22000க்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு!!

கொரோனா பாதிப்பு..

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

“கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 52 நாடுகளில் 22 ஆயிரத்து 73 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தோ, சமூகத்தில் இருந்தோ பரவி இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஏற்கனவே சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சுகாதார ஊழியர் களின் பணியிடங்களில் அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரையில் கொரோனா பாதிப்பால் மருத்துவர்கள், தாதிமார்கள், ஊழியர்கள் என பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவியும் இதுவரை உயிரிழப்பை சந்திக்காத நாடுகள் எவை தெரியுமா?

கொரோனா பரவியும்..

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தொட்டுள்ளதுடன் மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளன. எனினும் வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன.

பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை.

கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புக்களை சந்திக்காத நாடுகள், தீவுகள் 49 என உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுத்தியுள்ளது.

அவற்றில் வியட்நாம், கயானா, கம்போடியா, ருவண்டா, மடகஸ்கார், பிரெஞ்சு கயானா, உகாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் : இரு வாரங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை விட இரண்டு மடங்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட போதிலும், இன்னும் அடையாளம் காணப்படாத நோயாளிகள் எத்தனை பேர் சமூகத்திற்குள் இருப்பார்கள் என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்காவது நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மறைந்திருக்காமல் சுகாதார அதிகாரிகளிடம் அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மக்களிடம் கிடைத்த ஆதரவு காரணமாக வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டால் இலங்கை கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்திய உலகின் முதலாவது நாடாக இலங்கை மாறும் என பொரளை வைத்திய ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலைத்தில் 26 ஸ்ரீலங்கன் விமானங்கள்!!

கட்டுநாயக்க விமான நிலைத்தில்..

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தேசிய விமான சேவைக்கு சொந்தமான 26 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய ததலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் உத்தரவிற்கமைய இந்த பாதுகாப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றமையினால் விமன பயணங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் முகம் கொடுக்க கூடிய வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

பாடசாலை மாணவர்களிடம்..

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களிடமும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரத்தில் பேனை அல்லது பென்சில் போன்ற எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரப்பட்டுள்ளது.

“விடுமுறையில் எழுதும் நாடு… பெறுமதியான புத்தகம்” என்ற தொனிபொருளுக்கு அமைய கல்வியமைச்சரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று இரவு 10.43இற்கு உதயமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்திலேயே நாட்டுக்கு பெறுமதியானதும், பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய இரு இலங்கையர்கள்!!

லண்டன் விமான நிலையத்தில்..

லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் சிக்கியிருந்த இலங்கை பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 12.45 மணியளவில் லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 என்ற விமானத்தில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள 18 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 15 பேரை எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையாக அமுலாகும் சட்டம் : 24 மணி நேரத்தில் தீவிர நடவடிக்கை!!

கடுமையாக அமுலாகும் சட்டம்..

நாடாளவிய ரீதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த பிரபல சீரியல் நடிகை!!

சீரியல் நடிகை..

வாடகை வீட்டில் வசித்து வந்த சீரியல் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.

விஸ்வசாந்தியின் வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது வீட்டுக்குள் சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விஸ்வசாந்தியின் செல்போனைக் கைப்பற்றிய பொலிசார் வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விஸ்வசாந்தி அறையில் மதுபாட்டிலும், ஸ்நாக்ஸும் இருந்துள்ளது, மேலும் அறையில் இறந்துகிடந்த அவரது நிலை, கால்கள் கட்டிலிலும் தலை கீழேயும் காணப்பட்டுள்ளது. இதனால் போதையில் தடுமாறி கட்டிலிருந்து கீழே விழுந்ததில் மண்டையில் அடிபட்டு இறந்துள்ளாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

நானே என் தந்தைக்கு எமனாகிவிட்டேன் : கொரோனாவால் தந்தையை இழந்த மகனின் கண்ணீர்!!

தந்தையை இழந்த மகனின் கண்ணீர்..

சீனாவில் கொரோனாவுக்கு தனது தந்தையை பறிகொடுத்த மகன் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலிருந்து 700 மைல் தொலைவில் வசிப்பவர் Zhang Hai.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய 76 வயது தந்தையான Zhang Lifang-ன் சிகிச்சைக்காக வூஹானுக்கு வந்துள்ளார். அவர் வூஹானில் ஓய்வு பெற்றவர் என்பதால் இலவச சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக இந்நகரத்துக்கு விரைந்துள்ளனர்.

அச்சமயம் கொரோனா பரவி வந்த காலகட்டம் என்பதால், கடந்த ஜனவரி 30ம் திகதி Zhang Lifangக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு நாட்களிலேயே மரணமடைந்தார்.

இதனால் மனமுடைந்த போன Zhang Hai, ஊரடங்களிலேயே தன்னுடைய நாட்களை கழித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனாவின் தீவிரம் புரியாமல் என் தந்தையை சிகிச்சைக்காக அங்கு அழைத்து சென்றுவிட்டேன்.

மரணத்திற்காக என் தந்தையை அழைத்து சென்றது போன்ற உணர்வு, அதை நினைத்தால் என் மேலே எனக்கு கோபம் வருகிறது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் 76 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் Zhang Hai.

எனினும் அவருடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் வூஹானுக்கு வரவேண்டிய சூழலும் உள்ளது.

அம்மாவைக் காப்பாற்ற டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண் : பின்பு நடந்த சம்பவம்!!

அம்மாவைக் காப்பாற்ற..

டிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18 வயதான பவித்ரா ஆரபவி. இவரது தாயார் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். மருத்துவர்கள் டயாலிசிஸை பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு, தினமும் நான்கு விதமான மாத்திரகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரால் வாழ்வது சிரமம் என்ற நிலையில், ஊரடங்கு உத்தரவால், அவருக்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதில் அந்த ஊரில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

பெங்களூரில் கிடைக்கும் மருந்தை வாங்க வழி தெரியாமல் தவித்த பவித்ரா, வேறு வழியின்றி டிக்டாக் மூலம் கண்கள் கலக்கத்துடனே உதவிகேட்டு ஒரு வீடியோவை தயாரித்து, முதல்வரை உதவும்படி கோரியுள்ளார். அந்த வீடியோ வைரலான சில மணிநேரங்களில் முதல்வர் எடியூரப்பா பார்வைக்கும் சென்றுள்ளது.

இதையடுத்து பவித்திராவுக்கு உதவ எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் நேற்று இரவு 11 மணிக்கு அவரது வீடு தேடிவந்து மருந்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் நெகிழ்ந்து போயுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

கால்வாயிலிருந்து..

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலருக்கு இன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் போது ம துவுக்காக அலைந்த சிறுவர்கள் : அறிவுரை கூறிய நபரை வெ ட்டிக் கொ ன்ற ப யங்கரம்!!

கொரோனா ஊரடங்கின் போது..

தமிழகத்தில் ம து கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய ந பரை அவர்கள் வெ ட்டிக் கொ ன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 -ம் திகதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் ம ர்ம ந பர்களால் வெ ட்டப்பட்ட நிலையில் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் ச டலமாக மீ ட்கப்பட்டார் .

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கை து செய்தனர்.

இந்நிலையில் கொ லைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் ஊரடங்கு தினமான கடந்த 5-ம் திகதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே ம து கி டைக்கும் என அவர்கள் தேடிக் கொண்டிருந்த சூழ்நிலையில் வீராவிடம் அது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது வீரா அவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் ஆ த்திரம் அடைந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஆ யுதங்களோடு வீராவை அ டித்துள்ளனர்.

இதில் ரத்த காயங்களுடன் வீரா, சிறிது தூரம் நடந்து சென்று கோவிலில் சரிந்து விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் து ரத்தி அ டிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

முதல் மாத சம்பளத்துடன் தாயை காண ஆசையாக சென்ற இளைஞர் விபத்தில் பரிதாப மரணம்!!

விபத்தில்..

கேரளாவில் முதல்மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற இளைஞர் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஆசிப், மார்ச் மாத இறுதியில் தற்காலிக நர்ஸாக பணி நியமனம் பெற்று Corona Isolation Ward-ல் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு மிகவும் துறுதுறுவென தன்னுடைய பணிகளையாற்றி வந்த ஆசிப் முதன்முதலாக சம்பளத்தை பெற்றுக் கொண்டார். சம்பளத்துடன் தன்னுடைய தாயே பார்க்க சொந்த ஊருக்கு சென்ற போது எதிரே வந்த லொறி மீது சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல் : யாழ். மக்களுக்கு மன நிம்மதி தரும் தகவல்!!

யாழ். மக்களுக்கு..

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருதவாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக எந்தவொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை.

அதே நேரம் கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 7 கொரோளா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் கொரோனா உயிரிழப்புக்கள் ஏன் அதிகம்? தீவுகளில் வீசப்படும் சடலங்கள்!!

கொரோனா உயிரிழப்புக்கள்..

உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,108 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலும், அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் விளங்குகிறது. அங்கு மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் ஆகும். மேலும் குறுகிய நாட்களில் 8600-க்கும் அதிகமான பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூயோர்க்கில் அதிக மக்கள் வசிப்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாலும்தான் அங்கு கொரோனாவின் தாக்கமும், இறப்பும் அதிகமாக இருப்பதாக நியூயோர்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் நிதி தலைநகராக விளங்கும் நியூயோர்க்கில் 86 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அமெரிக்காவிலேயே மக்கள் தொகை நெருக்கம் இங்குதான் அதிகம். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

நடைபாதைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். சுரங்க பாதைகளில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு செல்லும் நிலைதான் உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் சாரை சாரையாக சென்று கொண்டு இருப்பார்கள்.

மேலும் நியூயோர்க்குக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம். பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு சுற்றுலாவாக ஆண்டுக்கு 6 கோடி பேர் வருகிறார்கள். மக்கள் தொகை நெருக்கம் மற்றும் சுற்றுலா பயணிகள் காரணமாக இங்கு கொரோனா அதிக அளவில் பரவி இருப்பதாக கருதப்படுகிறது.

ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்துதான் நியூயோர்க்குக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. நியூயோர்க்கில் கொரோனா தொற்று பரவி இருப்பது முதன் முதலாக மார்ச் 1ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா பரவல் பற்றிய தகவல் வெளியான போதும் ஆரம்பத்தில் மக்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாகவே நடமாடினார்கள். கொரோனா வேகமாக பரவுவதற்கு அதுவும் காரணமாக அமைந்து விட்டது.

நியூயோர்க்கில் கொரோனா பரவுவது அதிகமானதை தொடர்ந்து நகரில் உள்ள பாடசாலைகள், நட்சத்திர விடுதிகள், மதுபான விடுதிகள் மூடப்படுவதாக நகர மேயர் பில் டி பிலாசியோ மார்ச் 16ம் திகதி அறிவித்தார்.

அதன்பிறகு வர்த்தக நிறுவனங்களை மூடுமாறும், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் 2ம் திகதி அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நியூயோர்க்கில் தினந்தோறும் ஏராளமான பேர் உயிர் இழப்பதால், ஆஸ்பத்திரிகளில் பிணவறைகளில் உடல்களை வைக்க இடம் இல்லை. யாரும் வந்து உரிமை கோராமல் இருக்கும் உடல்களை ஹார்ட் தீவுக்கு கொண்டு சென்று புதைக்கிறார்கள்.

அங்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 25 உடல்கள் புதைக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உடல்களை புதைக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகளின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், பிணவறைகளில் உரிமை கோராமல் நிறைய உடல்கள் இருப்பதாகவும், உறவினர்கள் யாரும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உடல்களை வியாழக்கிழமை தோறும் ஹார்ட் தீவுக்கு கொண்டு சென்று புதைப்பதாகவும்,

மற்ற உடல்களை பாதுகாப்பாக வைத்து இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார். பிணவறைகளில் உடல்களை 30 முதல் 60 நாட்கள் வரை வைத்து பாதுகாக்கத்தான் வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உறங்கிக்கொண்டிருந்த பெ ண் தாதிய உத்தியோகத்தரின் ச ங்கிலியைப் ப றித்து சென்றவரை தே டும் பொலிஸார்!!

சங்கிலியைப் ப றித்து..

உறங்கிக் கொண்டிருந்த பெ ண் தாதிய உத்தியோகத்தரின் க ழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அ றுத்து செ ன்றவரை பொலிஸார் தே டி வருகின்றனர். இந்த விடயத்தை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் தங்கியுள்ள பகுதிக்கு சென்ற அ டையாம் தெரியாத நபரால் தங்கசங்கிலி அ றுத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செயற்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை கு ற்றத்தடு ப்பு பொலிஸார் நேற்று பொலிஸ் மோ ப்பநாயின் உதவியுடன் வைத்தியசாலை சூழலில் தொ டர் தே டுதலை மேற்கொண்டனர்.

அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் உதவியுடன் ச ந்தேக ந பரை அடையாளம் கண்ட பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் 29 வயது மதிக்கத்தக்க ச ந்தேக ந பரை கைது செய்திருந்தனர்.

பின்னர் கைது செய்து அழைத்து சென்ற நபரை அளடையாளப்படுத்த முற்படுத்திய போது சந்தேக நபரது முகச்சாயல் மேற்குறித்த சிசிடிவி காணோளி மற்றும் பாதிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தரது முறைப்பாட்டுடன் பொருந்தவில்லை என தெரியவருகிறது.

இதனால் கைதான சந்தேக நபர் வி சாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதான நபர் சற்று சித்த சுவாதீனமற்றவராக காணப்படுபவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக கல்முனை கு ற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர் விட்டுச்சென்ற தடய சான்று பொருட்களை முன்வைத்து தொடர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.