ஊரடங்கு உத்தரவால் அவலம் : தெரு நாய்களுடன் பாலை பகிர்ந்து கொண்ட மனிதர் : கொடூர சம்பவம்!!

ஊரடங்கு உத்தரவால் அவலம்..

இந்தியாவில் சாலையில் கொட்டிக் கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதரும் பகிர்ந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊடரங்கு உத்தரவு தற்போது மே 3ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பசியால் வாடும் அவல நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் சாலையில் கொட்டிகிடந்த பாலை ஒரு பக்கம் நாய்கள், ஒரு பக்கம் மனிதர் என பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆக்ரா அருகே ராம் பாஹ் சவுரஹா என்ற பகுதியில் பால் கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து பால் முழுவதும் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய பாலைக் கண்டதும் அங்கிருந்த தெரு நாய்கள் ஓடி வந்து குடிக்கத் தொடங்கின.

அதேநேரத்தில் அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் தரையில் இருந்து பாலை கைகளால் அள்ளி ஊற்றி எடுக்கத் தொடங்கினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.

கொரோனா ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு 6 லட்சம் உதவி செய்த சிறுமி!!

மாணவி ரித்தி

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார்.

ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.

இதையடுத்து ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர்.

ஒரு பையில் ரூ.650 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைத்தனர். குறிப்பாக 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 200 கிராம் மிளகாய்ப் பொடி, 2 சோப்பு பார்கள் அந்தப் பையில் இடம்பெற்று இருந்தன.

முதற்கட்டமாக 200 பேருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி 200 பைகளில் உதவிப் பொருட்களை எடுத்துக்கொண்டு, செர்லிங்கம்பள்ளி என்ற பகுதிக்கு சென்றனர். பொலிசார் உதவியுடன் அவற்றை வினியோகம் செய்தனர்.

அப்போது பலருக்கு உதவிப் பொருட்கள் கிடைக்கவில்லை. பலர் பசியால் வாடுவதும் தெரியவந்தது. இதைப் பார்த்து மனம் இரங்கிய மாணவி, மேலும் கூடுதலாக நிதி திரட்ட விரும்பினார். அவருக்கு பெற்றோரும் உதவினார்கள்.

அதன்படி இணையதளம் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தார். மாணவி ரித்தி, தான் செய்துவரும் உதவி குறித்து இணையதளத்தில் பதிவிட்டதுடன், உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தும் பேசினார். அவரது செயலை பாராட்டி உதவிகள் குவியத் தொடங்கின. 8 நாட்களில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை, நிதி எட்டியது.

அதற்கு உதவிப் பொருட்கள் வாங்கி ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வினியோகம் செய்ததாக மாணவி ரித்தியின் பெற்றோரான ராம்குமார், சில்பா ஆகியோர் பெருமிதமாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறி கொண்ட பெ ண்ணை து ஷ்பிரயோகம் செ ய்த ம ருத்துவர்!!

கொ ரோனா அறிகுறி..

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் ம ருத்துவமனையில் உள்ள அ றையில் த னிமைப்படுத்தப்பட்ட பெ ண் ம ருத்துவரால் ப லாத்கா ரம் செ ய்யப்பட்டார் என்ற செய்தி புகைப்படத்துடன் வை ரலான நிலையில் அது தொடர்பிலான உ ண்மை பி ன்னணி தெ ரியவந்துள்ளது.

இ ளம் பெ ண்ணொ ருவர் ம ருத்துவமனையில் இ ருப்பது போ ன்ற பு கைப்படம் ஒன்று வெளியானது. மேலும் அ வர் கொரோனா அறிகுறியுடன் த னிமைப்படுத்த ப்பட்டவர் எனவும் அ வரை ம ருத்துவர் ப லாத்கா ரம் செ ய்தார் எனவும் த கவல் ப ரவியது.

பின்னர் ம ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அப்பெ ண் உ யிரிழந் துவிட்டார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த புகைப்படத்தின் உ ண்மை த ன்மை தெரியவந்துள்ளது. அதன்படி புகைப்படத்தில் இருப்பது 16 வ யது சி றுமி யாகும்.

அ வர் கடந்த 2017ல் உ டல்நி லை பா திக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக சே ர்க்கப்பட்டார்.

அங்கு ப ணிபுரியும் ஊ ழியர் ஒ ருவர் அ ந்த சி றுமியை உ டை மா ற்ற சொ ல்லி து ஷ்பிரயோ கம் செ ய்திருக்கிறார் எ ன்பது உ றுதியாகியுள்ளது.

அதே சமயம் பீகாரில் 25 வ யது பெ ண்ணொருவருக்கு கடந்த மார்ச் 25ம் திகதி க ருச்சி தைவு ஏற்பட்ட நிலையில் அ திக இ ரத்தப்போக் குடன் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டார். அங்கு அ வருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அ வரை ஊ ழியர் ஒ ருவர் து ஷ்பிரயோ கம் செய்திருக்கிறார்.

பின்னர் வீ டு தி ரும்பிய அப்பெ ண் அ திக இ ரத்த போ க்கு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி உ யிரிழந்துள்ளார். இ து தொடர்பாக பொ லிசார் வி சாரித்து கைது ந டவடிக்கையில் ஈ டுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளை கண்கானிக்கும் ட்ரோன் கமரா!!

ட்ரோன் கமரா

இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளை ட்ரோன் கமரா கண்கானிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளை கண்கானிப்பதற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இராணுவம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இராணுவ பிரிவில் ட்ரோன் ரெஜிமென்ட் ஒன்று ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ம னைவியை கொ ன்றுவி ட்டு க ணவன் எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத மு டிவு..

கல்பிட்டி, தூரடி பி ரதேசத்தில் த னது ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு, க ணவன் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளதாக கல்பிட்டி பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கு டும்ப ச ண்டை கா ரணமாக நே ற்றி ரவு இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளதாக பொ லிஸார் கூ றியுள்ளனர். வோல்டர் தீபா வசந்தி குரேரா எ ன்ற 36 வ யதான பெ ண்ணையே அ வரது க ணவன் கொ லை செ ய்துள் ளார்.

40 வ யதான பெனடிக் திலிப்பு மாகஸ் என்ற ந பரே த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். இ ந்த த ம்பதி க்கு 17, 14 ம ற்றும் 11 வ யதான மூ ன்று ஆ ண் பி ள்ளைகள் இரு ப்பதாகவும் பொ லிஸார் கூ றியுளளனர்.

உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் கல்பிட்டி வை த்தியசாலையில் வை க்கப்பட்டு ள்ளதுடன் பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

கொரோனாவின் அதியுச்ச தாக்கத்தால் அதிர்ந்து போயிருக்கும் அமெரிக்கா!!

அதிர்ந்து போயிருக்கும் அமெரிக்கா..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அந்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 348 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்கத்திற்க நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

அண்மை நாட்களாக அமெரிக்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றதால் இறந்த உடலங்களை எரிக்கவோ அப்புறப்படுத்தவோ முடியாமல் வீதியோரங்களில் ஆங்காங்கே உடலங்கள் காணப்படுவதாகவும் அழுகிய நிலையிலும் புழுக்கள் மொய்த்தவாறும் துர்நாற்றம் வீசுவதாகவும் ஒரு காணொளி வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்று முதல் விண்கல் மழை பெய்யும் சாத்தியம்!!

விண்கல் மழை..

இலங்கை மக்களுக்கு விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அதிகாலை நேரங்களில் இதனை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வரை விண்கல் மழை பொழிவை அதிகாலை நேரங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவுக்கு இலக்காகியுள்ள 15 மாவட்டங்கள் : கொழும்பில் 49 பேர் பா திப்பு!!

இலங்கையில் கொரோனா..

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் 49 பேர் பா திக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும்,

இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல்,கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் பா திக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் த னிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 03பேரும் கொரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, மாத்தளை,அம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை ஆகிய 10 மாவட்டங்களில் இன்னும் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பா திக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தொ ற்றுக்குள்ளாகியுள்ள 238 பேரில் 65 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உ யிரிழந்துள்ள நிலையில், 166 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேவேளை, கொரோனா வைரஸ் ச ந்தேகத்தில் 161 பேர் வைத்தியசாலைகளில் க ண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி லண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் மரணம்!!

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து வருகின்றானர். இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் உயிரிழந்துள்ளார்.

மாஸ்டரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியே இன்று அதிகாலை 1மணிக்கு உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நோர்த் விக் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சில தினங்களாக கோமா நிலையில் இருந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக அவரை, Central London வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும். அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என அங்கு பணிபுரியும் தமிழ் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.

-தமிழ்வின்-

பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்!!

பகுதியளவில்..

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் பகுதியளவில் இலங்கையை வழமை நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமையினை அவதானித்துப் பார்க்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது ஆரோக்கியமான நிலைமையே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டின் தேசிய பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். மக்களுக்கான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்.

ஆகவே அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானவர்களை வேலைக்கு வரவழைத்து நிறுவனங்களை செயற்பட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் குறைந்த ஏனைய வெளி மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் , நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்கு 50 வீதமானவர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அதேபோல் தனியார் துறையினரும் இவ்வாறான அரச ஆலோசனைகளை பின்பற்றி தமது ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க முடியும் என சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். சமல் ராஜபக்ஷ சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை : Forbes சஞ்சிகை வெளியிட்ட தகவல்!!

கொரோனா ஆபத்து..

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலை Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் கொரோனா ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டு கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Deep Knowledge Group என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரோனா ஆபத்து குறைவான நாடுகள் மற்றும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் என இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தரவை வல்லுநர்கள் குழு சேகரித்து ஆய்வு செய்தது. 60 நாடுகளின் ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையில் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அதற்கமைய கொரோனா பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் 40 நாடுகளும் கொரோனா ஆபத்தான நாடுகள் பட்டியலில் 20 நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இஸ்ரேல், ஜேர்மனி, தென் கொரியா, சீனா, நியூஸிலாந்து, தாய்வான் சிங்கப்பூர், ஜப்பான், ஹொங்கொங், சுவிட்ஸர்லாந்து, ஒஸ்ரியா, கனடா, ஹங்கேரி, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, UAE,

பெல்ஜிங், வியட்நாம், தாய்லாந்து, பின்லாந்து, Luxembourg, குவைட், Czechia, மொனாகோ, கட்டார், Liechtenstein, சைப்ரஸ், கிரிக், Estonia, மலேசிய, போலந்து, அயர்லாந்து, Croatia, துருக்கி, ஓமான், Slovakia, Latvia, Slovenia, ஆகிய நாடுகளே பாதுகாப்பான நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கொரோனா ஆபத்தான நாடுகளாக, இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ், சுயீடன், ஈரான், ஈக்குவாட்டர், பிலிப்பைன்ஸ், ரோமானியா, நைஜீரியா, ரஷ்யா, பங்களாதேஷ், மெக்சிகோ, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியன்மார், கம்போடியா, லோகோஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன

வவுனியா வடக்கில் 15 ஆயிரம் கிலோ பெசன் புறுட் பழங்கள் கொள்வனவு!!

பெசன் புறுட்

வவுனியா வடக்கில் விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தலை பெற்றுக் கொடுக்கும் வகையில் 15 ஆயிரம் கிலோ பெசன் புறுட் காகில்ஸ் ஊடாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் விவசாயிகளிடம் இருந்து பெசன் புறுட் கொள்வனவு நிகழ்வை சின்ன பூவசன்குளத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாது சிரமப்படுகின்றனர். ஆனால் அந்தநிலை வவுனியாவில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. ஓரளவுக்கேனும் குறித்த விலையில் மரக்கறிகளையும், உற்பத்திகளையும் விற்கக் கூடிய நிலை கிடைத்துள்ளது.

அதற்கு மாவட்ட செயலக, பிரதேச செயலக, கமநல அபிவிருத்தி திணைக்கள மற்றும் மகாண விவசாய திணைக்களம் அதேபோன்று ஏனைய நிறுவனங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதால் உற்பத்திகளை சந்தைப்படுத்தக் கூடிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளின் உற்பத்தியினைச் சந்தைப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் பெசன் புறுட் உற்பத்தியும், நீத்துப்பூசணி உற்பத்தியும் அதிகமாக காணப்படுகின்றது. விவசாயிகள் இந்த உற்பத்திகளை மேற்கொண்டு குறைந்த விலையில் விற்று அவர்கள் நட்டத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி காகில்ஸ் கிளையில் இந்த பெசன் புறுட் உற்பத்திகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

கொரனா வைரஸ் காரணமாக குறைந்த ஊழியர்களே கடமையில் இருப்பதால் மொத்த உற்பத்திகளையும் பெற முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டானை காகில்ஸ் கொள்வனவு நிலையத்தில் இருந்து ஒரு தொகுதியை கொள்வனவு செய்ய முடியும் என காகில்ஸ் கூறியிருந்தனர். அதற்கமைவாகவே இன்றைய இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஓரு கிலோ பெசன் புறுட் 55 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதில் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகள் போக 50 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு இலாபமாக கிடைக்கிறது. இன்றைய தினம் 15 ஆயிரம் கிலோ பெசன் புறுட் கொள்வனவு செய்வதன் மூலம் விவசாயிகள் சந்தைவாய்ப்பு வசதியைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதன்போது கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் சந்தைப்படுத்தல் வசதி இன்றி இருந்த வவுனியா வடக்கு விவசாயிகளிடம் இருந்து 15 ஆயிரம் கிலோ பெசன்புறுட் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.வியஜகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சத்தால் வயோதிப பெண்ணை ஏற்க மறுத்த உறவினர்கள் : வறிய குடும்பத்தின் மனிதாபிமான செயல்!!

கொரோனா அச்சத்தால்..

கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 74 வயதான வயோதிப பெண்ணை பொறுப்பேற்க அவரின் உறவினர்கள் மறுத்து விட்ட நிலையில், மிகவும் வறிய குடும்பம் ஒன்று அந்த பெண்ணை பொறுப்பேற்றுள்ளதாக வலல்லாவிட பிரதேச செயலாளர் எம்.ரஞ்சித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

மீகஹாதென்ன பொலிஸ் பிரிவில் லிஹினியாவ குமாரகந்த என்ற முகவரியை சேர்ந்த ஆர்.ஏ.எமலின் என்ற இந்த வயோதிப பெண், கடந்த வாரம் கொரோனா தொற்று பரவியதாக கூறப்பட்ட இரண்டு இடங்களில் தாங்கியிருந்த காரணத்தினால், அந்த பெண்மணியை 21 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தனர்.

இருமல், தடிமன், காரணமாக அண்மையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பெண்மணிக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவருக்கு கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த பெண்மணி சிகிச்சை பெற்ற வைத்தியசாலை விடுதியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டறியப்பட்டமை காரணமாக பெண்மணியை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்மணியை ஹோமாகமை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அதிகாரிகள் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எனினும் அங்கு கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டதால், அதிகாரிகள் மேலும் 21 நாட்களுக்கு பெண்மணியை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

திருமணமாகாத இந்த வயோதிப பெண்மணியை அவரது சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் ஏற்க மறுத்துள்ளதுடன் அதே பிரதேசத்தை சேர்ந்த வறிய குடும்பம் அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.

இது மனிதாபிமானம் மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமையை எடுத்துக்காட்டிய சம்பவம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் பெண்மணியை ஏற்றுக்கொண்ட வறிய குடும்பத்தினர் வசிக்கும் வீட்டில் பெண்மணியை தனிமைப்படுத்த வசதி இல்லை என்பதால், அதிகாரிகள் லிஹினியாவ மொரகல என்ற பிரதேசத்தில் உள்ள சமூக நிலையம் ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 பேர் கைது : வாகனங்கள் பறிமுதல்!!

4 பேர் கைது..

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியிலேயே குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரனா வைரஸ் தொற்றையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி வீதியில் மோட்டர் சைக்கிள்களில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களின் 3 மோட்டர் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் தடுத்து வைக்கபடபட்டுள்ளது.

கொரனா வைரஸ் தொற்றை தடுக்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழக்குமாறு கோரியுள்ள பொலிசார் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் 26 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள்!!

சிகையலங்கார நிலையங்கள்..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ம் திகதியுடன் (20.03.2020) மூடப்பட்டிருந்த வவுனியாவிவுள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் 26நாட்களுக்கு பின்னர் இன்று (16.04.2020) திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா உட்பட் நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து.

இவ்வாறு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருதடவை 10 மணிநேரம் தளர்த்தப்பட்டடு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இக் காலப்பகுதியில் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அனுமதி வழங்கவில்லை.

சித்திரை புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு 26 நாட்களின் பின்னர் இன்றையதினம் ஊரடங்கு தளர்வு நேரத்தில் வவுனியாவிலுள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் 10 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : நகரில் குவித்த மக்கள் மக்கள்!!

ஊரடங்கு தளர்வு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 10 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் கடந்த நாட்களை விட அதிகரித்து காணப்படுகின்றது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (16.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனையடுத்து சித்திரை புத்தாண்டு பிறந்து முதற்தடவையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமையினால் கைவிசேடம் போன்றவற்றினை வழங்குவதற்காக பணத்தினை பெறுவதற்கு வங்கிகளில் மக்கள் கூடியுள்ளமையும் புதுவருட வியாபாரத்தினை ஆரம்பிப்பதற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் திறந்து காணப்படுகின்றன,

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.

மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.

வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்தியாலயம் , வவுனியா கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.