கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமையினால் மிகவும் அழகாக காட்சியளிப்பதனை காண முடிந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காணமாக கொழும்பு உட்பட சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரபரப்பாகவே காணப்படும் கொழும்பு காலி முகத்திடலுக்கு மக்கள் செல்லவதனை நிறுத்தியுள்ளனர். இதனால் குப்பைகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமையினால் புற்கள் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளன.
மிகவும் பசுமையாக காலி முகத்திடல் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும் கொழும்பில் தூசியினால் ஏற்படும் காற்று மாசு முழுமையாக குறைவடைந்து அழகிய இயற்கை காட்சிகளை இந்த நாட்களில் காண கிடைத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ளோரிடாவைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மீட்டுவிட முடிவு செய்துள்ளனர் மருத்துவர்கள்.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Florette Johnsonஐ அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் அவரது ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே வருவதைக் கவனித்துள்ளனர். அவர் மூச்சு விடத் திணறிக்கொண்டிருந்ததால், அவர்கள் அவரசரமாக அறுவை சிகிச்சைக்குத் தயாரகும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.
கண்களை மூடி, கடவுளிடம், குழந்தை பெற்றெடுக்க பலம் கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்ய, அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின்றி, சாதாரணமாகவே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் Florette.
ஆனால், Floretteக்கு கொரோனா இருந்ததால், குழந்தையைக் கொஞ்சுவதற்கு அவரை அனுமதிக்காமல் உடனடியாக குழந்தையை வேறு வார்டுக்கு கொண்டு சென்று விட்டனர் மருத்துவர்கள்.
அவளது முகத்தை நான் பார்க்கவோ, அவளைத் தொடவோ கூட இல்லை என்கிறார் Florette. அதற்குள் அவரது மூச்சுத்திணறல் அதிகமாகவே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் Florette.
Floretteஇன் அருகே வந்த ஒரு செவிலியர், கண்ணீர் மல்க Florette இறந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு அழுகையோ பயமோ வரவில்லை என்கிறார் Florette. புதனன்று கண் மூடிய Florette, அடுத்த திங்களன்றுதான் கண் விழித்துள்ளார்.
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் Florette, தன் மகளை வீடியோ அழைப்பு மூலம்தான் பார்க்க முடிந்தது என்கிறார்.
தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட, அது 27,000 லைக்குலையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. அனைவரும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்கள்.
அமெரிக்காவில் கல்லூரி மாணவியின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையிலும் அவரின் பேராசிரியர்கள் இரக்கமின்றி நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Maryland பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியான Saige Kratensteinக்கு தான் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் சமூகவலைதளத்தில்,
என் தந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து என்னுடைய பேராசியருக்கு இமெயில் அனுப்பினேன், அதில் என் தந்தைக்கு இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது.
அதனால் என் படிப்பு தொடர்பான பிரஜக்டை சமர்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டேன். ஆதற்கு எனக்கு என்ன பதில் வந்தது தெரியுமா? சரியான நேரத்தில் அதைச் செய்ய முயற்சிக்கவும்,
நான் எல்லா மாணவர்களுடனும் இணக்கமாக இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் எல்லாருக்குமே கடினமான நேரங்கள் பல உள்ளன என கூறப்பட்டிருந்தது. இன்னொரு பேராசியரும் அதே தான் கூறினார்,
ஆனால் இறுதியாக என் நிலையை புரிந்து கொண்ட வேறு சில நல்ல உள்ளம் கொண்ட பேராசிரியர்கள் எனக்கு உதவினார்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 17 வ யது மா ணவி உடல் முழுவதும் கா யங்களுடன் வயல்வெளியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகள் பெயர் மௌனிகா (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று ச டலமாக கிடந்தார் மௌனிகா, அ வரது உ டலில் ஏ ராளமான கா யங்கள் தென்பட்டன.
இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் ச டலத்தை பார்த்து அ திர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மௌனிகாவின் உ டலை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மௌனிகா எப்படி இ றந்தார் என்பது ம ர்மமாகவே உள்ள நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுமுதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு வ ன்முறை ச ம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மௌனிகாவின் ம ரணமும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.
நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக அவரது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றி வந்தவருமான 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளார். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்டவெளியில் பூமிக்கு அருகில் கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருந்துளை பூமியில் இருந்து ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ளது.
இரண்டு நட்சத்திரங்களில் பயணிக்கும் சுற்றுப் பாதையின் உதவியுடன் இந்த கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு நட்சத்திரம் கருந்துளையை சுற்றி பயணித்து வருகிறது. மற்றைய நட்சத்திரம் அதனை சுற்றி பயணிக்கின்றது.
தன்னை சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி கருந்துளைகள் உள்ளே இழுக்கும் போதே கருந்துளைகளை அடையாளம் காண முடியும். வாயு மற்றும் தூசியை உள்ளே இழுக்கும் போது அதிக வலுகொண்ட சமிக்ஞைகளை கருந்துளைகள் உமிழ்கின்றன.
அதனை தொலைநோக்கிகள் கண்டறிந்து கருந்துளைகள் இருக்கும் இடங்களை காட்டுகின்றன. இவ்வாறே கருந்துளைகள் கண்டறியப்படுகின்றன.
அவ்வாறின்றி கருந்துளைகளை நேரடியாக காண முடியாது. இதனடிப்படையில் பார்த்தால் புதிய கருந்துளையானது சாதாரண நிலைமையை விட மாறான நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கருந்துளைக்கு HR 6819 என பெயரிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்றில் சுற்றுப் பாதையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கருந்துளை இதுவாகும் என விஞ்ஞானிகள் தெரிவி்த்துள்ளனர்.
மாங்குளம் பனிக்கநீராவி ஏ9 வீதியில் இன்று (08.05.2020) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நேருக்கு நேர் மோதுண்டதுடன் வான் மீது லொறி ஏறி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவநேசன் என்பவர் உ யிரிழந்துள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பெருங்குடி சிவநேசன் என்பவர் தான் இந்த விபரீத முயற்சியில் உயிரை பறிகொடுத்தவர் ஆவார்.
சென்னை திநகரில் டாக்டர் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் பெருங்குடி சிவநேசன், உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூர் என்ற இடத்தில் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக 27 வருடமாக பணிபுரிந்து வந்தார்.
இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது. இவர் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரானா நோயை கட்டுப்படுத்தும் என கூறி கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக சிவநேசன் குடித்துள்ளார்.
குடித்த சிறிது நேரத்திலேயே மயக்க அடைந்த அவரை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் உயிரிழந்தார். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ் (25). இவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சரண்யா 9 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜெகன் செல்வராஜ், போதிய வருமானம் இன்றி தவித்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி த கராறு ஏற்பட்டது. புதன்கிழமை இரவு தம்பதிக்கிடையே மீண்டும் த கராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெகன் செல்வராஜ் வியாழக்கிழமை வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பினாா்.
வீட்டுக்குள் நுழைந்த போது சரண்யா, புடவையால் மி ன்விசிறியில் தூ க்குப்போட்டு கொண்ட காட்சியை கண்டு அ திர்ச்சியில் அ லறி து டித்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூ க்கில் தொங்கிய சரண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சரண்யா இ றந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புழல் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் திருமணமாகி 2 வருடங்களே ஆனதால் ஆா்.டி.ஓ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.
நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளிகள், சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக, தினக் கூலி தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், உண்ண உணவு இன்றி சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்ரா மாநிலத்தில், அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி, நடைபயணமாக புறப்பட்ட தொழிலாளிகள் இரவில் உறக்க அசதியில், தண்டவாளத்தில் படுத்துறங்கி உள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில், அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டரில், “மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் விபத்து குறித்து பேசினேன்.
அவர் நிலைமையை கண்காணித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல மாதங்களாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்தது.
அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இஸ்ரேல் இருந்து வருகிறது. அந்நாடு இப்படியொரு அறிக்கையை வெளியிடுகிறது என்றால் நிச்சயமாக கொரோனா தடுப்பு மருந்து நன்றாக வேலை செய்யும் என நம்பலாம் என அறிவியல் வல்லுநர்களும் தெரிவித்திருந்தனர்.
நேற்று முன் தினம் இத்தாலியும் மருந்தைக் கண்டுபிடித்ததாகவும் எலிகளுக்கு ஏற்றி அது வெற்றிபெற்றதாகவும் இத்தாலி அறிவித்துள்ளது.
ரோம் நகரின் ஸ்பாலான்சானி என்ற மருத்துவமனையில் எலிகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித உயிரணுக்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “தடுப்பூசியை சோதனை செய்வதற்கு எலிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிக்கு பிறகு எலிகளில் உள்ள செல்கள் வைரசுக்கு எதிரான எதிர்செல்களை உருவாக்கி கொண்டுள்ளது.
இதேபோன்று மனித உயிரணுக்களிலும் வைரஸ் தொற்றுக்கு எதிராக எதிர்செல்களை தடுப்பூசிகள் உருவாக்கும். இதன் மூலம் வைரசானது மனித உயிரணுக்களில் மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும் என இத்தாலியும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
குரங்குகளுக்கு இம்மருந்தை செலுத்தி, 3 வாரங்களின் பின்னர் கொரோனா தாக்குதலுக்கு உட்படுத்தினர். அடுத்த ஒரு வாரத்திற்கு பின்னர் சோதனை செய்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மருந்து செலுத்தப்படாத கொரோனா தொற்றுக்கு உள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவது தொடர்பான அறிவித்தலையும் வழிகாட்டலையும் நிறுவனங்களின் தலைவர்கள் அறிவிப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகல சியம்பலான்டுவ நகரத்தில் தனியார் நிதி நிறுவன கிளை முகாமையாளர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி சியம்பலான்டுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
திடீரென நோய்வாய்ப்பட்ட குறைந்த நபர் 6ஆம் திகதி காலை 11.30 மணியளவில் சியம்பலான்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வாயில் சளி போன்று காணப்பட்டாலும் அவர் விஷ மருந்து குடித்தமைக்கான எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை என சியம்பலான்டுவ வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றள்ளது. எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் சடலத்தின் பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இவரின் மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கொழும்பிலும் திடீரென நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில்களை இழக்க நேரிடலாம் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தொழில்களை இழக்கவோ அல்லது தொழில் வாய்ப்புக்களை பகுதி அளவில் இழக்கவோ நேரிடலாம் என நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரப் பகுதிகளில் நாள் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும், முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரும் இந்த நிலைமையினால் அதிகம் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநேகமான துறைகளில் பணிகள் பகுதியளவில் முன்னெடுக்கப்படுவதனால் பணியாளர்கள் தங்களது வருமானங்களை இழக்க நேரிடும் எனவும் இதனால் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பணியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு பிரச்சினைக்கு நிகராக இந்தப் பிரச்சினையும் அபாயகரமானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டில் இருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு அரைச் சம்பளம் வழங்குவதற்கு தொழில்தருனர்கள், அரசாங்கத்திடம் இணங்கியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பணிக்கு திரும்ப முடியாது வீடுகளில் இருக்கும் தனியார்துறை பணியாளர்களுக்கு அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் அரைவாசி அல்லது 14500 ரூபா இதில் எந்த தொகை பெரிய தொகையோ அந்தத் தொகை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
அரசாங்கத்திற்கும் தொழில் தருனர் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் தினேஸ் குணவர்தன, தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் தருனர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை ஒதுக்கவும் தொழில் தருனர்கள் இணங்கியுள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பொதுவான நடவடிக்கைக்காக மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வரும் வேலை திட்டம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் சிலவற்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
பொதுமக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஆரம்ப கட்டமாக மே மாதம் 11ஆம் திகதி முதல் பொது மற்றும் தனியார் நிறுவனங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான பொறுப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். பணியமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.