களுத்துறை கடலில் உருவான பாரிய அலை : 28 சுற்றுலா விடுதிகள் சேதம்!!

28 சுற்றுலா விடுதிகள் சேதம்

களுத்துறையில் கடலில் உருவான பாரிய அலை காரணமாக சுமார் 28 சுற்றுலா விருந்தகங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்துக்குள் இந்த சம்பவம் இரண்டாவது முறையாக ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் அலையினால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாளை 10 மணித்தியாலங்கள் நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

அதற்கமைய நாளைய தினம் 10 மணித்தியாலங்கள் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலின் அபாய வலயங்களாக கருதப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை!!

8 பேரின் இரத்த மாதிரிகள்..

யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா பொது சுகாதார துறையினரால் குறித்த இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரனா தொற்று பரிசோனைக்காக வவுனியா, காத்தான் கோட்டம் பகுதியில் ஒரு குடும்பமும்,

ஓமந்தை அரச வீட்டுத் திட்ட பகுதியில் ஒரு குடும்பமும், புளியங்குளம் முத்துமாரி நகர் பகுதியில் 6 குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பங்களில் இருந்து ஆராதனையில் கலந்து கொண்ட 8 பேரின் இரத்த மாதிரிகள் சுகாதார துறையினரால் பெறப்பட்டு கொரனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்!!

கொரோனா நோயாளி..

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளார். கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசி மூலம் உரையாடி இதனை உறுதி செய்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 22ம் திகதி விவேகானந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விவேகானந்தன் இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா நோயுடன் இலங்கை வந்த சுவிஸ் போதகரை தொழில் நிமித்தம் சந்திக்க சென்ற வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த இளைஞர்கள் : கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சர்யம்!!

இளைஞர்கள்

துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்களின் தொழில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் ஊருக்கே திரும்பலாம் என கிளம்பிய போது பெரும் கோடீஸ்வர்ர்களாக மாறியுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த Jijesh Corothan, Shah Jahan Kuttikattil, Shanoj Balakrishnan ஆகிய மூவரும் துபாயில் தங்கி கார் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடனுக்கு மூவரும் சேர்ந்து சொகுசு காரை வாங்கி சில நாட்களாக ஓட்டி வந்தார்கள்.

இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் துபாயில் சுற்றுலா துறை முழுவதுமாக முடங்கியது. இதனால் கார் மூலம் வரும் வருமானம் நின்றது, மேலும் கடன் தவணையை செலுத்த முடியாமல் மூன்று நண்பர்களும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து காரை விற்றுவிட்டு கடனை அடைத்து சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்த மூவரும் அதற்காக நபர் ஒருவரை சந்திக்க சென்றனர்.

அப்போது வந்த ஒரு போன் கால் Jijesh Corothan, Shah Jahan Kuttikattil, Shanoj Balakrishnan வாழ்க்கையை மாற்றியுள்ளது. அதாவது மூவரும் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு ரூ 41 கோடி பரிசு விழுந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து Jijesh கூறுகையில், கடன் தொகையை கூட செலுத்த முடியாமல் சிரமத்தில் இருந்த போது கேரளாவுக்கே திரும்ப முடிவு செய்தோம், அந்த சமயத்தில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடித்தது தெரியவந்தது.

மூன்று பேரும் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கியதால் பரிசு தொகையை பகிர்ந்து கொள்கிறோம். இனி எங்கள் தொழிலுக்கு பிரச்சனையில்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரே நாளில் வலியால் துடிதுடித்து இறந்து போன பெண் : கதறும் சகோதரன்!!

கதறும் சகோதரன்..

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் பகுதியை சேர்ந்த ஜெஸிகா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்தநாளே பரிதாபமாக கொரோனாவல் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரும் இவரது அண்ணாவும் கடந்த 3 வருடங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 23ஆம் திகதி “உடம்பெல்லாம் வலி.. நடுக்கமா இருக்கு..”என்று அண்ணாவிடம் கூறியுள்ளார்.

கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இது எதுவுமே அவருக்கு காணப்படவில்லை. இது குறித்து ஜெசிக்காவின் அண்ணன் கண்ணீருடன் கூறியது, மருத்துவமனை செல்வதாக ஜெஸிகா சொன்னபோது, முதலில் போய் டெஸ்ட்-களை எடுக்க சொல்லி கூறினேன். மறுநாள் பிணமாகத்தான் தங்கையை கண்டேன்.

மார்ச் 23-ம் திகதி வரைக்கும் ஜெஸிகாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்தார். லேசாக உடம்பு வலி, குளிர்ச்சி, நடுக்கம் இருப்பதாக சொன்னார். ஆனால் எங்களுக்கு ஒரு டவுட் இருந்தது. உடம்பு வலிதானே, அதற்கும் வைரஸுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்து முதலுதவி மருந்து தந்தேன்.

ஆனால் மறுநாளே உடல்நிலை மோசமாக இருப்பதாக போன் வந்தது. மருத்துவமனைக்கு நான் நுழைந்ததுமே ஏற்கெனவே ஜெஸிகா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

ஒரேநாளில் உடல்நிலை மோசமாகி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. எல்லாமே முடிஞ்சு போச்சு. எவ்வளவு வலியில் அந்த ஒருநாள் என் தங்கை துடித்திருப்பாள், கதறி இருப்பாள்.

அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லக்கூட நான் அவள் பக்கத்தில் இல்லையே. அவளுடைய உடம்பை எரித்தபோதுகூட குடும்பத்தினர் யாருமே வர முடியாத சூழல். இந்த மாதிரி நிலைமை யாருக்குமே வரக்கூடாது என்றார்.

எந்த சிகிச்சையும் எடுக்கும் முன்னரே அறிகுறி தெரிந்த அடுத்தநாளே ஜெஸிகா உலகைவிட்டு போனதை நினைத்து குடும்பத்தினர் இன்னும் மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ்..

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்று உள்ளவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலையில் இரண்டு பேரும் மாலை 5 மணியளவில் 3 பேரும் இரவில் இரவில் 2 பேரும் என 7 பேர் தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 6வது பொதுமகன் இன்று காலை மரணமானார் 80 வயதான தொற்றாளியே அங்கொட தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸினால்..

இலங்கைக்குள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 6வது பொதுமகன் மரணமான நிலையில் இன்று காலையில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர்.

80 வயதான தொற்றாளியே அங்கொட தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமானார். அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலால் தெஹிவளையை சேர்ந்த நபர் மரணம் : தீவிரமடையும் பாதுகாப்பு!!

கொரோனா பரவலால்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று ஆறாக அதிகரித்துள்ளது. ஆறாவது மரணம் இன்று காலை ஏற்பட்டதாக சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தெஹிவளையை சேர்ந்த 80 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் நான்கு பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இன்றைய தினம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 42 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களுக்கு அருகில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்டி அக்குறன பிரதேசத்தில் இருந்து கலேவெல, புலனவெவ பிரதேசத்திற்கு வந்த நபர் அந்த வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : அமைச்சர் பவித்திரா!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..

கொரோனா குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவ கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இரு வார காலத்திற்கும் மேலதிகமாக தேவையேற்படின் இதே போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.

பொது போக்குவரத்தின் போது சமூக இடைவெளியுடன் பயணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றை முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலணிக்கு தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ராஜசிங்க இதன் போது தெரிவித்தார்.

மேலும், விசேட வைத்தியர் மகேஷ் ஹரிஸ்சந்திர கருத்து தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் அசௌகரியமின்றி பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோரை இனங்காண்பதற்கும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அதில், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பேராரிசியர் இந்திக கருணாதிலகவினால் பொதுமக்களுக்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதை விடவும் எதிர்காலத்தில் அதிகளவான நிர்வாகம் அத்தியாவசியமாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இம் மாதம் 20 ஆம் திகதி வரை இரு வார காலத்திற்கு வைரஸ் தொற்று பரவலானது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 14 நாட்களுக்கு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, புலனாய்வுதுறையினர் ஊடாக தேவையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு தொற்று நோயியல் பிரிவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது வரையில் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக அத்தியாவசிய தேவைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லேரியா வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவினை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்தோடு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு Mobile CT Scanner இயந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் துரிதமாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சரினால் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் இணையம் ஊடாக கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

சமகாலத்தில் இணையம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையம் ஊடாக விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொருட்களை வாங்குவதற்கு இணையம் ஊடாக பணம் செலுத்துவது குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் நிரந்தர முகவரியை உறுதி செய்த பின்னர் இணையம் ஊடாக பணம் செலுத்துவதற்கு தீர்மானிக்குமாறு பொது மக்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனையாளர்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் இருப்பின் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு குறுந்தகவல் ஊடாக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை நாடு இக்கட்டான நிலையில் உள்ளதால், பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்த விற்பனையாளர்களிடம் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒன்லைன் மூலம் கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலுள்ள மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனாவின் அபாயத்தால் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!!

14 இடங்கள் முற்றாக முடக்கம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை – போரத்தொட்டை பகுதியும், ஜா – எலவில் இரு பகுதிகளும்,

யாழ். மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளை பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும்,

கொழும்பு மாவட்டத்தில் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை – அர் ஜனமாவத்தை ஆகிய பகுதிகளும்,

குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹூகொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி!!

கொரோனா வைரஸ்..

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். மேலும் இவர் ஒரு எழுத்தாளர் எனவும் மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒ ருவர் அ டித்துக் கொ லை!!

கனடாவில்..

கனடாவில் நேற்றுமுன்தினம் ப டுகொ லை செ ய்யப்பட்டவர் த மிழர் என ரொரன்றோ பொ லிஸார் உறுதி செய்துள்ளனர். இ ரண்டு ந பர்கள் க டுமை யாக அ டித்ததால் 58 வ யதான கமலகண்ணன் அரசரட்ணம் உ யிரிழந்து ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நி கழ்ந்த ச ம்பவத்தில் இ வர் கொ ல்லப்பட் டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 ம ணியளவில் இ டம்பெற்ற ச ம்பவம் தொ டர்பில் ரொரன்றோ பொ லிஸாருக்கு த கவல் வ ழங்கப்பட்டுள்ளது. உ டனடியாக ச ம்பவ இ டத்திற்கு பொ லிஸார் செ ன்றுள்ளனர்.

அ ங்கு ஆ பத்தான நி லையில் இ ருந்த ந பரை வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்ல ந டவடிக்கை எடுக்கப்பட்ட போ திலும் கு றித்த ந பர் உ யிரிழந்து ள்ளார். இ ந்த கொ லைச் ச ம்பவத்தில் உ யிரிழந் தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பி றப்பிடமாகக் கொ ண்டவர் என தெரியவருகிறது.

அந்தப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இர ண்டு ஆ ண்களுக்கு இ டையில் ஆ ரம்பித்த வா க்குவா தம் வ ன்மு றையாக மா றியதால் க டும் ச ண்டை ஏ ற்பட்டுள்ளது. இ தில் ப டுகா யம் அ டைந்த கமலகண்ணன் உ யிரிழ ந்தார்.

கொ லை ச ம்பவத்துடன் தொ டர்புடைய கு ற்றச்சாட்டில் ஒ ருவரை ரொரன்றோ பொ லிஸார் தே டிவருகின்றனர். ச ந்தேக ந பர் 40 முதல் 50 வ யதுக்கு உட்பட்டவர் என பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். கொ லையா ளி அ ங்கிருந்து த ப்பிச் செ ன்றுள்ளார்.

ச ம்பவத்துடன் தொ டர்புடையவர்கள் தொ டர்பான த கவல்களை பொ லிஸார் வெ ளியிட்டுள்ளனர். நீல நிற ஜேர்ச்சி, சாம்ல் நிற காற்சட்டையும், கறுப்பு பாதணிகளை அவர் அணிந்திருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ச ந்தேக ந பர் தொடர்பில் த கவல் அறிந்தால் பொ லிஸாரின் 416-808-7400 என்ற இ லக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொ லிஸார் பொது ம க்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரொரற்றோ பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்.

சுவாசப் பிரச்சினையுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் மரணம்!!

சுவாசப் பிரச்சினையுடன்..

தம்புளையில் சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

நாவுல பிரதேச கிராம சேவர் மற்றும் சுகாதார பரிசோதகரின் தலையீட்டில் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய பெண்ணே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்புளை வைத்தியசாலை வைத்தியர் பிரதிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் மகன் நீர்கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த வாரமே வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்த பெண் இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு செல்லாமையினால் மிக மோசமாக குறித்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் வைத்தியசாலை செல்ல முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த மேலும் இருவரும் சுகயீனமடைந்த நிலையில் இருந்ததாக அம்பியுலன்ஸ் வண்டி சாரதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை : சுகாதாரப் பிரிவு நடவடிக்கை!!

கொரோனா பரிசோதனை

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குழு பரிசோதனை முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் பிரதானியான பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினை பரிசோதிக்கும் PCR இயந்திரங்கள் அரச மற்றும் தனியார் துறைகளிடம் 50 உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இயந்திரங்கள் மூலம் இதுவரையில் தினசரி 250 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.