தன்னை விட 25 வயது அதிகமானவரை மணந்த இளம்பெண் : திருமணமான 3வது நாளில் நடந்த விபரீதம்!!

இளம்பெண்..

தமிழகத்தில் திருமணமான மூன்றாவது நாளிலேயே பு துப்பெ ண் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (45), பெட்டிக்கடை வைத்துள்ளார். சங்கருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கும் (20) திருமணம் செய்துவைக்க பெற்றோர் கலந்துபேசியுள்ளனர்.

சங்கரை விட மகாலட்சுமி 25 வயது இளையவர். இப்படியிருக்க கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையிலும் கோவிலில் கடந்த மாதம் 29ம் திகதி அவசர அவசரமாக திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த பிறகு கடந்த இரண்டு நாள்களாகக் கணவரின் வீட்டிலிருந்த மகாலட்சுமி திடீரென அ றையில் தூ க்குப்போ ட்டு தற்கொ லை செய்துகொண்டார். ம னைவி ச டலமாக தொ ங்கியதைக் கண்டு சங்கரும் அவரின் குடும்பத்தினரும் அ திர்ச்சியில் உ றைந்தனர்.

இதுகுறித்து, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், பொலிசார் விசாரித்து வருகின்றனர். தன்னை விட அதிக வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள மகாலட்சுமியைப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் அவர் இம்முடிவை எடுத்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து லண்டனுக்கு 3,4,5 திகதிகளில் விசேட விமான சேவைகள்!!

லண்டனுக்கு விசேட விமான சேவைகள்

பிரித்தானியாவின் லண்டன் நகருக்கான விசேட விமான சேவைகள் 3,4,5 ஆம் திகதிகளில் நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கிலும் இந்த விசேட விமான சேவைகளை நடத்தவுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதனை தவிர அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி விமானம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாகவும் அங்குள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நோக்கில் இந்த விமானம் அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுபிடித்த ஐக்கிய அரபு ராஜ்ஜியம்!!

கொரோனா..

கொவிட் -19 என்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் தாம் சிகிச்சைக்கான மருத்தினை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள ஸ்டெமிஸ் செல்ஸ் சென்டர் என்ற நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பத்திரம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய 73 நபர்களை பயன்படுத்தி இந்த நிறுவனம் தனது மருந்த்தினை பரீட்சித்து பார்த்துள்ளதுடன் மருந்தை பயன்படுத்தி அனைவரும் குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.

வவுனியா மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கம் : சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் விடுவிப்பு!!

21 குடும்பங்கள் விடுவிப்பு..

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் வவுனியா, மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன், அக் கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்று சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டனர்.

வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வந்த நிலையில் கொரோனா தொற்று உள்ளவராக கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படை வீரர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து முடக்கப்பட்ட குறித்த கடற்படை வீரரின் மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த கடற்படை வீரரின் அயலில் வசித்தவர்கள் மற்றும் இரண்டாம் நபர் மூலம் தொடர்பை பேணியர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தையடுத்து 21 குடும்பங்கள் மகாகச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்திலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்பை பேணியதாக பம்பைமடுவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மகாகச்சகொடி கிராமம் தவிர குறித்த கடற்படை வீரர் சென்ற வர்த்தக நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றைச் சேர்ந்த 115 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு கொரோனோ இல்லை!!

கொரோனோ..

வவுனியா கச்சகொடி பகுதியை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.

வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 9 பேருக்குமான பிசிஆர் பரிசோதனைகளிற்கான மாதிரிகள் சேர்க்கும் பணி நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. அதற்கான முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது.

அதனடிப்படையில் கடற்படை உத்தியோகத்தரின் குடும்ப உறவினர்களான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், ஒருவரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும்தெரிவித்தார்.

கைகளைக் கழுவக் கூடியதான கால் அழுத்த சாதனம் : இலங்கை இளைஞனின் கண்டுபிடிப்பு!!

கை கழுவும் சாதனம்..

கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கைகளைக் கழுவிக் கொள்ளக் கூடியதான கால் அழுத்தத்துடன் இயங்கும் கை கழுவும் சாதனம் ஒன்றை கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

சாதாரணமாக காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனம் ஒன்றையே கண்டுபிடிப்பாளரரான AZ Tec ஐச் .எல்.எம் அஸீஸ் உருவாக்கி உள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் இவர் பல இயந்திரங்களை கண்டுபிடித்து சாதனைகள் படைத்தவர் என்பது குறிப்பிடதக்கது
கல்முனை பிரதேச செயலகத்துக்கு இந்த சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.

-மெட்ரோ நியூஸ்-

கொரோனா வைரஸ் மேலும் இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவும்!!

கொரோனா வைரஸ்..

கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு உலகம் முழுவதும் பரவும் என அமெரிக்கா தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 39 பேர் 652 பேர் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்து 2 ஆயிரத்து 435 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை ரஷ்ய பிரதமர் மிகாய்ல் மிஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் குணமடைந்த நிலையில், ரஷ்ய பிரதமருக்கு அந்த நோய் தொற்றியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புட்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 431 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு இதுவரை ஆயிரத்து 169 பேர் இந்த வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். 13 ஆயிரத்து 220 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!!

கொரோனா..

ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மார்ச் 17ம் திகதி அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ம் திகதி அன்று வீடு திரும்பினார்.

இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மே 11ல் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் : தீவிர நடவடிக்கையில் கல்வியமைச்சு!!

பாடசாலைகள்..

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படும்போது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுவது குறித்து கல்வி அமைச்சகம் மாகாண அளவிலான விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு பிராந்திய மட்ட அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி அமைச்சக செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்தா தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் முத்தரப்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளிகளை கிருமி நீக்கம் செய்வார்கள்.

கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது பாடசாலைகள் மே 11 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மாற்றியமைத்ததுள்ளது.

இதற்கமைய “மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மேலும் தாமதமாகுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. நாட்டின் நிலைமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் உறுதியாக மாற்றம் ஏற்படுமா இல்லையா, பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என திடமாக கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழ்ப்பாணத்தில் மயானத்திற்குள் நடந்தது என்ன : பொலிஸார் தீவிர விசாரணை!!

மயானத்திற்குள் நடந்தது என்ன..

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான சேமக்காலையில் உள்ள சில நினைவு கட்டங்கள் வி சமிகளால் சே தமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் யார் இப்படி செய்திருக்கமுடியும் என குறித்த விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளுக்கான விலைகளில் மாற்றமில்லை : அரசாங்கம்!!

எரிபொருட்களுக்கான விலை..

எரிபொருட்களுக்கான விலைகளில் மாற்றம் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்தாலும் இலங்கையில் விலைகள் குறைக்கப்படாது என விலை வீழ்ச்சியின் அணுகூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் அநேக நாடுகளில் எரிபொருளுக்கான கேள்வியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும், இலங்கையிலும் எரிபொருளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், எரிபொருள் விலை வீழ்ச்சியினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடையும் லாபம் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியினால் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நலன்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான விலை குறைத்தல் அதன் நலன்கள் ஒரு தப்பிற்கு மட்டுமே கிடைக்கும் எனவும் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களுக்கும் நலன்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் 500 குடும்பங்கள் பாதிப்பு!!

சிகையலங்கார நிலையங்கள்..

சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் 500 வரையிலான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அழகக கூட்டுறவுச் சங்க பொருளாளர் அந்தோனிப்பிள்ளை கிருபைராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அழகக சங்க தொழிலாளர்களின் நிலை தொடர்பில் இன்று கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செட்டிகுளம் தொடக்கம் ஓமந்தை வரையிலான எமது சங்கத்தில் உள்ள எமது அழககங்களை உள்ளடக்கி வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கமாக பதிவு செய்துள்ளோம். கொரோனா தாக்கம் காரணமாக எமது தொழில் செய்யும் 500 வரையிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் நாளாந்தம் இந்த தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தார்கள். கடந்த ஒன்றரை மாதங்காளக சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக மூடியுள்ளோம்.

எமது பாதுகாப்பு மட்டுமல்ல சமூக பாதிகாப்பையும் கருத்தில் கொண்டு நாம் மூடியிருக்கின்றோம். இதனால் எமது சங்க உறுப்பினர்கள் பலரது குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேறு தொழில் செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.

எனவே அரசாங்கம் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை ஏற்படுத்தி திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அல்லது எமது தொழிலாளர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 900 பில்லியன் ரூபா நட்டம்!!

கொரோனா வைரஸ்..

கொரோன வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 900 பில்லியன் ரூபா பொருளாதார நட்டம் ஏற்படும் என மூடிஸ் முதலீட்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நட்டம் 900 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2020ம் ஆண்டுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையினால் உலகப் பொருளாதாரம் சுமார் 900 பில்லியன் டொலர் பாதிப்பினை எதிர்நோக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இந்த பாதிப்பாளது ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் மொத்த பொருளாதாரத்தை விடவும் இந்த தொகை பெரியது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்த் தொற்று காரணமாக உலகப் பொருளாதாரம் மறை 3 வீத பொருளாதார வீச்சியையும், இலங்கை மறை 0.5 வீத பொருளாதார வீழ்ச்சியையும் பதிவு செய்யும் என பிரபல பொருளியியலாளர் மேர்வின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருவர் உயிரிழப்பு!!

தனிமைப்படுத்தல் முகாமில்..

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் இறந்தவர்கள் இருவரும் கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு குணசிங்கபுர பிரதேசத்தில் இருந்து முல்லைத்தீவு பகுதிக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் 80 வயதை கடந்தவர்கள் என்றும் முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இரண்டு வயோதிபர்கள் உயிரிழந்த விடயம் பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் யாசகம் பெற்று வந்த மற்றும் வீடுகள் அற்ற நிலையில் நிர்க்கதியாகியிருந்த 100இற்கும் மேற்பட்டவர்கள் கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் சுமார் 80 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று காலை சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர்களின் இரத்த மாதிரிகளை பெற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு   நேரத்தில்  உள்ளூர் மற்றும்  வெளியூர்களுக்கான  மரக்கறி மற்றும் பழவகைகளின்   மொத்த  மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல்  தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள்  மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே  கொள்வனவு செய்யக்கூடிய வகையில்  உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக  மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள்

 

அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து  பிற மாவட்டங்களுக்கு   மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற  மாவட்டங்களுக்கு பொருட்களை சந்தைபடுத்த விரும்பும் விவசாயிகளின் நலன்கருதி   பொருட்கள் சந்தைபடுத்தும் இடங்கள் மற்றும்  வெளிமாவட்டங்களுக்கு  அனுமதிக்கபட்ட  வாகனங்கள் தொடர்பான  விபரங்கள் இணைக்கபட்டுள்ளன.

அதேபோன்று  வெளிமாவட்டங்களுக்கு  பப்பாசி பழங்களை கொண்டு செல்வதற்கும்  வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

ரெட்லேடி  பப்பாசி பழத்த்திற்கான ஆகக்குறைந்த கொள்வனவு விலை  கிலோ ரூபாய் 20 /=  ஆகும்.  கிலோ ரூபாய் 20 /=க்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தொடர்பான முறைபாடுகள் கிடைக்குமிடத்து   ஊரங்கு நேர போக்குவரத்து அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

மேலும் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடிய விலைகளில் விற்பனை செய்வது தொடர்பாக கிடைக்கபெறும்   முறைப்பாடுகளின் அடிப்படையில்  ஊரடங்கு நேர வியாபார அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

முறைபாடுகளுக்க்கான தொலைபேசி இலக்கம்

024-2225511

தகவல்

கமநல அபிவிருத்தி  திணைக்களம்

வவுனியா

 

 

 

நீர் குழாயில் கை அசைவு முலம் கைகழுவும் முறையை கண்டுபிடித்த மாணவன்!!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கைகளை பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் கைகளை சுத்தம் செய்யவும் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி தொடுகை மூலம் அல்லாமல் கை அசைவு முலம் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி இயக்கம் மூலம் இயக்கும் நீர் குழாயில் கைகழுவும் வசதிகள் கொண்ட தொழிநுட்ப கருவியை மாணவனொருவர் கண்டுபிடித்துள்ளார்.

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் கடந்த வருடம் 2019 உயர் தரபிரிவில் பொறியியல் தொழினுட்பத்தில் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் எஸ்.அஷ்ஷாக் என்ற மாணவன் உருவாக்கியுள்ளார்.

இதனை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் பாடசாலை அதிபர்எம்.ஐ.ஜாபீர் முன்னிலையில் நேற்று அறிமுகம் செய்துள்ளார்.

அன்றாடம் நாம் நீர் குழாயினை தொடுகை மூலமே திறந்து கைகளினை கழுவி வருகின்றோம்.இதற்கு மாற்றமாக தொடுகை மூலம் அல்லாமல் தொழிநுட்ப முறையில் நீர் குழாயில் கையினை கழுவும் நுட்பமுறை கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளேன் .

இதனை இரு முறை மூலம் இயக்க முடியும் சென்சர் தொழிநுட்பத்தின் மூலம் அசைவினால்இயக்க முடியும் (0n/Off) மற்றையது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மூலம் குரல்பதிவை மேற்கொள்வதவன் ஊடாக இயக்க முடியும்.

(on/off) இதன் மூலம் எமதுசெயற்பாடுகளை தொடுகை இல்லாம் இலகுவாக மேற்க்கொள்ள முடியும் என்றும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.