வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப் படையினரும், வவுனியா நகரசபையும் இணைந்து இன்று காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
கொரனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றை தடுக்கும் வகையில் வவுனியா சிவன் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லம், அன்பகம் உள்ளிட்ட சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் இவ்வாறு தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இல்லங்கள் நீர்பம்பி மூலம் கழுவப்பட்டு தொற்று நீக்கும் மருந்துகளும் விசிறப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 6764 நோயாளர்களில் சுமார் ஆயிரத்து 297 பேருக்கே அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும், இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களில் 5 இல் 4 வீதமான நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்த நிலைமையானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய அச் சுறுத்தல். அத்துடன் இது வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என்பதுடன் அது விரிவடைய காரணமாகவும் அமையும். இதனால், பொதுமக்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என மீ பென்ங் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” என்ற பெயரில் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தல், நாட்டின் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பான தமது யோசனை அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக சங்கத்தின் ஊடக இணைப்பாளர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
“மூன்று கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டத்தை எப்படி நடத்தி செல்வது என்பது தொடர்பிலேயே பிரதானமாக நாங்கள் இங்கு ஆராய்ந்துள்ளோம்.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினால் எப்படி வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் வருவதற்கு மட்டுப்படுத்த முடியும்,? அனுமதி பத்திரம் வழங்க முடியுமா? அந்த காலப்பகுதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்தல் போன்றவை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அடுத்ததாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனியார் வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். பொது போக்குவரத்து வசதிகள் தளர்த்தப்படாது. இரண்டாவது சந்தர்ப்பத்திலேயே பொது போக்குவரத்தினை மட்டுப்படுத்தி தளர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர் வர்த்தக நிலையங்கள், உணவு வழங்கும் இடங்களை முன்பு போலவே நடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தூர இடைவெளியில் சேவை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை சற்று தாமதமாகவே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவை ஆரம்பிக்கப்படாது. அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
50 சதவீத திறனில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்கள் குறிப்பாக மேல் மாகாணத்தின் தேவைகளை அடையாளம் கண்டுள்ளோம் மற்றும் மேல் மாகாணத்திற்கு தனித்துவமான ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
த னது க ணவர் கு டும்பத்தினரால் சி த்திரவ தைக்கு உ ள்ளாகியுள்ள பெ ண் ஒ ருவர் த ன்னை கா ப்பாற்றுமாறு ச மூக ஊ டகங்களில்வாயிலாக கோ ரிக்கை வி டுத்துள்ளார்.
முல்லைத்தீவில் இ ருந்து இரத்தினபுரி – இறம்புக்கந்தை ப குதிக்கு தி ருமணமாகி வ ந்த சுதர்சனி எ ன்ற பெ ண்ணே இ வ்வாறு கோ ரிக்கை வி டுத்துள்ளார்.
கு றித்த பெ ண் மீ து வ ன்மு றை ந டத்தப்பட் டுள்ள நி லையில், த ற்போது வை த்தியசாலையில் அ னுமதிக்க ப்பட்டு சி கிச்சை பெ ற்று வ ருகின்றார்.
இந்நி லையில், ச மூக ஊ டகங்கள் வா யிலாக த ன்னை கா ப்பாற்றுமாறு கோ ரிக்கை வி டுத்துள்ளார். த ன்னை கா ப்பாறாவிட்டால் தூ க்கிலி ட்டு கொ லை செ ய்துவிடு வார்கள் எ னவும் அ வர் கூ றியுள்ளார்.
தா ன் க ணவர் வீ ட்டாரால் தொ டர்ந்தும் சி த்திரவ தைக்கு உ ள்ளாகி வ ருவதாகவும், ஆ கையால், த ன்னையும் த னது கு ழந்தையையும் கா ப்பாற்றுமாறு அ வர் கோ ரிக்கை வி டுத்துள்ளார்.
நோயாளியின் அருகாமையில் செல்லாது மருத்துவ பரிசோதனை நடாத்த கூடிய கருவியொன்றை இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையில் மூக்கு, காது மற்றும் தொண்டை ஆகியன தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக கடமையாற்றி வரும் டொக்டர் ரிஸ்னி சகாப்பினால் இந்த கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொண்டை, காது மற்றும் மூக்கு போன்ற உடலின் உறுப்புக்களுக்குள் சிறிய ரக கெமரா ஒன்றை உட்செலுத்தி கணினியின் உதவியுடன் நோய் தொடர்பில் கண்டறிய இந்த கருவி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
நோயாளிக்கு அருகாமையில் செல்லாது மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதனால் மருத்துவர்கள் பாதுகாப்பு அங்கிகள் எதனையும் அணிந்து பரிசோதனை நடாத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு நோய் தொற்று பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதனால் இவ்வாறான ஓர் கருவியை கண்டு பிடித்து பாதுப்பான முறையில் சிகிச்சைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர் சகாப் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து கொண்டே நோயாளியை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய வகையிலான கருவியொன்றை உருவாக்கும் திட்டம் உள்ளது எனவும், வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்த கருவியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் க டலில் த த்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீ ட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உ யிரிழந்திருக்கின்றனர்.
பெ ண்கள், கு ழந்தைகள் உள்ளிட்ட 396 அகதிகள் மோ சமான- மிகவும் ஆள் நெருக்கடிமிக்க படகில் இரண்டு மாதங்களை கழித்ததாகக் கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட போது அகதிகள் மிகவும் சோர்வாக இருந்தாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒரு புறம் மலேசியா அருகே இப்படகு சென்ற நிலையில் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் படகோட்டிகளுக்கும் அகதிகளுக்கும் ச ண்டை ந டந்ததாகவும் ஓர் அகதி தெரிவிக்கிறார். இன்னொரு புறம், கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக மலேசியா இந்த அகதிகளை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகின்றது.
கடந்த பல ஆண்டுகளாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள், மலேசியாவில் படகு மூலம் தஞ்சமடையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மீட்கப்பட்டவர்கள், மீன்படி படகில் வந்ததாகக் கூறும் வங்கதேச கடலோர காவல்படையின் பேச்சாளர் ஷா ஹியா ரகுமான், “அவர்கள் 58 நாட்கள் கடலில் த த்தளித்திருக்கின்றனர். கடந்த ஏழு நாட்களாக வங்கதேச கடல் எல்லைக்குள் இவர்கள் இருந்ததாக அறிகிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.
கரை ஒதுங்கிய அகதிகள் கொரோனா தொற்றால் பா திக்கப்பட்டிருக்கலாம் என்ற அ ச்சம் இருப்பதால், இவர்களிடையே இது வரை எந்த வி சாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த அகதிகள் மோ சமான உ டல்நிலையுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. அகதிகள் முகமை, தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு இந்த மக்களை நகர்த்த வங்கதேச அரசுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே சமயம், ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக வழக்கமாக த ஞ்சமடையக் கூடிய நாடுகளாக உள்ள தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கொரோனா காரணமாக மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல படகுகள் கடலில் இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகின்றது.
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் உ யிர் அ ச்சுறுத் தலை சந்தித்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், பல ஆண்டுகளாக அந்நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ரோஹிங்கியா முஸ்லிம்களை கு றிவைக்கும் வ ன்முறை ச ம்பவங்களை இ னச் சு த்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இ னச்சுத்திக ரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ என முன்பு குறிப்பிட்டிருந்தது.
இன்றைய நிலையில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
வவுனியா ஒமந்தை நகரப்பகுதியில் கசிப்புடன் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒமந்தை பகுதியில் சிவப்பு நிற காரில் கசிப்பு இருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை நகரப்பகுதியில் குறித்த காரினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில்,
வாகனத்திலிருந்து 1500 மில்லிலீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியதுடன் கசிப்பினை வைத்திருந்த குற்றச்சாட்டில் வாகனத்தின் சாரதியான ஒமந்தை பகுதியினை சேர்ந்த 37வயதுடைய அரசியல் கட்சியின் முக்கியஸ்தரை பொலிஸார் கைது செய்யதுடன் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கசிப்பினையும் குறித்த நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய சமயத்தில் பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவு வழங்கியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக தற்போது கைது செய்யப்படும் பெரும்பானவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக உரிய தலைமைத்துவம் வழங்கிய 10 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. தொற்று நோய்களுக்கான உலகளாவிய சுட்டெண்ணில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள முகாமைத்து கணக்காளர் நிறுவனம் வழங்கிய கொவிட் -19 நெருக்கடிக்கு உலகளாவிய தலைமைத்துவ பதிலைக் கண்டறிதல்’ என்ற தலைப்பில், வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 9வது இடத்தை பிடித்துள்ளது.
கொவிட் -19 தொற்று நோயை எதிர்ப்பதில் நாட்டின் தலைமைத்துவம் மற்றும் அதன் சுகாதார அமைப்பின் தயார் நிலை எவ்வளவு திறமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்பு உள்ளது என்றும், நாட்டில் ஒரு வலுவான சுகாதார சேவை உள்ளது என்றும் இது வைரஸை அகற்ற உதவியது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்ட உலக அரச தலைவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் இன்றையதினம் (17.04.2020) வங்களிகளில் தன்னியக்க இயந்திரங்களில் பணம் மீளப்பெறல் , வைப்பிடல் போன்ற செயற்பாடுகளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர்.
வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நேற்று (16.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்து மீண்டும் 20ம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
தற்போது ஊரடங்கு நேரத்திலும் வங்கிகளில் தன்னியக்க இயந்திரங்களில் பணம் மீளப்பெறல் , வைப்பிடல் போன்ற செயற்பாடுகளுக்காக ஊரடங்கு அனுமதி பெற்றவர்கள், மொத்த வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் வங்கிகளில் வரிசையில் காத்திருந்தமையினை காணக்கூடியதாகவிருந்தது.
யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் இரண்டாவது தடவையாகவும் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வவுனியா பொது சுகாதார துறையினரால் குறித்த இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பகட்டிருந்த வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கடந்த செவ்வாய் கிழமை கொரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வவுனியா, காத்தான் கோட்டம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது குடும்பம், யாழ் தாவடியில் உள்ள கொரனா தொற்றாளருடன் தொடர்பை பேணிய நிலையில் ஓமந்தை அரச வீட்டுத் திட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குடும்பம்,
யாழ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட புளியங்குளம் முத்துமாரி நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 குடும்பங்கள் என்பவற்றில் குறித்த குடும்பங்களில் இருந்து ஆராதனையில் கலந்து கொண்ட மற்றும் நேரடி தொடர்பில் இருந்த 8 பேரின் இரத்த மாதிரிகள் சுகாதார துறையினரால் இரண்டாவது தடவையாக பெறப்பட்டு கொரனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் கடந்த கடந்த 8 ஆம் திகதியும் இரத்தமாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது நோய் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸூக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,158,594 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 56,579 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145,533 ஆக பதிவாகியுள்ளது.
இதேவைளை, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 475 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை.
மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில்இப்போதைக்கு 7 நோயாளிகள் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
காரணம் இலங்கையின் வைத்திய நடவடிக்கைகள் சிறந்த முறையில் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும் இப்போதே கைவிட்டு விட முடியாது.
எனவே, இப்போது கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும்முன்னெடுக்க வேண்டும். ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்தும் பிறப்பிக்க வேண்டியதுகட்டாயமானதாகும்.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணத்தாலேயே, ஜனாதிபதியால் நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
அவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தவேண்டுமாயின் இப்போது கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளநபர்களையும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய நபர்களையும் தொடர்ந்தும்தனிமைப்படுத்தலில் வைத்து அவர்களை மேலும் பரிசோதனை செய்து அவர்கள் ஆரோக்கியமானநிலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஊரடங்கைத் தளர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச இயந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் யார் என தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானியிடம் வழங்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுபவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கயை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு திட்டத்தை வார இறுதியில் அரசாங்கம் அறிவிக்க உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊழியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை அடுத்த வாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று அதிகாலை 3.30மணியளவில் உக்குளாங்குளம் சிவன்கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில் இடம்பெற்றது.
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டு இருந்த போது, வீட்டு வளவுக்குள் நுழைந்த திருடன் குறித்த வீட்டில் உள்ள மரம் ஒன்றின் மூலம் கூரை மேல் ஏறி வீட்டின் கூரையை கழட்டி அதன் வழியாக வீட்டுக்குள் இறங்கியுள்ளான்.
இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டும், தொலைபேசி மூலமாகவும் அப்பகுதி இளைஞர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட இளைஞர்கள் திருடனை மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டிவைத்துடன், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிசார், வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் திருடனை கைது செய்து பொலிஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
மேலும் கைது செய்யப்படட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம் பழகி வந்த டிக் டாக் நண்பர், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கிவிட்டு, திருப்பி கேட்டால் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மி ரட்டியதால், அந்த டிக் டாக் நண்பர் தற்போது சி றையில் க ம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வரும் ஷர்மிளாவுக்கு டிக் டாக் மீது ஆசை இருந்துள்ளது.
இதனால் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவ்வப்போது சில ஆண்களுடன் சேர்ந்து டூயட் பாடலுக்கு ஒன்றாக நடித்து வீடியோ போட்டு வந்துள்ளார்.
அப்போது தான், ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த உமர் செரீப் என்பவர் ஷர்மிளாவுக்கு பழக்கம் ஆகியுள்ளார். டிரைவரான உமருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் டிக் டாக்கில் தம்பிக்கண்ணு என்ற பெயரில் அக்கவுண்ட் ஒபன் செய்து டிக் டாக் போட்டு வந்துள்ளார்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கும், உமர் செரீப்பை டிக் டாக்கில் 5600 பேர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஷர்மிளாவும் ஒருவர், காதல் ரசம் சொட்ட சொட்ட உமர் வீடியோக்களை பதிவிட்டதால், இதைக் கண்ட ஷர்மிளா அவரிடம் முதலில் டிக் டாக்கில் பேசி வந்துள்ளார்.
அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் தொலைப் பேசி எண்களை மாற்றிக் கொண்டனர். அப்போது உமர் தனக்கு குழந்தைகள் மற்றும் மனைவி இருப்பதை மறைத்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக ஷர்மிளாவை நம்ப வைத்துள்ளார். உடனே ஷர்மிளாவுக்கு உமர் மீது ப ரிதாபம் வந்துவிடவே இருவரும் நெ ருங்கி ப ழகியுள்ளனர்.
8 மாதங்களாக கல்யாணமும் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். ஷர்மிளாவிடம் 10-பவுன் தங்க நகையும் 20-ஆயிரம் ரொக்கபணமும் உமர் ஒருமுறை பெற்றுள்ளார். இதனிடையே கல்யாணம் செய்து கொள்ளும்படி ஷர்மிளா கேட்டு கொண்டே இருந்த நிலையில், உமர் ம றுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து வாங்கிய நகை, பணத்தை ஷர்மிளா திரும்ப கேட்டபோது, அவரை மி ரட்டிய உமர், பணம், நகை பத்தி பேச்சை எடுத்தால், நெ ருக்கமாக இ ருந்தபோது எடுத்த வீ டியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மி ரட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்த பேச்சு, நடவடிக்கைகள் இப்போது உமரிடம் இல்லை என்பதால் ச ந்தேகமடைந்த ஷர்மிளா ஒருநாள் உமரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போதுதான் ஏகப்பட்ட பெயரில் போ லி அக்கவுண்ட்டுகளை உமர் வைத்திருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அ திர்ந்த ஷர்மிளா க தறி அ ழுதுள்ளார். தன்னை போல இனி எந்த பெண்ணும் பா திக்கப்பட்டுவிடக்கூடாது என்று ஷர்மிளா ஈரோடு நகர காவல்நிலையத்தில் பு கார் அளிக்க, அதன்பேரில் பொலிசார் உமர் மீது 4 பிரிவுகளின் கீழ் வ ழக்கு பதிவு செய்து, அவரை சி றையில் அ டைத்துள்ளனர்.