நீண்ட தூர சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை : 1500 அரச பேருந்து தயார்!!

1500 அரச பேருந்து தயார்..

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கம் அனுமதியை வழங்கிய பின்னர் நீண்டதூர பேருந்து சேவைகள் மே 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்.

இதற்காக சேவையில் 1500 பேருந்துகள் மேலதிகமாக இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேலைத்தளங்களுக்கு பயணிக்கும் பணியாளர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக நிறுவனங்கள் கோரிக்கைகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த கட்டணங்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்காக போக்குவரத்து சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது!!

மதுபான விற்பனை நிலையங்கள்..

எதிர்வரும் திங்கட்கிழமை மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என கலால் துறை அறிவித்துள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாது, மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொது மக்கள் கூடியிருந்த சம்பவங்கள் பதிவாகின. இதனையடுத்து மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

எனினும், எதிர்வரும் 11ம் திகதியிலிருந்து மேல் மாகாணாம், புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்படும் என்ற வதந்திகள் சமூக ஊடகங்கள் பரப்பப்படுகின்றன.

இந்நிலையிலேயே, மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

நாளைய தினம் பணிகளுக்கு செல்லுவோருக்கு முக்கிய தகவல்!!

முக்கிய தகவல்..

இலங்கையில் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் தனியார் பேருந்துகளை நாளையதினம் பணிகளில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவும் நிலைமையின் கீழ் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்திற்கான சட்டத்திட்டங்கள் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படவுள்ளது. பின்னர் அது சட்டமாக அறிவிக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து ஆசனங்களில் சரியான தூரத்தின் மூலம் பயணிகளை ஏற்ற வேண்டும். அவ்வாறு பயணிக்கும் போது செலவுகளை சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் எரிபொருளுக்கு நியாயமாக விலை கோரிய போதிலும் அது கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாளையதினம் பணிக்கும் செல்லுவோருக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

12 கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்!!

கொரோனா நோயாளர்கள்..

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் 12 பேரில் 10 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 10 பேரும் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களும் தற்போது முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 847ஆகும். அவர்களில் 578 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்த 260 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?

உலக அன்னையர் தினம்..

நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே சொல்கின்றோம். தாய் என்ற இந்த சொல்லை தாங்கி இரத்தமும், சதையுமாக நமக்கு கூலியின்றி வேலை செய்யும் அன்னைக்கு இவ்வுலகத்தில் எதுவும் ஈடாகாது.

ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த ஈடு இணையற்ற நம் தாய்க்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று. இன்றைய நாளை உங்கள் தாய்க்காக ஒதுக்குவீர்களா? இல்லை வேண்டாம். இந்த பரபரப்பான உலகில் ஒரு நிமிடத்தை மாத்திரமாவது உங்கள் உயிரன்னைக்காக ஒதுக்க முடியுமா?

தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு காட்டுவதே நமது அம்மா. தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்று சான்றுகள் பல உள்ளன. அந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.

அவர்கள் க்ரோனஸின் மனைவி, ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.

இவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904இல் உயிர்நீத்தார். இந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.

அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் தாய்மாரை கௌரவிப்பதற்கான தினத்தை அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. இருந்தும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.

எமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும், பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனினும் அன்னையின் மகத்துவத்தை அறியாத பலரும் நம் மத்தியில் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான சாட்சி தான் நம் நாட்டிலுள்ள முதியோர் இல்லங்கள்.

கருவிலிருந்தே தன் குழந்தைக்காக உணவு, உறையுள், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்து, தன் சேய் பூவுலகில் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கும் அன்னையை பலரும் ஒரு பொருளாகவே பார்க்கின்றார்கள்.

ஆம் நம் தேவை முடிந்ததும் தூக்கி போடும் பொருளாக.. இந்த நிலை நாளை நமக்கும் வரலாம் என்பதையும் மறந்து..

இந்த நிலையானது இன்றுடன் முடிவிற்கு வர வேண்டும் என்பதே எனது அவா. நம் முதல் காதலும், எம் மீது முடிவில்லா காதலை கொண்டவளும் அன்னையே. எமது இணையத்தளம் சார்பாக உலக வாழ் தாய்மார் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்!!

வாகன சாரதிகளுக்கான..

வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை மேலும் நீடிக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாளை 11ஆம் திகதி முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையான காலம் வரை தண்டப் பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் மேலதிக கட்டணங்கள் எதுவும் இன்றி, வாகன தண்டப்பணத்தை அறவிடுவதற்கு கால எல்லையொன்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் கடந்த 2ஆம் திகதி வரை கால எல்லை வழங்கப்பட்டது. மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 29ஆம் திகதி முதல் கடந்த 4ஆம் திகதி வரை மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமையினால் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளில் செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.

இதனால் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் உரிய தரப்பினருக்கு கிடைக்கவில்லை என தபால் திணைக்களம் கூறுகின்றது.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே, மேலதிக காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடியலின் பாதையினூடாக வீட்டுக்கொரு தோட்டம் : விசேட வேலைத்திட்டம்!!

விடியலின் பாதை..

மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்வை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டு விடியலின் பாதை அமைப்பினால் வீட்டுக்கொரு தோட்டம் எனும் விசேட வேலைத்திட்டமானது நேற்றைய தினம் சொறிக்கல்முனையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

அமைப்பின் உறுப்பினர்களால் இவ் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் நன்மை தீமைகள் செயல்முறைகள் தொடர்பாக தெளிவூட்டலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடியலின் பாதை அமைப்பின் மற்றுமொரு நிவாரண பணியானது கடந்த 06.05.2020 அன்று சொறிக்கல்முனையில் சிறப்பாக இடம்பெற்றது.

சொறிக்கல்முனை வாழ் சுமார் 40 குடும்பங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டது. இச் செயற்பாட்டிற்கு வெளிநாட்டு உறவுகள் மற்றும் பல நலன்விரும்பிகள் நிதியுதவி அளித்திருந்தனர்.


இச் செயற்பாட்டில் விடியலின் பாதை உறுப்பினர்கள் மற்றும் சொறிக்கல்முனை பிரதேச இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 50000 பேர் கைது!!

50000 பேர் கைது..

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஐம்பதாயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி முதல் அரசாங்கம் நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.

இந்த ஊரடங்குச் சட்ட காலத்தில் சட்டத்தை மீறி செயற்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பேரை காவல்துறையினர் இதுவரையில் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையில் மட்டும் சுமார் 255 பேர் ஊரடங்குச் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 12975 வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரின் சடலத்துடன் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய தமிழகப் பெண் : தனியாக முதல் பயணமென கண்ணீர்!!

சிறப்பு விமானத்தில்..

ஐக்கிய அரபு நாடுகளில் வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் எனப் பல இந்தியர்களுடன் உ யிரிழந்த கணவரின் உ டலுடன் சென்னை திரும்பியுள்ளார் பெண் ஒருவர்.

துபாய் மாகாணத்தில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம், 182 தமிழா்கள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை திரும்பினா். இவர்களில் ஒருவராக, நொ றுங்கிய இ தயத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் 29 வயதான கொல்லம்மாள்.

இவருடைய கணவர் குமாரின் (35) உடலும் இதே விமானத்தில் சரக்குப் பகுதியில் வைத்து சென்னை எடுத்துவரப்பட்டது. ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல் கைம்மா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் குமார்.

இவர் பணியின்போது ஏப்ரல் 13 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக ம ரணம் அடைந்தார். “வழக்கம் போல காலை உணவை சாப்பிட்டுவிட்டு பணிக்குச் சென்றார், காலை 10 மணியிருக்கும், அவர் பணியாற்றும் வளாகத்தில் இருந்து காவலாளி ஓடி வந்து,

கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், அங்கு அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால், மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை. பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள்” என்று க ண்ணீரோடு கூறுகிறார் கொல்லம்மாள்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எங்களுக்கு திருமணம் ஆனது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நானும் அவருடன் துபாய் சென்றேன்.

எனக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர், அவரது உ டலை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றுக்காக மட்டுமே இன்னும் நான் உ யிரோடு இருக்கிறேன். இதுவரை எங்குமே நான் தனியாகச் சென்றது இல்லை. இன்று வாழ்க்கையிலேயே என்னைத் தனியாகவிட்டு விட்டுச் சென்றுவிட்டார்.

இதுதான் நான் தனியாகப் பயணிக்கும் முதல் பயணம். யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது” என்று கண்ணீரைத் துடைத்தபடி கூறுகிறார் கொல்லம்மாள்.

இவருடன் 200 தொழிலாளர்கள், 37 கர்ப்பிணிகள், சில குழந்தைகள், 42 மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் என இரண்டு ஏர் இந்தியா விரைவு விமானம் மூலம் சுமார் 360 பயணிகள் துபையில் இருந்து சென்னை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலைகளை ஆரம்பிப்பது..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.’

மாத்தறையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர், சிறுமியருக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாது எனவும், அனைத்து பாடசாலைகளையும் கிருமித் தொற்று நீக்குவதற்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருமித் தொற்று நீக்கியதன் பின்னர் நான்கு நாட்கள் பாடசாலைகளை மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவில் பின்புறம் சடலமாக கிடந்த அர்ச்சகர் : வழக்கத்துக்கு மாறாக அவர் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

அர்ச்சகர்..

தமிழகத்தில் ஐம்பொன் சிலைகள் கொ ள்ளையடிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் வழக்கத்துக்காக மாறாக அவர் செய்த செயலால் கொ ல்லப்பட்டாரா என்ற கோ ணத்திலும் பொலிசார் வி சாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை கீழ் பழனி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த பிப்ரவரி மாதம் ம ர்ம ந பர்களால் கொ ள்ளையடிக்கப்பட்டது.

மிகவும் ப ரபரப்பை ஏற்படுத்திய இந்த கொ ள்ளை சம்பவம் குறித்து சீர்காழி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோவிலின் அர்ச்சகராக நடராஜன் (50) என்பவர் பணியாற்றி வந்தார்.

கோவில் வாசலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் நடராஜன் பூஜை செய்து வந்தார்.

கொண்டல் குமார சுப்பிரமணியசுவாமி கோவில் சிலைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதில் இருந்து குன்னம் சிவன் கோவிலுக்கு நடராஜன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்து சென்று வந்ததாகவும், மற்ற நேரங்களில் அவரது மகன்கள் குன்னம் கோவில் பூஜையை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கத்துக்கு மாறாக நடராஜன், மொபட்டில் தனியாக குன்னம் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

அப்போது கீழமாத்தூர் என்ற ஊரில் வீரன் கோவில் பின்புறம் நடராஜன் ம ர்மமான முறையில் இ றந்து கிடப்பது தெரிய வந்தது.

இதன் முதற்கட்ட வி சாரணையில் சிலைகள் தி ருட்டு போனதால் பூஜைகள் செய்ய முடியவில்லை எனவும், தி ருட்டுத் தொடர்பாக அடிக்கடி பொலிசார் வி சாரணையால் அவர் ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அதனால் வி ஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

அதே நேரத்தில் நடராஜன் வழக்கத்துக்கு மாறாக நேற்று தனியாக கோவிலுக்கு சென்றதற்கான காரணம் என்ன? குமார சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து சிலைகளை க டத்தி சென்ற க டத்தல்காரர்கள் அ வரை கொ லை செ ய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில மாதங்களில் சடலமாக கிடந்த இளம் ஜோடி : தெரியவந்த காரணம்!!

இளம் ஜோடி..

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஊரடங்கு காரணமாக திருமண நாட்கள் தொடர்ந்து தள்ளிப்போனதால், வே தனையில் இளம் ஜோ டி த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதி உள்ளது. திருமணத்திற்கு குறைந்த நபர்கள் மட்டுமே, அதுவும் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் Adilabad மாவட்டத்தின் Kannapur கிராமத்தை சேர்ந்த Pendur Ganesh (22) மற்றும் Soyam Seethabai (20) தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் திருமணத்திற்கான திகதி குறிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால், இரு வீட்டாரும் திருமணத்தை ஒத்தி வைக்க முடிவு செய்தனர். ஆனால் இருவரும் காதலித்து பெற்றோரை கட்டாயப்படுத்தி, இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனதால், அவர்களின் திருமணம் நடப்பதில் ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த வே தனையில் இருந்த ஜோடி, அங்கிருக்கும் வயல் வெளியில் இ றந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ச ந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரண வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 22-ஆம் திகதி முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு அமுலில் உள்ளதால், ஆயிரக்கணக்கான திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சகோதரியின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய நுரையீரலை கொடுத்த சகோதரன்!!

கேரளாவில்..

கேரளாவில் சகோதரர் ஒருவர் தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை கொடுத்து சகோதரியை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இருவரும் கடுமையான நிதி நெருக்கடியை கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் திகதி கேரளாவை சேர்ந்த Leena என்பவர் Chennankary-யில் இருக்கும் Kottayam Medical College மருத்துவமனையில் தொடர் வாந்தி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் கல்லீரல் வேலை செய்யவில்லை, அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே சாத்தியம் என்று கூறி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் உடனடியாக Leena-வின் சகோதரர் Rajesh தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை சகோதரிக்காக கொடுக்க முன்வந்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் அதே மாதம் 30-ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை காரணமாக Rajesh குறைந்தது ஆறு மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். லீனா தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.

ஆனால், இந்த சிகிச்சைக்காக மொத்தம் 25 லட்சம் ரூபாய் ஆகியுள்ளது. இதற்காக இரண்டு குடும்பத்தினரும் கடன் வாங்கியுள்ளனர். ஒரு சிலர் இவர்களின் சிகிச்சைக்காக பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

இருப்பினும் தற்போது கடனை அடைக்க வேண்டும் என்பதால், கடும் நெருக்கடியில் உள்ளனர். Leena-வின் கணவர் பாலகிருஷ்ணன் பொலிஸ் அதிகாரியாக உள்ளார்.

இவர் மே இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதால், அந்த ஓய்வுதியமாக கொடுக்கப்படும் பணத்தை வைத்து, இந்த கடனை அடைத்துவிடலாம் என்று நம்பியுள்ளனர்.

ஆனால், அந்த பணம் முழுவதையும் கடன் வாங்கியவர்களுக்கு கொடுத்துவிட்டால், வரும் காலத்தில் சிகிச்சை மற்றும் குழந்தைகளின் படிப்பிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

நடுவானில் கோளாறான விமானம் : தரையில் விழுந்து வெ டித்து சி தறுவதற்கு முன் திறமையாக தப்பிய விமானி!!

நடுவானில்..

இந்திய விமானப்படையின் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையில் விழுந்து வெ டித்து சி தறிய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் விமான தளத்திற்கு அருகே இப்விபத்து இடம்பெற்றுள்ளது. வழக்கம் போல காலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் மிக்-29, காலை 10:30 மணியளவில் அருகிலுள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் அது கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது. எனினும், விமானத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் விமானி அதிலிருந்து வெளியேறி பாரசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியுள்ளார்.

விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது. பின்னர் விமானி ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள் முதல் திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள் : பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தகவல்!!

பல்கலைக்கழகங்கள்..

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் அலுவலங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரம் அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பல்கலைக்கழங்களின் அலுவலகங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 11 ஆம் திகதி அரச பாடசாலைகளை திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகளை திறப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு கூறியுள்ளது.

யாழில் வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி க சிப்பு கா ய்ச்சியவர் கைது!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் சு ரங்கம் வெ ட்டி க சிப்பு காய்ச்சி ம றைத்து வை த்திருந்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் கோப்பாய் பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். ஊரெழு பகுதியில் க சிப்பு கா ய்ச்சப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இர கசிய த கவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட வி சாரணையில் மிகவும் நூ தனமான முறையில் சு ரங்கம் வெ ட்டப்பட்டு அ தற்குள் க சிப்பு ம றைத்து வை க்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ச ம்பவத்தில் சு ரங்கத்திலிருந்து 12 போ த்தல் க சிப்பு பொ லிஸாரால் மீ ட்கப்பட்டுள்ளதுடன் ச ந்தேகத்தில் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். குறித்த வீ ட்டில் க சிப்பு கா ய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீ ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கோப்பாய் ராச வீதிப் பகுதியிலுள்ள வீ டொன்றில் இருந்து 6 போ த்தல் க சிப்பும், 29 போ த்தல் கோ டாவும் மீ ட்கப்பட்டுள்ளன. இந்த ச ம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றச்சா ட்டில் 54 வயதுடைய பெ ண் ஒ ருவரும் கை து செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக க சிப்பு தொடர்பான கை துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.