இலங்கையில் விரைவாக குணமடையும் கொரோனா நோயாளிகள் : 28 ஆயிரம் பேர் இதுவரை கைது!!

கொரோனா நோயாளிகள்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமாகி நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோன வைரஸ் தொற்றுடன் இதுவரை 238 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 7 பேர் ஏற்கனவே இந்த தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோன வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு மேலும் 1522பேர் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டனர். இதன்போது 306 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை 28 ஆயிரத்து 159பேர் கைது செய்யப்பட்டனர். 7105 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இலங்கையின் 6 கடற்றொழிலாளர்கள் சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீசெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சம்பத் K-V 0911 கே.எல்.ஆர் என்ற அடையாளத்தைக் கொண்ட படகில் சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்துக்குள் இலங்கையின் சட்டவிரோத படகு சீசெல்ஸில் கைப்பற்றப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் மினி சூறாவளியால் பாதிப்படைந்த 58 குடும்பங்களுக்கும் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி மாலை திடீரென மினி சூறாவளி ஏற்பட்டது.

இதன்காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன், வவுனியா கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இடி மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் மரணமடைந்திருந்தார்.

அத்துடன், வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராம அலுவலர் பிரிவில் 10 வீடுகளும், மரக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவில் 30 வீடுகளும், பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் 5 வீடுகளும், செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடும்,

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் அவுரந்துலாவ கிராம அலுவலர் பிரிவில் 8 வீடும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பங்களும், பாவற்குளம் படிவம் 2 கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பமும் என 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

இவ்வாறு மரணமடைந்த குடும்பத்திற்கும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீடுகள் வழங்க மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பாதிப்பு உச்சம் : இதுவரையில் 47 பேருக்குத் தொற்று!!

கொழும்பில்..

இலங்கையில் 15 மாவட்டங்களில் 233 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல், கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 37 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் கனடாவில் பலி!!

புஸ்பராணி நாகராஜா..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

56 வயதான இவர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக மருத்து சான்றிதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுயநினைவின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் மூன்று பிள்ளைகளும் சுயதனிப்படுத்தலில் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 2,055,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 133,101 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் 26,897 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 898 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஹெ ரோயினுடன் இருவர் கைது!!

இருவர் கைது..

வவுனியாவில் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுடன் நேற்று (15.04.2020) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.கே.சீ.ரி.ரத்னாயக்கா நெறிப்படுத்தலில் வவுனியா போ தைப் பொ ருள் த டுப்பு பிரிவு பொலிஸார் மன்னார் வீதி, பாலாமைக்கல் பகுதியில் ச ந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை சோ தனைக்குட்படுத்தினர்.

இதன்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் இருந்து 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டதுடன், 42 வயது நபர் ஒருவரிடம் இருந்து 40 மில்லிகிராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் கை து செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, மன்னார் வீதி மற்றும் ஓமந்தைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரகைளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையில் எதையும் கூறமுடியாது : யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!!

த.சத்தியமூர்த்தி..

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் எதிர்காலம் குறித்தும் தற்போது எதையும் கூறமுடியாது என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க்காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சனையில்லை.

ஆனால் சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால் மற்றவர்களிற்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதி செயலணி முடிவுகளை எடுக்கிறது. எமது கருத்துக்களை கேட்கும்போது நிலவரங்களை தெரிவிக்கிறோம். ஊரடங்கு குறித்தும், நோயின் எதிர்காலம் குறித்தும் உடனடியாக கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இது உலகளாவிய தொற்று.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்று வடக்கில் – எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது.

என்றாலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனைக்கு தேவையான கிட்ஸ் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு மூன்று நாளுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனை செய்யலாம். விரைவில் யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம்.

அங்கும் நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம். தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும் சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள்.

இது பற்றி என்னால் தெளிவாக கூற முடியாவிட்டாலும் பாதிரியாருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆகையினால் வழியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாக கூற முடியாது.

ஆனால் அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களிற்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் நெருங்கி பழகிய 100 பேர் கொழும்பில் கைது!!

100 பேர் கொழும்பில் கைது..

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் நெருங்கி பழகிய நபர்களை தேடி கடற்படையினர் புறக்கோட்டை குணசிங்கபுர, டாம் வீதி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் இன்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

இந்த தேடுதலில் கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் நெருங்கி பழகிய சுமார் 100 பேரை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினட் கமாண்டார் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கடற்படையின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நபர்கள் சம்பூரில் உள்ள கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணம் – பலாலி தனிமை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

இன்று 23 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 2,024,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 128,972 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில், கொரோனா தொற்றினால் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு ஆபத்தான வலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுல்படுத்தப்படும். நாளை மாலை 4 மணி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்ப்படும் ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 29ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

பேரூந்து விபத்தில்..

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் வரக்காபொல நகர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று(15.04.2020) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வரக்காபொல பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை சம்பூர் பகுதியை நோக்கி ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ் இரண்டுடன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் இரண்டு கிலோ பருப்பு, 2 டின் மீன் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்!!

பருப்பு மற்றும் டின் மீன்

பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விதித்திருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கியுள்ளதாக அரசாங்கம் கடந்த 10 ஆம் திகதி அறிவித்துள்ளதால், புதிய விலைகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 65 ரூபாய் கட்டுப்பாட்டு விலை என குறிப்பிடப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் பருப்பு 134 ரூபாவுக்கும் 100 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த 425 கிராம் டின் மீன் ஒன்று 192 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் மீண்டும் அறிவிக்கப்படும் வரை ஒரு நபர் இரண்டு கிலோ கிராம் பருப்பு மற்றும் இரண்டு டின் மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாவாக குறைக்கப்படும் முன்னர் சந்தையில் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 65 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலை 20 நாட்கள் மாத்திரமே அமுலில் இருந்தது.

-தமிழ்வின்-

பருப்பு, டின் மீன் விலைகளை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியமைத்துள்ளதாக அறிவிப்பு!!

பருப்பு, டின் மீன்..

பருப்பு மற்றும் தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின் மீன்) ஆகியவற்றின் விலையை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியமைத்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் முதல் நுகர்வோர் அதிகாரசபை, டின் மீன் (450 கிராம்) மற்றும் பருப்பு (1 கிலோகிராம்) ஆகியவற்றை முறையே ஆகக் கூடிய விலையான 100 ரூபாவுக்கும், 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு பணித்திருந்தது.

எனினும் சதொச நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படும் டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையை நீக்கி கொள்ள கடந்த வாரம் அமைச்சரவை தீர்மானித்தது.

இதனையடுத்தே சில்லறை வியாபாரிகள் தாமும் குறித்த இரண்டு பொருட்களின் விலையை பழைய நிலைக்கு மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

முக்கிய அங்காடி ஒன்று இன்று முதல் பருப்பு ஒரு கிலோகிராம் 134 ரூபாவுக்கும், டின்மீன் (450 கிராம்) 192 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த ஜனாதிபதி கோட்டபாய தீர்மானம்!!

ஊரடங்கு சட்டம்

மாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மாகாண வைத்திய பணிப்பாளர்கள் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் தங்கள் மாகாண நிலைமைகள் தொடர்பில் இதன் போது ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மாகாணங்களில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு தொழில்துறை நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்பு போலவே செயற்படுத்தவே அனுமதிக்கப்படும்.

இதற்கான பரிந்துரைகளை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் மூலம் விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார சேவை இயக்குனர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

அன்றாட ஊதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம் என்று இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 19 மாவட்டங்களுக்காக நாளையதினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

வவுனியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் முழ்கி மரணம்!!

நீரில் முழ்கி..

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (15.04.2020) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மயிலங்குளம் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமடைந்துள்ளார்.

அதனை அவதானித்தவர்கள் அவரை மீட்டு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மரணமாகியுள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.நகுலேஸ்வரன் என்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வவுனியாவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

குடும்பஸ்தரின் ச டலம் மீ ட்பு..

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ச டலம் இன்று(15.04.2020) காலை மீ ட்கப்பட்டது.

குறித்த வீட்டில் வசித்து வந்த மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த குடும்பத் தலைவரே தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிற்கு காலையில் வந்த உறவினர்கள் குறித்த நபர் தூ க்கில் ச டலமாக காணப்படுவதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவரது ச டலம் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெரியசாமி மோகனதாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவராவார். இது தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளைத் தடுத்த கொரோனா வைரஸ்!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊழித் தாண்டவமாடி வரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், ஏனைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளொன்றுக்கு இடம்பெறும் உயிரிழப்பு விகிதம் கொரோனாவால் 99 சதவீதம் குறைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சராசரியாக 23 வாகன விபத்துகள் இலங்கையில் இடம்பெறுகின்றன என்றும், அவற்றால் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழக்கின்றனர் என்றும், பலர் காயமடைகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி முதல் இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்கு போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்துவிட்டது என்றும், ஓரிரு சம்பவங்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் பதிவாகும். ஆனால், இம்முறை அந்நிலைமை இல்லாது போனமை மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவிக்கப்படுகின்றது.