வவுனியா – மகாறம்பைக்குளத்தை சேர்ந்த பெண்கள் இருவர் பல வியாபார நிலையங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களை பாடசாலை ஒன்றின் மலசலகூடத்திலும, ஸ்ரீராமபுரம் தாய் சேய் கட்டிடத்தினுள்ளும் பதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று மாலை அப்பொருட்கள் அனைத்தும் மகாறம்பைக்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வியாபார முகாமையாளரால் வவுனியா பொலிஸாரிடம் கொடுக்கபட்ட சி.சி.ரி ஆதாரத்துடன் அப்பெண்கள் இருவரும கைது செய்யப்பட்டு பிணையில் உடனடியாகவே விடப்பட்டுள்ளார்கள். மேலதிக விசாரணைகள் மகாறம்பைக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளபடுகின்றது.
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 10ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பகுதியை சுற்றி யானை மின்வேலி பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்கு சென்ற சிறுவன் மின் வேலியில் மோதியதினாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவன் திருகோணமலை, வில்கம் விகாரை பாடசாலையில் 3ஆம் தரத்தில் கல்வி பயிலும் 10ஆம் கட்டை பகுதியை சேர்ந்த கவிஷ்க தெனித் சஞ்ஜீவ எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் யானை மின்வேலியில் மோதியதையடுத்து 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும்,
கண்டி மாவட்டத்தில் 13 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனா நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை சிப்பாய்கள் 393 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஆபத்துகள் அதிகம் உள்ள பிரதேச மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் கொரோனா தொற்றவில்லை என்பது மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம் என மத்திய கொழும்பு சுகாதார அதிகாரி தம்மிக்க அதிகாரிவத்தகே தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் தி ருட்டில் ஈடுபட்ட கு ற்றச்சாட்டில் பென்கள் உட்பட ஐந்து பேரை கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இனைந்து நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கா யப்படுத்தி வீட்டில் இருந்த பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் தி ருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இத்தி ருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றச்சாட்டின் பேரில் கோப்பாய் பொரிஸாருடன் மாவட்ட கு ற்றத்தடுப்பு பிரிவினர் இனைந்து இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தி ருட்டில் ஈடுபடுவதற்கு அபயன்படுத்திய வாள், கோடரி திருடிய நகைகளை அடகு வைத்ததற்கான அடகு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள், 2 சைக்கிள்கள், 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெ ரோயின் போ தைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய இளவாலை, மல்லாகம், உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் ஆகியோரின் தலமையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட 11 கொரோனா நோயாளர்களும் வெலிசர கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடற்படை சிப்பாய்கள் 404 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது. நோய் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களுக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்கள் மற்றும் அவர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களின் மொத்த என்னிண்ணை 437ஆகும்.
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 835 பேர் பதிவாகிய நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில் வைத்தியசாலைகளில் 586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறுதி செய்யப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய நோயாளிகளின் எண்ணிக்கை 135 என தொற்று நோய் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் 240 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களுக்கு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலகட்டங்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் செல்ல வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களாக கருதப்படுவார்கள். இதேவேளை நாளை மறுதினம் அதிகாலை 5 மணிக்கு நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இதனூடாக வாரத்தில் 5 நாட்களுக்கு மக்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையின் பிரகாரம் வெளியேற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை முழுமையாக நாடு திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளுக்கு செல்லவுள்ளதால் அடுத்த வாரம் முதல் சுற்றுச்சூழல்களில் வீசப்படும் முகக் கவசம், கையுறைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமகாலத்தில் நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து முகமூடிகளைப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும், தற்போது பயன்பாட்டில் உள்ள முகக்கவசங்களின் எண்ணிக்கை குறித்த சரியான தரவு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தில் அல்லது சுகாதார அமைச்சில் இல்லை என கூறப்படுகின்றது.
அத்தகைய கழிவுகளை நிர்வகிக்கவோ அல்லது மறுசுழற்சி செய்யவோ இயலாமை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகியுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சமீபத்திய ஆய்வில், பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களில் 56 சதவீதம் எரியக் கூடியவைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள், பொறியாளர்கள் போன்ற படித்த குழுக்களின் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 9% முகக் கவசங்கள் முறையாக அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 36% சுற்றுச்சூழலுக்கு முறையற்ற விதத்தில் விடுவிக்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார். இதனால் பாரிய சுகாதார பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 626 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்னிக்கை குறைந்து வருவதாக கூறும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான நிர்வாகம், எதிர்வரும் திங்களன்று முதல் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 332 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து ஸ்கொட்லாந்து (49), வேல்ஸ் (28), வடக்கு அயர்லாந்து (5) என பதிவாகியுள்ளது. இதில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் குழந்தை தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிட என்.எச்.எஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனிடையே பிரித்தானியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து பலி எண்னிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில், இந்த வாரம் பிரித்தானியா இத்தாலியை மிஞ்சியதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, பிரித்தானியா தற்போது ஐரோப்பாவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை முறை வழமைக்கு திருப்பும் நடவடிக்கைக்கு அமைய இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் 11ஆம் திகதியில் இருந்து மக்கள் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு திருப்பும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் விசேட சட்ட திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.
கடமைக்கு செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்கனவே தயாராக உள்ளதென இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 11ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அத்தியாவசிய சேவைக்காக மாவட்ட எல்லையை கடந் து கொழும்பு செல்வது தொடர்பில் விசேட முறை ஒன்று தற்போது வரையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் இரவு வேளையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 11 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 400 அக உயர்ந்துள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் மேற்கொண்ட 300 பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இந்த 11 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நேற்றைய நிலவரப்படி இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை 835 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையில் செல்ல விடாமல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்தற்கு அரசாங்கம் தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் சுகாதார அதிகாரிகளினால் சுகாதார விதிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
குறித்த சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் வைரஸிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகள் முன்னோக்கி செல்ல முடியாதென்பதனால் சிறிது சிறிதாக நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நாட்டின் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். இங்கு முழுமையான நாட்டு மக்களும் தங்களின் பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசேட அ திரடிப் ப டையினர் மற்றும் வவுனியா நகரசபை என்பவற்றுக்கு தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி வழங்கி வைக்கப்பட்டதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி இயல்பு நிலையை ஏற்படுத்தும் பொருட்டு நகரை சுத்திகரிக்கும் நடவடிக்கையும் இன்று (08.05) காலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற நகர சுத்திகரிப்பு ஆரம்ப நிகழ்வில் தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி ஒன்று வவுனியா நகரசபைக்கு அரச அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் விசேட அ திரடிப் ப டையினருக்கு தொற்று நீக்கி கருவி ஒன்றையும் வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விசேட அ திரடிப் ப டையினர், வவுனியா நகரசபையினர், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாவட்ட அரச அதிபரின் மேற்பார்வையில் புதிய பேரூந்து நிலையம், வங்கிகள், பழைய பேரூந்து நிலையம்,
நகர கடைத்தொகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் நீர் விசிறப்பட்டும், தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டும் சுத்தம் செய்யப்பட்டது. எதிர்வரும் திங்கள் கிழமை முதல் வவுனியா மாவட்டம் வழமைக்கு திரும்பவுள்ள நிலையிலேயே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் இன்றுகுணமடைந்துள்ளனர். அதற்கமைய கொரோனாவிலிருந்து குணமமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 இலிருந்து 240 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 27 பேரில் 26 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, அண்மையில் டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 824 பேரில் தற்போது 575 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேலும் 135 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ப யங்கரவா திகளுடனான ந டந்த ச ண்டை யில் மேஜர் அனுஜ் சூட் உ யிரிழந்த நி லையில், ச வப்பெ ட்டியில் இருந்த அ வரின் மு கத்தை ம னைவி அக்கிரிட்டி சூட் ஒரு வித ஏ க்கத்துடன் பா ர்க்கும் புகைப்படம் சமூ கவலைத்தளங்களில் வை ரலாகி வ ருகிறது.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டம், சாங்கிமுல்லா கி ராமத்தில், ஒரு வீ ட்டில், ப துங்கி யிருந்த ப யங்கரவா திகள், பொ துமக்கள் சி லரை பி ணைக் கை திகளாக பி டித்து வை த்திருந் தனர்.
இ தனால், அப் ப குதியை பா துகாப்பு ப டையினர் சு ற்றி வ ளைத்தனர். மே ஜர் அனுஜ் சூட் த லைமையிலான இரா ணுவத்தினரும் வி ரைந்தனர். ப யங்கரவா திகள் ப துங்கியிருந்த வீ ட்டுக்குள் இரா ணுவத்தினரும், பொ லிசாரும் நு ழைந்ததால், அ வர்களை நோ க்கி ப யங்கரவாதிகள், து ப்பாக் கியால் ச ரமாரி யாக சு ட்ட னர்.
உ டனடியாக இரா ணுவத்தினரும், பொ லிசாரும் ந டத்திய து ப்பாக் கிச் சூ ட்டில், 2 ப யங்கரவா திகள் சு ட்டுக் கொ ல்லப்பட் டனர். பி ணைக் கை திகளாக ப யங்கரவாதிகள் பி டித்து வை த்திருந்த அனைவரும், உ யிருடன், பா துகாப்பாக மீ ட்கப்ப ட்டனர்.
இச் ச ம்பவத்தில் மே ஜர் அனுஜ் சூட் உ ட்பட நான் கு இரா ணுவ வீ ரர்களும், பொ லிஸ் சப் – இன்ஸ்பெக்டர் ஒ ருவரும் வீ ர ம ரணம் அ டைந்தனர். இந்நி லையில் மே ஜர் அனுஜ் சூட்டின் உ டல் கொ ண்டு சொ ந்த ஊ ருக்கு வ ரப்பட்டு, மு ழு இரா ணுவ ம ரியாதையுடன் அ டக்கம் செ ய்வதற்காக சவ ப்பெ ட்டியில் வை க்கப்பட்டி ருந்தது.
அ ப்போது அ வரின் ம னைவி அக்கிரிட்டி சூட், ச வப்பெட்டியில் கைக ளை வை த்த படி, ஒரு வித ஏக் கத்துடன் இ றந்த த ன் க ணவரின் மு கத்தை பா ர்க்கிறார்.
இ ந்த பு கைப்படம் ச மூக வ லைத்தளங்களில் வை ரலாக, இ ணையவாசிகள் ப லரும், இ தை கூ றுவதற்கு வா ர்த்தையே இ ல்லை எ ன்று கு றிப்பிட்டு வ ருகின்றனர்.
தமிழகத்தில் கணவரை அடக்கம் செய்ய வந்த இடத்தில், பெண் ஒருவர் குழந்தைகளுடன், ஒரு மாதமாக போதிய உணவின்றி தவித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வாகறையாம்பாளையம் பள்ளக்கோரையில் வசித்து வந்த தம்பதி அஞ்சலிதேவி-முனீஸ்வரன்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல்1-ஆம் திகதி முனீஸ்வரன் திடீரென்று நெஞ்சுவலியால் உ யிரிழந்தார். இதன் காரணமாக அவரின் விருப்பப்படி, அவரது உடலை சொந்த ஊரடான மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள, கடுப்பட்டி கிராமத்தில் மனைவி அஞ்சலி அடக்கம் செய்துள்ளார்.
கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அஞ்சலி, ஊர் திரும்ப முடியாமல்(ஊரடங்கு காரணமாக), கைக்குழந்தைகளுடன் கணவரின் சகோதரில் வீட்டில் வசித்து வந்தார்.
அந்த பெண்ணின் வீட்டிலும் வறுமை தலைவிரித்தாடியதால், ஒரு மாதமாக போதுமான உணவின்றி, குழந்தைகளுடன் அஞ்சலி தவித்து வந்ததால், கோயமுத்தூர் செல்ல முடிவு செய்தார்.
ஆனால், அதற்கும் போதிய பணம் இல்லாமல் தவித்த அவருக்கு, ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியால், மாவட்ட ஆட்சியர் வினய்யை நேரில் சந்தித்து உதவி கோரினார்.
அவரின் நிலையை அறிந்த ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து தேவையான அரிசி, மளிகைப்பொருட்களை அளித்து சொந்த ஊருக்கு அஞ்சலிதேவியும், குழந்தைகளும் காரில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் சமூகவலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பேரப்பிள்ளைக்கு தாத்தாவாகி விட்டார் என்பது அனைவருக்கு தெரிந்த விடயம்.
கடும் பணிகளுக்கு மத்தியிலும் அவர் தனது பேரனுக்காக நேரத்தை ஒதுக்க தவறுவதில்லை என பிரதமரின் குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் துரதிஷ்டவசமாக முழு உலகத்தையும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பௌத்தர்களுக்கு விகாரைகளுக்கும் வெளியிடங்களுக்கும் சென்று வெசாக் பண்டிக்கையை கொண்டாட இம்முறை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிரதமரின் இல்லத்திலும் இதே நிலைதான்.
ஊரடங்குச் சட்டம் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு இந்த வெசாக் பண்டிகை மிக முக்கியமான பண்டிகையாக அமைந்துள்ளது.
அவரது இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தம்பதியினரின் மகன் நிர்வானுடன் வீட்டில் இருந்து கொண்டாடும் முதல் வெசாக் பண்டிகை இதுவாகும். பிரதமர் தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான புகைப்படங்கள் இணைத்தளங்களில் வெளியாகியுள்ளன.