அரச ஊழியர்களின் பணிகள் இந்த வார இறுதி வரை தொடரும்!!

அரச ஊழியர்களின் பணிகள்..

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதி வரை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்கள் செயற்படும் முறை தொடர்பில் ஆராயந்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், களுத்துறை மற்றும் புத்தளம் உட்பட 23 மாவட்டங்களுக்கு நேற்று தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்பும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் இந்த வார இறுதி வரை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்களின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து விரைவாக மீண்டு வரும் இலங்கை!!

கொரோனா..

உலகை அ ச்சுறுத்தும் கொரோனா வைரஸிலிருந்து இலங்கை விரைவாக மீண்டுவருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் 23 கொரோனா நோயாளர்கள் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 494 ஆக குறைந்துள்ளது.

இதில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இராணுவத்தினர் அல்லாத சிவில் மக்களின் எண்ணிக்கை 108 என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான கடற் சிப்பாய்கள் 413 பேர் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடற்படையின் கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாட்டினை மீளவும் திறந்து இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் அனைவரும் இதற்கு முன்னர் மிகவும் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்படுவது மிகவும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

இயல்வு வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது மீண்டும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர் முழுமையாக கொரோனா ஆபத்து இல்லாமல் போகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்புகளை முழுமையாக பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்வரும் 2,3 வாரங்களுக்குள் சாதாரண வாழ்க்கையை வாழ கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 869 பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை : பொலிஸார்!!

மக்களின் செயற்பாடுகள்..

மக்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நடவடிக்கைகளின் போது பொது மக்களினால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தி கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அகேமான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதுடன் அரச தனியார் தொழிற்துறை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கையடக்க தொலைபேசி பணப்பரிமாறலை பயன்படுத்தி பண மோசடி : பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!!

பண மோசடி..

கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அ ச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனவே மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பயன்படுத்தி மக்கள் தங்கள் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு..

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுகையில் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ மாணவியரை தெளிவூட்ட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக இந்த பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழிகாட்டல்கள் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி கற்ற மற்றும் தற்காலிக வீசா பெற்றுக்கொண்டிருந்த 3297 மாணவ, மாணவியர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படும் போது அதனால் அபாயங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொது மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இல்லை என்றால் மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா உட்பட ஏனைய மாவட்டங்களின் சேவை நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.எனினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் ஓரளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம். அது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் 5000ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி : அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு!!

அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு..

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓர் கிராம சேவையாளர் பிரிவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோ சடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் இன்றையதினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் புகார் மனு ஒன்றை கையளித்தனர்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவில் 5000ரூபா முதியோர் கொடுப்பனவினை பெறுவதற்கு சென்ற சமயத்தில் கொடுப்பனவினை வழங்காது குறித்த கொடுப்பனவினை இரானுவத்தினரிடம் அனுப்பியுள்ளேன் அங்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு கிராம சேவையாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரதேச செயலக கணக்காளரை வினாவிய சமயத்தில் அப்பணம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் பயனாளிக்கு அக் கொடுப்பணவு கிடைக்கப்பெறவிலை.

எனவே இவ்விடயத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் அரசாங்க அதிபருக்கு வழங்கிய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவிடம் வினவிய சமயத்தில் குறித்த கிராம சேவையாளர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

வவுனியாவில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

வாகன வருமான வரி அனுமதித் பத்திரம்..

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வழமைக்கு திரும்பியதையடுத்து நேற்றையதினம் (11.05) தொடக்கம் பெரும்பாலான அரச சேவைகள் முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் (TAX) வழங்கும் காரியாலயத்தில் இன்று (12.05.2020) அதிகளவிலான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

புதிதாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறல் மற்றும் புதுப்பித்தல் , வாகன உடமை மாற்றம் போன்ற செயற்பாட்டிற்காக மக்கள் வருகை தந்திருந்தனர்.

கோவிட்-19 அ ச்சம் காரணமாக கடந்த நான்கு வாரத்திற்கு மேலாக காலாவதியான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் செலுத்துபவர்களுக்கான தண்டப்பணம் அறவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வவுனியா பிரதேச செயலகத்தினுள் வருகை தரும் மக்கள் அனைவருக்கும் தொற்று நீக்கி மருந்து தெளிப்பதுடன் கைகள் சுத்தம் செய்ததன் பின்னரே பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட 40க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகரசபையினரால் பிடிப்பு!!

கட்டாக்காலி மாடுகள்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கடந்த சில நாட்களாக கட்டாக்காலி மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூராக காணப்பட்டு வந்த நிலையில் 40க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகளை வவுனியா நகரசபையினர் பிடித்துள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் நேற்றையதினம் (11.05.2019) இரவு 10 மணி முதல் இன்று (12.05.2019) அதிகாலை 4 மணிவரை வவுனிவவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம், கோவிற்குளம் போன்ற பகுதிகளில் 40க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

பிடிக்கப்பட்ட மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளில் தண்டப்பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட மாடுகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி மாட்டை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 32 பேர் விடுவிப்பு!!

பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில்..

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று(12.05.2020) விடுவிக்கப்பட்டனர்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 32 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் இ.ருந்து விடுவிக்கபட்பட்டனர்.

கடற்படையுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது உறவினர்கள் உட்பட்ட வவுனியா, மகாகச்சகொடி, அனுராதபுரம், ஹொரவப்பொத்தானை, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 32 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, குறித்த 32 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியாவில் சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவி வழங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவிகளை வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாய உற்பத்திகளுக்கான அரசின் உதவித் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுகைத்தொழில் அமைச்சினால் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்திகளை நவீன தொழில்நுட்பம் ஊடாக உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுதல், ஏற்றுமதி சந்தையை நோக்கிய உற்பத்திகளை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தனிநபர்கள், சங்கங்கள் விண்ணப்பித்து இந்த உற்பத்திகளுக்கான உவிகளைப் பெற முடியும். வடமாகாணத்திற்கான பிராந்திய காரியாலயம் இல.330, சூசைப்பிள்ளையார்குளம், வவுனியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பொருத்தமானவர்கள் திட்ட வரைபுகளை தயாரித்து வழங்க முடியும். குறிப்பாக 30 மில்லியன் வரையில் திட்ட வரைபுகளை தயாரித்தால் அதில் அரைவாசியை அரசாங்கம் நன்கொடையாக வழங்கும்.

நூற்றுக்கு 40 வீதத்தை வங்கிகளில் இலகு கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் 10 வீதத்தை தனிநபர்கள் அல்லது சங்கங்கள் முதலிட தயாராக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் வடமாகாணத்தில் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தொகை குறைவாக உள்ளது. எனவே இம்முறை இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து உற்பத்திகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

வவுனியாவில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (11.05.2020) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், தெற்கு வலய திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி சொரூபன், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஆசிரியர்கள், சுகாதார துறை வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை ஆரம்பிக்கும் போது பாடசாலைகளில் கொவிட் 19 தொடர்பில் உருவாக்கப்பட வேண்டிய கண்காணிப்பு குழு, பாடசாலைகளில் கொவிட் 19 தாக்கம் குறித்து பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,

மாணவர்கள் மத்தியில் அறிவுறுத்தப்பட வேண்டிய விடயங்கள், பாடசாலையிவல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தெர்டர்பாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருபவர்களுக்கு கோவிட் – 19 ஆரம்ப பரிசோதனை!!

கோவிட் – 19 ஆரம்ப பரிசோதனை..

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தருபவர்கள் கோவிட் -19 வைரஸ் தொற்று ஆரம்ப பரிசோதனைக்கு பின்னரே மாவட்ட செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் ஆலோசனைக்கமைய இக் கருவியின் மூலம் மாவட்ட செயலகத்தினுள் வருகை தரும் ஊழியர்கள், சேவையினை பெறுவதற்கு வருகை தருபவர்கள் அனைவரும் குறித்த பரிசோதனையின் பின்னரே மாவட்ட செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

மறுப்பு தெரிவித்த 5 மருத்துவமனைகள் : முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்ற கர்ப்பிணி!!

முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்ற கர்ப்பிணி..

கொரோனா பிரச்சனையால் 5 மருத்துவமனைகள் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில், முச்சக்கர வாகனத்தில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கே இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோரேபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் இவர், பிரசவ வலியை அடுத்து சனிக்கிழமை இரவு தாயார் மற்றும் சகோதரருடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் கொரோனா பரவல் இருப்பதால் புதிய நோயாளிகளை அனுமதிப்பதில்லை என மறுத்துள்ளனர். தொடர்ந்து இன்னொரு மருத்துவமனையிலும் இதே பதிலை அளித்துள்ளனர். இதேப்போன்று 5 மருத்துவமனைகளில் அந்த இரவு அவர்கள் அலைந்துள்ளனர்.

இறுதியில் இன்னொரு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சித்தாப்புரா பகுதியில் வைத்து அந்த முச்சக்கர வாகனத்தில் வைத்து குறித்த பெண் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.

இதனிடையே, அமைப்பு ஒன்றின் உதவியுடன் பெங்களூருவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் தகாத முறையில் பிறந்த குழந்தையை நாய்க்கு இரையாக்கிய தாய்!!

மட்டக்களப்பில்..

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. தாய்மையினை போற்றும் வகையில் நேற்று அன்னையர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அந்த தாய்மையினையே மிகவும் மலினப்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் சமிளயடிவட்டை, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்திசெய்யும் பகுதியில் பிரதேசத்தில் தகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இரையாக்கிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மகனிற்கு பழக்கமான ஒருவராலேயே குறித்த பெண் கர்ப்பம் தரித்துள்ளாதகவும் அதற்கான உடலில் எந்தவிதமான தோற்றப்பாடு காணப்படாத நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் அந்நபருக்கு தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை காத்திருந்துள்ளார்.

ஆனால் அவர் வராத நிலையில் தனது பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என பிறந்த சிசுவை அவ்விடத்திலே கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேற்றையதினம் காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை கா ணாமல் போயுள்ளதாகவும் இதன்போது அப்பகுதியில் நாய்கள் குறித்த குழந்தையினை இழுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிதித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினைக்கொண்டிருந்த நபரினையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி,நீதிபதி ஆகியோரின் விசாரணைகளை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசு மரணம் தொடர்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த ப யங்கரம்!!

இளைஞனுக்கு நேர்ந்த..

தமிழகத்தில் பெண் தோழியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் அ டித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

இவருக்கு கெளதம் என்ற மகன் உள்ளார். கெளதம் பொள்ளாச்சியில் இருக்கும் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் திகதி இவர், தன்னுடைய 16 வயது பெண் தோழி ஒருவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால், இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது, வெளியே சென்றிருந்த சிறுமியின் தந்தை, மாமா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

வீட்டின் உள்ளே கெளதமைக் கண்டதும், அ திர்ச்சியடைந்த அவர்கள், ஆ த்திரத்தில் கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்களால் க டுமையாக அ டித்துள்ளனர். இதனால் ப டுகாயமடைந்த கெளதம், சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் உ யிருக்கு போராடி வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பொலிசார், கௌதமைத் அ டித்த சி றுமியின் தந்தை உள்ளிட்ட 3 பேர் மீது கொ லை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

இந்நிலையில், கௌதம் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்ததால், பொலிசார், சி றுமியின் உறவினர்கள் 3 பேர் மீதும் பதிவு செய்திருந்த கொ லை முயற்சி வழக்கை கொ லை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உ யிரிழந்த கௌதமுக்கும், சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் எல்லோரும் வெளியில் சென்றுள்ளனர்.

இதனால் கௌதம், சிறுமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர், வெளியில் கௌதமின் செருப்பு இருப்பதைக் கண்டு ச ந்தேகித்துள்ளனர்.

பிறகு வீட்டில் வந்து தேடியபோது, கௌதம் கட்டிலுக்கு அடியே ஒளிந்துகொண்டிருந்துள்ளார். ஆ த்திரமடைந்த மூவரும் கௌதமை சரமாரியாக அ டித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.