கொரோனா வைரஸ் இலகுவாக பரவுவது எப்படி? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ்..

கொரோனவைரஸ் பரவல் தொடர்பில் உரிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை அறிதலுக்கான திறன் இருந்தால் மாத்திரமே, தடுப்பு நடவடிக்கைகள் சிறிது சிறிதாக நீக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனவைரஸ் மிகவேகமாக பரவுகிறது. அத்துடன் மிகவும் மெதுவாகவே குறைகிறது என்று உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதெனொம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களுடன் இடம்பெற்ற காணொளி மாநாட்டின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் சிலவும் கொரோனவைரஸ் தடுப்புக்கான நடவடிக்கைகளை நீக்குவதற்கு ஆலோசிக்கின்றன. எனினும் அதனை கவனமாக கையாள்வது சிறந்தது என்று டெட்ரோஸ் அதெனொம் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோவைரஸ் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதே திட்டங்களை மெதுவாக நீக்க வேண்டும். ஒரேயடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடியாது. சமூக இடைவெளி கட்டுப்பாடு என்பது சமன்பாட்டின் ஒரு அங்கமாகும்.

இதனை தவிர கொரோனவை கட்டுப்படுத்த பல சுகாதார நடவடிக்கைகள் அவசியம் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். எனவே ஒவ்வொரு அரசாங்கமும் தமது பொதுமக்களின் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சூழ்நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனவைரஸ் பரவல் ஏற்பட்டு 110 நாட்களாகியும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இதன்போது வைத்தியசாலைகள் உட்பட்ட சனத்திரள்மிக்க இடங்களில் இந்த வைரஸ் இலகுவதாக பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனவைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை சில நாடுகள் நீக்குவதற்கு முயலும் நிலையில் குறைந்த மற்றும் ஆபிரிக்காவின் நடுத்தர வருமான நாடுகள், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் அவற்றை அறிமுகப்படுத்தலாமா என்று யோசிப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை உயர் வருமானங்களை கொண்ட நாடுகளின் வீடுகளிலேயே தங்கியிருக்கும் கட்டுப்பாடுகள் வறுமையான அதிக சனத்தொகையை கொண்டு நாடுகளுக்கு நடைமுறைக்கு சாத்தியமாக இருக்காது என்றும் உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதெனொம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணம்!!

விபத்து..

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த 47வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு ஒருவரும் 26 வயதுடைய இளைஞர் ஓருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றபட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன் மரணமடைந்துள்ளார்.

மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் கடமையாற்றும் இந்து மதகுருவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

கு ழந்தைகள் இருவர் கிணற்றில் வீசி கொ லை : சந்தேகத்தில் த ந்தை கை து!!

தந்தை கைது..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூ க்கத்தில் இருந்த கு ழந்தைகள் இருவர் அவர்களது த ந்தையினால் கி ணற்றில் வீ சப்பட்ட நிலையில் உ யிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வ யதுகளையுடைய இரு  கு ழந்தைகளின் சட லங்களைப் பொலிஸார் கி ணற்றிலிருந்து மீ ட்டுள்ளனர்.

அஷீமுல் ஹக் (வயது 10) என்ற ஆண் குழந்தையும் ‪ அஷீமுல் ஷாஹியா (வயது 07) எனும் பெண் குழந்தையுமே ச டலங்களாக மீ ட்கப்பட்டு பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனையை சேர்ந்த 40 வயதான முஹம்மது லெப்பை சுலைமாலெப்பை எனும் அக்குழந்தைகளின் த ந்தை கை து செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் கோளாறு காரணமாக மரணித்ததைத் தொடர்ந்து அக்குழந்தைகளை தந்தையே பராமரித்து வந்துள்ளதாகவும் இந்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக ஏழு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!!

யாழில்..

யாழில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களால் களவாடப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட கண்காணிப்பு கமரா, மின்மோட்டார் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை போலிஸ் அதிகாரி முனசிங்க தலைமையிலான அணியினர் நடத்திய விசாரணையின் போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்தவாரம் யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் வயது முதிர்ந்த ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ். நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருட்களை திருடியதன் அடிப்படையில் குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மொத்தமாக களவாடப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை, களவாடப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்த அடிப்படையில் மொத்தமாக நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி போலிஸ் இன்ஸ்பெக்டர் முனசிங்க தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தற்போது எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றானது அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளி கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 218ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதுடன், இதுவரை 7 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது : கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியரின் அறிவுரை!!

வைத்தியரின் அறிவுரை..

இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறின்றி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினை விரைவில் கட்டுப்படுத்த முடியாது : சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

எதிர்வரும் 19ஆம் திகதியின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்த நாடாக இலங்கை மாறும் என தான் கூறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

“நாட்டை திறப்பது பற்றியோ இல்லை என்றால் ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் நோய் முழுமையாக ஒழிந்து விடும் என்ற தகவலை நான் கூறவில்லை.

பொதுவாக நோயில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அறிகுறிகள் முழுமையாக கண்டுபிடிக்க 14 நாட்கள் வரை செல்லும். 30 நாட்கள் செல்லும் போது அறிகுறிகள் கண்டுபிடிக்கும் நாட்களின் இரண்டு மடங்காகும். எனவே நோயாளிகளை குறித்த நாட்களுக்குள் கண்டுபிடித்து விடலாம் என்றே நான் கூறினேன்.

விமான நிலையங்களை மூடினோம். நாட்டில் பாரிய அளவிலானோரை தனிமைப்படுத்தினோம். அதேபோன்று நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 30 நாட்களுக்குள் நோயாளிகளை அடையாளம் காண முடியும் என்று மாத்திரமே கூறினேன்.

கடவுள் புண்ணியத்தில் 30 நாட்களுக்கு இந்த நோயாளிகள் இருந்தால் கண்டுபிடித்து விடலாம். போதியளவு மருத்துவ பரிசோதனை பொருட்கள் இலங்கைக்கு கெண்டு வரப்பட்டுள்ளன.

இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் பரிசோதனைகளை அதிகரிப்போம். அதற்காக இந்த நோய் முற்றிலும் ஒழிந்து விடும் என கூற முடியாது. ஓரிரு நோயாளிகள் பதிவாகுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

நாம் தொடர்ந்தும் அவதானத்துடனும் ஒரு மீற்றர் தூரத்தில் பயணித்தாலே நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்று : யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி!!

சின்னையா அமிர்தலிங்கம்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 67 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று திங்கட்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் சுகயீனம் அடைந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு வைத்தியசாலை தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமானதுடன், உடல் அவையங்கள் செயலிழந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய நால்வர் கைது : மூன்று மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல்!!

நால்வர் கைது..

புத்தாண்டு தினத்தில் ஊரங்கு சட்டத்தை மீறி செயல்பட்ட நால்வர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மூன்று மோட்டர் சைக்கிள்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு நேற்று மாலை (13.04) 6 மணி தொடக்கம் இன்று (14.03) மாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் மேலும் இறுக்கமாக்கப்பட்டு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வவுனியா நகர் பகுதியில் நேற்று இரவு (13.04) இரு மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

இன்று (14.04) காலை ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த 3 மோட்டர் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 47, 29, 26, 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாங்கள்!!

வவுனியாவில்..

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டு கொண்டாங்கள் பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதியான முறையில் காணப்படுகின்றது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

வவுனியா உட்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் புத்தாண்டு தினத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் என்ற நோக்கில் அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா முழுவதும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன் வெடிச்சத்தங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தில் இவ்வாறான நிலை காணப்பட்டிருந்ததுடன் தற்போது பல வருடங்களின் பின்னர் கொரனா தொற்று காரணமாக இன்று இவ்வாறான நிலையில் காணப்படுகின்றது.

வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் அமைதியான வழிபாடு!!

புத்தாண்டை முன்னிட்டு..

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.

இருப்பினும் மக்கள் தொகை குறைவாக காணப்பட்டதுடன் வீடுகளிலேயே அமைதியான முறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

சார்வரி புத்தாண்டானது இன்று இரவு 7.26 இற்கு மலர்ந்திருந்தது. கொரனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் மக்கள் வீடுகளிலேயே அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடினர்.

இருப்பினும், இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றன. குறைந்தளவிலான மக்கள் தொகையுடன் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றது.

கொரோனா : விதியை மீறிய வெளிநாட்டினருக்கு கொடுத்த வித்தியாசமான தண்டனை!!

வித்தியாசமான தண்டனை

இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த மாதத்தின் இறுதியில் ஊரடங்கு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊரடங்கு சட்டம் இன்னும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டில் இருக்கும் மாநில முதலமைச்சர்கள் பலரும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் வலியுறுத்துவதன் காரணமாகவும்,

நாட்டிலும் சீரான வேகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வதன் காரணமாகவும் பிரதமர் மோடி ஊரடங்கை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உத்திரகாண்டின் Rishikesh-ல் இருக்கும் பிரபலமான ஆன்மிக ஆஷிரமம் ஒன்றிற்கு மெக்சிகோ, அவுஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த வெளிநாட்டினர் சென்றுள்ளனர். நாட்டில் தற்போது அத்தியாசவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும்.

தேவையில்லாமல் வரக் கூடாது என்ற விதி உள்ளது. இவர்கள் அந்த விதியை மீறியதன் காரணமாக அங்கிருந்த பொலிசார் இவர்களை பிடித்து விசாரித்து, இப்படி தேவையில்லாமல் வரக் கூடாது என்று அறிவுரை கூறியதுடன், 500 முறை மன்னித்துவிடுங்கள் என்று எழுதும் படி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர்.

அங்கு விதியை மீறுபவர்களுக்கு தொப்புகரணம் போட சொல்வது, சிறிது நேரம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாதையை சாலையில் பிடித்து நிற்பது போன்ற பல வித்தியாசமான தண்டனையை பொலிசார் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஏரியாவில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் விதியை மீறினால் இதே போன்று ஏதேனும் வித்தியாசமான தண்டனை தான் என்று அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி Vinod Sharma என்பவர் கூறியுள்ளார்.

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தமிழர் பலி : சொந்த ஊருக்கு உடலை அனுப்பாமல் அங்கே புதைத்த துயரம்!!

கொரோனாவால்..

இந்தியாவின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் 15-ஆம் திகதி வரை மத மாநாடு நடைபெற்றது. மத அமைப்பு ஒன்று மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் ஆண்டு தோறும் நடக்கும்.

டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தான் இப்போது கொரோனா பாதிப்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 1400 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் பலர் தமிழகம் திரும்ப முடியாமல் டெல்லியில் இருக்கின்றனர். சுமார் 300 பேர் வரை அந்த வழிபாட்டு தலத்திலே தங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா தீவிரம் பரவியதால், அங்கிருக்கும் அனைவரையும் பொலிசார் மீட்டு தீன் தயாள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு தமிழர்கள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவரான விருத்தாச்சலத்தின் தாஷ்கண்ட் நகரை சேர்ந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு பக்கத்து அறையில் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், அவருக்கு அடுத்த நாள் தான் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அருகே செல்லக் கூடாது என்பதால், அப்பாவின் உடலை மகன் அருகே சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் இருந்தே மகன் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த தகவல் தமிழகத்தின் விருத்தாசலத்தில் இருக்கும் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். ஆனால், உடல் டெல்லியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அந்த நபரின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு, டெல்லியிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் அருகில் இருந்தும் பார்க்க முடியாமல், குடும்பத்தார் அவரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை இனி யாருக்கும் வரக் கூடாது என்று அவரின் உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

ஊரடங்கால் ஏற்பட்ட துயரம் : 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்!!

5 குழந்தைகளை..

இந்தியாவில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்துள்ளார்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

மேலும் குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண்மணி ஏழ்மையான குடும்பம் எனவும்,

தினக்கூலி வேலைக்கு செல்லும் இவர் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே இந்த கோர முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது, உணவு இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெல பகுதியில் அமைந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு நபர் ஒருவர் வருகைத்தந்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபருக்கு அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

குறித்த நபரிடம் ஊரடங்கு அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை என்பதை அங்கு கடமையில் இருந்த அதிகாரி அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த நபரிடம் பொலிஸார் பேசிக் கொண்டிருந்த போது, ரஞ்சன் ராமநாயக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸரை கடுமையாக திட்டிய ரஞ்சன் குறித்த நபரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

இதனால் பொலிஸாரின் கடமைக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய ரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீக்கப்பட்ட வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!

நீக்கப்பட்ட வரிகளை..

கடந்த ஜனவரி மாதம் இரத்து செய்யப்பட்ட சில வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிற்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்ட கொடுப்பனவு வரியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் உயர் தனி நபர் வரியாக புதிய முறையில் கீழ் அறிமுகம் செய்துள்ளதாக உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது ஊழியரின் அனுமதியின் கீழ் முதலாளியால் கழிக்கப்பட வேண்டும்.

குறைந்த பட்சம் மாத வருமானம் இரண்டு லட்சம் அல்லது வருடாந்த வருமானம் குறைந்த பட்சம் 30 இலட்சம் பெறும் ஊழியர்கள் அதற்குட்படுகின்றனர்.