நாடாளவிய ரீதியில் இன்றிரவு முதல் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்..

நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மே மாதம் 23ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களிலும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் வெள்ள அனர்த்தம் : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!!

வெள்ள அனர்த்தம்..

இலங்கையில் நிலவும் அடைமழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட பல இடங்களில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீர் நிரம்பாத வகையில் குளங்கள் தடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆபத்தான பகுதிகளுக்கு மேலதிகமாக படையினர் ஈடுபடுத்தள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

ஊரடங்கால் உயிரை பணயம் வைத்து ரயில் பெட்டி இணைப்பில் குழந்தையுடன் பயணிக்கும் பெண்!!

ஊரடங்கால்..

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை ரயில்களின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பலரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், ஊரடங்கால் ஒரு தாய் தன் குழந்தையுடன் உயிரை பணையம் வைத்து ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால் குறித்த காணொளி கடந்த 2016-க்கு முன்பிருந்தே வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் இருக்கும் ரயில் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷ் நாட்டில் உள்ள ரயிலை போன்று இருப்பதையும் அறிய முடிகிறது.

பெற்ற குழந்தையை பெட்டியில் கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!

நெஞ்சை உலுக்கும் காணொளி..

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.

சமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அ திர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயிற்றை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.

அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!

அந்தரத்தில் மிதந்த மகன்..

மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க வந்த தாய் அங்கு கண்ட காட்சியினைப் பார்த்து அ திர்ச்சியில் உறைந்தது மட்டுமின்றி, உண்மையை கண்டறிய பல வழிகளில் முயற்சியும் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் முயற்சி வெற்றியாகி, மகன் செய்த ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமான பின்பு, தாய் கோபத்தில் செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 6 மில்லியனுக்கும் மேலானோர் அவதானித்துள்ளனர்.

திருமணம் முடிந்து இராணுவ பணிக்கு சென்ற புதுமாப்பிள்ளை : வீடு திரும்பிய போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

புதுமாப்பிள்ளை…

தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளையான இராணுவ வீரர் தற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரநாத். இவருக்கும் ராதிகா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் இராணுவ பணிக்காக சுரேந்திரநாத் வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சென்ற மாதம் விடுமுறைக்கு ஊர் திரும்பிய நிலையில், மனைவியுடன் சுரேந்திரநாத்துக்கு குடும்ப த கராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக மனைவி ராதிகாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்திரநாத்,

தனது வீட்டு மாடியில் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்று வ லியால் துடித்த 13 வயது மாணவி கர்ப்பம் : இரண்டு மாணவர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்!!

13 வயது மாணவி…

தமிழகத்தில் 13 வயது சி றுமி வயிற்று வ லியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவர் க ர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 13 வயது நிரம்பிய மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரும் அதேப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவர் நிரம்பிய மாணவர் ஒருவரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே தெருவில் வசித்து வருவதால் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதனை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர், சிறுமியும், சிறுவனும் வீட்டில் ஒன்றாக இருப்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

இதையடுத்து, எனது ஆசைக்கு இணங்காவிட்டால், நடந்ததை உனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று மி ரட்டியே அந்த சி றுமியை கல்லூரி மாணவரும் பலமுறை பா லியல் து ன்புறு த்தல் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி வயிற்று வ லியும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதையறிந்த மாணவியின் தாயார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி க ர்ப்பமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்ததில் நடந்தைக் கூறி, மேலும் அ திர்ச்சி கொடுத்துள்ளார். பின்னர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து மாணவிக்கு பா லியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சுபாஷ் என்ற மாணவன் உட்பட 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஹரிஹரனை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள சுபாஷை தேடி வருகிறார்கள்.

மேலும் மா ணவியின் க ர்ப்பத்துக்கு காரணமானவர் யார் என குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை கண்டறிய, டி.என்.ஏ பரிசோதனை செய்ய, மருத்துவ அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது.

தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மற்றும் லொறியும் மோதுண்டு விபத்துக்குள்ளாது.

கனராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள S வடிவ பாதையடியில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் , லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சேதமடைந்துள்ளது.

வவுனியா வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை!!

விசேட சோதனை..

வவுனியா வர்த்தக நிலையங்களில் காணப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலகம், பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையின் ஒரு கட்டமாக வவுனியாவில் உள்ள புடவைநிலையங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள்,

உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பொதுசுகாதார பரிசோதகர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பொலிஸ், இராணுவம் ஆகியோரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு விஜயம் செய்து,

அங்கு பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கைகழுவும் இடம், சமூக இடைவெளி பேணல், முகமூடி அணிதல், வேலையாட்களின் நிலை என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன்,

சுகாதார நடடைமுறைகளை பின்பற்றாத வர்த்த நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

சூரியனின் மேற்பரப்பில்..

சுமார் 93 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் சூரியனில் இருந்து கிடைக்கும் ஒளி மற்றும் வெப்பம் காரணமாகவே பூமியில் உயிர்கள் உயிர் வாழ்கின்றன.

எனினும் சூரியனின் மேற்பரப்பின் செயற்பாடு சற்று குறைவடைந்து, அதன் காந்தபுலன் பலவீனமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  இதன் விளைவாக அண்ட கதிர்கள் அதிகளவில் சூழலுக்குள் வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பூமியின் வெப்பம் குறைந்து, பூமியை பனி யுகத்திற்கு கொண்டு செல்லக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எனினும் அச்சமடைய வேண்டாம் என மக்களிடம் கோரியுள்ள காலநிலை விஞ்ஞானிகள் மற்றும் பிரித்தானிய அரச வானியல் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்,

சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றமானது சூரியன் தன்னை தானே சுற்றி வரும் சுழற்சியின் போது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சாதாரண நிகழ்வு என கூறியுள்ளனர்.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்!!

மோட்டார் சைக்கில் விபத்து..

வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

குருமன்காட்டு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணத்த மோட்டார் சைக்கில் எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதுடன் அதே திசையில் பயணித்த மகேந்திரா ரக கப் வாகனத்துடனும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலை (விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில்) போக்குவரத்து பொலிஸார் துரத்தி வந்தமையினால் இவ் விபத்து நேர்ந்ததாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததுடன்,

விபத்து இடம்பெற்று சில வினாடிகளில் போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கில் வந்தமையும் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய கடும் எச்சரிக்கை!!

கோட்டாபய கடும் எச்சரிக்கை..

அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை எடுக்கும்போது, ​​அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரியானதைச் செய்ய முடியாத அரச அதிகாரிகள் நாட்டிற்கு ஒரு சுமை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்த்து புறக்கணிப்பதல்ல என ஜனாதிபதி இதன் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைய அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்படுவதால்,

அவற்றை பின் தொடரும் போது பகுத்தறிவற்ற சட்டங்கள் தடையாக இருக்க கூடாது என ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் ஒன்றரை மாத குழந்தைக்கும் கொரோனா!!

கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 925 வரை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் பதிவாகிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 8 பேர் கடற்படைய சிப்பாய்களாகும். ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களில் ஒருவர் ஒன்றரை மாத குழந்தை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 479 கடற்படை சிப்பாய்களில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அதிபருக்கு!!

பாடசாலை மாணவர்களை..

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வருடம் முதல் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு தங்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தங்கள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதென கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளில் 1,5 மற்றும் 6ஆம் தர மாணவர்களை தவிர்த்து ஏனைய வகுப்புகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தற்போது கல்வி அமைச்சின் செயலாளரிடமே உள்ளது.

பல்வேறு முறையின் கீழ் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரத்தை அதிபரிடம் வழங்குவதற்கும், அது தொடர்பிலான வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் சுற்றறிக்கைகள் மூலம் அறிவிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சிற்கு பொது மக்கள் நாட்களில் அதிகமாக இடைநிலை தரத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காகவே பெற்றோர் வருகின்றனர்.

சில நாட்களில் 2000 பேர் வரையில் தங்கள் அமைச்சிற்கு வருபவதாகவும், பாரிய அளவிலானர்வகள் தங்கள் அவசியத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் திரும்பி செல்ல நேரிடுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு அதற்கான அதிகாரத்தை தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா வைத்தியசாலைக்குள் க த்தியுடன் நின்றவர் கை து!!

வைத்தியசாலைக்குள்..

வவுனியா வை த்தியசாலை வ ளாகத்திற்குள் சி றியளவிலான க த் தி ஒ ன்றினை வை த்திருந்த கு ற்றசாட் டில் ந பர் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். இந்த ச ம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கண்டி வீதி மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (14.05.2020) மா லை இ ரு த ரப்பிற்கி டையில் இ டம்பெற்ற மு ரண்பாட்டி னால், பெ ண்கள் இ ருவரும், ஆ ண் ஒ ருவரும் கா யமடைந்ததாக தெ ரிவித்து வவுனியா வை த்தியசாலையின் வி பத்து பிரிவில் அ னுமதிக்கப்பட்டிருந்தனர். அ வர்களை பா ர்வையிடுவதற்காக வைத்தியசாலை வ ளாகத்தில் அ வர்களது உ றவினர்கள் சி லர் ஒ ன்றுகூ டியிருந் தனர்.

இந்நிலையில் வை த்தியசாலை வ ளாகத்திற்குள் க த் தி யுடன் ஒ ருவர் நி ற்பதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு த கவல் வ ழங்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கு றித்த ந பர் கை து செய்யப்பட்டு வவுனியா கு ற்றத்த டுப்பு பொ லிஸாரிடம் ஒ ப்படைக்க ப்பட்டார்.

அ த்துடன், அ வர் வைத் திருந்த சி றியளவிலான க த் தி யினையும் பொலிஸார் மீ ட்டிருந்தனர். ச ம்பவம் தொடர்பாக மே லதிக வி சாரணைகளை வவுனியா பொ லிஸார் மு ன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனா பரவலை குறைக்க மவுத் வோஷ் ? ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்!!

கொரோனா..

மவுத் வோஷ்’ எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவலை குறைக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவிய இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மவுத் வோஷ் எனப்படும் வாயை சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவும் வேகத்தை குறைக்க பயன்படுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா இரண்டு அடுக்குகளால் உண்டானது. வெளிப்புறம் அடுக்கு கொழுப்பு படலத்தால் மூடப்பட்டு மையப்பகுதியில் வைரசை கொண்ட அமைப்பாக உள்ளது. இந்த வெளிப்புற கொழுப்பு அமைப்பு கொரோனாவுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போன்று விளங்குகிறது.

இதற்கிடையில், மனித உடலில் வாய் வழியாக கொரோனா வைரஸ் பரவி அது உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி விடுகிறது. தொண்டையில் சளி மற்றும் எச்சில் மூலமாகவும் வைரஸ் பரவி நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கொரோனாவை போன்றே வாய் மூலமாக பரவும் பிற வைரஸ்களை அழிப்பதில் மவுத் வோஷ் முக்கிய பங்காற்றுகிறது. மவுத் வோஷர் மூலம் வாயை சுத்தப்படுத்துவதால் அந்த திரவம் வாயில் இருக்கும் வைரஸ் படலங்கள், பாக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து விடுகிறது.

இந்நிலையில், கொரோனாவை சுற்றி பாதுகாப்பு அரணாக இருக்கும் கொழுப்பு படலத்தை மவுத் வோஷ் திரவம் சேதப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அந்த கொழுப்பு படலம் சேதமடைந்தால் தொண்டையில் இருக்கும் வைரஸ் ஆரம்ப நிலையிலேயே செயலற்று அது மனித உடலில் மேலும் பரவும் வேகமும் குறையலாம் என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.

இதனால், மவுத் வோஷ் திரவம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறதா? என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய அறிவியல் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனாவினால் ம து அ ருந்துவது கு றைந்துள்ளது : ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்!!

கொரோனாவினால்..

இலங்கையில் ம துபா னம மற்றும் பு கைப்பி டித்தல் நடவடிக்கைககளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக ம துசாரம் மற்றும் போ தைப்பொ ருள் தகவல் மையமான எடிக் தெரிவித்துள்ளது. தாம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவியமையை அடுத்து இந்த இரண்டு பழக்கங்களும் கிரமமாக குறைந்துள்ளன என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. தமது ஆய்வின்படி கொரோனா காரணமாக 80 வீதமானோர் ம துபா னம் அ ருந்துவதை கு றைத்துள்ளனர். 68 வீதமானோர் பு கைப்பி டித்தலை கு றைத்துள்ளனர்.

ம துபா னத்தை சட்டரீதியாக அ ருந்துவோர் ச ட்டரீதி யற்ற ரீதியில் அருந்துவோர் ம ற்றும் பு கைப்பி டிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் உள்ள 2019 பேர் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா காலத்தில் வீ  ட்டுப் பி ரச்சனைகள் காரணமாக 49 வீதமான கணவன்மார் ம துவை குறைத்துள்ளதாக அவர்களின் ம னைவியர் தெ ரிவித்துள்ளனர். 40 வீதமானோர் குடும்பத்தின் சேமிப்பைக் கருத்திற்கொண்டு ம துபா னத்தை குறைத்துள்ளனர்.