நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று (02.05.2020) அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்த காலப்பகுதியில் இவர் பலருடன் தொடர்பை பேணியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 50 பேர் வரை தொடர்பை பேணியுள்ளனர் என்றும், இவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா தொற்று தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொது சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார்.
குறித்த கடற்படை சிப்பாய் முகாமுக்கு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே கொரோன தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) ஒரு புதிய தீங்கிழைக்கும் மென்பொருள் (malware) குறித்து “அதி அச்சுறுத்தல்” எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த புதிய ஆண்ட்ராய்டு malware முக்கியமான நிதித் தகவல்களைத் திருடக்கூடும் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. குறித்த malware முதன் முதலில் மார்ச் 2020இல் அடையாளம் காணப்பட்டது.
அத்துடன், இது Adobe Flash மற்றும் Microsoft Word போன்ற முறையான பயன்பாடாக காட்டப்படுவதன் மூலம் அதன் தீங்கிழைக்கும் நோக்கம் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சகல கல்வி நிறுவனங்களிலும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பாடசாலைகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் துப்புரவு தொழிலாளிகள், பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பூங்கா பணியாளர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களிடம் தூய்மைபடுத்தும் நடவடிக்கைகள் குறித்த பொறுப்பினை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பழைய மாணவர் ஒன்றியங்கள் போன்றவற்றின் உதவியையும் பெற்றுக் கொண்டு பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு வலக் கல்விப் பணிப்பாளர்களக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தல் நியதிகளுக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஎல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய குணமடைந்த நபர் ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக நேற்று செய்தி வெளியாகியது. இந்த நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் கடந்த மாதம் 17ஆம் திகதி முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதியாகிய பின்னர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய குறித்த நபர் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று கடந்த 17ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த நபர் 14 நாட்கள் சுயதனிமைபப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நெஞ்சு வலி ஏற்பட்டமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இந்த நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அதற்கமைய இந்த நபர் மீண்டும் IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான இந்த நபர் சிறுநீர் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராகும். அவர் இத்தாலியில் இருந்து வந்த நபருடன் பழகியமையினால் மீண்டும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாம் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இந்த நோயாளியின் வீட்டில் இருந்த நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது.
எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வினவிய போது, அதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சையின் திகதியை மாற்றுவது ஒரு வழியாகும். கற்பித்து நிறைவு செய்த பாடங்களில் இருந்து மாத்திரம் கேள்விகளை தயாரிப்பது இரண்டாவது மாற்று நடவடிக்கையாகும். எப்படியிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் த ற்கொ லை செய்துள்ளார்.
செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு (02.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.
அவர் கிணற்றில் வீழ்ந்ததினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டெடுத்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உ யிரிழந்துள்ளார்.
த ற்கொ லைக்கான காரணம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதையடுத்து அதனை ஆன்மீக வழியில் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆலய பூசகரும் உளவளவாளர் மற்றும் ஆய்வாளருமாகிய சு.வரதகுமார் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் வவுனியா ஓமந்தை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கடந்த 21நாட்களாக பல மணித்தியாலங்களாக தியானத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12.35க்கு தனது தியானத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூச்சியமாக மாற்ற முடியாது என டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் நிலைமை உருவாகியுள்ளது.
என்ற போதிலும் அதனை பூச்சிய எண்ணிக்கையில் பேணுவது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பேணுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகில் எற்கனவே ஏற்பட்ட நோய் பரவுகையைப் போன்றே கொரோனா வைரஸ் தொற்று பெரும்பரவுகையும் சமூகத்தில் எதிர்காலத்தில் தோன்றும் பின்னர் மறையும் நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஓரே நோய் கொரோனா கிடையாது எனவும் ஏனைய நோய்கள் தொடர்பில் கவனத்தை குறைப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பரவுகைகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு கா தலர் வ ராத கார ணத்தினால் பெ ண் கா வலர் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை கா வல் நி லைய கா வலராக ப ணியாற்றி வருபவர் சரண்யா. இ வர் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கொரோனா த டுப்பு ப ணிக்காக பணிபுரிந்து விட்டு மாலை அயனாவரத்தில் உள்ள அவரது வீ ட்டுக்குச் செ ன்றுள்ளார்.
வீட்டுக்குச்சென்றவர், அறையில் உ ள்ள மி ன்விசி றியில் தூ க்கு மா ட்டி த ற்கொ லை செ ய்து கொ ண்டார். சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டேரி பொ லிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வ ழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சரண்யா உ டலை மீ ட்டு உ டற்கூறு ஆ ய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசாரின் மு தற்கட்ட வி சாரணையில் சரண்யாவின் கா தலரான ஏழுமலை என்பவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதும்,
இதனை கொண்டாடுவதற்காக சரண்யா வீட்டிற்கு வரும்போது கேக் வாங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கேக் வெட்டுவதற்கு ஏழுமலை வராததால் ம ன உ ளைச்சலுக்கு ஆ ளான சரண்யா த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் என மு தற்கட்ட த கவலில் தெ ரியவந்துள்ளது.
தமிழகத்தில் அக்கா, உறவினர்கள் இருந்த போதும், கொரோனா சந்தேகத்தில் நபர் ஒருவர் சாலையில் அனாதையாக இறந்து கிடந்த துயரம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு வரும் 3ம் திகதி வரை உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
அரசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கே நிவாரணம் கொடுக்கும், சாலைகளில் திரியும் நபர்களுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர் தான், ரவி (56). இவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் பணியைச் செய்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இவரின் வருமானம் நின்றுவிட்டது.
இதனால் வேறு வழியின்றி, சைதாப்பேட்டையை அடுத்த ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அந்த அக்காவும், இவரை அந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை.
ரவிக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதனால் அடிக்கடி இருமியுள்ளார். இதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர, ரவியின் அக்காவிடம் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டதால், அதிகாரிகள் வந்து சோதனை செய்து, சளி மாதிரியை எடுத்துக் கொண்டு, அவரை வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தி, மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காத காரணத்தினால், ரவி அங்கிருக்கும் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். அவ்வப்போது யாரேனும் கொண்டு வந்து கொடுக்கும் உணவினை சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு சில நாட்களில் உணவு கிடைக்காததால், பசியுடனும் படுத்து வந்துள்ளார்.
இதனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலை பரிதாபமாக உ யிரிழந்தார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவரின் உடலை மீட்ட பொலிசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
275 கடற்படையினரில் 217 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 58 பேர் விடுமுறையில் வீடு சென்றிருந்த நிலையிலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 25 நோயாளர்களில் 18 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும், ஏனைய 7 பேரில் 6 பேர் கடற்படையினரின் உறவினர்கள் எனவும் அவர் கூறினார்.
கடற்படையினரின் உறவினர்களான 6 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவரும் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அடங்குகின்றார் எனவும் அவர் மேலும் கூறினார்.
பெ ண்களின் ஆ பாச வீ டியோக்களை வைத்து அவர்களிடம் மி ரட்டி ப ணம் பறித்த காசி வலையில் பிரபல நடிகரின் மகளும் சிக்கியுள்ளார் என அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற 26 வயது இளைஞன், சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.
அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார், ஆனால் இவர் படிக்கும்போதிருந்தே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயங்களில் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் தி ருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப் பெ ண்களை மி ரட்டி வந்துள்ளார்.
இதில் ஏராளமான பெண்கள் பா திக்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விடயம் வெளியே வந்தது. இதையடுத்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு பொலிசார் அ திர்ந்தனர். இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.
அவர்களையும் பொலிசார் வி சாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ர கசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.
இதில் ஒரு நடிகர் மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, அவரிடம் லட்சக்கணக்கில் காசி ஏமாற்றி உள்ளார். தற்போது காசி மீது கு ண்டர் ச ட்டம் பாய்ந்துள்ளது. பெண்களை ஏ மாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.
இதனிடையே, அதிமுக புள்ளிகள் சிலர் காசியிடம் நெருங்கி பழகி உள்ளனர். அதில் ஒரு அதிமுக புள்ளிக்கு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.
நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம். இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மி ரட்டிதான் ஆ பாச ப டங்களையும் எடுத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பான ஆதாரங்களும் கோழிப்பண்ணையில் சி க்கிய காசியின் லேப்டாப்டில் உள்ளதாக கூறப்படுகிறது. காசி ஏமாற்றிய அந்த நடிகர் மகள் யார், தொடர்பில் இருந்த அந்த அதிமுக பிரபலம் யார் என்ற ப ரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு இந்த விடயம் பெரித்து பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவர் கல்லூரி மாணவியும், பயிற்சி மருத்துவருமான தீபாவின் பி ரேத ப ரிசோதனை மு டிவில் அவர் த ற்கொ லை செ ய்யவில்லை, உ டலில் எந்த ஒ ரு கா யமும் இ ல்லை என்ற தி டுக்கிடும் த கவல் வெ ளியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர்,வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர்.
இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பா திப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் த டுப்பு பணிக்கு தீ விரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல், விடுதியில் தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார்.
இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கடந்த 16-ஆம் திகதி முதல் தங்கியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து விடுதி திரும்பிய பிரதீபாவை பார்ப்பதற்காக, இன்று அ வரின் அ றையை சக தோழி ஒருவர் தி றக்க மு யன்ற போ து, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் உடனடியாக இது குறித்து வார்டனுக்கு தெரிவிக்கப்பட்டு, க தவை உ டைத்து உ ள்ளே செ ன்றனர்.
அப்போது பிரதீபா ச டலமாக கி டந்தார். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் வார்டன் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரோனா தொடர்பான பணியில் இருந்ததால், கொரோனா பா திக்கப்பட்டு உ யிரிழந்திரு க்கலாம், என்று முதலில் ச ந்தேகிக்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு கொரோனா ப ரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கொரோனா பா திப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இ றப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட, குடும்பத்தினரிடம் பிரதீபா போனில் வெகு நேரம் பேசியுள்ளார். அப்போது அவர் வேலை ப ளு கொஞ்சம் அதிகமாக இருப்பதாக பேசியுள்ளார் என்பது வி சாரணையில் தெரியவந்தது.
இதனால் பி ரேத ப ரிசோதனைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும், ஏனெனில், பூ ட்டிய அ றைக்குள் ச டலமாக பிரதீபா மீ ட்கப்பட்டிரு ப்பதால், அதன் முடிவில் ஏதேனும் ஆ தாரம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் பிரதீபா தங்கியிருந்த அ றை மற்றும் அவரின் செல்போன்களை போலீஸார் ஆ ய்வு செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் பி ரேத ப ரிசோதனை முடிந்து பிரதீபாவின் ச டலம் அவரின் பெ ற்றோரிடம் ஒ ப்படைக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்ட போதுக, பொதுவாக பி ரேத ப ரிசோதனை செய்யும்போதே இ றப்புக்கான காரணம் தெரிந்துவிடும். ஆனால், பிரதீபாவின் பி ரேதப் பரி சோதனையில் அவர் த ற்கொ லை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
அ வரின் ச டலத்திலும் எந்தவித கா யங்களும் இல்லை. இருப்பினும் அ வரின் உடல் பா கங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப் பிறகே பிரதீபாவின் இ றப்புக்கான உண்மையான கா ரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
பொலிசார் கூறுகையில், பிரதீபா, பூ ட்டிய அ றைக்குள் இ றந்து கி டந்தார். அ தனால் அவர் த ற்கொ லை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வி சாரணையை ந டத்தினோம். ஆனால் அதற்கான த டயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பிரதீபாவின் பெ ற்றோரிடம் வி சாரணை ந டத்தினோம். அப்போது அவர்கள், பிரதீபாவுக்கு உ டல் ரீ தியாகவும் ம னரீதி யாகவும் எந்தவித பி ரச்னையும் இல்லை.
தோழிகளிடம் விசாரித்த போதும் எதுவும் சிக்கவில்லை, அன்றைய தினம் இ ரவு வழக்கம் போல் தோழிகளிடம் குட் நைட் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், காலையில் ச டலமாக கி டந்திருக்கிறார்.
இதனால் த ற்கொ லையாக இருக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் பி ரேத ப ரிசோதனை முடிவிலும் அப்படி இல்லை என்று கூறப்பட்டுள்ளதால், தொடர் வி சாரணைக்கு பின்னரும், முழுமையான பி ரேதப் ப ரிசோதனை அ றிக்கையில் இ றப்புக்கான காரணம் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், ந ன்றாக இருந்த பெ ண் ம ருத்துவர் தி டீரென்று உ யிரிழந்திரு ப்பதும், பூ ட்டிய அ றையில் ச டலமாக மீ ட்கப்பட்டிருப்பதும், பி ரேத ப ரிசோதனையில் கிடைத்திருக்கும் த கவல்களும், ம ர்மமாகவும், அ திர்ச்சியாகவும் உ ள்ளது.
தமிழகத்தில் மு தியவரை கொ லை செ ய்துவிட்டு நா டகமாடிய அவரின் மகன், மருமகள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த 22ம் திகதி தனது தோட்டத்திலேயே ம ர்மமான மு றையில் ப டுகொ லை செய்யப்பட்டு கிடந்தார்.
ராசுவின் ச டலத்தை பார்த்து அவரின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா அ ழுதுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார் கொ லைக்கு காரணமான ம ர்ம நபர்களை தே டி வந்தனர். விசாரணையில் தெரியவந்துள்ள உண்மை உசிலம்பட்டியையே அதிரவைத்துள்ளது.
ஆம், முதியவர் ராசுவின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும்தான் சேர்ந்து அவரை கொ லை செய்துள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கருப்பையாவும், தர்மாவும் தங்களது கூட்டாளியான அய்யனார் என்பவரது உதவியுடன் சொத்துக்காக தான் முதியவர் ராசுவை கொ லை செய்துவிட்டு நாடகமாடியுள்ளனர்.
பொலிசாரின் வி சாரணையில் இந்த ச ம்பவம் அம்பலமாகியுள்ளதை அடுத்து இக் கொ லை வ ழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.
இந்தியாவின் மும்பையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்ற நபர் தி டீரென ப லியானது பெ ரும் ப ரபரப்பை ஏ ற்படுத்தி உ ள்ளது. கொரோனா பா திப்பு இந்தியா முழுக்க தீ விரம் அ டைந்து வருகிறது.
கொரோனாவால் மி க மோ சமாக பா திக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் 11,506 பேர் பா திக்கப்பட்டுள்ளனர். 485 பே ர் மகாராஷ்டிராவில் ப லியாகி உள்ளனர்.
மும்பையில் மட்டும் 7,812 பேர் கொரோனா காரணமாக பா திக்கப்பட்டு உள்ளனர். அங்கு 295 பேர் கொரோனாவால் ப லியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எ திராக பிளாஸ்மா சிகிச்சையை மகாராஷ்டிரா கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 53 வ யதுடைய இ ந்த ந பருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இ வரின் உ டல் நி லை மி க மோ சமாக இ ருந்தது.
இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு 200 எம்எல் பிளாஸ்மா அளிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பா திக்கப்பட்டு குணமடைந்த நபர் மூலம் பிளாஸ்மா எடுக்கப்பட்டு அது இவருக்கு அளிக்கப்பட்டது.
இந்த பிளாஸ்மாவில் இருக்கும் ஆ ண்டிபா டிகள் முதலில் நன்றாகவே வேலை பார்த்து உள்ளது. அவர் முதல் 24 மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்து இருக்கிறார்.
ஆனால் தி டீர் என்று அவரின் உடல்நிலை மி க மோ சமானது. தி டீர் என்று கடந்த திங்கள் கிழமை அவரின் உ டல்நிலை மோ சமானது. அதன்பின் நாளுக்கு நாள் அவரின் உ டல் நி லை ந லிவடைந்து கொண்டே சென்றது.
பிளாஸ்மா மாற்றியதன் காரணமாக இவருக்கு இர த்தத்தில் இ ன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் உ டல் தொ டர்ந்து மோ சம் அடைந்தது. முடிவில் கடந்த புதன் கிழமை அவர் ப லியானார்.
இவரின் பி ரேத ப ரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மோ சமான சுவாச கோளாறு நோய்க்குறி மற்றும் செப்டிசீமியா காரணமாக இவர் ப லியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க பிளாஸ்மா தெரபி மீது அ ச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது.
கொரோனாவிற்கு எ திராக இதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத் தத்தில் இருந்து இன்னொருவரின் ர த்த செ ல்களுக்கு ஆ ண்டிபாடிகளை கட த்துவது ஆகும்.
கொரோனா பா திப்படைந்து குணமடைந்த ஒருவரின் ரத் தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எ திர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத் தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா பா தித்து அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எ திரான எ திர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணமடைந்தார். பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார்.
பெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார். மார்ச் 28-ம் திகதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணியை நிர்வாகம் நீடித்துள்ளது.
அதனால் கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சான்று பெற்று கொண்டு திரும்பியபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் படுவேகமாக மோதினார். இதில் இரத்த வெள்ளத்தில் காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று இறந்தார். பிரேத பரிசோதனை முடித்து உடல் பெரம்பலூர் செல்கிறது. ஏழ்மை குடும்பத்தில் டெய்லரின் மகளாக பிறந்து, அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து 5 ஆண்டு நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்தது சக மருத்துவர்களையும், அவரது உறவினர்களையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.