கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீட கணக்கியல் மாதிரியின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை விரைவில் 1400 ஆக உயரக்கூடும்.
இதனை எதிர்கொள்ள இலவச சுகாதார சேவைகள் தயராகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார் ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணக்கியல் மாதிரியின் அடிப்படையிலேயே நேற்று ஏப்ரல் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளிகனின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்திருந்தது. எனினும் கணக்கியல் மாதிரியை விட தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கணக்கியல் மாதிரியின்படி ஏப்ரல் 7ஆம் திகதி தொற்றாளர்களின் தொகை 163ஆக இருக்கும். ஏப்ரல் 17ஆம் திகதி 340ஆக உயரும் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கணக்கியல் மாதிரி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மனோஜ் கிருஷாந்த, பேராசிரியர் நிசாந்த பெரேரா ஆகியோரால் இரண்டு கிழமைக்கு முன்னாள் தயாரிக்கப்பட்டது.
இதேவேளை இலங்கையில் கொரோன வைரஸ் பரவலைப் பொறுத்தவரையில் தற்போது மூன்றாவது கட்டத்தின் ஏ பிரிவில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது வீடு, குழுமம் என்ற அடிப்படையிலேயே தற்போது பரவி வருகிறது. எனினும் இதனை 3 பி என்ற சிறிய குழுமம் மற்றும் 4ஆம் பிரிவான சமூக தரத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.
இந்தநிலையில் தற்போது இலங்கையில் 2 ஆயிரம் கொரோனவைரஸ் தொற்றாளர்களை பராமரிக்கும் திறன் உள்ளது. எனினும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால் அது 3 ஆயிரம் தொற்றாளர்களாக மாறும் என்று மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி அலுத்கே தெரிவித்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெ ருவோரத்தில் வீ சப்பட் டிருந்த நி லையில் நேற்று சட லமாக மீ ட்கப்பட்டுள்ள சி சு தொ டர்பான நீதிமன்ற வி சாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இ வ்வாறு ச டலம் க ண்டெடு க்கப்பட்டுள்ளது.
ச டலம் மு ழுமையாக சி தைவடைந் திருந்ததால் கு ழந்தையுடைய உ டலின் ஒ ரு பா கமே க ண்டறியப்பட்டுள்ளது. குறைமா தத்தில் பி ரசவிக்கப்பட்ட கு ழந்தை யொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என கா வல்துறையினர் ச ந்தேகிக்கின்றனர்.
சி சுவின் ச டலம் கு றித்து நீதவானின் ஸ்தல வி சாரணைகள் முடிவடைந்த பின்னர் – மேலதிக வி சாரணைக்காகவும், அடுத்த கட்ட ந டவடிக்கைகளுக்காகவும் பொ லிஸார் ஊடாக ச டலம் நுவரெலியா வை த்தியசாலையிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிந்துலை பொ லிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முககவசம் அணிந்தால் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செக் குடியரசு வைத்திய நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
வீட்டை விட்டு வெளியே செல்வதென்றாலும், மக்கள் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதென்றாலும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
முகக் கவசம் அணிவது அத்தியாவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பு இதற்கு முன்னர் அறிவித்தது.
எப்படியிருப்பினும் வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதனால் அந்த அமைப்பு தனது எண்ணத்தை மாற்றும் என ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுதற்கு பிரதான காரணம் அந்த நாட்டு மக்கள் முகக் கவசம் அணியாமையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கட்டாயம் முகக்கசவம் அணியுமாறு அமெரிக்க நோய் தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தம் செய்யும் விசேட நடவடிக்கை வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் ஆகியோரினால் இன்று (05.04.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தப்படுத்தி கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பற்றும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர், 563 மற்றும் 681 ஆகிய இராணுவ படைப்பிரிவினர், வவுனியா பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.
வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா கண்டி வீதி, புகையிரத நிலைய வீதி, பழைய பேருந்து நிலையம், முதலாம் குருக்குத்தெரு, இரண்டாம் குருக்குத்தெரு, ஏ9 வீதி போன்ற என்பவற்றை சுத்தப்படுத்தும் பணியில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் , 563 மற்றும் 681 ஆகிய இராணுவ படைப்பிரிவினர் , வவுனியா பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனை பகுதிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய சிங்கள – தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடிதுயுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலைமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது.
ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன,
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கொரோனா நோயாளிகள் அதிகமான அடையாளம் காணப்பட்ட கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம், களுத்துறை ஆகிய பகுதிகள் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இளம்பெண் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தனது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகள் கொரோனா பிடியில் சிக்கிதவிக்கும் நிலையில் அமெரிக்காவும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நியூயோர்க் நகரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த நகரத்தைச் சேர்ந்த டிஃப்பனி பிங்க்னி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர். இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தன் இரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிலேயே முதல் முறையாக டிஃப்பனி இதைச் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான பதில்கள் ஒருவேளை என் இரத்தத்தில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்கு உதவிய நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளுடன் அவர்களின் இரத்த பிளாஸ்மாவை வேறு ஒருவருக்குச் செலுத்தினால் அவரும் குணமடையலாம் என நம்பப்படுகிறது.
இது பற்றிப் பேசிய மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டேவிட் ரீச், டிஃப்பனியின் செயல் வரவேற்கத்தக்கது. அவர் முற்றிலும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் அனைத்துச் சோதனைகளும் செய்யப்பட்ட பிறகே இரத்த தானம் செய்தார். எங்களின் இந்த முயற்சி நல்லபடியாகச் செயல்படும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.
ஒரு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் உடலில் தானாகவே அந்த நோயை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடிகள் உருவாகும். இந்த ஆன்டிபாடிகள் உயிர் பிழைத்தவரின் ரத்தத்தில் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குக் கூட அப்படியே இருக்கும். இதை வைத்தே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் 16 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றிய இளம் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிய நிலையில், அவரது கணவர் குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய மறுகணம் அவரது உயிர் பிரிந்துள்ளது.
West Midlandsஇலுள்ள Walsall Manor மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த Areema Nasreen (36), கொரோனா தொற்றால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்திருக்கிறார்.
8, 10, மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகளைப் பிரிய முடியாமல் அந்த உயிர் துடித்ததோ என்னவோ! அப்போது, Areemaவின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டாரோ என்னவோ, அவரது கணவர் மெல்ல மனைவியின் காதருகில் குனிந்து, குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறியிருக்கிறார்.
உடனே Areemaவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்திருக்கிறது. மனைவியை கட்டியணைத்து தேற்ற முயன்றிருக்கிறார் கணவர். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவ்வாறு செய்யவேண்டாம் என மருத்துவர்கள் கணவரை தடுத்திருக்கிறார்கள்.
இருந்தும், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மனைவியை கணவர் அணைத்துக்கொள்ள, Areemaவின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான Areemaவின் மரணம் அவரது குடும்பத்தாரிடையே கடும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Areema, பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான மருத்துவப்பணியாளர்களில் மிகவும் இளம் வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு.
கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக சிற்சில நாடுகள் மிக கடுமையான முடக்கல்களை அமுல்ப்படுத்தியிருந்தாலும் பிரித்தானியா கடுமையாக முடக்காதுவிடினும் மக்களுக்காக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.
ஆனாலும் அதை மக்கள் செவிமெடுக்காது கடந்த மாதம் அன்னையர் தினத்துக்காக வெளியிடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காது ஒன்றாக பொது இடங்களில் கூடியிருந்ததை பிரித்தானிய ஊடகங்கள் வெளிக்காடி இருந்தமையை அடுத்து மீண்டும் அரசு மக்களை வீடுகளில் முடங்கியிருந்து மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்தி கொரோனா வைரஸ் பிடியில் சிக்குண்ட நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுமாறும் கேட்டிருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் பிரதமர் உட்பட இன்னும் சில உயரதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரும் பிரித்தானியாவில் நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.
இந்நிலையில் பிரித்தானியாவில் இன்றைய காலநிலை மிகவும் நன்றாக இருப்பதனால் பல இடங்களில் பொதுமக்கள் கூடி இருப்பதை மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் வெளிவிட்டிருக்கின்றன.
இவ்வாறு தொடரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதனால் பிரித்தானிய மக்கள் அரச அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது, கொரோனாவுக்கு பயப்படாது தத்தம் வேலைகளில் ஈடுபடுவதோடு வார இறுதி நாட்களில் சூரிய வெளிச்சத்திற்காக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவே முடியாது.
இதனாலேயே கொரோனா தொற்று இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதை அரசு அடிக்கடி சுட்டிக்காட்டினாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் பொலிஸாரால் அதைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் புதிய திட்டமொன்றை கையாண்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு, வரவேற்பு பிரிவு, பொலிஸ் நிலைய முறைப்பாட்டு பிரிவு, கைதிகள் விசாரணை பிரிவு போன்றவற்றில் பொலிஸார் முன்பாக கண்ணாடிப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்ணாடிப் பெட்டியினுள் பொலிஸார் அமர்ந்திருப்பதுடன் கண்ணாடிப்பெட்டியின் வெளிப்பகுதியில் இருக்கும் பொதுமகனிடம் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே கையை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள்ளே வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக பெண் செவிலிய மாணவி ஒருவர் போர் வீரர் போல் நின்று போராடு வருவது சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கேரளா, ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் செவிலியர் மிருதுளா ஸ்ரீ. 26 வயதான இவர் புதியதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு செவிலியர்.
கேரள மாநிலத்தையே கொரோனா நோய்த் தொற்று முடக்கிப் போட்டுள்ள நிலையில் தைரியமாக இவர், கொரோனா வார்டில் உள்ளவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்.
நோய்த் தொற்று தனக்கும் வரலாம் என்ற அச்சம் இருந்தாலும் இவரைப் போல பல செவிலியர்கள் கொரோனாவிற்கு எதிராக நின்று போர் வீரர்களைப் போல் செயலாற்றி வருகின்றனர்.
ஆனால் இதில் மிருதுளா ஸ்ரீயை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இவர் இன்னும் முறையாக வேலைக்குச் சேரவில்லை.
அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வரும் மாணவியான மிருதுளா, முறையாகச் செவிலியராக மாறுவதற்காகக் கல்லூரி சார்பில் கொடுக்கப்படும் பயிற்சிக்கானச் செவிலியராக தன் வேலையைத் தொடங்கியுள்ளார்.
இவர் சேர்ந்த போதே அவருக்குச் சீனாவிலுள்ள வுஹானில் இருந்து திரும்பிய நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் இவரது முகத்தில் லேசான அச்சம் நிலவினாலும் அஞ்சாமல் நின்று போர் வீரரைப் போல பணியாற்றி வருகிறார்.
மிருதுளா தற்சமயம் சிகிச்சை அளித்து வருபவர் தான் இந்தியாவில் கொரோனா உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நபர். இவர் வுஹானில் மருத்துவ படித்துக் கொண்டிருந்தார். அங்கு நிலைமை தீவிரமடைந்ததும் அவர் இந்தியா திரும்பினார்.
ஒரு மருத்துவ மாணவருக்கு ஒரு மருத்துவ செவிலியர் சிகிச்சை அளிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இன்று இந்தியாவின் தலைப்புச் செய்தியாகி உள்ளது. காரணம் இவரைப் பற்றி மன் கீ பாத் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிருதுளாவிடம் இது குறித்துக் கேட்ட போது, இது எங்களது பணி மற்றும் வேலை. சந்தேகம் மற்றும் கவலைகள் இடையே செயல்படுவது எங்களது கடமை என கூறியுள்ளார். இவரை சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ந்து 4 நாட்களாக காகங்கள் திடீரென இறப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பன்னியூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னியூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் திடீரென காகங்கள் மயங்கிய நிலையில் கீழே விழுந்து இறந்துவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக காகங்கள் திடீரென இறப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் காகங்கள் ஏன் திடீரென இறந்து விழுகிறது என்று ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வீட்டுத்தோட்ட சவாலில் பங்கெடுக்க தனக்கும், தனது மனைவி ஷிரந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமரும், அவரது பாரியாரும் செடி ஒன்றை நாட்டி அதற்கு தண்ணீர் பாய்ச்சும் படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. டுவிட்டர் பதிவில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை அழித்துள்ளது.
அத்துடன் அது எமது எதிர்கால சந்ததியினர் மிகவும் நிலையான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கற்பித்துள்ளது. அனைவரும் தங்களது பங்கை செய்ய வேண்டும் என நான் ஊக்குவிக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் நாடு திரும்பியவர்கள் வெலிகந்தை கந்தகாடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னர், கடந்த 24 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சென்ற களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்தை அடுத்து, அவருடன் பேருந்தில் பயணித்த காலி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு பேரில் ஒருவர் மாத்தறை கொட்டவில வைத்தியசாலையிலும் ஏனையோர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் மூடப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகம், அரச தகவல் திணைக்களம், இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையை தவிர வேறு அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இனங்களுக்கிடையில் இன பேதம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு முழுமையாக இலங்கை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 25 பேர் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று 3 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், இன்று மேலும் 7 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் ஊரடங்கு சட்டத்தை நீக்காமல் தொடர்ந்து ஒரு மாதத்திற்காகவது அமுல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். அப்படி செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமைக்கமைய மேலும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 159 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 24 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.