வவுனியா உட்பட வடமாகாணத்தை சேர்ந்த 64 பேரின் பரிசோதனை முடிவுகள் இதோ!!

பரிசோதனை முடிவுகள்..

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேரின் இரத்த மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தோற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்யமூர்த்தி இதற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்பாணத்தில் இடம்பெற்ற குறித்த மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கின்றதா என சோதனை செய்வதற்கான இரத்த மாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணிகளே நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 14 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன் அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

குறித்த இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 30 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 11 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேர், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவரும் என 9 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த 50 பெரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸுக்கு இலக்கான அடுத்த கண்டம் : 3 லட்சம் மக்கள் உயிரிழப்பர் : WHO எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த மையப் புள்ளியாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இந்த தொற்றுநோய் ஆப்பிரிக்காவில் குறைந்தது 300,000 மக்களைக் கொன்று கிட்டத்தட்ட 30 மில்லியனை வறுமையில் தள்ளும் என்று ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் முதல் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் கிட்டத்தட்ட 1,000 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 19,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த பாதிப்பு என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை விட மிகக் குறைந்த எண்ணிக்கையாகத்தான் இப்போதைய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்காவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் கொரோனாவால் ஆப்பிரிக்காவில் 300,000 பேர் இறக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதோடு ஆப்பிரிக்க கண்டத்தின் பாதுகாப்பிற்கு 100 பில்லியன் டொலர் இப்போது தேவை என்று கூறுகிறது.

இந்த கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்களில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கு போதிய அளவிலான வென்டிலேட்டர்கள் இந்த கண்டத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. அத்துடன் கிட்டத்தட்ட 60% நகரவாசிகள் நெரிசலான சேரிப் பகுதியில் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழல்கள் தான் கொரோனா வைரஸ் அதிகமாக தொற்றக்கூடிய சூழ்நிலைகள் ஆகும்.

அல்ஜீரீயாவில் பாதிப்பு ஆபிரிக்காவில் கிட்டத்தட்ட 19,000 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஆப்பிரிக்காவின் முழு கண்டத்திலும் குறைந்தது 970 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் சுமார் 1.3 பில்லியன் சனத்தொகை உள்ளது.

வட ஆபிரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதி. அல்ஜீரியா, எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 100பேர் இந்த பகுதிகளில் இறந்துள்ளனர். அல்ஜீரியாவில் மட்டும் 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் 2,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் ஆப்ரிக்கா கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் உள்ள 200 மில்லியன் மக்கள் தொகையில் 13 பேர் இதுவரை கொரோனாவல் இறந்துள்ளனர்.

ஐரோப்பா கண்டம் மற்றும் அமெரிக்கா கண்டத்தோடு ஒப்பிடும்போது மிக குறைவான வைரஸ் தொற்று இருப்பதற்கு காரணம் குறித்து WHO ஆப்பிரிக்காவின் இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஏனைய கண்டங்களோடு ஒப்பிடுகையில் ஆப்பிரிக்காவில் சர்வதேச அளவில் பாதிப்புக்குள்ளானோர் குறைவாகவே உள்ளனர்.

ஆனால் இப்போது வைரஸ் ஆப்பிரிக்காவிற்குள்ளும் பரவி இருப்பதால், அது வேறு நாட்டைப் போலவே விரைவாகவும் பரவுகிறது என்ற அனுமானத்தின் கீழ் தனது அமைப்பு செயல்பட்டு வருவதாக” அவர் தெரிவித்தார்.

வைரஸ் இப்போது தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன் மற்றும் கானாவில் பெரிய நகரங்களில் இருந்து சிறிய பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. வைரஸ் இதுவரை பரவாத சுமார் 15 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன, இந்த நாடுகள் வலுவான சமூக தொலைதூர நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவை வைரஸை உள்ளே வரவிடமால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆப்பிரிக்க உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையம் இதுதான் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையமாக ஆபிரிக்க கண்டம் மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆபிரிக்க கண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கு காரணம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஆபிரிக்க கண்ட நாடுகளில் மாத்திரம் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை இறக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆபிரிக்க கண்டத்தில் சுமார் மூன்று கோடி மக்கள் வறிய நிலைமைக்கு செல்லக் கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஆபிரிக்காவில் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்து காணப்படுகிறது.

எனினும் ஆபிரிக்காவில் சன நெருக்கடி மிக்க நகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடும் எனவும், மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அதனை கட்டுப்படுத்துவது சிரமமாக அமையலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 343 பேர் இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 7 ஆயிரத்து 892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலையில்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பை பதிவு செய்து வந்தது.
இந்த நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் இறுதியில் சற்று வீழ்ச்சியுடனே முடிவடைந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

அதிலும் இன்றோடு மூன்றாவது நாளாக சரியும் சர்வதேச தங்கத்தின் விலையானது தற்போது அவுன்ஸுக்கு 28.7 டொலர் குறைந்து 1,702.85 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கிட்டதட்ட 1.63% வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த எட்டு சந்தை தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, இன்று ஒரே நாளில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1,470 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிட்டதட்ட 3.11% வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் கிராம அலுவலங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ள மக்கள்!!

ஊரடங்கு நேரத்தில்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள தோணிக்கல், கோவில்குளம் உட்பட பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முகமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலப்பகுதியில 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை வீடு வீடாக சென்று பதிவுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறவித்தல் விடுத்திருந்தது.

எனினும் வவுனியாவில் இன்றையதினம் (18.04.2020) காலை 9.00 மணி தொடக்கம் தற்போது வரை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்காக ஊடரங்கு சட்டத்தினை மீறி (வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில்) மக்களை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களில் 200க்கு மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளி பேனாது முகக்கவசம் போன்ற இல்லாமல் வரிசையில் காத்துநின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

திடீரென சீனாவில் ஏற்பட்ட மாற்றம் : கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!!

சீனாவில் ஏற்பட்ட மாற்றம்..

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத்தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது.

இதனால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குறிப்பாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது.

மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாகத்திற்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு இன்றைய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது.

கொரோனா பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் இன்று தான் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது இன்று மட்டும் கொரோனா தாக்கத்திற்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் கொரோனா தாக்கத்திற்கு இன்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக சீனாவில் பெப்ப்ரவரி 23-ம் திகதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் இன்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.

வுகான் நகரில் ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ? என்ற கருத்துக்களும் மக்களிடையே எழுந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 39 ஆயிரத்து 082 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 913 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகிறதா?

ஊரடங்கு சட்டம்..

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களை தவிர ஏனைய 19 மாவட்டங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் திறக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், இந்த 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் TRANSIT விமானங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேவேளை முடக்கப்படடுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் 19 மாவட்டங்கள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்படும் நிலைமைக்கு அமைய இது தீர்மானிக்கப்பட உள்ளது. இதனிடையே அரச ஊழியர்களின் கடமைகளை பகுதிப் பகுதியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொழும்பு உட்பட அவதானத்திற்குரிய மாவட்டங்களில் உள்ள அரச அலுவலங்களுக்கு தினமும் ஒரு பகுதி ஊழியர்களை மாத்திரம் வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் அரச அலுவலங்களில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீதமுள்ள நான்கு நாட்களும் வீடுகளில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும்.

அடுத்த நாள் அரச அலுவலங்களுக்கு வந்து கடமையாற்றும் ஊழியர்கள் அடுத்த நான்கு தினங்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். இவ்விதமாக ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்கள் தினமும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

-தமிழ்வின்-

கனடாவில் கொரோனா தொற்றால் இலங்கை தமிழ் தம்பதி மரணம் : பெற்றோரை இழந்து தவிக்கும் மூன்று மகள்கள்!!

நாகராஜா தேசிங்குராஜா..

கனடாவில் இலங்கை தமிழ் தம்பதி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று மகள்களும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். ஒன்றாறியோவின் பிராம்டனில் வசித்து வந்தவர் நாகராஜா தேசிங்குராஜா (61). இவர் மனைவி புஷ்பராணி (56). தம்பதிக்கு 29, 22, 19 வயதுகளில் மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாகராஜா மற்றும் புஷ்பராணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மகள்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெற்றோர் உயிரிழந்துவிட்டதால் மூவரும் மனதளவிலும், உடல் அளவில் மிகுந்த வலியை அனுபவித்து வருகின்றனர். இது குறித்து உயிரிழந்த தம்பதியின் உறவினர் நாதன் கதிர்காமநாதன் கூறுகையில், கடந்த 2ஆம் திகதி நாகராஜா மற்றும் புஷ்பராணி ஆகிய இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தார் பரிசோதனை செய்த போது அனைவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் ஏப்ரல் 13ஆம் திகதி புஷ்பராணியும், 15ஆம் திகதி நாகராஜாவும் உயிரிழந்தனர். இருவரும் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது, இருவரும் சேர்ந்து இறந்ததற்கு காரணம் உள்ளது. திருமணமான 30 வருடத்தில் மனைவியை நல்லபடியாக நாகராஜா கவனித்து கொண்டார்.

நாகராஜா Gate Gourmet Canada-ல் பணிபுரிந்து வந்தார். அதே சமயம் பகுதி நேர பணியாக உதயன் என்ற தமிழ் பத்திரிக்கையை Bramptonல் உள்ள கடைகள் மற்றும் கோவில்களில் வழங்கி வந்தார். அவர் கடைசியாக மார்ச் 27ஆம் திகதி தான் பத்திரிக்கையை வழங்கியுள்ளார்.

அதனால் நாகராஜா சென்ற தமிழ் கடைகள், இலங்கையர்கள் கடைகள் மற்றும் மூத்தவர்களின் குடியிருப்புகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் தம்பதியரின் மூன்று மகள்களுக்கு நிதி உதவி செய்ய குடும்ப நண்பர் ஒருவர் GoFundMe மூலம் நிதி வசூல் செய்து வருகிறார். அதில் வியாழன் பகல் வரை கிட்டத்தட்ட $60,000 வரை நிதி சேர்ந்துள்ளது.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : பொலிஸார் எச்சரிக்கை!!

பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் சிலர் இந்த அனுமதி பத்திரங்களை தவறாக உபயோகித்து வருவதாக தெரியவருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி பத்திரங்களை தவறாக பயன்படுத்தி சிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவைச் சேர்ந்த 14 பேரின் கொரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியானது!!

பரிசோதனை முடிவுகள்..

வவுனியாவில் நேற்றயதினம் சேகரிக்கப்பட்ட 14 பேரின் இரத்தமாதிரிகளில் கொரோனோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்பாணத்தில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளை கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்தவர்களிற்கு கொரோனோ வைரஸ்தாக்கம் இருக்கின்றதா எனசோதனை செய்வதற்கான இரத்தமாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்ட பணிகள் நேற்றயதினமும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை, புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 8 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன்,

அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் போக்குவரத்து சேவைகள்!!

போக்குவரத்து சேவைகள்..

எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து நடாத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமல் காணப்பட்டால் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகள் மற்றும் மார்க்கங்களில் எச்சில் துப்புதல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், யாசகம் எடுத்தல் ஆகியனவும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும் ஒரு மீற்றர் இடைவௌியைப் பேணுவதையும் கட்டாயமாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை 2 நாட்களுக்கு ஒரு தடவை கிருமித் தொற்று நீக்கம் செய்வதற்கும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான கிருமி நாசினிகளைபி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினூடாகப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்றாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கை சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சாரதிகளுக்கு..

2020 மார்ச் 10ஆம் திகதியன்று காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருப்பவர்கள் அதனை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த அனுமதிபத்திரங்களை புதுப்பிக்க ஏப்ரல் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படி காலம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு காருக்குள் தங்கியிருந்து பரிதாபமாக இறந்து போன தமிழர்!!

ராஜேஷ் ஜெயசீலன்..

இங்கிலாந்தின் வாடகை டக்ஸி செலுத்துனரான தமிழர் ஒருவரின் மரணம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, அவரது வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தா க்கத்துடன் காருக்குள்ளேயே அவர் வாழ்ந்த துயரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ஹாரோவில் வசித்து வந்த ராஜேஷ் ஜெயசீலன், இந்த மாத தொடக்கத்தில் கோவிட் -19 க்கு தொற்றுக்குள்ளானது உறுதியானது. 45 வயதான இவர், இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்தவர். அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் பெங்களூரிலேயே வசித்து வருகிறார்கள்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அவர் இறப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசினார். மார்ச் 25 அன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் அவர் கடைசியாக பயணிகளை அழைத்துச் சென்றார்.

அவரது நண்பரான சுனில் குமார் தெரிவித்தபோது, அந்த பயணத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் கொரோனா அறிகுறிகளை ஜெயசீலன் உணர்ந்தார். ஏப்ரல் 3 ஆம் திகதி அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டக்ஸி சாரதியாகன ஜெயசீலன் பணிபுரிவதால், வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்து, அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இறப்பதற்கு இரண்டு வாரங்களின் முன்னர்தான் அவர் தனது பிளாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். உடனடியாக புதிய வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓரிரு நாட்கள் அவர் தனது காரில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஹாரோவிலும் தங்கியிருந்தார்“ என்றார்.

அவர் வைரஸால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சமயத்தில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தனது காரில் பயணிகளை அழைத்துச் சென்றிருந்தார். கோவிட் -19 இன் அறிகுறிகளைக் காட்டிய பின்னர், ஜெயசீலன் வேலைக்குத் திரும்பவில்லை. சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார்.

பிரித்தானிய சுகாதார சேவைகள் இந்த நடைமுறையைத்தான் பரிந்துரைக்கிறது.ஜெயசீலனின் நிலை மோசமடைந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி வாரங்களில் நிறைய போ ராடினார். சமைக்கவோ அல்லது வெளியே செல்லவோ அவருக்கு சக்தியிருக்கவில்லை“ என்று குமார் கூறினார்.

அவர் உண்மையில் ஒரு வாரம் பட்டினி கிடந்தார். அவர் கஷ்டப்பட்டார். ஏப்ரல் 3 ஆம் திகதி, அவர் சிரமப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் நோர்த்விக் பார்க் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பினார். ஆனால் ஏப்ரல் 11 அன்று மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாக மருத்துவமனையால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவமனை படுக்கையிலிருந்து தனது மனைவியுடன் பேசினார். நானும் அவருடன் பேசினேன். ஆனால் நான்கு மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிவிக்க மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.” என்றார்.

ஜெயசீலன் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை சென்று சந்தித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்திலும் இந்தியா சென்றிருந்தார். ஜனவரி மாதம் மீண்டும் லண்டனுக்கு வந்த அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ அழைப்பு மூலம் தவறாமல் பேசினார்.

தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவது, ஒரு வீடு கட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது இறப்பின் மூலம் அந்த குடும்பத்தின் எதிர்காலம் இருண்டு விட்டது. அவர்களிற்கு உதவுவதற்காக, குமார் ஒரு பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த பக்கத்தின் மூலம் இதுவரை 14,500 பவுண்ட்ஸ் வரையான பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.அவரது குடும்பத்தினருக்கு உதவ விரும்புவர்களை நிதியுதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் உட்பட பல வர்த்தக நிலையங்கள் திறப்பு!!

ஊரடங்கிலும்..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள், சதொச விற்பனை நிலையம், மொத்த வியாபார நிலையங்கள், கோப்சிட்டி ஆகியன திறந்துள்ளன.

வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நேற்று (16.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்து மீண்டும் 20ம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

ஊடரங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள், வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு சதொச விற்பனை நிலையம் மற்றும் கோப்சிட்டி போன்றன திறந்துள்ளதுடன் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் உலகில் தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்து : ஐ.நா சபை எச்சரிக்கை!!

தட்டம்மை..

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 மில்லியன் பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதார விசேட நிபுணர்கள் எ ச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல நாடுகள் நோய் எ திர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.

இதன் பிரதிபலனாக பிள்ளைகள் தட்டம்மை நோய்க்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெரும் நாடுகளே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் சீர்குலைவை எதிர்நோக்கி வருகின்றன.

இவ்வாறான 24 நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. மெக்சிகோ, கம்போடியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதில் அடங்குகின்றன.