இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை..

இலவச மடிக்கணினிகளை வழங்குவதாக கூறி வட்ஸ்அப் ஊடாக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் கும்பல் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://order.freelaptops.site என்ற இணைய முகவரி ஊடாக இவ்வாறு தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. “Government Providing Free Laptop For Youth” என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவி வருவதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் பல நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த குழுவினருக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்குவதாக கூறி தகவல் திருடும் செயற்பாடு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மக்களிடம் சங்கத்தின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சி றுநீரை கு டிக்க வ ற்புறுத்திய பெ ண்கள் : இ ளைஞன் எ டுத்த வி பரீத முடிவு!!

விகாஸ் ஷர்மா..

இ ந்தியாவில் கு ழாயில் த ண்ணீர் பி டிக்க போன இ ளைஞரை, இ ரண்டு பெ ண்கள் உ ள்ளிட்ட மூ வர் சே ர்ந்து சி றுநீ ர் கு டிக்க க ட்டாயப்ப டுத்திய நி லையில் அ வமா னத்தில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது. இ ந்த ச ம்பவம் ம த்திய பி ரதேசத்தில்  ந டந்து ள்ளது.

அ ங்கு ள்ள சஜோர் எ ன்ற  கி ராமத்தில் வ சித்து வ ந்த விகாஸ் ஷர்மா (19) எ ன்ற இ ளைஞர் கோ விலுக்கு த ண்ணீர் எ டுத்து செ ல்ல வே ண்டும் எ ன்பதற் காக தெ ருவில் உ ள்ள கைப் ப ம்பு இ ருக்கும் இ டத்திற்கு செ ன்றிருக் கிறார்.

கை யில் கொ ண்டுபோ ன கு டத்தை ப ம்ப் அ டியில் வைத் துவிட் டு, கு ழாயில் த ண்ணீர் அ டித்து கொ ண்டிருந்தார். அ ந்த ச மயம், மனோஜ் கோலி எ ன்பவர் த னது ச கோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அ ங்கு த ண்ணீர் பி டிக்க நி ன்று கொ ண்டிருந்தார். அ ப்போது மனோஜ் கோலியின் கு டத்தில் த ண்ணீர் ப ட்டுவிட்டதாக தெ ரிகிறது.

இ தனால் கோ பமடை ந்த மூ வரும் விகாஸின் த லைமு டியை த ரதர வென இ ழுத்து செ ன்று  அ டித்துள் ளனர். அ து மட் டுமல் லாமல் விகாஸ் ஷர்மா வை த்தி ருந்த கு டத்தில் சி றுநீரை நி ரப்பி அ தை கு டிக்க வ ற்புறுத் தியு ள்ளனர். இ தனால் ம னமு டைந்த விகாஸ் ஷர்மா வீ ட்டுக்கு செ ன்று தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

த ற்கொ லைக்கு மு ன்பு இ ந்த ச ம்பவம் கு றித்து வி லாவரியாக க டிதம் எ ழுதியதோடு வீ டியோவையும் அ வர் ப திவு செ ய்துள்ளார். வீ டியோவில், எ ன்னை மூ வரும் சி றுநீரை கு டிக்க க ட்டாயப்ப டுத்தி அ டித்தா ர்கள் எ ன மூ வரின் பெ யரையும் க ண்ணீ ருடன் கூ றியுள்ளார்.

இ தை ஆ தாரமாக வை த்து பொ லிசார் மூ வரையும் கை து செ ய்துள்ளனர். இ தனிடையில் விகாஸ் கு டும்பத்துக்கு ந ஷ்ட ஈ டாக ரூ 1 கோ டி வ ழங்கவே ண்டும் எ ன அ வர் ச மூகத்தின் சா ர்பாக மாநில மு தல்வருக்கு கோ ரிக்கை வை க்கப்பட்டு ள்ளது.

விகாஸின் த ற்கொ லை ச ம்பவம் ம த்திய பி ரதேசம் ம ட்டுமின்றி இந்திய நா ட்டு ம க்களிடையே பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியு ள்ளது. இ தையடுத்து டுவிட்டரில் விகாஸ் ம ரணத் துக்கு நீ தி கி டைக்க வே ண்டும் எ ன வ லியுறு த்தும் வ கையில் #JusticeForVikashSharma எ ன்ற டேக் இ ந்தியளவில் மு தலிடத்தில் டிரண் டிங்கானது.

நண்பரின் மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால் இளைஞன் செய்த விபரீத செயல்!!

இளைஞன் செய்த விபரீத செயல்..

இந்தியாவில் நண்பரின் மனைவி, தன்னுடன் வாழ மறுத்ததால், நெஞ்சில் சு ட்டுக் கொண்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியின் திக்ரி குர்த் பகுதியில், விகாஸ் என்ற நபர் நெஞ்சில் து ப்பாக்கி யால் சு ட்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து டெல்லி பொலிசார் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவரின் பெயர் விகாஸ் வயது 27 என்பது தெரியவந்தது.

இவர் தனது நண்பர் ரமேஷின் மனைவி ரூபாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ரமேஷ் சிறையில் இருந்து வரும் நிலையில் ரூபா, சுவரண் ஜெயந்தி விஹார் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விகாஸிற்கு, ரூபா மீது காதல் ஏற்பட, தன்னுடன் வாழ வரும்படி அவரை கெஞ்சியுள்ளார். ஆனால் ரூபா அதற்கு ஒப்புக் கொள்ளாததால் ம னம் உ டைந்த விகாஸ், கையில் வைத்திருந்த து ப்பாக்கி யால் த னது நெ ஞ்சில் சு ட்டுக் கொ ண்டார்.

உடனடியாக ரூபா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

யாழில் மனைவியை தொலைத்துவிட்டு க தறும் இளைஞன் : கு டி செய்த கோலம்!!

யாழில்..

குடியினால் அன்றாடம் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வாரும் இக்காலத்தில் கு டி வெ றியால் குடும்பத்தை ப றிகொடுத்த இ ளைஞன் ஒருவரின் மனநிலை இங்கு பதியப்படுகின்றது.

25.04.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள்.. இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும் சுவாசித்த எனக்கு முதல் முறையாக கவலை என்பதை கற்பித்து தந்து விட்டாள் என் மனைவி.. அப்பா இ றந்த பின்பு அ ழுத நான் அன்று தான் அ ழுதேன்.

நான் ம து அ ருந்திவிட்டு செய்த செயலால் அவள் இந்த உலகை விட்டு சென்று விட்டாள். கனவில் கூட நினைக்கவில்லை சந்தோஷமாக சென்ற வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சறுக்கல் வரும் என்று. என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் ப ழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டேன்.

திருமணம் முடிக்க முதலோ பிறகோ என்னைப்போல் சந்தோஷமாக இருந்தது யாரும் இல்லை. அவள் இல்லாமல் என் வாழ்ககை எதிர் திசையில் பயணிக்கிறது. கு டித்து வி ட்டு செய்த செயலால் என் மனைவியின் இ றுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத பாவியாகி விட்டேன்.

அந்த நாட்கள் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சி றையில் இருந்து மிகவும் வாடினேன். அந்த வலி வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த வ லி எ திரி, து ரோகிக்கு கூட வரக்கூடாது.

நாங்கள் பிழைவிட்டு விட்டு விதியிலும், கடவுளிலும்,பேயிலும் பழி போடக்கூடாது. நான் செய்த தவறினால் தான் என் மனைவியை இ ழந்தேன். அவள் ஐந்து நிமிடம் யோசிக்காமல் எடுத்த முடிவால் என் ஆயுள் முழுவதும் அவள் நினைவுகளோடு வாழ வேண்டும். அவளுக்கு நான் செய்த த வறுக்கு அவள் எனக்கு விட்டு சென்ற த ண்டனை அதுதான்..

என்னில் தான் கோவம்.. என் ஆறு வயது பெ ண் கு ழந்தை என்ன தவறு செய்தது. கடவுள் எனக்கு காதலால் கொடுத்த மிகப்பெரிய சொத்தை இழந்துவிட்டேன். கடவுள் கொடுத்த வரத்தை இழந்தேன்.. அழகான வாழ்க்கை, அளவில்லாத சந்தோஷம், அழகான முகம் மட்டும் அல்ல அழகான மனம் கொண்ட மனைவியை இழந்தேன்.

என் மனைவி என்னிடம் கு டிக்க வே ண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை. அளவாக கு டிக்க சொ ல்லுவாள். அன்று அவள் சொன்னதை நான் கேட்கவில்லை. அளவுக்கதிகமாக அதிகமாக கு டித்ததால் அ வளுடன் பி ரச்சனை செய்தேன்.

என் மனைவி எனது கு டிக்காகவே தனது உ யிரை தி றந்தவள். அவள் எனது அம்மா எவர் சொல்லியும் நான் கேட்கவில்லை. கடைசியில் அதுக்காகவே அவள் இல்லாமல் போய்ராள். இனி என் வாழ்க்கையில் அதை தொடமாட்டேன். இதற்கு பிறகும் அதை தொட்டால் மனிதனே இல்லை.

என்னை திருத்தவே அவள் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது. அவளுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது. நான் தான் த வறு செய்தேன்.. என்னில் தான் கோபம்..என் குழந்தை என்ன தவறு செய்தது..அவள் கோ வத்தினாலும் பி டிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்.

வழமையாக எல்லோருடைய வீட்டில் வரும் ச ண்டை போல தான் அன்று என் வீட்டிலும் நடந்தது. அதிகமாக ம து அ ருந்திய ப டியால் ச ண்டை பி டித்துவிட்டு அவளை சமாளிக்காமல் நித்திரையாகிவிட்டேன். எல்லாத்துக்கும் காரணம் இந்த கு டிதான். கு டி கு டியை கெ டுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு கு டியே இல்லாமல் போய்விட்டது. அ ளவுக்கு மீ றியதால் என் கு டியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது..

நான் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தேன் என் மனைவியை எவ்வாறு பார்த்துக்கொண்டேன் என்று என்னை புரி்ந்தவர்களுக்கு தெரியும். மற்றவனுக்கு பதில் சொல்லனும் என்று அவசியம் எனக்கு இல்லை.. உலை வாயை மூடலாம்..ஊர் வாயை மூட முடியாது..தவறு செய்தது நான்..அவள் கொடுத்த த ண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.

க ழுத் தில் தூ க்கு மா ட்டிவி ட்டு என்னை கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூ ங்கி செ த்திரு வேன் என்று ஒரு வார்த்தை சொல்லிருந்தால் அவள் செ த்திரு வாள் என்ற ப யத்திலே அந்த சனியனை தூ க்கி போ ட்டு வி ட்டு இன்னும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன்.

அதற்கு கூட எனக்கு சந்தர்ப்பம் கடவுளும் கொடுக்கவில்லை. அவளும் கொடுக்கவில்லை. எல்லா கடவுளும் கை விட்டு விட்டது. சந்தோஷமாக வாழுற நான் இவள் இப்படி பண்ணுவாள் என்று யார் நினைப்பாங்க. அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது தான்..அது அவளுக்கே தெரியும்..அவளே தனியாக தவிக்க விட்டு விட்டு போய் விட்டாள்.

தவறு செய்தது நான். அவள் கொடுத்த த ண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். அவள் தான் பிள்ளையை நினைக்கவில்லை. இனி என் வாழ்க்கை என் பெண் பிள்ளைக்காகவும் என் அம்மாவுக்காகவும் வாழ்வேன்.

எவன் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை எவனும் வாழ போறதில்லை தானே. திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும். மீதி காலம் முழுவதும் என் மனைவியோட வாழ்ந்த சந்தோஷமான நாட்களை நினைத்துக்கொண்டு என் பிள்ளையை அவள் நினைத்தது போல் வாழ்ந்து என் மனைவியின் கனவுகளை நனவாக்குவேன்…நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன்.

நான் இல்லாத வேளையிலும் எனது மனைவியின் இறுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

வீட்டிற்கு செல்ல முயன்ற 24 தொழிலாளர்கள் பயங்கர விபத்தில் சிக்கி பலி : கலங்க வைக்கும் காட்சி!!

24 தொழிலாளர்கள்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கர விபத்து உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடந்துள்ளது.

அவுரேயா மாவட்டத்தின் Mihauli பகுதியில், சுமார் 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ராஜஸ்தானிலிருந்து வந்து கொண்டிருந்த லொறி. டெல்லியில் இருந்து வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 24 பேர் பலியாகினர், 22 பேர் மருத்துவமனயைில அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த காயமடைந்த 15 பேர் சைஃபாய் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவுரியாவின் தலைமை மருத்துவ அதிகாரி அர்ச்சனா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலோர் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவுரியாவின் மாவட்ட நீதவான் அபிஷேக் சிங் மேற்கோளிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் மார்ச் 24 அன்று முதல் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

ஊரடங்கால் வீட்டிலிருந்து வெகு தொலைவில் வாழும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைகள் அல்லது ஊதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வவுனியாவிற்கு கொழும்பில் இருந்து வந்த 11 பேர் சுய தனிமைப்படுத்தலில்!!

சுய தனிமைப்படுத்தல்..

கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த 11 பேர் அவர்களது வீடுகளில் இன்று (16.05.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தொழில் வாய்ப்பு மற்றும் வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பு சென்று கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு சட்ட நடைமுறை காரணமாக வவுனியாவிற்கு வர முடியாத நிலையில் இருந்த 11 பேர் கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொண்ட நிலையில் பொலிசாரால் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த 11 பேரையும் பார்வையிட்ட சுகாதாரா பரிசோதகர்கள் பா துகாப்பு கருதி அவர்களை 14 நாட்கள் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைவாக அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன் அப்போது பேரிடியாக வந்த செய்தி!!

வெளிநாட்டில் இருந்து..

வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உ யிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39). தம்பதிக்கு சோனா என்ற மகள் உள்ளார். பிரசாந்தன் துபாயில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து வியாழன் அன்று அவர் உ யிரிழந்துள்ளார். இந்த தகவல் துபாயில் உள்ள பிரசாந்தனுக்கு பே ரிடியாக வந்தது.

இது குறித்து துபாயில் உள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹாசிக் கூறுகையில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த மினி திடீரென மா ரடைப்பால் உ யிரிழந்தார்.

இந்த செய்தி பிரசாந்தனுக்கு பெரும் அ திர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்த மாதத்தில் மனைவி, மகளை பரிசுகளுடன் வந்து பார்க்க பிரசாந்தன் திட்டமிட்டிருந்தார்.

சனிக்கிழமை திருவனந்தபுரத்துக்கு கிளம்பும் விமானத்தில் பிரசாந்தன் பயணித்து தனது மனைவி மினிக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவுள்ளார் என கூறியுள்ளார்.

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோ சடி குற்றச்சாட்டு : கிராம அலுவலர் மீது விசாரணை!!

முதியோர் கொடுப்பனவில்..

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் முதியோர் கொடுப்பனவின் போது முதியவர் ஒருவருக்கு கொடுப்பனவு வழங்கப்படாது அவரது பெயரில் வந்த கொடுப்பனவை கிராம அலுவலர் பெற்றுக் கொண்டதாக பாதிக்கப்பட்டவரின் மகனால் நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பின் ஊடாக மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த பணத்தை கேட்ட போது கிராம அலுவலர் அதனை இராணுவத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன், மாவட்ட செயலகத்தினரும் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு தொகுதி மருந்து பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!!

சீன விமானம்..

மற்றும் ஒரு தொகுதி மருந்து பொருட்களுடன் சீன விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மூலம் மருத்துவ பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவால் இந்த மருந்து பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காயில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த விமானம் இன்று மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து பொருட்கள் நாளைய தினம் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கை அரசிடம் கைளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி..

சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 184.89 ரூபாவாகவும், விற்பனை விலை 189.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று நோயான கோவிட் -19 காரணமாக, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஏப்ரல் 8ம் திகதி 200 ரூபாவை தாண்டியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ​​உலகளவில் பல நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்தன. இதன்படி, இலங்கையில் மார்ச் 20ம் திகதி முதல் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 190 ரூபாவை தாண்டியுள்ளது.

ஜனவரி 1 முதல் மே 6 வரை, இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 3.9 வீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திருமண நிகழ்வுகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி!!

திருமண நிகழ்வுகளுக்கு..

எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகளுக்கு நிபந்தனையுடன் அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

எனினும், மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

இது குறித்த சட்டதிட்டங்களை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார். இதேவேளை, பிற சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான விதிமுறைகள் எதிர்நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாளை கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் : பொலிஸார் எச்சரிக்கை!!

ஊரடங்கு சட்டம்..

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நாளை ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும் கைது செய்ய நாளை நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சில இடங்களில் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க மறுக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் 5000 மில்லி லீற்றர் கசிப்பு மறறும் 5 இலட்சத்து 70 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது!!

இருவர் கைது..

வவுனியாவில் 5000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 5 இலட்சத்து 70 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப் பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா வழிகாட்டலில்,

வன்னி பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெகத் மல்வ ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் வவுனியா, தவசிகுளம் பகுதியில் இன்று (16.05) அதிகாலை மேற்கொண்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டன.

தவசிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2500 மில்லி லீற்றர் கசிப்பு, 3 இலட்சத்து 80 ஆயிரம் கோடா, இரண்டு பெரல்கள் என்பன மீட்கப்பட்டதுடன், இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பிறிதொரு வீட்டில் இருந்து 2500 மில்லி லீற்றர் கசிப்பு, ஒரு இலட்சத்து 90 ஆயிரம் கோடா, ஒரு பெரல் என்பன மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரிடம் இருந்தும் 5000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 5 இலட்சத்து 70 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 3 பெரல்கள் என்பன மீட்கப்பட்டதுடன் நீதிமன்றில் சான்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

கைது செய்யப்பட்ட 53 வயது மற்றும் 46 வயது நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வங்களா விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை!!

அடைமழை..

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் 150 மில்லி மீற்றருக்கும் அதிகம் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த நிலைமைகள், அனர்த்த நிலை வரை அதிகரிக்க கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அது இன்றைய தினம் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி நிலைமை வரை அதிகரித்து வடமேல் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என திணைக்களம் கூறியுள்ளது.

அதன் தாக்கத்தின் காரணமாக, நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் மழையில் அதிகரிப்பு நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் நாடு முழுவதும் காற்று மணிக்கும் 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு, மேல் மாகாண, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.

ஏனைய பிரதேசங்களில் விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெற்ற கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னலினால் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு IDH வைத்தியசாலையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்!!

நெகிழ்ச்சியான சம்பவம்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவரை IDH வைத்தியசாலை ஊழியர்கள் நெகிழ செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவன் ஒருவரின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும் நடவடிக்கை ஒன்றை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுவன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் முதல் முறையாக வைத்தியசாலையில் அவருக்கு ஏடு தொடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IDH வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க அறையின் ஊழியர்கள் இணைந்து, அதற்கான நேரங்களை ஒதுக்கி சம்பிரதாய முறையில் ஏடு திறந்துள்ளனர்.

ஏடு தொடக்குவதற்கு எவ்வித குறையும் வைப்பதற்கு ஊழியர்கள் இடமளிக்கவில்லை. வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆசிர்வாதத்துடன் குறித்த சிறுவன் கற்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாழ்க்கையின் முக்கியமாக சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் உள்ள குறித்த சிறுவனை வைத்தியர்கள் நெகிழ வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸின் அபாய நிலை குறித்து வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள் பதற்றமடையக் கூடாது. கொரோனா தொற்றுத் தொடர்பான தகவல்கள் வெளியிடும் போது சம்பந்தப்பட்ட தரப்பினரது அவர்களது உறவினர்களது மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. சமூகத் தொற்றும் இல்லை. இங்கு இடம் இடம்பெற்று வருகின்ற பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.