வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம்!!

கோவிட்-19 கண்காணிப்பு நிலையம்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒன்றிணைந்து உழைப்போம் எமது உறவுகளுக்காக எனும் தொனிப்பொருளில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமைக்கப்பட்ட இவ் கோவிட்-19 கண்காணிப்பு நிலையத்தினூடாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான பயண அனுமதி பத்திரங்கள் வழங்கல்,

வெளிமாவட்டங்களுக்கு அத்தியவாசிய பொருட்களை ஏற்றுவதற்காக சென்று வரும் சாரதி, நடத்துனருக்குரிய கோவிட் -19 தொடர்பான பரிசோதனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கோவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து வவுனியா மக்களை காப்பாற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினர் பல்வேறு விதமான செயற்பாடுகளை (மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி, கிருமி நீக்கி தெளிக்கும் இயந்திரம், முகக்கவசங்கள் போன்ற) முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ள பேரூந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்!!

பேரூந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..

ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்பட்டதும் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ள அரச பேரூந்துகளுக்கு கொவிட் 19 தொடர்பான வழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சென்ற சுகதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக பேரூந்துகளின் சுகாதார தன்மை தொடர்பாக பார்வையிட்ட சுகாதார பரிசோதகர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஸ்டிக்கர்களை பேரூந்துகளில் காட்சிப்படுத்தலுக்காக ஒட்டினர்.

முன்னதாக வவுனியாவின் புதிய மற்றும் பழைய பேரூந்து நிலையங்கள் கிருமி நீக்கி மருந்துகள் விசிறப்பட்டு தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் விசேட அதிரடிப்படை மற்றும் நகரசபை ஆகியவற்றின் துணையுடன் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள 7 முக்கிய அறிவிப்புகள்!!

முக்கிய அறிவிப்புகள்..

இலங்கையில் நாளை முதல் இயல்வு வாழ்க்கைக்கு மக்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதி பொலிஸ் மா அதிபரினால் 7 முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் நாளை முதல், பணிக்கு செல்பவர்கள், மின்னணு வடிவத்தில் ஒரு ஆவணம் (நகல்) அல்லது பணியிடத்தில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உத்தியோகபூர்வ அடையாள அட்டை ஆகியவற்றை பயணத்தின் போது வைத்திருப்பது கட்டாயமாகும்.

தங்கள் சொந்த வாகனங்களில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் பணியிடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி பணியில் இருந்து வீடு திரும்பும் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறை ஊழியர்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் வீடு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில் வேலைக்கு பயணிக்க பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாளை முதல் பணியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் உணவகங்களும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்யவும் அனுமதி வழங்கப்படாது. பாரிய மக்கள் கூட்டம் கூடுவதனை தவிர்ப்பதற்காக அதிகாரிகள் இந்த ஒழுங்குமுறையில் தீவிரமாக உள்ளனர்.

சமைத்த உணவு, தேநீர், பழச்சாறு போன்றவற்றை விற்கும் உணவகங்கள், கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் அல்லது இரவு நேர கேளிக்கை விதிகள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க அடிப்படையிலான கட்டமைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும். 1 அல்லது 2 இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் : மக்களுக்கு பல்வேறு விதிமுறைகள்!!

ஊரடங்கு சட்டம்..

கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு,  கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய பிரதேசங்களில் மக்கள் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் எனவும் அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதனை நிறுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடமைகளுக்காக அலுவலங்களுக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு தங்கள் கடமைக்காக வழங்கப்பட்டுள்ள கடிதங்களை பயன்படுத்தி செல்ல முடியும்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் சிரமங்களை தவிர்க்கும் நோக்கிலும் நாளை முதல் அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செல்லும் போது அன்றைய தினங்களில் வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தில் உள்ள நபர்கள் மாத்திரம் வீட்டை விட்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரட்கு நீக்கப்படுவதனால் கொரோனா ஆபத்து இல்லை என நினைத்து செயற்படுவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அம்மா, அப்பாவை பார்த்துக்கொள் : சகோதரனுக்கு செய்தி அனுப்பிவிட்டு த ற்கொ லை செய்த மருத்துவர்!!

மருத்துவர்..

தமிழகத்தில் பெற்றோரை பார்த்து கொள்ளும் படி சகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு பயிற்சி மருத்துவர் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதன் படி சென்னை மெரினா கடற்கரையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடல் ச ந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கியது. இது குறித்து கடற்கரை பகுதியில் பா துகாப்பு பணியில் இருந்து பொலிசார் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மெரினா பொலிசார் இறந்த இளைஞர் குறித்து தீ விர வி சாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, சியாமலா கார்டன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (35) என்பது தெரியவந்தது. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், அர்ஜூன் தனது குடும்பத்தினரிடம் ச ண்டை போட்டுவிட்டு சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அர்ஜூன் நேற்று முன்தினம் 3 மணிக்கு தனது விலை உயர்ந்த காரை எடுத்துக் கொண்டு கடலில் விழுந்து த ற்கொ லை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து மெரினா கடற்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு தனது சகோதரனுக்கு வாட்ஸ் அப்பில் நான் எடுக்கும் த ற்கொ லை முடிவுக்கு யாரும் காரணமல்ல அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கோ என்று கூறி கார் இருக்கும் இடத்தையும் குறுஞ்செய்தி மூலம் தன்னுடைய சகோதரனுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாததால் அர்ஜுன் கடலில் இறங்கி த ற்கொ லை செய்து கொண்டது வி சாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், திருமணம் ஆகாத விரக்தியில் த ற்கொ லை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் என் கணவர் இறந்துவிட்டார் : சடலத்தை பார்த்து அழுத மனைவி : பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

கொரோனாவால்…

இந்தியாவில் க ணவரை கொ லை செய்துவிட்டு அவர் கொரோனாவால் உ யிரிழந்தார் என நாடகமாடிய ம னைவி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி அசோக் விஹார் பகுதியில் சிறுகடை நடத்தி வருபவர் சரத் தாஸ்.

அவரின் மனைவி அனிதா. இவர் சில தினங்களுக்கு முன்னர் காலை தனது கணவர் எந்த வித உடல் அசைவும் இன்றி கிடந்ததாகவும், அவர் கொரோனாவால் உ யிரிழந்துவிட்டதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு க ணவரின் ச டலத்தை பார்த்து அ ழுதிருக்கிறார். ஆனால் அனிதாவின் நடவடிக்கையில் ச ந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், பொலிசாரிடம் ஒ ருவர் ம ர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல் அளித்தனர்.

சரத் தாஸின் இல்லத்திற்கு வந்த பொலிசார் அனிதாவிடம் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்கள் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அனிதா சரியாக பதிலளிக்காததால், தாஸின் இறுதிச்சடங்கு நிறுத்தப்பட்டு, சடலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஆய்வின் முடிவில் அவர் கொரோனாவால் உ யிரிழக்கவில்லை என்றும் மூச்சுத்தி ணறல் ஏற்பட்டு இ றந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனால் அனிதாவிடம் தீவிர வி சாரணை நடத்திய பொலிசாருக்கு அ திர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

அனிதாவுக்கும் சஞ்சய் என்ற வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த தாஸுக்கும் மனைவி அனிதாவுக்கும் இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது காதலரான சஞ்சய்யை அழைத்து க ணவரை த லையணை வை த்து கொ ன்றதாகவும், பின்னர் அதனை கொரோனா என நாடகமாடியதையும் அனிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா மற்றும் சஞ்சயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகளவில் உ யிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்தி மனைவியே கணவனை கொ ன்றிருப்பது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகவுள்ள விசேட சுற்றுநிருபம்!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது..

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் நாளை வெளியிடப்படவுள்ளது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்படவுள்ளது.

குறித்த வழிகாட்டல்களின் ஊடாக, தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது, முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து திட்டமொன்றை வகுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டங்களை வகுத்துக்கொள்ளும் முறை தொடர்பில், கல்வி அமைச்சினால் வௌியிடப்படவுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிருமி ஒழிப்பு நடவடிக்கை, மாணவர்களுக்கான குடிநீர் வசதி, வகுப்பறைகளில் மாணவர்கள் அமரவேண்டிய முறை, வகுப்பறைகளில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய விடயங்கள் சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

-தமிழ்வின் –

வடக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட 10 கட்டாய அறிவுறுத்தல்கள்!!

10 கட்டாய அறிவுறுத்தல்கள்

நாளை திங்கட்கிழமை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆயினும் நாட்டில் கொரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

மக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1) வேலைக்குச் செல்வோர் அத்தியாவசிய விடயங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

2) அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்பவர்கள் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில் பல கருமங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும்.

3) வெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பொதுப்போக்குவரத்தின் போதும் இரண்டு பேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர் தூர இடைவெளியைப் பேணவும்.

4) வெளியில் செல்லும்போது இயன்றளவு பிரத்தியேகப் போக்குவரத்து முறைகளைப் பாவிக்கவும். (உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கர வண்டியில் செல்லல்).

5) அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் என்பவற்றுக்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளை சவர்க்காரமிட்டு முறைப்படிக் கழுவிக் கொள்ளவும்.

6) வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.

7) காய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

8) ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.

9) இயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவைப் பெறவேண்டி இருப்பின் உணவை எடுத்துச் சென்று உட்கொள்ளவும். மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.

10) உங்கள் பிரதேசத்துக்கு யாராவது புதியவர்கள் வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராம அலுவலருக்கு அறியத்தரவும்.

அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அழைப்பெண் 021-222-6666 இற்குத் தகவல் வழங்கவும்” – என்றுள்ளது.

திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகவில்லை : புதுப்பெண் கண்முன்னே கணவனுக்கு நடந்த ப யங்கரம்!!

புதுப்பெண் கண்முன்னே..

தமிழகத்தில் திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகாத புதுமாப்பிள்ளை மனைவியின் கண்முன்னே கு த்தி கொ ல்லப்பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர் அபிமன்யு கூறுகையில், நேற்று மாலை பொட்டிபுரம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 10 பேர் தொப்பளான் காட்டு வனப்பகுதியில் ம து அ ருந்திவிட்டு அங்குள்ள பட்டியலின மக்களை அ டித்து அ வர்களிடம் த கராறு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பிடித்தோம். இருவரை மட்டும் பி டித்து ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயிலில் உட்கார வச்சிட்டு பொலிசுக்கு தகவல் கொடுத்தோம்.

த ப்பித்துப் போனவர்கள் அவர்களின் ஊர்க்காரர்களிடம் சொல்லி உருட்டுக்கட்டை, க த்தியோடு பா.ம.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அப்போது சில வீடுகளின் மீது க ற்களை வீ சினார்கள், அங்கிருந்த விஷ்ணுபிரியன் என்பவரின் வீட்டிலும் கற்கள் விழுந்துள்ளது.

சத்தம் கேட்டு விஷ்ணுபிரியனின் அம்மாவும், அவரின் தம்பி நவீனும் வெளியே வந்திருக்கிறார்கள். நவீனைப் பிடித்து த லை, கை, கா ல்களில் க த்தியால் கு த்தி இ ருக்கிறார்கள். அம்மாவின் சத்தத்தைக் கேட்டு விஷ்ணுபிரியன் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டே வெளியே வந்திருக்கிறார்.

தம்பியை அ டிப்பதைப் பார்த்துப் ப தறிப்போன விஷ்ணுபிரியன், தடுத்து வீட்டின் கேட்டை பூட்டுப் போட முயன்றுள்ளார். அப்போது அ வரை வெளியே இ ழுத்து மனைவி, பெற்றோர் கண்முன்னே கு த்திக் கொ லை செ ய்தார்கள் என கூறினார்கள்.

விஷ்ணுபிரியனின் பெரியப்பா சேட்டு கூறுகையில், விஷ்ணுபிரியன் சென்னையில் வேலை பார்க்கிறார். திருமணமாகி 60 நாள்கள் கூட ஆகவில்லை. கொரோனா ஊரடங்கிற்காக இங்கு வந்திருந்தான். அவனை கொ ன்றவர்களை தூ க்கிலிட வே ண்டும் என கூறியுள்ளார்.

தாயின் வீட்டிற்கு கணவனுடன் ஆசையாக சென்ற மகள் : திருமணமான 2 மாதங்களுக்குள் நடந்த வி பரீதம்!!

தாயின் வீட்டிற்கு கணவனுடன்..

இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இ ளம் ஜோ டி ச டலமாக மீ ட்கப்பட்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் Hassan மாவட்டத்தை சேர்ந்த தம்பதி Krithika மற்றும் Arthesh. இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், Krithika-வின் தாயின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கும் செல்லவில்லை, மாப்பிள்ளை வீட்டிற்கும் வரவில்லை.

போனை தொடர்பு கொண்டும், ஸ்விட்ச் ஆப்பில் இருந்ததால், இது குறித்து கா வல் நி லையத்தில் இருவரும் கா ணமல் போ ய்விட்டதாக பு கார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவர்களின் உ டல்கள் மீ னவர்களால் ஹேமாவதி ஆ ற்றில் க ண்டுபிடிக் கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த சாலைப் பகுதியில் Arthesh-ன் இரு சக்கர வாகனம் இருந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், பெ ண்ணின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, இங்கிருக்கும் டேம்மில் செல்பி எடுக்க முயற்சித்திருக்கலாம், அப்போது நி லைதடுமா றி கீ ழே ஆ ற்றில் வி ழுந்து இ றந்திருக்கலாம் என்று ச ந்தேகிக் கின்றனர்.

ஏனெனில் இருவீ ட்டார் தொ டர்பாக எந்த ஒரு பி ரச்சனையும், இல்லை கா வல் நி லையத்திலும் எந்த ஒரு பு காரும் இல்லை, இதனால் இது த ற்கொ லைக்கும் வாய்ப்பும் இல்லை, என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொது போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

இலங்கையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்களை மேற்கொள்ளப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைய இந்த நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெற்றும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை முதல் தளர்த்தப்படும் என்று அறிவிகப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமற்ற முறையில் பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அனுமதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளி கடைபிடித்தல், வீதிகளில் எச்சில் துப்புவதனை தவிர்த்தல்,

தும்மும் போது அல்லது இருமலின் போது முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பேருந்து மற்றும் ரயில்களில் உள்ள கைப்பிடிகள் பிடிப்பதனை முடிந்தளவு தவிர்த்தல், அப்படி பிடித்தால் உடனடியாக கைகளை கழுவுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில்களில் சட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ரயில்களில் எச்சில் துப்புதல் அல்லது ரயில் வீதிகளில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

-தமிழ்வின்-

தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!!

தனிமைப்படுத்தலை மீறினால்..

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும் என பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் உட்பட ஊரடங்கு தளர்வின்போது நடந்து கொள்ளவேண்டிய விதம் பற்றி விபரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளை திங்கட் கிழமை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்படவுள்ளன. அதற்கான வழிகாட்டல்களும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

எவ்வித பாதிப்பும் இன்றி நாட்டை கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கிலேயே புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கிணற்றில் தவறி வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பலி!!

கிணற்றில் தவறி வீழ்ந்து..

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கிணறொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தமானது நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உ யிரிழந்தவர்கள் 3 மற்றும் 6 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.

இரண்டு சிறுவர்களின் சடலங்களும் நேற்று மாலை மீட்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அப் பகுதியை சுற்றிவைளத்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் வழங்கிய நிவாரண நிதியை நன்கொடையாக வழங்கிய தாய்!!

நிவாரண நிதியை..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பெருமளவு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் அம்பலந்தோட்டையில் அரசாங்கம் தனக்கு வழங்கிய 5 ஆயிரம் ரூபாவை வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்திற்கு தாய் ஒருவர் வழங்கியுள்ளார்.

தன்னை தனது பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வதனால் அந்த பணத்தை வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்திற்கு அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை, பல்வேறு மரக்கறிகளை பயிரிட்ட விவசாயிகளினால் அதனை விற்பனை செய்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு சட்டம் காரணமாக வர்த்தம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில் நிலையத்தில் புதிய இயந்திரம்!!

ரயில் நிலையத்தில்..

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளினதும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வதற்காக பொருத்தமான வெப்ப உணர்திறன் கேமரா கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவின் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பணிக்கு செல்லும் நபர்களின் உடல் வெப்ப நிலையை சோதனை செய்யும் கருவி ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

அங்கு வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள் இந்த கருவி மூலம் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் சுகாதார பிரிவிற்கு அனுப்பப்படவுள்ளனர்.

யாழ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 160 பேர் வீடுகளிற்கு அனுப்பி வைப்பு!!

யாழ் தனிமைப்படுத்தல் நிலையத்தில்..

யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்ற 160 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த நிலையில் அவர்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி கொவிட் -19 தொற்று தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டு சுய தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட 160 பேரில் 78 முதியவர்களும், 82 சிறுவர்களும், சிகிச்சை பெற்று இயக்கச்சி 55வது, படைப்பிரிவில் இருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய தலைமையில் இராணுவத்தினரால் அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்போது, பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.