லண்டனில் பி ள்ளைகளை கொ லை செ ய்த இலங்கை தமிழர் : நீதிமன்றில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!

லண்டனில்..

லண்டனில் இலங்கையர் ஒ ருவர் த னது இ ரண்டு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் தொடர்பில் நீ திமன்ற வ ழக்கு வி சாரணைகள் ஆ ரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊட கங்கள் செ ய்தி வெளியிட்டுள்ளன.

கு டும்ப த கராறு கா ரணமாக இலங்கையர் ஒ ருவர் த னது இ ரு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் க டந்த மா தம் 26ம் தி கதி லண்டன் – Ilford ப குதியில் இ டம்பெற்றிருந்தது. இ தன்போது 19 மா த வ யதுடைய பவின்யா நித்தியாகுமார் ம ற்றும் மூ ன்று வ யதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆ கியோர் கொ ல்லப்பட் டனர்.

பவின்யா ச ம்பவ இட த்திலேயே உ யிரிழந் துவிட்டதாகவும், நிஜிஷ் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்ட சி றிது நே ரத்தில் உ யிரிழந்து விட்டதாகவும் அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இ ந்த கொ லை ச ம்பவத்தின் பி ரதான ச ந்தேக  நப ரான, கொ ல்லப்பட்ட கு ழந்தைக ளின் த ந்தை நித்தியகுமார் த ற்கொ லைக்கு மு யற்சி செ ய்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் த ச ம்பவம் தொ டர்பாக நீ திமன்ற வி சாரணைகள் ஆ ரம்பமாகியுள்ள நி லையில், சி றுவன் நிஜிஷ் த ந்தையால் க ழுத்தறுப ட்டு உ யிரிழந்துள்ளதாக அ திகாரிகள் த ரப்பு நீ திமன்றத்தில் தெ ரிவித்துள்ளனர்.

கு ற்றுயி ரான நி லையில் மீ ட்கப்பட்டநிஜிஷ் உ ள்ளூர் நே ரப்படி சுமார் 7.42 ம ணியளவில் உ யிரிழந்து ள்ளதாக தெ ரிவித்துள்ளனர். ஏப்ரல் 28 ஆம் தி கதி மு ன்னெடுக்கப்பட்ட உ டற் கூ ராய்விலும், க ழுத்தில் ஏ ற்பட்ட ஆ ழமான கா யம் கா ரணமாகவே ம ரணம் ஏ ற்பட்டுள்ளது உ றுதி செ ய்யப்பட்டது.

அ த்துடன் கு ழந்தை பவின்யாவும் க ழுத்தில் ஏ ற்பட்ட ஆ ழமான கா யம் கா ரணமாகவே உ யிரிழந்துள்ளதாக ம ருத்துவர்களால் உ றுதி செ ய்யப்பட்டுள்ளது. இ ந்த வ ழக்கின் ஒ ரு ப குதியாக உ யிரிழந்த இ ரு கு ழந்தைகளையும் அ வர்களது தா யார் நிஷா அ டையாளம் க ண்டுள்ளார்.

இ ந்த வ ழக்கின் வி சாரணை ச ரியான பா தையில் செ ல்வதாகவும், மே லதிக வி சாரணை தே வை எ னவும் நீ திமன்றத்தில் அ திகாரிகள் சா ர்பில் கோ ரிக்கை வி டுக்கப்பட்டு ள்ளது.

வெளிநாடு ஒன்றில் 7 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

கொரோனா வைரஸ்..

ரூமேனியாவில் உள்ள இலங்கையர்கள் 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது. வட ரூமேனியாவில் போடோசானி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் பணி செய்யும் இலங்கையர்கள் 7 பேர் இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த ஆடை தொழிற்சாலையில் 44 இலங்கையர்கள் பணி செய்து வரும் நிலையில் நீக்கப்பட்ட 7 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணிக்கு வருகைத்தராத காரணத்தினால் குறித்த ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆடை தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூமேனியாவில் பரவும் கொரோனா வைரஸ் அச்சத்தில் குறித்த இலங்கையர்கள் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் ஊழியர்களை நீக்கியமை தொடர்பில் அந்த நாட்டு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு வயதான குழந்தைக்கு கொரோனா தொற்று!!

குழந்தைக்கு கொரோனா..

இலங்கையில் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 582 பேர் வைத்திய சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,905,453 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த வைரஸ் தொற்று காரணமாக 270,123 பேர் உயிரிழந்துள்ளனர். 1,335,088 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களில் கொரோனா வைரஸ் : விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு : நீள்கிறது ஆராய்ச்சி!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் விந்தணுக்களில் இந்த வைரஸ் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு கொரோனா வைரஸின் பரவுதல் என்று நம்பப்படுகிறது, மேலும் விஞ்ஞானிகள் ஏற்கனவே இது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினர்.

சீனாவின் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 ஆண்களில் நடத்திய ஆய்வில் ஷாங்க்வி மருத்துவமனையின் சீனாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களில் 16% பேருக்கு விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வைரஸ் பரவிய நபர்களின் விந்தணுக்களுக்கு வைரஸ் பரவுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது மற்றும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் வரை நோயிலிருந்து மீள்வது புத்திசாலித்தனம் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

மேலும் பா லியலால் கொரோனா பரவுதல் ஒரு பங்கைக் கொண்டிருக்குமா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பல வைரஸ்கள் ஆண் இனப்பெருக்க பாதையில் வாழலாம்.

எபோலா மற்றும் ஜிகா வைரஸ் இரண்டும் விந்துகளில் பரவுவதாகக் கண்டறியப்பட்டது. பொதுவாக வைரஸ்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் நோயாளி குணமடைந்த சில மாதங்களுக்குப் பின்னரும் விந்தணுக்களில் வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

கொரோனா வைரஸ் இந்த வழியில் பரவ முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் மேலதிக ஆராய்ச்சிகள் நடக்கின்றன எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் மற்றுமொரு இளைஞன் திடீர் மரணம் : கொரோனா என சந்தேகம்!!

இளைஞன் திடீர் மரணம்..

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஆட்டுப்பட்டித் தெருவில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவித நோய் அறிகுறிகளும் இன்றி இவர் உயிரிழந்த காரணத்தினால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது உடல் மாதிரிகளை பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ தைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அண்மைக்காலமாக கொழும்பின் பல பகுதிகளில் திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இளைஞன் மீது அயல் வீட்டார் தாக்குதல் : இளைஞன் வைத்தியசாலையில்!!

செட்டிக்குளம் பகுதியில்..

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இளைஞர் மீது அயல் வீட்டார் நேற்று முன்தினம் (05.05.2020) மாலை மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் மீது அயல் வீட்டார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்தில் செட்டிக்குளம் வீரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய கார்த்திகேசு தவநேசன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு!!

வெசாக் வாரம்..

வெசாக் வாரம் வவுனியாவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இம்முறை கொவிட் 19 வைரஸ் தா க்கம் காரணமாக அமைதியான முறையில் சுகாதார முறைகளையும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வவுனியாவில் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில் வவுனியா பொலிஸ் நிலையம் முன்னால் சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் அமைதியாக ஊரடங்கு நேரத்திலும் வெசாக் வாரம் அனுஸ்டிக்கபப்படுகிறது.

வைத்திய ஆலோசனைகளை பின்பற்றாமல் வீடு சென்ற பெண் மரணம்!!

பெண் மரணம்..

வெலிகம பிரதேசத்தில் பெண் ஒருவர் உ யிரிழந்த பின்னர் தகனம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இன்று காலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெலிகம அழுத் வீதி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் மோட்டார் வாகனம் மூலம் மாத்தறை நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு வைத்திய ஆலோசனைக்கமைய அரச வைத்தியசாலையில் அனுமதியாகாமல் மீண்டும் வீட்டிற்கு சென்ற போது குறித்த பெண் இடையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பின்னர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்வதற்கு உறவினர்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மீண்டும் சடலத்தை மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரம்!!

கொரோனா நோயாளிகள்..

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளிகளில் 6 பேர் கடற்படை சிப்பாய் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றைய நபர் கடற்படை சிப்பாயுடன் நெருக்கமாக செயற்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இந்த 7 கொரோனா நோயாளிகளுடன் இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 804ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கடற்படை சிப்பாய்கள் இருவர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இதுவரையில் இலங்கையில் 232 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூ ன்று பெ ண்களை அ ரை நி ர்வாணமாக்கி சி றுநீரை கு டிக்க வைத்த கிராம மக்கள் : அ திர்ச்சி ச ம்பவம்!!

அ திர்ச்சி ச ம்பவம்..

பீகாரில் மூ ன்று பெ ண்களை மொ ட்டை அ டித்து, அ ரை நி ர்வாண மாக அ ழைத்துச் செ ன்ற ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியுள்ளது. முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள டாக்ரமா என்ற கிராமத்தில், இ ந்த கொ டிய ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது.

அ ங்கு வ ந்த மூ ன்று பெ ண்களை மந் திரவாதிகள் என நி னைத்த கி ராமத்து கு ம்பல் ஒ ன்று, அ வர்களுக்கு மொ ட்டையடித்து க டுமையாக அ டித்துள்ள னர்.

பி ன்னர் அ ரை நி ர்வாணமாக்கி அ வர்களை சி றுநீரை  கு டிக்க வை த்து இ ருசக்கர வா கனத்தில் கி ராமம் மு ழுவதும் ஊ ர்வலமாக அ ழைத்துச் செ ன்றுள்ளனர். இ ந்த வீ டியோ ச மூக வ லைதளங்களில் வெ ளியாகி நா டு மு ழுவதும் பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

இ து மிகப்பெரி ய கு ற்றம் எ ன கு றிப்பிட்டுள்ள மா வட்ட காவ ல்துறையினர், வி சாரணையை துவங்கி 9 பே ரை கை து செ ய்துள்ளதாக தெ ரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பில் சி லரை கை து செய்ய நடவடிக்கை எடுத்து வரப்படுவதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு மாதங்களில் பெரியளவில் கு ற்றச் செயல்கள் இடம்பெறவில்லை : பிரதி பொலிஸ் மா அதிபர்!!

பிரதி பொலிஸ் மா அதிபர்..

கடந்த இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவிலான கு ற்றச் செயல்கள் எவையும் இடம்பெறவில்லை என வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் தொடர்பில் வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்த பொலிசார் சுகாதார துறையினர், படைதரப்பு மற்றும் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிருமி நீக்கி விசிறல், கொரோனா தொற்று சந்தேக நபர்களை அடையாளம் காணல், ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்கு தளர்வின் போது நகரில் சுகாதார நடைமுறைகளை கவனித்தல், பாஸ் அனுமதி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கான விடுமுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அர்ப்பணிபுடன் மக்களதும், அரச அதிகாரிகளினதும் பங்களிப்புடன் கடமைகளை செய்கின்றனர்.

கொரோனா தொடர்பில் பொலிசார் இரண்டு வகையான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாத்தல் மற்றும் தம்மை பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தே கடமையாற்றுகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வவுனியாவில் கு ற்றச் செயல்கள் எவையும் பெரியளவில் இடம்பெறவில்லை. மதுபானசாலைகள் பூட்டப்பட்டமையால் சில இடங்களில் இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் பொது மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களும் பொலிசாருக்கு உதவி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டில் தீப்பரவல் : தடுக்கப்பட்ட பாரிய அனர்த்தம்!!

தீப்பரவல்..

வவுனியா – பம்பைமடு குப்பைமேட்டில் இன்று(07.05) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு தீ பரவிச் செல்லாது தடுக்கப்பட்டதுடன், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கை தளர்த்துவதால் என்ன நடக்கும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் எடுத்தல் மிகமிக அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக நாடுகளில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா வைரஸ் பெரும் தா க்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரையில் 212 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. நாடுகள் பொருளாதார ரீதியாகவும், நோய்த் தொற்று சார்ந்தும் மாபெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் வீழ்ந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளை எடுத்தோமானால் இத்தாலி முடக்கல்நிலையை தளர்த்தியுள்ளது.

டென்மார்க்கிலும் ஊரடங்கைத் தளர்த்திய பின்னர் கொரோனா தொற்று சதவிகிதம் சற்று அதிகரித்ததாக செய்திகள் வெளிவந்தன. பிரான்ஸ் ஜூன் வரைக்கும் அவசரகால நிலைப் பிரகடனத்தை அறிவித்து மக்களை நடமாட அனுமதித்துள்ளது.

சுவிற்சர்லாந்தும் இலங்கையும் ஊரடங்கை தளர்த்தி மே மாதம் 11ம் திகதி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளன. அமெரிக்காவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

அமெரிக்காவில் தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துகொண்டு வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் எச்சரிகையையும் மீறி அமெரிக்கா ஊரடங்கை தளர்த்துவது கவலைக்குரியதே. இந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு நேற்றைய தினம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, ”உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும்போது கூடுதல் கவனம் எடுத்தல் அவசியம். ஊரடங்கைத் தளர்த்தினால் வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவலாம். உலக நாடுகள் இதனைக் கவனமாக அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்துவிட்டீர்களா. ஆமெனில், ஊரடங்கை தளர்த்தும் ஒவ்வோர் நாடும் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் 6 விடயங்களை கவனத்திற் கொள்ளல் மிகமிக அவசியம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.

அவையாவன : 1- உங்கள் நாட்டில் நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளதா, 2. சுகாதார அமைப்புகள் “ஒவ்வொரு தொற்றாளர்களையும் கண்டறிந்து, சோதித்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து, மற்றும் ஒவ்வொரு தொற்றாளர்களோடு தொடர்புடையவர்களையும் கண்டறிய முடியுமா.

3. வைத்தியசாலைகள், நர்சிங் ஹோம் போன்ற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கொரோனா தொற்று அபாயங்கள் குறைக்கும் வசதிகள் உள்ளனவா, 4. பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா,

5. புதிதாக அடையாளம் காணப்படும் நபரை சோதனைக்குட்படுத்தி சமூகத்தில் பரவவிடாது கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா, 6. சமூகங்கள் அதாவது மக்களுக்கு கொரோனா பற்றிய முழுமையான அறிவை அதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப்பட்டதா…

இவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்றி கொரோனாவின் வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமாயின் ஊரடங்கைத் தளர்த்தலாம் எனவும் கூறியிருந்தார்.

உலக சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்த விடயங்கள் பின்பற்றக்கூடிய நிலையிலா இலங்கை இருக்கின்றது.. இக் கொரோனா சூழ்நிலையில் சற்றேனும் இலங்கை அரசாங்கமும் மக்களும் சிந்தித்து செயற்படுவது மிகவும் அவசியம்.

இலங்கையில் இதுவரையில் 804 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வேலையில் இருந்து எவரும் இடைநிறுத்தப்பட கூடாது : பசில் ராஜபக்ச கோரிக்கை!!

பசில் ராஜபக்ச கோரிக்கை..

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில் எவரும் தொழில்களில் இடைநிறுத்தப்படக்கூடாது என்று கோரியுள்ளார்.

ஜனாதிபதி செயலணி புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். ஏற்கனவே பாரிய, மத்திய மற்றும் சிறிய வர்ததகங்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிய ஒழுங்கு விதிகளின்படி தனியார்துறையினர் எதிர்வரும் 11ஆம் திகதியன்று தமது பணிகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நபர் ஒருவர் திடீரென மரணம் : கொரோனா என அச்சம்!!

கொழும்பில்..

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள மருந்து விற்பனை நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய நபரே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

மாரடைப்பிற்காக அவர் மருந்து பெற்றுக் கொள்வதற்கு மருந்தகத்திற்கு சென்றுள்ளார். இதன் போதே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் அ ச்சம் வெளியிட்டுள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை : மகிழச்சியில் மக்கள்!!

கடும் மழை..

நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் இன்று (07.05.2020) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.

இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி , நூலக வீதி , வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பநிலை காரணமாக குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.