முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடியபோது அவர் இன்று (03.05.2020) காலை அவருடைய கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய அம்மம்மா அம்மப்பா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர்கள் கிணற்றுக்கு நீர் எடுப்பதற்காக சென்றபோது கிணற்றினுள் உடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் றொசாந்தன் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பான செய்தி!!

ஊரடங்கு சட்டம்..

யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் நாளை முதல் புதன்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

அதன் பின்னர், புதன்கிழமை இரவு 8 மணிமுதல் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய செய்தி!!

உயர்தர பரீட்சை..

கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதால், இந்த வருடத்திற்கான உயர் தரப்பரீட்சை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளும் கல்வியமைச்சும் இணைந்து மாணவர்களுக்காக நியாயமான தீர்மானத்தை எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார். மே அல்லது ஜூன் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாமல் போனால், பாடங்களை பூர்த்தி செய்ய கூடுதலான காலம் தேவை.

பாடங்களை முழுமையாக பூர்த்தி செய்தால் மாத்திரமே நியாயமான பரீட்சைகளை நடத்த முடியும். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 761 மாணவர்கள் தோற்ற உள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனிய பெ ண்ணை வ ன்புண ர்வுக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!!

18 வயது இளைஞன் கைது..

பேருவளை, மரதானை – பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் அறையில் தங்கியிருந்த 79 வ யதான ஜேர்மனிய பெ ண்ணை வ ன்புண ர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை தாம் இன்று கைது செய்ததாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 வயதான இ ளைஞனே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளார். கடந்த 29 ஆம் திகதி ஜேர்மனிய பெ ண் வ ன்புண ர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுகவீனமான நிலைமையில் இருக்கும் அந்த வெளிநாட்டுப் பெ ண் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இப்படியான ச ம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கிடைத்திருந்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்டு விசாரணைகளில் இந்த நபரை பொலிஸார் கை து செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தான் செய்த கு ற்றத்தை தம்மிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸாரும், கொழும்பு கு ற்றத்தடு ப்பு பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட க ணவன் : ம ன வ ருத்தத்தில் த ற்கொ லை செய்துக்கொண்ட ம னைவி!!

கு டும்ப த கராறு..

கு டும்ப த கராறு கா ரணமாக க ணவன் 112 ப னடோல் மா த்திரைகளை சா ப்பிட்டதால், மன வ ருத்தத்திற்கு உ ள்ளான ம னைவி தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துக்கொண்ட ச ம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இ ன்று ந டந்துள்ளது.

கு டும்பத்தில் ஏ ற்பட்ட வா க்குவாத த்தை அ டுத்து த கராறு காரணமாக க ணவன் 112 ப னடோல் மா த்திரைகளை உ ட்கொண்ட நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். இ தனால் ம ன வ ருத்தத்திற்கு உ ள்ளான மனை வி இ வ்வாறு த ற்கொ லை செய் துகொண் டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும் 31 வ யதான பழனிவேல் கலைச்செல்வி எ ன்ற இ ரண்டு பி ள்ளைகளின் தா யே த ற்கொ லை செ ய்துக்கொண் டுள்ளார்.

அவரது க ணவரான 40 வ யதான எல். லோகநாதன் எ ன்பவர் 112 ப னடோல் மா த்திரைகளை உ ட்கொ ண்டதால் ஆ பத்தான நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த த ம்பதிக்கு 10 ம ற்றும் 5 வ யதான ஆ ண் பி ள்ளைகள் இ ருப்பதாக பொ லிஸார் கூறியுள்ளனர். உ யிரிழந்த பெ ண்ணின் பி ரேதப் ப ரிசோதனைகள் இ ன்று பலாங்கொடை வை த்தியசாலையில் ந டைபெற்றுள்ளது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு!!

தீப்பற்றி எரிந்த வீடு..

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்று இன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் வறிய குடும்பத்துக்கு சொந்தமான தற்காலிக வீடொன்றிலேயே சமைக்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பணம் இல்லை என்றால் வெளியே போ : மனைவி, குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம்!!

வீதிக்கு வந்த குடும்பம்..

தமிழகத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் அங்கிருந்து துரத்தப்பட்ட நபர் தனது மனைவி, குழந்தைகளுடன் சாலையோரத்தில் உள்ள மரத்தின் அடியில் தங்கினார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெரியார்நகர் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கூலி வேலைக்கு கூட செல்ல முடியாமல், குடும்பத்தை நடத்த அன்றாட செலவுக்கே வருமானமின்றி நாகராஜன் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த மாதம் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாகராஜன் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமியோ, கடந்த மாதமே நாகராஜனிடம் வாடகையைக் கேட்டு தொ ல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைமையைச் சொல்லி நாகராஜன் கண்ணீர் வடித்தும், லட்சுமி மனமிறங்கவில்லையாம். இருந்தாலும் ஒரு மாத காலத்தை நாகராஜன் அங்கேயே கழித்துள்ளார்.

இந்த நிலையில், மே மாதம் பிறந்துள்ளதால், ஏப்ரல் மாதத்துக்கான வாடகைப் பணத்தைக் கேட்டு நச்சரித்த லட்சுமி பணம் இல்லையென்றால் வெளியே போ என கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த நாகராஜன், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கரூர்-வெள்ளியணை சாலையின் ஓரத்தில், மணவாடி அருகே அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பொலிசார் அங்கு வந்து, நாகராஜனிடம் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளரை அழைத்து, பேசினர்.

அப்போது நாகராஜன், ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் வீட்டு வாடகை பாக்கியையும், முன்பணத்தையும் தருவதாக ஒத்துக்கொண்டார். அதுவரை அவரை வீட்டை காலி செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது என உரிமையாளரிடம் பொலிசார் கூறினர்.


இதை வீட்டு உரிமையாளர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்டில் உள்ளிட்ட பொருட்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு மீண்டும் நாகராஜன் சென்றுள்ளார்.

சிமென்ட் கலவை லொறிக்குள் மறைந்து வீடு திரும்ப முயன்ற 18 தொழிலாளர்கள் : சிக்கிய வீடியோ!!

சிமென்ட் கலவை லொறிக்குள்..

இந்தியாவில் சிமென்ட் கலவை லொறிக்குள் மறைந்து உ யிரை பணயம் வைத்து ஊரடங்கை மீறி வீடு திரும்ப முயன்ற 18 தொழிலாளர்கள் பொலிசாரிடம் சி க்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கை மே 17ம் திகதி வரை நீட்டித்துள்ள மத்திய அரசு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நாட்டில் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சிமென்ட் கலவையை ஏற்றிச் சென்ற லொறியை நிறுத்தி பொலிசார் சோதனை செய்த போது, அதில் மறைந்திருந்த 18 தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மேற்கு இந்தியாவின் மும்பையில் இருந்து வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி கூறினார்.

அவர்கள் லொறியை சிறைபிடித்ததாகவும், தொழிலாளர்கள் இந்தூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து முறையான புகார் பொலிசாரால் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் வெள்ளிக்கிழமை மே17 வரை இன்னும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டது, இருப்பினும் சில பகுதிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

விமானம், ரயில், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலை வழிப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய போக்குவரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா தொடர்பான ஆவணங்களுடன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற சீன ஆய்வாளர்!!

சீன ஆய்வாளர்..

கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த கேந்திர நிலையமாக கருதப்படும் சீனாவின் வூகான் பிரதேசத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தின் ஆய்வாளர் எனக் கூறப்படும் ஷி ஷெங் லீ, கொரோனா சம்பந்தமான அனைத்து தகவல்களுடன் தனது குடும்பத்தினரோடு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷி ஷெங் லீ, கொரோனா தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஷி ஷெங் லீ, தானும் தனது குடும்பத்தினரும் எங்கும் தப்பிச் செல்லவில்லை என வீ சேட் என்ற தகவல் பரிமாற்று சேவை வழியாக கூறியுள்ளார்.

கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வயோதிபப் பெண் மரணம்!!

வயோதிபப் பெண்..

அரநாயக்க பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கக் கூடும் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்றைய தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். அரநாயக்க ரெஹல மேற்குப் பகுதியில் இந்த வயோதிப் பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாகவும், உயிரிழந்த வயோதிப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாரா என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இலங்கையில் அதிகம் விற்பனையாகும் 2 பொருட்கள்?

அதிகம் விற்பனையாகும் 2 பொருட்கள்?

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில் இடைக்கிடை இந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் அதிகளவில் இரண்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்குச் சட்டம் இடைக்கிடை தளர்த்தப்படும் நேரங்களில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் திணைக்களமும், காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை உற்பத்தி செய்வதற்காக இவ்வாறு சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்களை கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கடைகளில் சிகப்பு சீனியே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுக்கும் நோக்கில் காவல்துறையினரும், மதுவரித் திணைக்களத்தினரும் விசேட சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர். ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையில் 1022 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் எவருமின்றி லண்டனுக்கு பறந்த இலங்கை விமானம்!!

இலங்கை விமானம்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இன்று முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 503 எனும் விசேட விமானம், இன்று அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.

இவ்விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் மாத்திரம் பயணித்துள்ளனர். இவ்வாறு புறப்பட்டுள்ள விமானம், இன்று முற்பகல் 11.25 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைச் சென்றடையும்.

நாளை அதிகாலை 12.45 மணிக்கு இவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. இலங்கை மாணவர்கள் சுமார் 250 பேரை இவ்விமானம் ஏற்றிக்கொண்டு வருகை தரவுள்ளது.

அத்தோடு, நாளை மற்றும் நாளைமறுதினம் லண்டன் நகருக்கு இன்னும் இரண்டு விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் 08ஆம் திகதி விசேட விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் படையெடுக்கும் பாத்தீனியம் : நடவடிக்கை எடுப்பார்களா உரியவர்கள்!!

வவுனியாவில் படையெடுக்கும்..

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் இச் செடிகளை காணக்கூடியதாக உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் உரிய திணைக்களங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி பாத்தீனியத்தைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள போதிலும் தற்போது இவ்விடயத்தில் கவனமற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

பல பகுதிகளிலும் பாத்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வு விளம்பரப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டபோதிலும் அதனை கட்டுப்படுத்தி அழித்தொழிப்பதற்கு போதியளவில் முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் பாத்தீனியம் அதிகம் காணப்படும் இடங்களை அப்பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பாடசாலைச்சமூகம் ஒன்றிணைந்து இவற்றை அழித்தொழிப்பதற்கு முன்வரவேண்டும்.

பாத்தீனியத்தினால் நன்மைகளை விட தீமையே அதிகம். இவை அனைத்து பகுதிகளிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும் , ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன.

இவற்றின் மீது எமது உடல் படும் போது ஒருவிதமான அரிப்பு காணப்படும். இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையையும் , சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மையையும் கொண்டிருக்கும். மக்களின் நலனை சிந்தித்து செயற்படுவார்களா உரிய அதிகாரிகள்.

சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள்!!

இலங்கைக்குள் வந்த பயணிகள்

நெதர்லாந்தில் இருந்து 230 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறப்பு போயிங் 767 – 300ER விமானம் இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) தரையிறங்கியது.

இந்த விமானம் தெற்கு இலங்கையின் காலி துறைமுகத்தில் தங்கியிருக்கும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான குழுவினர்களைக் கொண்டு வந்தது. சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வந்த பின்னர், பயணிகள் அனைவரும் இலங்கை விமானப்படையின் வேதியியல் அணு, உயிரியல் மற்றும் கதிரியக்க மறுமொழி பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு கிருமிநாசினி பணிக்கு உட்படுத்தப்பட்டு பேருந்துகள் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், திரும்பிப் புறப்படவிருக்கும் இவ் விமானத்தில் நெதர்லாந்திற்கு புறப்படவுள்ள கப்பலில் 53 பணியாளர்கள் இன்று இரவு மத்தள விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் – மன்னார் வீதி விபத்தில் இருவர் காயம்!!

வீதி விபத்தில்..

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். சிறிய லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இவர்கள் காயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற சிறிய லொறியே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மே மாதம் 11ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு முடிவா? சுகாதார பணிப்பாளர் விளக்கம்!!

கொரோனா..

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதியுடன் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என தான் ஒருபோதும் கூறவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

“மே மாதம் 11ஆம் திகதி கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என்ற கருத்தை வெளியிடவில்லை. ஊடங்கள் எப்படி அவ்வாறு பதிவிட்டதென்பது எனக்கு தெரியவில்லை. எனினும் கடற்படையினராலேயே உண்மையாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

கடற்படையினர் இருந்த பிரதேசங்களில் ஏதாவது ஒரு வகையில் கொத்துக்கள் ஏற்படவில்லை என்றால் நிச்சியமாக நோயாளின் எண்ணிக்கையில் குறைவொன்றை காண முடியும். கடற்படையினர் சென்ற பிரதேசங்களிற்கமையவே இதன் நிலையை அறிய முடியும்.

அதனையே நான் கூறினேன். அத்துடன் சமூகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகும் என கூற முடியாது. சிறிய எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்படலாம்.

உதாரணமாக நேற்று முன்தினம் தாபர் மாவத்தையில் இரண்டு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உள்ளவர். அது போன்ற குறைந்த எண்ணிக்கையிலானோரை அடையாளம் காணலாம். எனினும் எங்கே, எப்படி, யாரிடம் இருந்து பரவியது என்ற விடயத்தை எங்களால் அடையாளம் காண முடியும்.

எப்படியிருப்பினும் கொரோனா தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கமைய பார்க்கும் போது நிலைமை சிறப்பானதாகவே பார்க்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.