வவுனியாவில் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி!!

அ ஞ்சலி..

உ யிர்த்த ஞா யிறு வ ன்மு றை யில் கொ ல்லப்பட்டவ ர்களுக்கு வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இ ன்று (21.04.2020) காலை அ ஞ்சலி செ லுத்தப்பட்டது.

2019 ஏப்ரல் 21 உ யிர்த்த ஞா யிறு அ ன்று இலங்கையின் தலைநகர் கொ ழும்பு உ ட்பட மூ ன்று ந கரங்bகளில் ந டத்தப்ப ட்ட வ ன்மு றை யில் அ ப்பாவி பொ துமக்க ள் ப லர் கொ ல்லப்பட் டனர்.

மூ ன்று கி றிஸ்தவ தே வாலயங்களிலும் மூ ன்று ஐ ந்து ந ட்சத்திர உ ணவு வி டுதிகளிலும் இ த்தொ டர் கு ண்டு வெ டிப்பு கள் கா லை 08.30 இற் கும் 09.15 ம ணிக்குமிடையில் நி கழ்த்தப்ப ட்டது.

இ தில் வெ ளிநாட்டவர்கள், கா வல்துறை யினர் உ ட்பட கு றைந்தது 253 பே ர் வ ரை கொ ல்லப்ப ட்டனர். 500க்கும் மே ற்பட்டோர் கா யமடைந் தனர்.

இ வர்களின் நி னைவாக வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆ லயத்தில் கு ண் டு வெ டி ப்பு ந டைபெற்ற நே ரமான காலை 8.30 ம ணி மு தல் 9.21 ம ணி வ ரை உ ள்ள நே ரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செ லுத்தப்பட்டது.

ஜூன் 20ம் திகதி தேர்தல் : விசேட வர்த்தமானி வெளியானது!!

தேர்தல்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் பொதுத் தேர்தல் மீண்டும் பின்தள்ளிவைக்கப்படும் விசேட வர்த்தமானி இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் 2020 ஜூன் 20ம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை காரணம் காட்டி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், சுகாதார அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

அதனையடுத்தே தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்துவதென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரும் அரசியல்கட்சிகளின் செயலர்களை சந்திக்கவுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதிகள் வழங்கி வைப்பு!!

ஒலிபெருக்கி தொகுதிகள்..

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மமுனசிங்கவினால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

வவுனியா பொலிஸ் நிலைய நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டும், தகவல்களை பரிமாறும் பொருட்டும் இந்த ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்ம முனசிங்க, வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஆர்.மானவடு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை : சுவிஸ் போதகர் அதிரடி!!

சுவிஸ் போதகர்..

யாழில் கொரோனா பரவ தான் காரணம் இல்லை என யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என கூறப்படும், சுவிஸ் போதகர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசத்திற்கு நானும் எனது சபையாரும் அநேக தரம் வந்து போகின்றோம். அதற்கு காரணம் என்னவென்றால் நானும் எனது சபையார் யாவரும் இலங்கை தேசத்தையும் இலங்கை மக்களையும் அதிகமாக நேசிக்கின்றோம்.

அதிகமாக உபவாசத்தோடு கூட சபை மக்களாய் சேர்ந்து இலங்கைக்காக இலங்கை மக்களுக்காக பிரார்த்தனைகளை முன்னெடுத்திருக்கிறோம். அதேபோல தான் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி கொழும்பு விமான நிலையத்தில் நானும், என்னுடைய மனைவியுமாக வந்து இறங்கினோம்.

வியாதிகளை கண்டறியும் கருவிகள் ஊடாக நாம் சென்றோம். எங்களுக்கு ஒரு வியாதியும் அங்கே இருக்கவில்லை. நாங்கள் வந்த காரியங்களை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கே எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் வழிபாடுகள் நடந்தன.

அதேபோல் எங்களுடைய சபையிலும் வழிபாடுகளை நாங்கள் நடத்தினோம். அங்கே எல்லாரும் வரவில்லை. அருகிலிருந்த குறிப்பிட்ட சிலரே வந்திருந்தனர். நாங்கள் எங்களுடைய ஆராதனையை எந்த செய்தி தாளிலும் விளம்பரம் செய்யவில்லை. சாதாரணமாய் ஆராதனை நடத்தினோம்.

சீக்கிரமாக ஆராதனையை முடித்து விட்டு சீக்கிரமாக அனைவரையும் அனுப்பி விட்டு நான் கொழும்புக்கு கிளம்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள விடயம் காணொளியில்,

முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து : மூவர் படுகாயம்!!

மூவர் படுகாயம்..

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வெவசிறிகம பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து விபத்தில் காமடைந்தோர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்காப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(20.04.2020) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வென்ராசன்புர மற்றும் வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 23, 21, மற்றும் 25 வயதுடைய மூவரே படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்று எதிர்வரும் நாட்களில் ஆபத்தாக அமையும் : பபா பலிஹவடன!!

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்று எதிர்வரும் நாட்களில் இலங்கையில் ஆபத்தாக அமையும் என சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவம் மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் சில மாவட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்து கவனம் செலுத்தும் போது இந்த அபாய நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் சுவாசப்பை தொடர்பிலான ஏதேனும் உபாதைகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டுமென டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு..

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக சமூகத்தில் பரவாத போதிலும் எதிர்வரும் இரண்டு வாரங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நோய் அறிகுறிகள் தென்படாத நோய் தொற்றாளி ஒருவரினால், நோய் தொற்று மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே மக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களிலும் மிகுந்த அவதானத்துடன் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை : சிக்கிய வர்த்தகர்!!

சிக்கிய வர்த்தகர்..

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (20.04.2020) காலை தொடக்கம் மதியம் வரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு அதிக விலைக்கு எண்ணையினை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா நகரில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

,

பஜார் (பொலிஸ் நிலையத்திற்கு பின்பக்கம்) பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் எண்ணை கலனில் ஒட்டப்பட்டிருந்த விலையினை நீங்கி அதிக விலைக்கு எண்ணையினை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் ஒர் வர்த்தகர் எண்ணை கலனில் ஒட்டப்பட்டிருந்த விலையினை வெட்டி நீக்கி இவ்வாறு மக்களுக்கு அதிகளவான விலையில் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திறக்கப்பட்ட ம துபானக் கடைகள் : அறிவிப்பை திரும்பப்பெறுமாறு கோரிக்கை!!

ம துபானக் கடைகள்..

நாட்டை நேசிக்கும் அனைவரும் ம துபான சாலைகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் அறிவிப்பை கேட்டு திகைத்துப்போயுள்ளதாக ம துசாரம் மற்றும் போ தை தகவல் நிலையமான எடிக் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ம துபானகங்களை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எ திராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடிக் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விஞ்ஞான ரீதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம் தற்போது அதனை கைவிட்டு ம துபானகங்களை திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எடிக் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் வழிகாட்டலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ம துபான அகங்களை திறக்கும்போது அதனை அருந்துவோர் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க ஏதுக்கள் உள்ளன.

ம துபானகங்கள் திறக்கப்பட்டால் விபத்துக்கள் அதிகரிக்கும். இது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினருக்கு மேலதிக பாரத்தை கொடுக்கும்.

வீடுகளில் வ ன்முறைகள் ஏற்பட்டு அதுவும் சுகாதாரத்துறையினருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் ம துபான அகங்களை திறக்கும்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதற்கு வழியேற்படும் என்று எடிக் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் : ஊரடங்கு தொடர்பான முழு விபரம் இதோ!!

ஊரடங்கு தொடர்பான முழு விபரம்..

எதிர்வரும் வார இறுதி நாட்களான 25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும், முழு நேர ஊரடங்கு நிலைமை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களிலும், நாள்தோறும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்மாவட்டங்களில் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு 57 மணி நேரம் நீடித்து 27 ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் எனவும் ,

மேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் தற்போதும் தொடரும் ஊரடங்கு நிலைமையும் எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடரும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

அதன்படி, ஏற்கனவே மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நாளை 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்த தீர்மமானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் 11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதுடன், புத்தளம் மாவட்டத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா தொற்று பரவலுக்கான தேசிய நடவடிக்கை மையம் நேற்று கொழும்பில் பதிவான தொற்றாளர்களை கவனத்தில் கொண்டு உடனடியாக இரவோடிரவாக கூடி விஷேட தீர்மானங்களை நிறைவேற்றியது.

இதனையடுத்து நாளை மறுதினம் 22 ஆம் திகதி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கை நீக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அந்த நான்கு மாவட்டங்களினதும் அனைத்து பகுதிகளுக்குமான ஊரடங்கு நிலை எதிர்வரும் திங்கள் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய 21 மாவட்டங்களில் (அலவத்துவல, வறக்காபொல, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகள் தவிர) ஊரடங்கு பகல் வேளையில் இந்நாட்களில் தளர்த்தப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வெளியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

வவுனியா வைத்தியசாலையில் சிறுமி திடீர் மரணம் : கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் இரத்த மாதிரி!!

சிறுமி திடீர் மரணம்..

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தேக்கவத்தை பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த சிறுமி கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரி பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொண்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கொ ரோனா ச ந்தேகம் : திருகோணமலையில் வ யோதிபர் எடுத்த வி பரீத முடிவு!!

ச ந்தேகத்தில்..

திருகோணமலையில், இ ருமல் கா ணப்பட்டமையினால் கொ ரோனாவாக இ ருக்கலாம் எ ன்ற ச ந்தேகத்தில் வ யோதிபர் ஒ ருவர் வீ ட்டிலிருந்து செ ன்று தூ க்கில் தொ ங்கி நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார்.

இ வ்வாறு மீ ட்கப்பட்டவர் திருகோணமலை-பூம்புகார் வீதி, அம்பியர் லே ன் ப குதியைச் சே ர்ந்த பெருமாள் சோலைமுத்து (70 வ யது) எ னவும் பொ லிஸார் தெ ரிவித்தனர்.

கு றித்த வ  யோதிபர் கடந்த 16ஆம் தி கதி கா ணாமல் போ யிருந்த நி லையில் இ ன்று ம ரத்தில் தொ ங்கிய நி லையில் ச டலமாக க ண்டெடுக்கப்ப ட்டுள்ளதாக தெ ரியவருகி ன்றது. ச ம்பவம் கு றித்து தெ ரியவருவ தாவது,

வி றகு வெ ட்டுவதை தொ ழிலாகக் கொ ண்ட இ வர், தொ ய்வு நோ யினால் பா திக்கப்பட்டிருந்த நி லையில் இ ருமல் ம ற்றும் த டிமல் கா ணப்பட்டதாகவும் இ தனையடுத்து இ வரை ப ரிசோதனை செ ய்ய வே ண்டும் எ ன்று கூ றியதை அ டுத்து, க டந்த 16ஆ ம் தி கதி மு தல் கா ணாமல் போ யுள்ளார்.

இ ந்தநி லையில் இ வரது ம கன் ம ற்றும் அ வரது ந ண்பர்கள் இ ணைந்து வி றகு வெ ட்டச் செ ல்லும் கா ட்டு ப குதிகளை தே டியபோ து ம ரத்தில் தொ ங்கிய நி லையில் ச டலம் ஒ ன்று க ண்டெடுக்கப்பட் டதாகவும்,

ச டலத்தை திருகோணமலை தி டீர் ம ரண வி சாரணை அ திகாரி ஏ. எஸ். எம். ரூமி செ ன்று பா ர்வையிட் டதுடன் ச டலத்தை சட்ட வை த்திய ப ரிசோதனைக்குட்ப டுத்துமாறு பொ லிசாருக்கு க ட்டளையிட்டார்.

தூ க்கில் தொ ங்கிய நி லையில் மீ ட்கப்பட்ட ச டலம் த ற்போது ச ட்ட வை த்திய ப ரிசோதனைக்காக திருகோணமலை பொ து வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டுள்ளதாகவும், வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருவதாகவும் உப்புவெளி பொ லிஸார் தெ ரிவித்தனர்.

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த எண்ணிக்கை 303ஆக அதிகரிப்பு!!

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று..

இலங்கையில் புதிதாக 8 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிகை 303ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மாத்திரம் இதுவரை 32 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை 24 கொரோனவைரஸ் தொற்றாளிகளும் மாலை 4 மணியளவில் 8 தொற்றாளிகளும் இனங்காணப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 8 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாவர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை ஒருவர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தில் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு சேவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமையை அடுத்தே அந்த திணைக்களம் இன்று காலை மூடப்பட்டது. இது தொடர்பில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் உருவானதுதான் கொரோனா : பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்!!

கொரோனா..

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்தது என்பது பழமொழி. அதுபோலவே எச்.ஐ.வி. க்கு மருந்து கண்டுபிடிக்கப் போய் கொரோனா உருவாகி விட்டதாக பிரான்ஸ் விஞ்ஞானி தகவல் வெளியிட்டுள்ளார்.

சீனா வுஹான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா வைரஸ் என நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகர கடல்வாழ் உணவுப்பொருட்கள் சந்தையில் உருவானது என ஆரம்ப கட்ட தகவல்கள் கூறின.

ஆனால் இப்போது உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில்தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு, அது கசிந்து வெளியே வந்து பரவியுள்ளதாக அமெரிக்க டெலிவிஷன் ஒன்று பிரத்யேக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்துகிறது.

இந்தநிலையில் வுஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, லூக் மாண்டாக்னியர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதையொட்டி அவர் பிரான்ஸ் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “உலகமெங்கும் பேரழிவை ஏற்படுத்தும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்), வுஹான் நகர ஆய்வுகூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான்” என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிப்புக்காக 2008-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் இன்னும் நீங்கவில்லை : வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி எச்சரிக்கை!!

யாழில் கொரோனா வைரஸ்..

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதன வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

கொரோனா வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவரையில் 17 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் தற்போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் நால்வரும் அரியாலையப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களது விடுகளுக்கே நேற்று அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இதே போல யாழில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்ற மேலும் சிலரும் குணமடைந்து வருகின்ற நிலையில் அவர்களும் விரைவில் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவ்வாறான நிலைமையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டதாக கருத முடியாது.

எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொது மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அதனுாடாகவே தொற்று ஏற்படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

கொரோனா வைரஸ்..

2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்? அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும்.

சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது வயது, பாலினம் மற்றும் ஒருவரது உடல்நலப் பிரச்சனைகளையும் சார்ந்ததாகும். நீங்கள் எந்தளவிற்கு எவ்வளவு காலம் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்களோ, அதையும் பொறுத்தே நீங்கள் எப்போது குணமடைவீர்கள் என்பது இருக்கிறது.

லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தால் என்ன செய்வது? கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இரண்டு முக்கிய அறிகுறிகளே தென்படும். ஒன்று இருமல். மற்றொன்று காய்ச்சல்.

ஆனால் சிலருக்கு இந்த அறிகுறிகளோடு, உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும். ஆரம்பத்தில் வறட்டு இருமலே இருந்தாலும், போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும். அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, நல்ல ஓய்வு மற்றும் பாராசிடமால் போன்ற வலி நிவாரணிகளை கொடுத்து இதனை சரி செய்ய முடியும்.

லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், விரைவாக குணமடைந்துவிடுவார்கள். இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

– BBC – Tamil