மூன்று வயது மகளுடன் 900 கி.மீ நடந்த தாயார் : அன்னையர் தினத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

மூன்று வயது மகளுடன்..

உலக நாடுகள் அன்னையர் தினம் கொண்டாடும் நிலையில், இந்தியாவில் தாயார் ஒருவர் மூன்று வயதான தமது மகளுடன் 900 கி.மீ தொலைவில் இருக்கும் தமது கிராமத்திற்கு நடந்து செல்ல முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அ ச்சுறுத்தல் கோர தாண்டவம் ஆடும் நிலையில், எவ்வாறேனும் தமது பிஞ்சு குழந்தையை காப்பாற்ற போ ராடிய ஒரு தாயாரின் மனக்கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நகருக்கு சுமார் 900 கி.மீ நடந்தே செல்ல முடிவு செய்துள்ளார் 25 வயதான ருக்ஷனா பானோ. வழியெங்கும் கண்ணில் படும் லொறிகளை அனைத்தையும் அவர் உதவி கேட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

மே மாத கொளுத்தும் வெயிலில் பிஞ்சு குழந்தையுடன் சாலையோரம் நடந்து செல்லும் ருக்ஷனா பானோவுக்கு ஒரு லொறியும் விவசாய டிராக்டர் ஒன்றும் சிறிது தொலைவு வரை உதவியுள்ளது.

சிறிய ஒரு பையுடன், தோளில் 3 வயது மகளுமாக அவர் நடந்து சென்றுள்ளார். அமேதி பகுதியில் ஜகதீஷ்பூர் கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா பானோ தமது கணவருடன் கடந்த 4 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

ருக்ஷனாவின் கணவர் இப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ருக்ஷனா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இருவரும் சேர்ந்து மாதம் 9000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். இதில் 3,000 ரூபாய் மகளுக்காக வங்கியில் சேமித்து வருகிறார்கள்.

இந்தூர் பகுதியில் கொரோனா பரவிய நிலையில் ஊரடங்கு அமுலில் கொண்டுவரப்பட்டு பல வாரங்கள் நீண்டுள்ளது. இதனால் வேலையை இழந்த ருக்ஷனா தமது சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

இதனிடையே உறவினர்களும் அறிமுகமானவர்களும் என மொத்தம் 8 பேர் அமேதிக்கு நடந்து செல்லலாம் என்ற முடிவுக்கு வந்ததும், ருக்ஷனாவும் மகளுடன் அமேதி செல்ல அவர்களுடன் இணைந்துள்ளார்.

புதனன்று இரவு நடக்கத் தொடங்கிய இந்த குழுவினர் சனிக்கிழமை லக்னோ சென்று சேர்ந்துள்ளனர். அங்கிருந்து ஓய்வுக்கு பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளனர். இந்த 900 கி.மீ தொலைவு அவர்கள் எப்போது தாண்டுவார்கள் என தெரியாமல் நடக்கத் தொடங்கியுள்ளனர் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன,

பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க முடியாது : கல்வியமைச்சர் அறிவிப்பு!!

பாடசாலைகளை ஆரம்பிக்க..

பாடசாலைகளை ஆரம்பிக்க இன்னும் ஒரு மாத காலம் எடுக்கலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தினத்தில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதகாலம் வரை செல்லும் என இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வருவதன் இறுதிக்கட்டமாக மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக் கருதி பாதுகாப்பானதொரு நாளில் பாடசாலைகள் திறக்கப்படும். அத்தினத்தை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு பூராகவுமுள்ள பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு இன்னும் நான்கு நாட்களுக்கு மூடப்படும். முதலில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம் மற்றும் அதற்கு கீழுள்ள தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவார்கள்.

மாணவர்கள் கைகளை கழுவுதல் உட்பட அவர்களின் உடல் வெப்ப நிலையை கணிப்பிடுவதற்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சால் சகல பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

இன்று வரை மேலாடை இல்லாமல் சாபத்தோடு வாழ்ந்து வரும் பெண்கள் : எந்த நாட்டில் தெரியுமா?

மேலாடை இல்லாமல்..

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வகை பழங்குடியின பெண்கள் இன்று வரை மேலாடை இல்லாமல் வாழ்ந்து வருவது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல வகை பழங்குடியினர் இருக்கின்றனர். இதில், ஓடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் போண்டா பழங்குடியின மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் பேசும் மொழிக்கு போண்டா என்ற பெயரால் இந்த இந்த இன மக்களுக்கும் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களையே ரேமோ என அழைத்துக்கொள்வார்கள். போண்டா மொழியில் ரேமோ என்றால் அதற்கு மக்கள் என அர்த்தம்.

இதிலும் இரண்டு பிரிவுகளாக இவர்கள் இருக்கிறார்கள். கீழ் போண்டா மற்றும் மேல் போண்டா, இதில் மேல் போண்டா குடிமக்கள் என்பவர்கள் காட்டிற்குள்ளேயே வாழ்பவர்கள் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் ஊருக்குள் வரமாட்டார்கள்.

சிறு வயது முதலே காட்டிற்குள் தான் இருக்கிறார். அவர்களை சாதாரண மக்களால் எளிதாக பார்க்க முடியாது. கீழ் போண்டா மக்கள் நம் நாட்டில் உள்ள பழங்குடின மக்கள போலவே இருக்கிறார்கள்.

இன்றும் அவர்களின் மொழி கலாச்சாரம் ஆகியவற்றை மறக்காமல் தொடர்ந்து அதை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். மேல் போண்ட மக்கள் 67,000 பேரும், கீழ் போண்டா மக்கள் 17,000 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களின் மக்கள் தொகையில் பெண்கள் தான் அதிகம். போண்டா இன மக்களை பொருத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பெண்களுக்கு கட்டாயம் மேல் ஆடை அணியக்கூடாது. இந்த கட்டாயத்திற்கு பின்னால் ஒரு ராமயணக்கதை இருக்கிறது.

ராமன் சீதையுடன் வனவாசத்திற்கு செல்லும் போது குளம் ஒன்றில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் குளிப்பதை, நிர்வாணமாக இருந்த நிலையில், போண்ட இன பெண்கள் பார்த்துவிட்டதால், அவர்கள் மீது கோப்பட்டு அவர்கள் வாழ் நாள் முழுவதும் நி ர்வாணமாகவும், வாழ்நாள் முழுவதும் குறைந்த முடியுடன் தான் வாழ வேண்டும் என சாபமிட்டுள்ளார்.

அதை கேட்டு அ திர்ச்சியடைந்த போண்டா இன பெண்கள் சீதையிடம் மன்னிப்பு கேட்கின்றனர். இதையடுத்து, சீதை மனம் இறுங்கி அவரது சேலையலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களிடம் கொடுத்து இதே அளவு உள்ள ஆடைகளையே இனி இவர்கள் அணிய வேண்டும் என தன் சாபத்தை குறைந்தார்.

அன்று முதல் போண்டா இன பெண்கள் மேலாடை அணிவதில்லை கீழாடையில் குறிப்பிட்ட அளவிலான ஆடையையே அணிகின்றனர். மேலும், இவர்கள் வேட்டையாடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், பல அணிகலங்கள் செய்து அதை போட்டுக்கொண்டு உடலை மறைந்துக்கொள்கிறார்கள். அதற்கு எந்த விதமான தடையும் இல்லை.

இந்த இன மக்களிடம் இன்றும் பண பரிமாற்ற முறை இல்லை. இவர்கள் இன்றும் பண்ட மாற்ற முறையை தான் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த இன மக்களிடையே ஒரு சந்தை ஒன்று நடக்கிறது. அந்த சந்தையில் அவர்கள் தங்களுக்குள் பொருட்களை பண்ட மாற்று முறையில் மாற்றம் செய்து கொள்கின்றனர்.

கடந்த 177-ஆம் ஆண்டு முதல் இந்த இன மக்களை ஒடிசா அரசு அடையாளம் கண்டு, அவர்களை தேவையான உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த மக்கள், தற்போது பிரிந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

வவுனியாவில் சிகையலங்கார நிலையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!!

சிகையலங்கார நிலையங்களுக்கு..

கொவிட் 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் பூட்டப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்களை மீள திறப்பதற்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபொற்ற கலந்துரையாடலின் போதே குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

அந்தவகையில், சிகையலங்கரிப்பு நிலையத்தை நடாத்துவதற்கான சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்டு காட்சிப்படுத்த வேண்டும்,

முடிவெட்டுதல்- முடிக்கு டை பூசுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை கழுவுவதற்கான ஏற்பாட்டினை நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செய்தல் வேண்டும்,

பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும், காலினால் செயற்படுத்தப்படும் கழிவகற்றல் கூடை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றை ஏற்றுக் கொள்ளும் சிகையலங்கார நிலையங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிபாளரின் அனுமதியுடன் இயங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகளான லவன், சுதாகரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன், பொது சுகாதார பரிசோதகர்கள், சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் சுகதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான மருந்துகள் மற்றும் பொருட்களும் சிகையலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

டேட்டிங் செயலி மூலம் பழகிய நபரை நம்பி நேரில் சென்ற 19 வயது திருநங்கைக்கு நேர்ந்த கதி : நி ர்வாணமாக சாலையில் அலைந்த பரிதாபம்!!

திருநங்கை..

உக்ரைனில் 19 வயது திருநங்கை டேட்டிங் செயலி மூலம் நட்பான நபரை சந்திக்க சென்ற நிலையில் கூ ட்டு ப லாத்கா ரம் செய்யப்பட்டு, நி ர்வாணப்படுத்தப்பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வ யதான தி ருநங்கை ஒருவர் டேட்டிங் செயலி மூலம் 17 வ யது ந பருடன் நட்பாகியுள்ளார். இதையடுத்து திருநங்கை அவனை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அந்த சிறுவன் திருநங்கைக்கு ம து வாங்கி கொடுத்துள்ளான், பின்னர் அவருக்கு பா லியல் தொ ல்லை கொடுத்துள்ளான்.

அந்த சமயத்தில் சிறுவனின் மூன்று ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு தோழி அங்கு வந்த நிலையில் அனைவரும் சேர்ந்து திருநங்கையை து ஷ்பிரயோ கம் செய்தனர்.

பின்னர் திருநங்கை அ டித்து து ன்புறுத்தப்பட்டதோடு நி ர்வாணப்படுத்தபப்ட்டார். இதோடு அவரிடம் இருந்த பணத்தை அனைவரும் சேர்ந்து தி ருடிக்கொண்டனர்.

இதோடு திருநங்கையை இர த்தம் வ டிய நி ர்வாண நிலையில் சாலையில் நடக்க வைத்து பின்னாடி காரில் சென்றுள்ளது அந்த கு ம்பல். தற்போது திருநங்கை மருத்துவமனையில் ப டுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் மூ க்கு உ டைந்துள்ள நிலையில் உ டைந்த மூக் குக்கு அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொ டுமையான சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கு ற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஊடாக பலத்த பாதுகாப்புடன் தென்பகுதி நோக்கி பயணித்த 7 பேருந்துகள்!!

தென்பகுதி நோக்கி..

வடபகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 7 பேரூந்துகளில் பலத்த பாதுகாப்பு மத்தியில் வவுனியா ஊடாக தென்பகுதி நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் வடபகுதியில் அமைப்பட்ட பல்வேறு முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை 07 பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா ஊடாக இன்று (11.05.2020) மதியம் அவர்களது வதிவிடங்களுக்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.

வழமைக்கு திரும்புகிறது விமான நிலையமும் சேவைகளும்!!

விமான நிலையம்..

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கடந்த 45 நாட்களுக்கு அதிகமான நாட்கள் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் கூறினார்.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்தறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

எனினும் இப்போது நாடு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கமைய விமான சேவைகளையும் வழமைக்கு கொண்டவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.

மீண்டும் விமான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்கவுள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதற்கான விதத்தில் இப்போதிருந்து விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இலங்கை பயணிகள் அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும், விமான பயணங்களில் சில சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

-தமிழ்வின்-

கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் தவித்த மனைவி குறித்து கணவன் உருக்கம்!!

கொரோனாவால் தவித்த மனைவி..

கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்கள் மனைவி அனுபவித்த து யரம் குறித்து சீனாவின், வுஹானை சேர்ந்த கணவர் உருக்கமாக பேசியுள்ளார்.

வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது. தனிமைப்படுத்துவதற்கு முன்பு ஆனந்தமான வாழ்க்கையில் இருந்த நாங்கள், அதன் பின் எங்களுக்குள் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் செய்தி தான் இது என்று வுஹானில் இருக்கும் கணவர் ஒருவர் கூறியுள்ளார்.

என் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நான் ஒரு படத்தயாரிப்பாளராக இருக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் என்னுடைய மனைவி கவலைப்பட ஆரம்பித்தாள். ஏனெனில், நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதாக கூறினாள்.

அந்த நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான அறிகுறியுடன் இருப்பதாகவும், இதை பார்க்கும் போது எனக்கு கவலையாக இருப்பதால், நான் வேலைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறினாள். இருப்பினும் அவளுக்கு தன்னுடைய நோயாளிகள் மீது மிகுந்த அக்கறை இருந்தது.

இதையடுத்து ஒரு நாள் காலை சரியாக காலை 8.50 மணி இருக்கும், அப்போது என்னை தொடர்பு கொண்டு, எனக்கும் அது பிடித்துவிட்டது(நோய் அறிகுறி) என்று கூறினாள்.

நான் அவள் சொன்னதை புரிந்து கொண்டேன். இதையடுத்து அவளுக்கு சோதனை செய்த போது, நோய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்ன நோய் தொற்று என்பது தெளிவாக இல்லை.

இதனால், என் மனதில் எதுவும் ஓடவில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை? அவளுக்கு அந்த அறிகுறி மிதமாக இருந்தது. அந்த சயமத்தில், மருத்துவ சேவைகள் ஏற்கனவே சுமையை சந்தித்து கொண்டிருப்பதால், மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைத்து, வீட்டிலே உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார்.

நான் அவள் அறையை சுத்தம் செய்வதற்காக உள்ளே நுழைந்த போது, அவள் நான் உன்னை உள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? என்று சண்டை போட்டாள். அவள் போர்வையை போர்த்து கொண்டு என்னை பார்க்கவேயில்லை, நான் வீட்டை சுத்தம் செய்துவிட்டு போய்விடுகிறேன் என்று கூறினேன்.

நிலைமை மிகவும் மோசமகலாம் என்பதால், இதை எல்லாம் வீடியோவாக எடுக்கலாம் என்று வுஹான் டைரியில் தொடர்ந்து குறிப்பிட்டேன். நான் அவளுக்கு உதவி செய்ய நினைத்தேன், தேவையானவை சமைத்து கொடுத்தேன். நான் அறையில் சென்ற போது, அவள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள்.

நான் அழாதே என்று தொட்டு சொன்னேன், அப்போது அவளோ நீ என் கிட்ட வராதே என்று கூறினாள். நிலைமை மோசமானது, அவளது அறிகுறிகள் தீவிரமாகிவிட்டது. அவளது உடம்பு முழுவதும் வலி வந்துவிட்டது, காய்ச்சல் 102F-க்கு மேலே இருந்தது. நான் அவளை தொட்டு, கவலைப்படாதே நான் உன் அருகில் இருக்கிறேன், என்றேன். அவள் முதலில் நீ இந்த அறையை விட்டு வெளியே போன் என்று இருமிய நிலையில் கூறினாள்.

எனக்கு பயம் வந்துவிட்டது. பல மருத்துவமனைகளை தொடர்புகொண்டேன். ஆனால் எங்குமே படுக்கைகள் காலியாக இல்லை. 13 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது அவள் கொஞ்சம், கொஞ்சமாக தேறினாள். இதனால் பாதுகாப்பு உடை அணிந்த நிலையில், மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்து சென்றேன்.

அப்போது அங்கு மருத்துவர்கள் சொன்ன தகவல் மேலும் வேதனையை கொடுத்தது. ஏனெனில் முன்பு இருந்ததை விட நன்றாக இருக்கிறால், நல்ல ரிசல்ட் வரும் என்று பார்த்தால், நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

என் இதயம் நொறுங்கிவிட்டது. நான் உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததை நினைத்து வேதனையடைந்தேன். அதன் பின் அவள் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

இதையடுத்து, நான் வீடியோ காலில் அவளிடம் பேசினேன், அந்த இடம் எப்படி இருக்கு என்று கேட்டேன், மனதில் ஒரு வித பயம் இருந்தாலும், நான் விரைவில் குணமாகிவிடுவேன் என்ற எண்ணம் தோன்றுவதாக கூறினாள்.

இந்த சமயத்தில் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையாக எந்த அளவிற்கு இருக்க முடியுமோ அப்படி இருந்தோம். அப்போது தான் இது எந்தளவிற்கு இந்த நோய்க்கு முக்கியம் என்பது தெளிவாக தெரிந்தது.

இறுதியில் அது கொரோனா வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வுஹானில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பு இதை பெருந்தொற்றாக அறிவித்தது. 50 நாட்கள் போ ராட்டத்திற்கு பின் வுஹானில் பாதிப்பு குறைந்தது என்று கூறியுள்ளார்.

அம்மாவுக்கு கொரோனானு கூட்டிட்டு போய்டாங்க : அப்பா செத்து சடலமா வீட்ல : அடக்கம் செய்யத் தெரியாமல் 11 வயது மகன்!!

11 வயது மகன்..

நாம் அன்றாடம் பல விதமான விஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலம் கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம்மை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும். அது போன்ற சம்பவம் தான் இதுவம்.

கொ ரோனா உலகையே அ ச்சு றுத்தி வரும் ஒன்றாக மாறி உள்ளது. இதனால் சாதாரண மக்கள் முதல் இந்த பெரிய பணக்காரர்கள் வரை பா திக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது அ டித்தட்டு மக்களின் வாழ்வில் மீ ள முடியாத சோகம் அ ரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐயனார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 11 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளான். வேலை செய்து கொண்டிருந்த போது பாலத்தின் மீது இருந்து கீழே வி ழுந்ததால் கா யங்கள் ஏ ற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் இருந்த அய்யனாரை பார்த்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் தாயாரும் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது மகன் ஜீவா, தன்னுடைய சித்தப்பா ஏழுமலையின் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சற்றுத் தேறி உள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து தங்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.

ஆனால் மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு ஆகியவற்றை நேரத்திற்கு சரியாக அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அய்யனாரை காரில் வைத்து அவரது தாயார் மற்றும் மனைவி ஆகிய இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே அய்யனாரின் மனைவிக்கும் அவரது தாயாருக்கும் போன் வந்துள்ளது. அந்த போனை எடுத்து பேசிய அவர்களுக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

அதாவது அய்யனாரின் மனைவி மற்றும் தாயார் இருவருக்கும் மருத்துவமனையில் இருந்த பொழுது கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே, அய்யனாரை மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு டிஸ் சார்ஜ் செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே போன் மூலம் அய்யனாரின் தாயார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சேர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஆம்புலன்சில் ஏறி சென்றுள்ளனர். ஒன்றும் புரியாமல் திகைத்து இருந்த 11 வயது மகன் ஜீவா தந்தைக்கு எவ்வாறு உணவு மற்றும் மாத்திரைகள் தரவேண்டும் என்று குழம்பி இருந்திருக்கிறான்.

இதனையடுத்து சரியான நேரத்தில் மாத்திரைகள் தர இயலாத காரணத்தினால் அய்யனார் பரிதாபமாக வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே உ யிரிழந்திருக்கிறார். அவர் உ யிரிழந்ததை அடுத்து போலீசார் அவரது உடலுக்கு அருகில் யாரும் போகக்கூடாது என்று கூறியுள்ளனர்.

உயிர் பிரிந்து 11 மணி நேரமான பின்பும் உடலுக்கு அருகில் யாரையும் செல்லவிடாமல் உ டலையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்ப டுத்தாமல் போலீசார் அங்கிருந்த மக்களை த டுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைப் பார்த்து அய்யனாரின் தம்பி ஏழுமலை , ஏழைங்க உ சுரு எப்படி போ னாலும் ப ரவாலையா சாமி..? என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டு க தறி அ ழுத சம்பவம் காண்போர் நெஞ்சை உருக வைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு வந்த போதும் குறைந்தளவு மக்கள் நடமாட்டம்!!

குறைந்தளவு மக்கள் நடமாட்டம்..

வவுனியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு வந்த போதும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதுடன், வடமாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.

கொவிட் – 19 காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 23 மாவட்டங்களில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைவாக வவுனியாவில் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என்பன திறக்கப்பட்டு இயங்கியதுடன், முச்சக்கர வண்டி, பேரூந்து போக்குவரத்துக்களும் இடம்பெற்றன.

வவுனியாவில் இருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையில் இ.போ.சபை பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன.

இதன்போது அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பாஸ் உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டதுடன் பேரூந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றியே சேவைகள் இடம்பெற்றன.

அத்துடன், வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், பூவரசங்குளம், நெடுங்கேணி உள்ளிட்ட உள்ளூர் சேவைகளும் இடம்பெற்றிருந்தன. இயல்பு நிலை ஏற்பட்ட போதும் நகரப் பகுதியில் மக்களது நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் புகையிரதத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி!!

ஒரே ஒரு பயணி..

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் புகையிரதத்தில் பயணிப்பதற்காக பெலியத்தை புகையிரத நிலையத்திற்கு ஒரு பயணி மாத்திரமே வந்துள்ளார் என தெரியவருகிறது.

ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 5.10 மணிக்கு பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகள் புகையிரதம் இயக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் கொழும்பு செல்ல வசதியாக இந்த புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் பெலியத்தையில் இருந்து பயணிக்க மூன்று பேர் மாத்திரமே பதிவு செய்திருந்தனர்.

எனினும் பதிவு செய்த மூன்று பேர் இரண்டு பேர் வருகை தரவில்லை என்பதுடன் ஒருவர் மாத்திரமே பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

பதிவு செய்யாத சிலர் புகையிரதத்தில் பயணிக்கும் நோக்கில் புகையிரத நிலையத்திற்கு வந்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்காத புகையிரத திணைக்கள அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

பயணிகளின் உடல் உஷ்ணத்தை பரிசோதித்து ஆசனங்களில் அமர செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புகையிரத நிலையத்தின் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காலநிலை மாற்றமடையும் : உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் : எச்சரிக்கும் நிபுணர்கள்!!

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

எல் நினோ என்பது வெப்பமண்டல பசிபிக் முழுவதும் தற்போதைய தொடர்ச்சியான காலநிலை நிகழ்வின் பெயர் ஆகும். இது ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்கற்ற முறையில் முன்னும் பின்னுமாக மாறுகிறது. மேலும் வெப்பநிலை, காற்று மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் இடையூறுகளைத் தூண்டுகிறது.

ஆனால் இந்தியப் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பெட்ரோ டினெசியோ மற்றும் அவரது குழுவும்,

வெப்ப மயமாதலால் இந்தியப் பெருங்கடலில் எல் நினோ ஏற்படக்கூடும் என்பதைத் தீர்மானிக்க காலநிலை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழு நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலநிலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரிகளை உருவாக்கியது.

சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, இந்தியப் பெருங்கடல் இன்றைய காலநிலையை விட மிகவும் வலுவான காலநிலை மாற்றங்களை உண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை அதிகரித்து வருகிறது.

கணினி மூலம் மதிப்பிடப்பட்டதில் 2100ம் ஆண்டளவில் இந்த நிகழ்வு வெளிவரக்கூடும் என்பதைக் காட்டியதால் விஞ்ஞானிகள் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளனர். ஆனால் இதே போன்ற வெப்பமயமாதல் போக்குகள் தொடர்ந்தால் அது 2050 ஆம் ஆண்டிலேயே கூட ஏற்படக்கூடும் என எச்சரித்து உள்ளனர்.

மனிதர்கள் கிரீன்ஹவுஸ் உமிழ்வைக் குறைக்காவிட்டால், நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலநிலை மாற்றம் எப்படி இருக்கும் என்பதற்கான உருவகப்படுத்துதல்களை இந்த காலநிலை மாதிரிகள் உருவாக்கியது.

புவி வெப்பமடைதல் அதிகமான பிறகு, பகுப்பாய்வு இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையில் பெரும் ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்தியது.

20,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் போன்றது.ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தியப் பெருங்கடலில் இதற்கு முன் நிகழ்ந்த எல் நினோ 21,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஃபோரம்ஸ் எனப்படும் நுண்ணிய கடல் வாழ்வின் ஓடுகளில் மறைந்திருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது.

இது பூமி மிகவும் குளிராக இருந்த கடைசி பனி யுகம் ஆகும்.டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பெட்ரோ டினெசியோ தெரிவிக்கையில்,சராசரி உலகளாவிய வெப்பநிலையை ஒரு சில டிகிரி உயர்த்துவது அல்லது குறைப்பது இந்தியப் பெருங்கடலை மற்ற வெப்பமண்டல பெருங்கடல்களைப் போலவே இயங்கத் தூண்டுகிறது என கூறினார்.

ஆய்வுக்கு தலைமை தாங்கிய இணை எழுத்தாளரும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருமான கவுஸ்த் திருமலை கூறியதாவது:-

கடந்த காலங்களில் இந்தியப் பெருங்கடலில் பனிப்பொழிவு காற்று மற்றும் கடல் நீரோட்டங்களை பாதித்த விதம் புவி வெப்பமடைதலால் பாதிக்கும் விதத்திற்கு ஒத்ததாகும்.

இதன் பொருள் இன்றைய இந்தியப் பெருங்கடல் உண்மையில் அசாதாரணமானது. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று காரணமாக இந்தியப் பெருங்கடல் தற்போது ஆண்டு காலநிலை மாற்றங்களை சந்தித்து வருகிறது.

எவ்வாறாயினும், பசிபிக் பெருங்கடலில் காணப்பட்ட எல் நினோ மற்றும் லா நினா வானிலை முறைகளைப் போலவே, வெப்பமயமாதல் உலகம் காற்று எவ்வாறு பாய்கிறது என்பதை மாற்றியமைக்கலாம். இது கடல்களை சீர்குலைக்கும் மற்றும் வெப்பமயமாதல் மற்றும் குளிரூட்டும் சூழலை உருவாக்கும் என கூறினார்.

இந்த நிகழ்வு கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பருவமழையை சீர்குலைக்கும். இது விவசாயத்திற்காக வழக்கமான வருடாந்திர மழையை நம்பியிருக்கும் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் இயற்பியல் கடல்சார்வியலாளர் மைக்கேல் மெக்படன் கூறும் போது,மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும்.

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் அவற்றின் தற்போதைய போக்குகளில் தொடர்ந்தால், நூற்றாண்டின் முடிவில், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளான இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.

இந்த பிராந்தியத்தில் பல வளரும் நாடுகள் நவீன காலநிலையில்கூட இந்த வகையான தீவிர நிகழ்வுகள் நடக்கும் அதிக ஆபத்தில் உள்ளன என கூறினார்.

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள நடைமுறைகள்!!

திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும். எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழைவற்கு முன்னர் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.

மண்டபத்திற்குள் நுழையும் இடத்தில் நீர் வழங்குவதற்கான கருவிகளை பொருத்த வேண்டும். மண்டபத்திற்கு வருவதற்கு முன்னரும், மண்டபத்தில் இருந்து வெளியேரும் போதும் அனைத்து உபகரணங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

நீர் பருகும் மற்றும் உணவு உண்ணும் தட்டுகள் விருந்தினர்களும் குடும்பத்தினரும் பயன்படுத்த கூடாது. உணவு பகிர்வதற்காக தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.

அதன் மூலம் பலர் ஒரு தட்டுகள் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியும். ஒரு குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் தடை விதித்தல் ஆகிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

-தமிழ்வின்-

முச்சக்கர வண்டி, கார்களில் பயணிப்போருக்கு புதிய கட்டுப்பாடு!!

புதிய கட்டுப்பாடு..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாரதிக்கு மேலதிகமாக 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகனங்களில் செல்பவர் என்றால் சாரதிக்கு மேலதிகமாக 3 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அன்னையர் தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!!

ஒரே பிரசவத்தில்..

அனுராதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்ள பிறந்துள்ளன. 30 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார்.

குறித்த பெண் கர்ப்பமடைந்து 8 மாதங்களும் ஒரு வாரமும் கடந்திருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிப்பதற்கு பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று வெற்றிகரமாக இந்த 4 குழந்தைகளையும் வைத்தியர் பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நேற்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாப்பட்ட நிலையில், நான்கு குழந்தைகள் பிறந்தமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

-தமிழ்வின்-

வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல் அரச களஞ்சியசாலைகளில் இருப்பு!!

வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல், அரச நிறுவனங்களால் கொள்வனவு செய்து களஞ்சியசாலைகளில் உள்ளதோடு தனியார் அரிசி ஆலைகளில் 3147 மெற்றிக்தொன் நெல் கையிருப்பிலும் உள்ளது.

அத்துடன் ஜனாதிபதி செயலணியின் இலக்கை நோக்கி நகர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. ஈஸ்வரராஜன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள நெல் கையிருப்பு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 4000 ஹெக்ரெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் குளங்களில் உள்ள நீரின் அளவிற்கும் காலநிலை அவதான நிலையத்தின் தகவலுக்கும் அமைவாக 1900 ஹெக்ரெயர் நெற்செய்கையே மேற்கொள்ள முடியும்.

இதுவரை 1795 ஹெக்ரெயர் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலநிலை அறிவுறுத்தல் தொடர்பாக விவசாயிகளிற்கு தெரியப்படுத்தும் விதமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

விவசாயத்தில் தன்னிறைவடைந்த நாம் சிறுதானியங்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. அந்த இறக்குமதிகளை தடைசெய்யும் விதமாக மாவட்டங்கள் தோறும் இலக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

எங்கு விவசாயம் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது என்பதனை துள்ளியமாக ஆராய்ந்து இந்த இலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான இலக்கை விட அதிகமானதாகும்.

ஜனாதிபதி செயலணியின் மூலமாக எமது மாவட்டத்தில் பயிரிடவேண்டும் என தரப்பட்ட இலக்குகளில் 4 ஆம் திகதி வரை நாம் 507 ஹெக்ரெயர் வரையில் அடைவு மட்டத்தினை அடைந்துள்ளோம். இது 21.48 வீதமாக உள்ளது.

அத்துடன் சமூக பாதுகாப்பு திணைக்களமும், தம்மால் பயிரிடக்கூடிய மரக்கறி செய்கையின் அளவை 47.7 ஹெக்ரெயராக தந்துள்ளனர். இதன் பிரகாரம் 899.7 ஹெக்ரெயர் பிரதேசத்தில் உற்பத்திகளை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவை வீட்டுத்தோட்ட செய்கைக்கு மேலதிகமானதாகவுள்ளது. எனவே மரக்கறிகளின் அளவு மாவட்டத்தில் மேலதிகமாக இருக்கும் என்பதனால் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களை அவர்களின் தேவைக்கு மட்டும் உற்பத்தியை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு கடைகளிலும் இருக்க வேண்டிய பசளைகளின் அளவும் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய பயிர்ச்செய்கையிலும் மாற்றுப்பயிர்ச்செய்கையிலும் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டாமைக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு போதுமான காப்புறுதி கொடுக்கப்படவேண்டும். அத்துடன் சந்தையில் விலைத்தளம்பல் காணப்படுகின்றமையும் ஓர் காரணமாக அமைகின்றது.

எனவே இவ்விரண்டு காரணங்களையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்கு அறிக்கையொன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் ஆயிரத்து என்னூற்றி ஐம்பது (1850) மெற்றிக்தொன் காயவைத்த நெல் கொள்வனவு செய்து களஞ்சியசாலைகளில் உள்ளது.

அத்துடன், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கததினால் ஈரமான நெல்லாக 218.64 மெற்றிக்தொன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மொத்தமான வவுனியா மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் 2108.64 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ளது.

இதேவேளை தனியார் அரிசி ஆலைகளில் 3147 மெற்றிக்தொன் நெல் தற்போது கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்தார்.