கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் : விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படவுள்ள கடிதம்!!

கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை அதிபர்களின் தலைமையில் பெற்றோரின் உதவியுடன் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கான சிரமதானமும் இடம்பெறவுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பதை கணித்து கூற முடியாது : விசேட மருத்துவ நிபுணர்!!

கொழும்பில்..

அண்மைக்காலமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளதாக தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதே இங்கு ஆபத்தான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நோய் தொற்று உள்ளானவர்களின் பின்னணியை ஆராயும் போது, இவர்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள் என்பதுடன் பலருடன் கலந்து பழகக்கூடிய நபர்கள்.

இதனால், மேலும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை சரியாக கணித்து கூற முடியாது. எவ்வாறாயினும் அனைத்து நோயாளிகளையும் அடையாளம் காண தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுதத் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 15 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : குறைந்தளவு மக்கள் நடமாட்டம்!!

15 மணி நேரம் ஊரடங்கு தளர்வு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் அளவு குறைந்த அளவில் காணப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (09.04.2020) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள் , வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் நடமாட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலய மைதானத்தினுள் நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு , மன்னார் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்கான 3 பேரூந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளுக்கு பேருந்து சேவையில் ஈடுபடாததன் காரணமாக பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் காத்திருந்தமையினை காணக்கூடியதாகவிருந்தது.

வவுனியா நகரில் கடந்த ஊடரங்கு காலப்பகுதியில் விதிக்கப்பட்ட வீதித்தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் பாதுகாப்பு மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் ம துபான சாலைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் குடிமக்கள்!!

நீண்ட வரிசையில்..

வவுனியாவில் ம துபானசாலைகளுக்கு முன்னால் ம துப்போத்தல்களைப் வாங்குவதற்காக காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

வவுனியா உள்ளிட்ட 18 மாவட்டங்களின் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டுள்ளது.

கொரனா தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி பூட்டப்பட்ட ம துபானசாலைகள் ஒரு மாதத்தின் பின் இன்றைய தினமே மீள திறக்கப்பட்டன.

இந்நிலையில் ம துபானப் போத்தல்களை வாங்குவதற்காக அதிகளவிலான இளைஞர்களும், முதியவர்களும் நீண்ட வரிசையில் காவல் நின்று பெற்றுக் கொண்டனர்.

குறித்த ம துபான சாலைகளுக்கு முன்னால் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் வரிசையில் நின்றவர்களை சமூக இடைவெளிகளை பேணுமாறும் மாஸ்க் அணியுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையில் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா தொற்றாளர்கள்..

கொழும்பு- 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதியில் உள்ளவர்கள் ஆவர்.

192 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 122 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, இலங்கையில், 96 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சலூன்களுக்கு கட்டுப்பாடுகள்!!

சலூன்..

26 நாள்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு வரக் கூடும் என்பதால், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையால் பல்வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனால், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கும்விசேட அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்ட நாள்களாக நடைமுறையிலிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தங்களது பிரதேச செயலர்களுடாக சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும். முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும். மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும்.

உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக்கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என்று நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும்.

கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ’ஸ்பிறிற்’ மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்று நீக்கம் செய்யவும்.

தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். போர்வை, துவாய், பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும்.

பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும். இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

லண்டனில் அனாதையாக இறந்து கிடந்த மாமா : உடலை கண்டுபிடிக்க 6 நாட்கள் தவித்த மருமகள்!!

லண்டனில் அனாதையாக..

கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளைப் பெற்றிருந்த என்.எச்.எஸ் மருத்துவர் லண்டனில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கண்டுபிடிப்பதற்கு ஆறு நாட்கள் ஆகியுள்ளது.

பிலிப்பைன்சை சேர்ந்த 51 வயதான டொனால்ட் சுல்டோ 18 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். குடிபெயர்ந்த இவர் என்.எச்.எஸ்ஸில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது பிரித்தானியாவில் கொரோனா ருத்ரதாண்டவத்தை காட்டி வருவதால், என்.எச்.எஸ் ஊழியர்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதையடுத்து கொரோனாவிற்கான அறிகுறிகளைப் பெற்ற டொனால்ட் சுல்டோ தன்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பில் தனி ஒருவனாக இறந்து கிடந்துள்ளார். அதன் பின் அவரது உடலை கண்டுபிடிப்பதற்காக மருமகளான Emylene Suelto Robertson-க்கு ஆறு நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

இது குறித்து Emylene Suelto Robertson கூறுகையில், என்னுடைய மாம கொரோனாவிற்கான சாதமகான நோயாளியிடமிருந்து நான் நோயை பெற்றதாக கூறினார். அவர், தன்னிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, நோயாளி எனக்கு முன்னாள் இருமிக் கொண்டிருந்ததன் விளைவே இந்த வைரஸ் தன்னை பிடித்துவிட்டதாக என்னிடம் கூறினார்.

உடலின் வெப்பநிலையை பரிசோதித்த போது, அவர் மார்ச் 28-ஆம் திகதி முதல் ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். இதன் காரணமாக வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர் ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளையும் பெறவில்லை. அதன் பின் ஐந்தாவது நாளில் தொண்டை வலி இருப்பதை என்னிடம் கூறினார். அதன் பின் காய்ச்சல் இருந்ததாகவும் கூறினார்.

இதனால் நான் அவரை மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினேன். ஏனெனில் நான் ஸ்காட்லாந்தில் இருக்கிறேன், என்னால் செல்ல முடியாது என்பதால் அப்படி கூறினேன். அதன் படி அவர் என்.எச்.எஸ் அவசர எண்ணான 111-ஐ தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தொடர் அழைப்புகள் காரணமாக, அவரால் அதை பெற முடியவில்லை.

இதையடுத்து அவரை நான் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. நான் ஒரு வேளை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்த்தேன். இதையடுத்து கடந்த 7-ஆம் திகதி நண்பரை தொடர்பு கொண்டு, அதன் பின் அங்கு சென்று பொலிசாரை பார்க்கும் படி வற்புறுத்தினேன்.

ஆனால் பொலிசார், வீட்டில் யாரும் இல்லை என்றும், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினர். அதன் பின் நான் பொலிசாரை தொடர்பு கொண்டு, என்னை அறிமுகப்படுத்திய பின், பொலிசாரை மாமாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் சென்று பார்க்கும் படி கெஞ்சினேன்.

அதன் பின் அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்த போது, மாமா இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பொலிசார் அழைக்கப்பட்டு உடல் எடுத்து செல்லப்பட்டது.

இந்த நடைமுறைக்கு பின் எங்களுக்கு சில விடயங்கள் கடினமாக இருந்தது. ஏனெனில், எங்களுக்கு அதன் பின் யாருடனும் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை, மாமா இறந்த விஷயம் தெரிந்துவிட்டது, ஆனால் அவரின் உடல் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை,

பிலிப்பைன்ஸில் உள்ள எனது குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை அழைத்து, நாங்கள் உடலுடன் என்ன செய்கிறோம் என்று கேட்டார். கடந்த செவ்வாய் கிழமை வரை, இறந்த ஆறு நாட்களுக்கு பல்வேறு முயற்சிகளின் பயனாக, உடல் போப்ளர் கொரோனர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஏப்ரல் 2-ஆம் திகதி அன்று, தனது மாமாவுடன் கடைசியாக பேசினேன் என்று கூறி முடித்தார்.

இம்பீரியல் கல்லூரி ஹெல்த்கேர் என்.எச். எஸ் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், டொனால்ட் இறந்ததில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம், எங்கள் எண்ணங்களும் இரங்கலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இந்த கடினமான நேரத்தில் உள்ளன.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த தேசிய வழிகாட்டலை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். கொரோனா நோயாளிகளுக்கு டொனால்ட் ஒரு பகுதியில் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ சைக்கிளில் சென்ற மணமகன் : இறுதியில் நடந்த சம்பவம்!!

1000 கி.மீ சைக்கிளில் சென்ற மணமகன்..

இந்தியாவில் திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற மணமகன் பொலிசாரிடம் சிக்கி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

24 வயதான தொழிற்சாலை ஊழியரான சோனும்குமார் சவுகானுக்கு ஏப்ரல் 15ம் திகதி சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகாராஸ்குஞ்சில் திருமணம் நடைபெறவிருந்தது.

பஞ்சாப்பில் உள்ள லூதியானா நகரில் பணியாற்றி வந்த சோனும்குமார் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். அவரது திருமணம் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகாராஜ்குஞ்சில் நடைபெறவிருந்தது.

நண்பர்களுடனான கலந்துரையாடிய சோனும்குமார், 1,000 கிலோமீட்டர் பயணத்தை சைக்கிளில் தொடங்க முடிவு செய்து மூன்று நண்பர்களுடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டபோது அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது. “நாங்கள் வீட்டிற்குச் செல்ல ஒரு வாரம் இரவும் பகலும் சைக்கிள் ஓட்டினோம், ஆனால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பால்ராம்பூர் மாவட்டத்தில் பிடிபட்டோம்.

அடுத்த 150 கிலோமீட்டர் தூரத்தை நாங்கள் சென்றிருந்தால் நான் இப்போது திருமணம் செய்திருப்பேன், ஆனால் அதிகாரிகள் என்னை மேலும் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கவில்லை என சோனும்குமார் கூறியுள்ளார்.

பிடிப்பட்ட மணமகன் சோனும்குமார் உட்பட நான்கு பேர் தற்போது அரசாங்க தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு நபர்களும் அறிகுறிகளைக் காட்டாவிட்டால் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

16வருடம் காத்திருந்த தாய்க்கு விடை கொடுத்த கொரோனா : கால்நடையாக வந்தடைந்த மகன்!!

16வருடம் காத்திருந்த தாய்..

சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார்.

சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். கணவரை இழந்த அவரது 3வது மகன் பாண்டியராஜன் 16 வருடங்களுக்கு முன் காணமல் போய்யுள்ளார்.

காவல் நிலையத்தில் புகாரளித்தும், கண்டுபிடிக்க முடியாமல் தாய் திணறிவந்துள்ளார். காலப்போக்கில் தனது மகனின் நினைவுகளோடு தனது பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார் லட்சமி.

இந்ந நிலையில், மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இதை கண்டு லட்சுமிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருந்தது பற்றி பாண்டியராஜனிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சினிமா ஆசையில் வீட்டில் சொல்லாமல் சென்னைக்குச் சென்றேன்.

ஆனால், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த வேலையைச் செய்து வந்தேன். நல்ல நிலைக்கு வந்த பிறகு வீட்டுக்குச் செல்வோம் என்று வாழ்ந்ததில் காலம் ஓடிவிட்டது. பாண்டியராஜன் (ஆர்.எம்.முத்துராஜ்) இந்தக் கொரோனா ஊரடங்கால் சென்னையில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. தங்க இடமில்லை, உணவு கிடைக்கவில்லை.

உதவி செய்யவும் யாரும் இல்லை. வேறு வழி தெரியவில்லை. அதனால், என் அம்மாவைத் தேடி வந்துவிட்டேன். சென்னையிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய எனக்கு வழியில் விசாரித்த பொலிசார் உணவு வழங்கினார்கள்.

பின்பு காய்கறி வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். இப்படி பல வண்டிகள் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

வலியால் துடிதுடித்த பெண் : வெளியே வந்த குழந்தையின் தலை : நடுரோட்டில் நடந்த பிரசவம்!!

நடுரோட்டில் நடந்த பிரசவம்..

தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர், இப்பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணை தூக்கிக்கொண்டு கணவர் வரும் போதே வலி அதிகரித்துள்ளது, எனவே அங்கிருக்கும் அலுவலகம் முன்பு மனைவியை அமரவைத்து விட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்படியே ஆட்டோ ஓட்டுநரும், எழுத்தாளருமான சந்திரன் என்பவருக்கும் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சந்திரன், பெண்ணை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல முற்படுகையில் குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது.

உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்துள்ளார், அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை அறுத்து, தாய்- சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை படத்திற்கு கருவான லாக் அப் என்ற புத்தகத்தை எழுதியவர் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை : கதறி அழுத மகன் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..

தமிழகத்தில் தந்தையின் உடலுக்கு அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மகனுக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26-ஆம் திகதி உடல் நிலை சரியில்லாமல் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

இதை அறிந்த கோயம்பேடு பொலிசார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பெயர் சங்கர் என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்தவர் என்பதும், இவரது மகன் கொடுங்கையூரில் வசிப்பதும் தெரியவந்துள்ளது.

அதன் பின், பொலிசார் கொடுங்கையூரில் உள்ள முதியவரின் மகன் நந்தக்குமாரை தொடர்புகொண்டு, உங்களுடைய தந்தை சங்கர், இறந்து விட்டார். கீழ்ப்பாக்கம் அரக மருத்துவமனையில் அவரது உடல் உள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கு நந்தகுமார். நான் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாதமாக நான் வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வாடகைகூட தர முடியாமல் உணவுக்கு கூட தினம் தினம் தவித்து வருகிறேன். என்னுடைய தந்தையை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.

நந்தகுமாரின் பரிதாப நிலையை பார்ர்த்து மனம் வருந்திய இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த சங்கர் உடலை வாங்கி தன் சொந்த செலவில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து முதியவர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா : மூடப்பட்ட கொழும்பு காசல் மருத்துவமனை!!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா..

உலகளாவிய ரீதியில் அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள் காரணமாக பற்பல நாடுகள் எல்லைகளை மூடி அவசர நிலை பிரகடனம் செய்திருந்தது. அந்த வகையில் இலங்கையிலும் சில தொற்றுக்கள் இருந்தமையால் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்படாமல் இருந்த நிலையில் நாளைய தினம் சில மாவட்டங்கள் தவிர்த்து பல பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக இன்றைய தினம் உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அம் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து காசல் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் காசல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக கர்ப்பிணிப் பெண் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டார். எனினும் காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுவரையில் இலங்கையில் 260 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 96 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

நாக்கை அறுத்து அம்மனுக்கு படைத்த இளைஞன் : காரணம் என்ன தெரியுமா?

விவேக்..

கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டில் வரும் 3-ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தொழிலாளர்களில் ஒருவர் விவேக், இவர் மத்திய பிரதேச மாநிலதைச் சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது சக நண்பர்களிடம் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி அங்கிருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கோவில் பூசாரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்து வந்த பொலிசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு இவ்வாறு அறுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏறுபவர்களுக்கும் சாரதிகளுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

நாட்டின் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்துள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேலும் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சமூக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக இது தொடர்பாக ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் கபிலா ஜெயரத்ன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக ஆபத்து உள்ள மாவட்டத்திலிருந்து குறைந்த ஆபத்துள்ள மாவட்டத்திற்குச் செல்வது நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதாரம் பராமரிக்கப்பட வேண்டும், வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஜெயரத்ன சுட்டிக்காட்டினார்.

நாளை (20) முதல் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தங்கள் கடமைகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கபிலா ஜெயரத்ன தெரிவித்தார். முச்சக்கர வண்டியில் ஒருவரை ஏற்றுவதற்கு முன்பு இருக்கையை கழுவுதல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) அரசுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்த இரு பெண்கள்!!

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து..

தீவிரமாக ஹெ ரோயின் போ தைப்பொருளுக்கு அடிமையான நபர்கள் வெலிகந்தை, கந்தகாடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சிலர் நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த நபர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமது ஆடைகளை களைந்து விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

அந்த அளவுக்கு இந்த பெண்கள் மிக மோசமாக ஹெ ரோயின் போ தைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்களை போ தைப்பொருளில் இருந்து மீட்பதற்காக புனர்வாழ்வு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

-தமிழ்வின்-