கொரோனா வைரஸ் தொற்று : யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி!!

அனந்தன் சிதம்பரநாதன்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கச்சாய் வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் லண்டன் குவீன்ஸ் பெரியில் வாழ்ந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 1,981,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 26,681 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் 93,873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,107 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வரும் நிதி நிறுத்தம் : டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!!

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி..

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.

இது வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் 1,998,109 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126,603 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 613,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,047 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த முக்கிய தகவல்களை சீனா மறைத்து விட்டதாகவும், வைரஸின் தீவிர தன்மை குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிகை விடுக்காமல் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றார்.

உலக சுதார அமைப்பின் தாமதமான செயற்பாடுகளே உலக நாடுகள் இவ்வாறான பாதிப்பை சந்திக்க காரணம் எனவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்துள்ளது. ஆகையால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வாகம் மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தமை தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய தனது உத்தரவிட்டுள்ளார்.

அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவே உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்கி வரும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றுவது எப்படி? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவரிடமிருந்து 4 மீற்றர் தூரம் வரை பரவல் காணப்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நரம்பியல் அமைப்பின் பொது மக்கள் வழிப்புணர்கள் தொடர்பிலான உலக அமைப்பின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹானில் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளி தங்கியிருக்கும் வைத்தியசாலையின் அறை, பயன்படுத்திய கழிப்பறை, பயணித்த பாதைகள், கையினால் பிடித்த பொருட்கள் ஆகியவற்றில் இந்த கொரோனா தொற்றியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் கணினி மற்றும் கணினியின் பாகங்களிலும் கொரோனா தொற்றியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதணிகளில் கொரோனா பரவியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கையில் சிறந்த முறையில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எவரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரேநாளில் 2400ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ்காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை சீரழித்துவருகின்ற அதேநேரம் தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 596 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் வீதியில் திடீரென உயிரிழந்த நபர் : கொரோனா அச்சத்தில் மக்கள்!!

கொரோனா அச்சத்தில் மக்கள்..

களுத்துறை கட்டுகருந்த பிரதேசத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் காலி வீதிக்கு அருகில் உள்ள வீதியில் சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் 1990 என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவைக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டமையினால் அவரை சோதனையிட்ட பாதுகாப்பு ஆடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆராய்வதற்காக சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அம்பியுலன்ஸ் உரிய நேரத்தில் வருகைத்தந்திருந்தால் குறித்த நபரை காப்பாற்றியிருப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா என சந்தேகிக்கப்படும் 165 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!!

165 பேர் வைத்தியசாலைகளில்..

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 233 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 15 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 14 பேரும் கொரோனா நோயாளிகளுடன் அருகில் இருந்து பழகியவர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவராகும். 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் எனவும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் கூறியுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்ற மேலும் இருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

அதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 165 பேர் வைத்திய கண்கானிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளை ஊரடங்கு சட்டம் நீக்கம் தொடர்பாக முக்கிய அறிவித்தல்!!

ஊரடங்கு சட்டம் நீக்கம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளை மாலை 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலப்பகுதிகளில் மிகவும் அவசியமான பொருட்களை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் நேற்று 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தித்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று 12 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எட்டுப் பேருக்குக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு பேருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எட்டுப்பேரில் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள் எனறும் ஒருவர் வவுனியாவை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 1,992,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 126,066 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரனா தொற்று!!

கொரனா தொற்று..

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் யாழில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வடமாகாணத்தைச் சேர்ந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தலை தொடர்ந்து வவுனியாவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது யாழில் நேற்று (14.04) மேற்கோள்ளபட்ட பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, குறித்த நபருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருக்கிப் பழகியவர்களும் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியால் வவுனியாவைச் சேர்ந்த மக்கள் அச்சமடையத் தேவையில்லை. குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

கொரோனா வைரஸ்..

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 24 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை அரியாலை பகுதியில் சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்,

6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளர்கள் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

அ டி மேல் அ டி விழுந்தும் சமாளித்த ஆறு மாதக் குழந்தை : கொரோனாவையும் வெல்வாரா?

ஆறு மாதக் குழந்தை..

பிறக்கும்போது வெறும் 5 பவுண்டுகள் 4 அவுன்ஸ் எடை கொண்டிருந்த ஒரு பிரித்தானியக் குழந்தை ஏற்கனவே பட்ட பாடு போதாது என்று, கொரோனாவும் அவளைக் குறிவைத்துள்ளது.

Erin Bates என்ற அந்த குழந்தை இதயப் பிரச்சினையுடன் பிறந்ததால், அவளுக்கு open heart surgery செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுபோதாதென்று அவளுக்கு சுவாசக்குழலிலும் பிரச்சினை இருந்தது. நீண்ட சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினாள் Erin.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவளுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது அவளது பெற்றோருக்கு கடும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே இருக்கலாம் என்பதால், Erinஉடன் அவளது தாய் மட்டுமே இருக்க, கொரோனா நோயாளியின் தந்தை என்ற வகையில் Erinஇன் தந்தை Buryயில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நீண்ட காலம் குழந்தையின்றித் த வித்து, இனி குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் பிறந்த அதிசயக் குழந்தை Erin, ஏற்கனவே பல பிரச்சினைகளை இந்த ஆறு மாத காலத்திற்குள் சந்தித்து மேற்கொண்டுவிட்ட நிலையில், கொரோனாவையும் அவள் மேற்கொண்டுவிடுவாள் என்று உறுதியாக நம்புகிறார்கள் அவளது பெற்றோர்.

ஆனால், இன்னமும் மக்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் நடப்பது தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் Erinஇன் பெற்றோர், தங்கள் குழந்தையைப் பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் என்கிறார்கள்.

பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய குழந்தை : கொரோனா தடுப்பு பணியால் குழப்பம்!!

நீல நிறமாக மாறிய குழந்தை..

இந்தியாவில் பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக குழந்தையை காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றிய மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மும்பையின் அலிபாக் பகுதியில் உள்ள வாஜே நர்ஸிங் ஹோமில் சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 2.9 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சையனோசிஸ் என்ற உடல் நீல நிறமாக மாறும் பிரச்சனையும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாஜே மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லை.

இதனை அடுத்து மருத்துவர் சந்திரகாந்த் வாஜே, 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்து தகவல்களையும் கூறி உதவி கேட்டுள்ளார்.

போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர், வாஜே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரும் குழந்தையை பரிசோதித்துப் பார்த்துவிட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஆம்புலன்ஸ் சென்றுள்ளதால், அருகில் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் குழம்பினார்கள். அப்போது பொதுசுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வரும் குழந்தையின் அத்தையான இளம்பெண் சுப்ரியா பெட்கர், தன்னையையும் குழந்தையையும் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு யோசனை வழங்கியுள்ளார்.

உடனே மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் தன் பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றி குழந்தையை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் சந்தோர்கர் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நேரத்தில் திடீரென சமயோஜிதமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் நர்ஸ் எடுத்த இந்த முடிவை பலரும் பாராட்டி உள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 மாத குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா!!

17 பேருக்கு கொரோனா..

இந்தியாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. எனவே இந்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி இன்று வரை அமலில், இருந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 10,363பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10மாத குழந்தையும் அடங்கும்.

மேலும், அவர்கள் தொடர்பில் இருந்த 24 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோதிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 17பேரும் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள், வசித்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடிக்கு பிரதேச சபையினால் மின்விளக்குகள்!!

இராணுவ சாவடிக்கு மின்விளக்குகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சாவடிக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரினால் இன்று வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வவுனியா ஒமந்தை பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டு வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு வருவதனையும் வவுனியாவிலிருந்து வேறு மாவட்டத்திற்கு அனுமதியின்றி செல்வது தொடர்பில் இராணுவத்தினரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இராணுவச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரவு நேரத்தில் இருளாக காணப்படுவதினால் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொள்வதில் பல்வேறு இன்னல்களை மேற்கொள்வதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரிடம் வன்னி இராணுவத் தளபதி விடுத்து கோரிக்கைக்கமைவாக இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இராணுவ சாவடியினை சூழவுள்ள பகுதியில் நான்கு மின்விளக்குகளை பிரதேச சபை ஊழியர்கள் பொருத்தினார்கள்.

வவுனியா வைத்தியசாலையில் இளைஞன் அனுமதி : ஒருவர் பலி : ம து விருந்து கொண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்!!

ஒருவர் பலி..

கெப்பற்றிப் கொலவ பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று இரவு மோ தல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இளைஞர்களுக்கிடையிலான குறித்த மோ தல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,

அவரது சகோதரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான நேற்று மாலை அநுராதபுரம், கெப்பற்றி கொலவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ம து விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிக சத்தம் காரணமாக அயல் வீட்டுக்காரர் ம து விருந்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் அயல் வீட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெ.செலிட்டர் என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், கைகலப்பை தடுக்கச் சென்ற, உயிரிழந்தவரின் சகோதரரான 34 வயதுடைய ஜெ.விஜயசுந்தரம் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் கெப்பற்றி கொலவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

வவுனியா மாவட்டத்திற்கு..

தற்போதைய சூழலில் நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், தற்போதைய நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது.

அதனூடாக வவுனியா மாவட்டத்தில் பல நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அரச உத்தியோகத்தர்கள் தமது சிரமத்தையும் பார்க்காது மக்களுக்கான பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வகையில் வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக சமுர்த்தி நிவாரணத்திற்காக 147.83 மில்லியன் ரூபாவும், விவசாய காப்புறுதிக்காக 1.595 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகுதி தொகை ஏனைய நிவாரணங்களுக்காகவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.