி என்பதால், குழந்தைகளை ந ரப லி கொடுத்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறோம். என கூறியுள்ளனர்.

இந்தியாவை உலுக்கும் கொரோனா : 1,00,000 ஐ தாண்டியது பாதிப்பு!!

கொரோனா..

இந்தயாவில் நாடு முழுவதும் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார மற்றும் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,01,139 ஆக உள்ளது.

இதில் 3,163 இறப்புகள் உள்ளன, மொத்தம் 39,173 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸிற்கான 2,404,267 சோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவியதை தொடர்ந்து மார்ச் 24ம் திகதி முதல் தற்போது வரை இந்தியாவில் ஊரடங்கு தொடர்கிறது. கொரோனாவின் தீவிரத்திற்கு எற்றவாறு குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 33,000க்கும் மேற்பட்ட வழக்குகளும், 1,198 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்!!

பேருந்து நிலையம்..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலங்கொட நகர பேருந்து நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

பலங்கொட நகரம் ஊடாக, தொர வெல ஆற்ற நீர் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறு பிரபலமான பேருந்து நிலையம் நீரில் மூழ்கியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு இன்று பிற்பகல் இந்த பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியாக கூறப்படுகின்றது.

பலங்கொட உட்பட மலையகத்தில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல தொலைக்காட்சி நடிகர் த ற்கொ லை : அறையில் சடலமாக கிடந்த சோ கம் : கூ ச்சலிட்டு க தறிய ம னைவி!!

தொலைக்காட்சி நடிகர்..

தற்போது நாடு முழுக்க கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தொழிலகளை கவனிக்க முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். பலரும் வறுமைக்கு தள்ளப்பட்டனர்.

சினிமா, சீரியல் வட்டாரத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அதை சார்ந்து பிழைப்பு நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பெரிய பிரபலங்கள் சிலர் சக ஊழியர்களுக்கு நிவாரண நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகர் மன்மித் கிரேவால் கடந்த சனிக்கிழமை த ற்கொ லை செய்துள்ள சம்பவம் பெரும் சோக த்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதத் சே மஜ்பூர் என்ற நகைச்சுவை சீரியல் மூலம் பிரபலமான அவர் மும்பையில் மனைவியுடன் கார்கர் நகரில் வசித்து வந்துள்ளார். கொரோனாவுக்கு முன்பே அவர் வேலை வாய்ப்பில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார்.

ஊரடங்கால் மிகவும் வறுமையில் இருந்த அவர் வீட்டில் ஃபேனில் துப்பட்டாவால் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டாராம். அவர் மனைவி கணவரின் நிலை கண்டு கூ ச்சலிட்டு உதவிக்கு அழைத்த போது கொரோனா இருக்குமோ என்ற அ ச்சத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வரவில்லையாம்.

இதனால் காவலாளி வந்து துப்பட்டாவை கத்திரித்து மருத்து மனைக்கு நடிகரின் உடலை எடுத்து செல்ல மன்மீத் இ றந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார்.

மேலும் விசாரிக்கையில் அவர் வீட்டு வாடகை ரூ 8500 கட்ட முடியாத நிலையிலும், மிகுந்த கடன் பிரச்சனையிலும் இருந்தது தெரியவந்துள்ளது. மன்மீத்துக்கு வயது 32. வாழ வேண்டிய வயதில் இப்படி அவர் இறந்தது பலருக்கும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடையும் அம்பான் சூறாவளி : 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அ பாய எ ச்சரிக்கை!!

அ பாய எ ச்சரிக்கை..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு அ பாய எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அ பாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் அம்பான் சூறாவளியாக உருமாறியுள்ளமையினால் இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பு வழியாக நகர்ந்து செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை : நேற்று மட்டும் மூவர் உயிரிழப்பு!!

சீரற்ற வானிலை..

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை மக்கோனவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அனுராதபுரத்தில் உள்ள கஹடகஸ்கிரிய பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் மற்றொரு நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் 10 மாவட்டங்களுக்கு விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை மீள் அறிவிக்கப்படும் வரை அமுலில் இருக்கும் என்று கொடிப்பிலி கூறியுள்ளார்.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மாத்தளை, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று காலை வரையிலான காலப்பகுதியில் 992 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று மாலை வரை கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 418ஆக இருந்தது.

149 பேர் கொரோனா குணங்குறிகளுடன் கண்காணிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். 559 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அம்பான் சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

அடைமழை..

அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30க்கு மையம் கொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று 20ம் திகதி பிற்பகல் வேளையில் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும். வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி சர்வதேச புகழ்பெற்ற இலங்கை திருமணம்!!

இலங்கை திருமணம்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை சிறப்பான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட என்னும் பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன மற்றும் பவனி ஆகிய இருவருக்குமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணத்தை தாமதப்படுத்த நேரிட்டது. எனினும் திருமணத்தை பிற்போடுவற்கு பதிலாக வேறு வகையில் நடத்த திட்டமிட்டனர்.

அதற்கமைய திருமண சம்பிரதாயங்களை மாத்திரம் செய்துவிட்டு திருமண வைபவத்திற்கான பணத்தில் பிரதேசத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருமண ஆடையுடனேயே உதவிகளை செய்த இந்த தம்பதியின் செயலை பிரபல சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

குழந்தை பெற்றெடுத்த பின்னரும் வயிற்று வ லியால் துடித்த இளம்பெண் : ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

இளம்பெண்..

தமிழகத்தில் பிரசவத்துக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற தனது மனைவியின் கருப்பையில் மருத்துவர் பஞ்சை வைத்து அனுப்பிவிட்டதாக கணவன் கூறியுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வாஞ்சிநாதன். இவர் தனது மனைவி முத்துச்செல்வியை மூன்றாவது பிரசவத்துக்காக கடந்த மாதம் 23 ஆம் திகதி கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையை அடைந்தபோது காரிலேயே முத்துச்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியை வெட்டி செவிலியர்கள் முதலுதவி செய்த நிலையில், முத்துச்செல்வியை, பெண் மருத்துவர் பரிசோதித்துள்ளார்.

அப்போது அலட்சியமாக நடந்து கொண்டதோடு, தகாத வார்தைகாளால் திட்டவும் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருப்பையை சுத்தம் செய்த பெண் மருத்துவர், அதில் பஞ்சை கவனக் குறைவாக வைத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் முத்துச்செல்வி வ லியால் து டித்துள்ளார். உடனே அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது, கருப்பையில் பஞ்சு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.

இந்நிலையில், கவனம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட முத்துச்செல்வியின் கணவர் வாஞ்சிநாதன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

மணிக்கு 120 மைல் வேகத்தில் பறந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்த இளம்பெண்!!

இளம்பெண்.

ரஷ்யாவில் சாலையில் மணிக்கு 120 மைல் வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுகொண்டிருந்தார் ஒரு இளம்பெண். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் தடுமாறத்துவங்க, ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்துவிட்டார் அவர்.

Angelina என்ற தனது 20 வயதுகளிலிருக்கும் அந்த இளம்பெண் கீழே விழுவது, அவரது ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.

கீழே விழுந்து, என்னால் நகர முடியவில்லை, ஆம்புலன்சை அழையுங்கள் என்று அவர் முனக, அவர் விழுந்த வேகத்தை கவனித்துக்கொண்டிருந்த மக்கள் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று எண்ணி, அவரை அசையாமல் படுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சாலை பந்தயங்களில் ஈடுபடும் வழக்கம் உடைய Angelina, ஒரு காருடன் போட்டி போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Angelina உயிர் பிழைக்கமாட்டார் என மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருக்க, அவரோ பேண்டேஜ் போட்ட தனது உடலைக் காட்டி செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவரது உடலில் கைகள், கால்கள் மற்றும் பின்புறத்தில் தோல் பிய்ந்து போயிருக்கிறது. அவ்வளவுதான், மற்றபடி அவருக்கு ஒரு எலும்பு முறிவு கூட இல்லை. நல்ல வேளை என் பின் புறம் பத்திரமாக இருக்கிறது என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறார் Angelina.

லண்டனில் தவித்த 8 மாத கர்ப்பிணி தமிழ்ப்பெண் : அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம்!!

கர்ப்பிணி தமிழ்ப்பெண்..

வெளிநாட்டில் சி க்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி செவிலியரை கனிமொழி எம்.பி. பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊரில் சேர்த்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பெரியதாழை கிராமத்தை சேர்ந்தவர் டீனு. இவர் அயர்லாந்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊருக்கு விடுமுறைக்கு வந்த செவிலியர் டீனு, ரொசில்டன் என்பவரை மணந்தார். இதனிடையே மீண்டும் அயர்லாந்துக்கு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் செவிலியர் டீனு, தன்னுடன் தனது கணவர் ரொசில்டனையும் சுற்றுலா விசாவில் அயர்லாந்து அழைத்துச் சென்றார்.

செவிலியர் டீனுவின் கணவர் ரொசில்டனுக்கு பணி கிடைக்காததாலும், சுற்றுலா விசாவுக்கான காலக்கெடு முடிந்ததாலும் 2019 டிசம்பரில் அவர் தூத்துக்குடி திரும்பினார். இந்நிலையில் தனியாக தங்கி அயர்லாந்தில் பணியாற்றி வந்த டீனு, பேறுகாலத்திற்காக ஏப்ரல் மாதம் 19-ம் திகதி தமிழகம் திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

அதற்குள் கொரொனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் பொதுமுடக்கமும் கொண்டு வரப்பட்டது. அயர்லாந்தில் கவனித்துக்கொள்ள ஆட்களின்றி தவித்து வந்த 8 மாத கர்ப்பிணி மகளை ஊருக்கு மீட்பதற்கான முயற்சிகளில் டீனுவின் பெற்றோர் இறங்கினர்.

இது தொடர்பான விவரத்தை ஒரு கடிதத்தில் தெரிவித்து அதனை கனிமொழி எம்.பியிடம் செவிலியர் டீனுவின் பெற்றோர் வழங்கினர். அதைப்பார்த்த கனிமொழி, உடனடியாக கர்ப்பிணி செவிலியரை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்ற கனிமொழி, டீனுவை மீட்பதற்காக கடும் அழுத்தம் கொடுத்து வந்தார். இதனிடையே கனிமொழியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செவிலியர் டீனுவை மீட்பு விமானத்தில் அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து அயர்லாந்தில் இருந்து லண்டனுக்கு கார் மூலம் சென்ற டீனு, அங்கிருந்து சிறப்பு மீட்பு விமானத்தில் மும்பை வந்திறங்கினார். மும்பையில் இருந்து மற்றொரு விமானத்தில் சென்னை வந்த அவர் கார் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற செவிலியர் டீனு, உணர்ச்சிபொங்க நன்றி தெரிவித்ததுடன் நீங்க செய்த உதவியை என் உடலில் உயிர் இருக்கும் வரை மறக்கமாட்டேன் எனக் கூறினார். அவரிடம் நலம் விசாரித்த கனிமொழி குழந்தை பிறந்தால் சொல்லி அனுப்புங்க வந்து பார்க்கிறேன் எனக் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார்.

வீடியோ அழைப்பில் காட்டப்பட்ட கணவனின் ச டலம் : பார்த்து க தறி அ ழுத மனைவி மற்றும் மகள்!!

வீடியோ அழைப்பில்..

தமிழகத்தில் உடல் நலக்குறைவால் உ யிரிழந்த வடமாநிலத் தொழிலாளியின் உடல் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் அவரின் இறுதிச் சடங்கை மனைவி மற்றும் மகள் வீடியோ கோலில் பார்த்து க ண்ணீர் வி ட்டு அ ழுதனர்.

ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் அன்றாடத் தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வட மாநிலத்திலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆசாத் (52) என்பவர் திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவர், மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உ யிரிழந்தார்.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாததால் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கத்தை வடமாநிலத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் மகள் வீடியோ கால் மூலம் பார்த்து க ண்ணீர் சிந்தி வேதனை அடைந்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் மாவட்டச் செயல் தலைவர் முன்னா கூறியதாவது, ஆசாத் காஜி. கடந்த சில ஆண்டுகளாக தனது அண்ணன் மகன் சதாம் உசேனுடன் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஏற்கனவே உடலில் பிரச்னைகள் இருந்த நிலையில் மாரடைப்பால் உ யிரிழந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பு சார்பில் மேற்குவங்கத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது.

மேலும், அவரது உடலை மேற்குவங்கம் கொண்டு செல்ல போதிய பணம் மற்றும் வசதியில்லாத காரணத்தால் திருப்பூரில் எஸ்.ஏ.பி அருகில் உள்ள பள்ளிவாசல் அருகில் ஆசாத்தின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆசாத்தின் ச டலத்தை அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோ அழைப்பின் மூலம் மேற்குவங்கத்தில் உள்ள அவரது மனைவி பூட்டி பீவி மற்றும் மகளுக்குக் காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்து அவர்கள் இருவரும் க தறி அ ழுதனர் என சோ கத்துடன் கூறியுள்ளார்.

லொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்!!

நண்பன் மடியில்…

இந்தியாவில் ஊரடங்கால் வேலையை இழந்து, சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் ம ரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாகூப் முகமது மற்றும் அம்ரித் குமார். பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் சென்றுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இருவரும் இழந்துள்ளனர். கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.

ஒரு லொறியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிக கூட்டம் இருந்ததால் உட்கார இடமின்றி இருவரும் நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர். இருவரும் பயணம் செய்த லொறியானது மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என யாகூப் பயந்தார். அந்த வாகனத்தில் இருந்த அனைவருக்கும் அதே அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.

வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் லொறியைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார். தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்தார். இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் மாவட்ட மருத்துவமனைக்கு அம்ரித்தை கொண்டுசென்றனர்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால், சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அம்ரித் ம ரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவிகேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.