கொரோனா நோய்த் தொற்றை உலகிலிருந்து இல்லாதொழிக்க முடியாது : உலக சுகாதார ஸ்தாபனம்!!

கொரோனா நோய்..

கொரோனா வைரஸ் தொற்றை உலகிலிருந்து அடியோடு இல்லாதொழிக்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.

எச்.ஐ.வீ வைரஸ் தொற்றைப் போன்று கொரோனா வைரஸ் தொற்றும் உலகில் நீடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைமைகள் குறித்த நிபுணர் மைக் ரயன் காணொளிக் காட்சித் தொழிநுட்பத்தின் ஊடாக நடத்திய ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என வெளியிடப்பட்டு வரும் எதிர்வு கூறல்கள், கருத்துக் கணிப்புக்கள் என்பனவற்றின் நம்பகத்தன்மை பற்றி உறுதிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய்த் தொற்றுடன் மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டுமாயின் நோய்த் தொற்று ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் மிகவும் வெற்றிகரமான ஓர் தடுப்பூசியை உருவாக்குவது சிரமமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் கொட்டும் மழையிலும் ம துபானம் வாங்க வரிசையில் காத்திருந்த மக்கள்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது ம துபானத்தை கொள்வனவு செய்ய பொதுமக்கள் காத்திருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அனைத்து மதுபான நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அரசாங்கத்தினால் ம துபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் உள்ள ம துபான நிலையங்களில் ம து பிரியர்கள் ம துபானத்தை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சமூக இடைவெளியினை பின்பற்றி ம துபானத்தை கொள்வனவு செய்வதற்காக ம து பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழைக்கு மத்தியிலும் தமக்கு தேவையான ம துபானத்தினை கொள்வனவு செய்தனர்.

ம துபான நிலையங்களுக்குள் ஒருவர் மட்டுமே சென்று ம துபானத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டது. எனினும் ம துப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ம துபானத்தை கொள்வனவு செய்தனர்.

உலக நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை மக்கள் : வெளிநாட்டவர் வெளியிட்ட தகவல்!!

இலங்கை மக்கள்..

உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இலங்கை மக்களின் உபசரிப்பு குறித்து இஸ்ரேலிய பிரஜையான பிரபல ஒளிப்பதிவாளர் Nuseir Yassin காணொளி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

உலகை அ ச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து விடுபட முயற்சிக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தாக்கம் காரணமாக முழு இலங்கையும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன் காரணமாக இலங்கை வந்த பெருமளவு சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பிரபல சுற்றுலா தளமான எல்ல நகரில் பெருமளவு சுற்றுலா பயணிகள் சிக்கியிருந்தனர். அவர் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

எனினும் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவற்றை நிவர்த்திக்க எல்ல மக்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்து Nuseir Yassin பாராட்டியுள்ளார்.

உலகம் வழமைக்கு திரும்பிய பின்னர் இலங்கையர்கள் நன்றியுடன் நினைவுக்கூறப்பட வேண்டும் என அவர் தனது காணொளியின் மூலம் உலகுக்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதன் மூலமாகவே அந்த நன்றி கடனை செலுத்த முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக இலங்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மக்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக பொலிஸார் தெரிவிப்பு!!

மக்களின் செயற்பாடு..

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களின் செய்பாடு வருத்தமளிப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இரண்டு மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அறிமுகம் செய்யப்பட்ட வேலைத்திட்டத்தை சரிவர முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு எதிராக சிலர் செயற்படுவதனை கடந்த சில நாட்களாக காண முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டத்திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியா தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் 31 வரை தொடர்ந்து இடைநிறுத்தம்!!

ஸ்ரீலங்கன் விமான சேவைகள்..

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தமது பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணத் தடைகளே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், லண்டன்,டோக்கியோ மற்றும் ஹொங்கொங் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா ஆலோசனைகளின் கீழ் பயணிக்கக் கூடிய பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வவுனியாவில் ம துபான நிலையங்களில் குவிந்த கூட்டம்!!

ம துபான நிலையங்களில்..

வவுனியாவில் அமைந்துள்ள ம துபான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ம துபான நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களிற்கும் மேலாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள் கிழமை 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நேற்றயதினம் ம துபான நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.

நீண்ட நாட்களின் பின்னர் ம துபான நிலையங்கள் திறக்கப்பட்டதால், வவுனியாவில் உள்ள ம துபான சாலைகளிற்கு முன்பாக குடிமகன்கள் அதிகமாக ஒன்றுகூடியிருந்தனர்.

இதேவேளை சில ம துபான நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ம துபானத்தை கொள்வனவு செய்திருந்ததுடன் ஒவ்வொருவருக்கிடையில் சமூக இடைவெளியும் பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு மேலும் 22 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் மொத்தமாக 26 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெலிசர கடற்படை முகாமிலுள்ள சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டாலும் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 382 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 533 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் பலி!!

மிதுன்சங்கர்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் நேற்று(13.05.2020) இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்புறமாக இருந்த ஊடகவியலாளர் உழவு இயந்திரத்தின் சில்லுகளுக்குள் அகப்பட்டு ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு தமிழ் ஊடகம் ஒன்றில் கடமையாற்றிவரும் திருகோணமலை உட்துறைமுக வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும்
இரகுநாதன் மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கோட்டைக்கல்லாறு பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய நிலையில் விலாசம் கேட்டுக்கொண்டிருக்கும்போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மீது மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக இருந்தவர் உழவு இயந்திரத்தின் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இதன்போது உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோயாளிகளுக்கு தலை முடியை வழங்கிய ஹிருனிகா!!

ஹிருனிகா..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, புற்று நோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக தனது தலை முடியை வழங்கியுள்ளார். பெண் புற்று நோயாளிகளுக்கு இவ்வாறு தலை முடியைக் கொண்டு விக் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புற்று நோயானது நோயாளிக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்தினருக்கும் அன்பிற்குரிய அனைவருக்கும் மிகவும் வேதனையை ஏற்படுத்தும் எனவும் அவர்களின் வலி வேதனை போக்க முடியாவிட்டாலும் ஏதேனும் ஓர் வகையில் உதவ முடியும் எனவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

எனவே தாம் தனது தலை முடியை, புற்று நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தங்களது தலை முடியை வெட்டும் யுவதிகள் அவற்றை வீசி எறியாது, இவ்வாறு புற்று நோயாளிகளுக்கு வழங்கினால் அது பயனுள்ளதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிருனிகா தனது முகநூலில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கைது!!

ராஜித சேனாரட்ன கைது..

முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார். வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியிட்டிருந்த சம்பவம் குறித்தே ராஜிதவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் சற்று முன்னர் ராஜித குற்ற விசாரணைப் பிரிவில் சரணடைந்துள்ளார். இவ்வாறு சரணடைந்த முன்னாள் அமைச்சர் ராஜிதவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராஜித சேனாரட்ன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

என் ஆசை ம களை கொ ன்றுவிட்டார்கள்… நீதி கொடுங்கய்யா…. ஜெயஸ்ரீயின் தாயார் க தறல்!!

ஜெயஸ்ரீயின் தாயார்..

விழுப்புரம் ஜெயஸ்ரீ பெ ட்ரோல் ஊ ற்றி எ ரித்து கொ ல்லப் பட்ட ச ம்பவத்தில், சி றுமியின் தா யார் ராஜி செய்தியாளர்களிடம் க ண்ணீர் ம ல்க கோ ரிக்கை வி டுத்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “அதிமுக கவுன்சிலர் அருவி முருகன், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் அ டிக்கடி அ டிப்பா ர்கள்.

அதேபோல் தான், முன்வி ரோதம் கொண்ட முருகன், நேற்று முன்தினம் பிரவீன் குமார் என்பவரிடம் சொல்லி, என்மகன் ஜெயராஜ்ஜை க ட்டாயப்படுத்தி கடையை திறக்க வைத்தார். அதன்பின் என் மகனின் கா து மீ து அ டித்துள்ளார்.

அதில் ம கனின் கா து ச வ்வு கி ழிந்துவிட்டது. அ தனால், எ னது ம கனை திருக்கோவிலூர் மருத்துவமனையில் இரவு 12 மணிக்கு சேர்த்து சிகிச்சை பெற்றபின் 3 மணிக்கு அழைத்து வந்தோம்.

நேற்று காலையில், எனது க ணவர் ஜெயபால், அவர்கள் மீது பு கார் அளிக்க திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்கு போகச் சொல்லி அனுப்பி வைத்தேன். நான் மாட்டுக்கு புல் வெ ட்ட போக வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த 10வது படிக்கும் எனது ம கள் ஜெயஸ்ரீயை ப த்திரமாக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றேன்.

முன்னாள் அதிமுக கவுன்சிலர் அருவி முருகன், கலியபெருமாள் ஆகியோர் எனது ம கள் ஜெயஸ்ரீயை எங்களுடைய க டையில் வை த்து, ம களின் கை, கா ல்கள், வா யைக் க ட்டிவி ட்டு மு கத்தில் கு த்தியிருக்கி றார்கள். பி ன்னர், அ வர்கள் ஜெயஸ்ரீயை பெ ட்ரோல் ஊ ற்றி ப ற்றவைத் துவிட்டு க தவை சாத் திவிட்டு செ ன்றிருக்கிறார்கள்.

கை கா ல் வா யைக் க ட்டிவிட் டதால் எ னது ம கள் க த்தவும் மு டியாமல் எ ரிந்துபோ னார். ரோட்டில் போகிறவர்கள் கடைக்குள் பு கை வருவதைப் பா ர்த்துவிட்டு வந்து எனது ம களை மீ ட்டிருக்கி றார்கள். இதையெல்லாம் எனது ம கள் சா வதற்கு மு ன்பு சொ ல்லிவிட்டார்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் அருவி முருகன், அந்த கட்சியை வைத்து எங்களை நீண்ட காலமாக வாழவிடாமல் செய்துவந்தார். இப்போது எ னது ஆ சை ம களை கொ ன்றுவி ட்டார்கள். எ னது ம களுக்கு நீ தி கொடுங்கய்யா, எ னக்கு நீ தி கொ டுங்கய்யா.

எனது ம களுக்கு வந்த நி லைமை வேறு யா ருக்கும் வரக்கூடாது. எனக்கு நீ தி கொடுங்கய்யா” என்று ஜெயஸ்ரீயின் தா யார் க ண்ணீர் ம ல்க மீடியாக்கள் முன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கை து செய்யப்பட்ட, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் 15 நாட்கள் நீ திமன்ற கா வலில் வைக்கப் பட்டுள்ளனர்.

500 கிலோ மீற்றர் நடைந்து சென்று சாலையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண் : முடிவுக்கு வராத அவலம்!!

சாலையோரத்தில்..

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500கிலோ மீற்றர் நடந்து வந்த பெண் மரத்தடியில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவுக்கு பின் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக சொந்த ஊர்களுக்கு நடைபயணம் செய்து வருகின்றனர்.

இந்த நடை பயணத்தின் நடுவில் பலரும் உணவு இன்றி, உடல் நலகோளாறு ஏற்பட்டு, மற்றும் ரயிலில் அடிப்பட்டு உ யிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீற்றர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அந்தப் பெண் மத்திய பிரதேசத்தில் உள்ள தாரில் இருந்து ஏறக்குறைய 12 பேருடன் சாலை வழியே அணிவகுத்து நடந்தேச் சென்றுள்ளார். பயணத்திற்காகப் புறப்பட்டபோது எட்டரை மாதம் கர்ப்பமாக இருந்தார். பல மையில் நீண்ட நடை பயணத்திற்குப் பிறகு, பாலபீட் கிராமத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது அதிர்ஷ்டவசமாக, குழுவில் இருந்த மற்ற பெண்களின் உதவியுடன் மரத்தடியில் குழந்தையை நல்லபடியாக பிரசவித்துள்ளார்.

பின்னர், பாலபீட் கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவை வரவழைத்துள்ளார்.

அந்தக் குழு தாய் மற்றும் அவரது பிறந்த குழந்தைக்கு உடனடி உதவிகளை வழங்கியதுடன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொழிலாளர்கள், குறித்து பெருத்த கேள்வி எழ செய்துள்ளது.

ஜன்னல் வழியே தந்தையின் சடலத்தை பார்த்து கதறிய மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்..

கேரளாவில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் போனது குறித்து மனம் நொந்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் லினோ ஏபல், கத்தாரில் வேலை செய்து வரும் லினோவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் உடனடியாக விடுப்பு எடுத்துக் கொண்டு மார்ச் 8ம் திகதி சொந்த ஊருக்கு திரும்பினார், அப்போது கொரோனா பரவிக் கொண்டிருந்த காலம் என்பதாலும் லினோவுக்கு சளி, இருமல் இருந்ததாலும் தானாகவே முன்வந்து விமான நிலையத்திலிருந்து நேராக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவர் கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், அவரைத் தனிமை வார்டில் அனுமதித்தனர். அந்தச் சமயம் அவரது தந்தையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரைப் பார்க்க லினோவால் முடியவில்லை. மறுநாள் (மார்ச் 9-ம் தேதி) லினோவின் தந்தைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதுடன் உ யிரிழந்தார்.

அவரது உடல், லினோ அனுமதிக்கப்பட்ட தனிமை வார்டுக்கு எதிரில் இருந்த பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் வார்டுக்கு முன்பாக இருந்து ஆம்புலன்ஸில் தந்தையின் உடல் எடுத்துச் செல்வதை ஜன்னல் வழியாகப்பார்த்து லினோ கண்ணீர் வடித்தார்.

தனது தந்தையின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாத இந்த நிலையில் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என கூறும் லினோ, ஒருவேளை தனக்கு கொரோனா இருந்தால் குடும்பத்தினரும், நண்பர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் திகதி லினோவுக்கும், கீத்து என்ற பெண்ணுக்கும் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள இனிதே திருமணம் நடந்து முடிந்தது.

என் மகனின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி தாங்க : கண்கலங்கி நிற்கும் பெற்றோர்!!

கண்கலங்கி நிற்கும் பெற்றோர்..

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த 4 வயது மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி கோரியுள்ளனர் அவரது பெற்றோர்.

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணதாஸ்- திவ்யா, இவர்களுக்கு ஒரு மகளும், வைஷ்ணவ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர்.

தொழில் ரீதியாக UAE ல் செட்டிலான நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன் வைஷ்ணவ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எந்த அறிகுறியும் தென்படாமல் சந்தோஷமாக ஓடியாடிக் கொண்டிருந்த வைஷ்ணவின் திடீர் சுகவீனத்தால் பெற்றோர்கள் கதிகலங்கி போயினர்.

இந்நிலையில் கீமேதெரபி சிகிச்சையும் பலனளிக்காமல் போகவே பரிதாபமாக  வைஷ்ணவ் உ யிரழந்தார் . ஏற்கனவே அ திர்ச்சியில் இருந்த கிருஷ்ணதாஸ் தம்பதியினருக்கு இது பே ரடியாக இருந்தது.

இருப்பினும் தன்னுடைய மகனை சடங்குகளுடன் முறைப்படி கேரளாவுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய அதிகாரிகளின் அனுமதியை கோரியுள்ளதாக வைஷ்ணவின் மாமா தெரிவித்துள்ளார்.

திருமணமான ஒரு மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நடந்த பரிதாபம்!!

புதுமணத்தம்பதி..

தமிழகத்தில் திருமணமான 1 1/2 மாதத்தில் இளம்தம்பதி தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார்.

இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதல் பற்றி இருவரின் பெற்றோருக்கும் தெரியவர எ திர்ப்பு தெரிவித்துள்ளனர், இதற்கிடையே விஜயாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயக்குமார்.

அத்துடன் கோட்டக்கல் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர், இருப்பினும் தொடர்ந்து பெற்றோர்கள் எ திர்ப்பு தெரிவித்து வந்ததால் மன உளைச்சலில் தவித்துள்ளனர்.

இதனால் வாழவே பிடிக்காமல் நேற்று மதியம் இருவரும் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டனர், விவரம்அறிந்து சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றியதுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சுமந்திரனின் உருவ பொம்மை!!

சுமந்திரனின் உருவ பொம்மை..

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆ யுதப் போ ராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் இனம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. ”நான் ஒரு தமிழ் இன துரோகி” என்ற பதாகையை குறித்த உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆ யுதப் போ ராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.

இதற்கு அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த உருவப் பொம்மையினை யாழ்ப்பாணம் பொலிஸார் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.