முல்லைத்தீவில் இ ளைஞன் அ டித்துக் கொ லை : நாயால் வந்த வினை!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இ ளைஞர் ஒ ருவர் அ டித்து கொ லை செய்ய ப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்றுமுன்தினம் (02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இ ளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை தி ருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இ ளைஞன் க ட்டி வை த்து இருக்கின்றார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இ ளைஞருடன் வா க்குவாதபட்டு வா க்குவாதம் முற்றிய நிலையில் அது கைக லப்பாக மாறிய நிலையில் குறித்த இ ளைஞன் மீ து தா க் கு த ல் ந டத்தப்பட் டிருக்கிறது.

இந்நிலையில் த லையில் ப லத்த கா யங்களுக்கு உள்ளான குறித்த இ ளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (03.04.2020) சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்

குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

இளைஞன் உ யிரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்கள் கைது : 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!!

51 நபர்கள் கைது..

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களின் 12 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியா உட்பட இலங்கையில் பல மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய 51 நபர்களை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய கடந்த 22ம் திகதி 4 நபர்களும், 23ம் திகதி 2 நபர்களும்,

25ம் திகதி 5 நபர்களும் , 27ம் திகதி 6 நபர்களும் , 1ம் திகதி 8 நபர்களும் , 2ம் திகதி 10 நபர்களும் , 3ம் திகதி 16 நபர்களும் மொத்தமாக ஊரடங்கு சட்ட காலத்தினுள் 51நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 12 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்ட காலத்தினுள் தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊரடங்கு காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்த்து பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலருக்கான விற்பனை பெறுமதி 193 ரூபா 75 சதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கைக்கு வந்ததன் பின்னர், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. தங்கத்தின் விலையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்க வேண்டாம் : தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு கோரிக்கை!!

தொலைபேசி இணைப்புக்களை..

சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படாத கையடக்க தொலைபேசி மற்றும் நிரந்தர தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்காமல் தொடர்ந்தும் இயங்கசெய்ய, சேவைகளுக்கான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை அனைத்து நிரந்தர தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி வழங்குனர்களுக்கு விடுத்துள்ளது.

இதேவேளை சேவைக்கட்டணங்களை செலுத்தாதோருக்கு ஏப்ரல் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழு தொலைபேசி நிறுவனங்களை கேட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இதனால் பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலிகொடுக்க போகும் ஆடு போன்று உணர்கிறேன்: அமெரிக்க இளம்பெண் மருத்துவரின் குமுறல்!!

இளம்பெண் மருத்துவரின் குமுறல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் மனித உயிரிழப்புக்களையும் பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றன. உலகம் முழுவதும் 10 லட்சத்து 87 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 72 ஆயிரத்து 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றநிலையில் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் சுகாதாரத்துறை தத்தளித்து வருகிறது.

இதற்கிடையே மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவர்கள் தாதிமார்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் இல் ப்ரோன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள மான்டிஃபியோர் மருத்துவ மையத்தில் வேலைபார்க்கும் 28 வயதேயான பெண் மருத்துவர் லாரா உய்க் என்பவர் மருத்துவர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றுவது கடினமான செயலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு செல்லும்போது, ஆடு பலிகொடுப்பதற்காக செல்லுவது போன்று உணர்கிறேன். எனக்கு 28 வயதாகிறது.

இந்த கொடூர தொற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் போய்விடலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம். இருந்தாலும் இதுவரை எங்களுடைய மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வந்து செல்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அவருடன் வேலைப்பார்க்கும் தாதி பென்னி மேத்யூ கூறுகையில் ‘‘இந்த நோயை எங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பரப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த மருத்துவமனையில் இருந்து நாங்கள் சமூகத்திற்கு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறோம்’’ எனக் கவலையுடன் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டத்தை மீறிய 11,607 பேர் கைது : 2878 வாகனங்கள் பறிமுதல்!!

11,607 பேர் கைது..

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 11,607 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக 2,878 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில்,

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கையிலும், 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 இலங்கையர்கள் உள்ளிட்ட 960 பேருக்கு தடைவிதித்த இந்தியா!!

960 பேருக்கு தடைவிதித்த இந்தியா..

33 இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்களின் சுற்றுலா வீசாக்கள் யாவும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள ஜமாத் உறுப்பினர்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இதில் பலர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 379 இந்தோனேசியர்கள், 110 பங்களாதேசியர்கள், 63 மியன்மார் பிரஜைகள் மற்றும் 33 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக இந்திய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிர்கிஸ்தானின் 77 பேர், மலேசியாவின் 75 பேர், தாயலாந்தின் 65 பேர், வியட்நாமின் 12 பேர், சவூதியின் 9 பேர், பிரான்ஸின் 3 பேர் ஆகியோரும் இந்த தடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாள் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதுடில்லியில் உள்ள நிசாமுதீன் தலைமையகத்தில் 250 வெளிநாட்டவர்கள் உட்பட்ட 2300 செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்தமையை அடுத்தே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தலைமையகத்தில் இருந்ததாக கூறப்படும் 300 தப்லிகி செயற்பாட்டாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி உடல் தகனம்!!

ஹோமாகம வைத்தியசாலையில்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் சிகிச்சைப் பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது போலவே, குறித்த நபரின் இறுதிச் சடங்கு இடம்பெற்று முடிந்துள்ளது.

களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த நபருக்கு அருகில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால்தான் உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டமையினால் களுபோவில வைத்தியசாலையின் 5ம் அறை அண்மையில் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தாய், மகன், மகள் பாதிப்பு!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலையில் போதனை நடத்திய சுவிஸ் மதகுருவுடன் கூடிய தொடர்புகளைப் பேணியவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பலாலி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேரும் அடங்கும்.

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் மரணம்!!

ஐந்தாவது நபர் மரணம்..

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இத்தாலியில் இருந்து வந்தவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

26ஆம் திகதி குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபருக்கு வேறு எவ்விதமாக நோய்களும் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் ஆரம்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது உடலுக்கு வைரஸ் தீவிரமாக நுழைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் மிகவும் வருத்தமளிப்பதாக அவர் தற்போது தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலுள்ள பத்துப் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிஸ்லாந்திலிருந்து வந்த மதகுருவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

பத்து பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்த ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த மதகுருவுடன் தொடர்பினை பேணி நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் நபர்கள் : இன்று முதல் புதிய திட்டம்!!

புதிய திட்டம்..

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொடர்மாடி வீடுகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் நபர்கள் மற்றும் ஒன்று கூடும் நபர்களை கைது செய்ய புதிய திட்டமொன்று இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் புலனாய்வுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இரவு நேரங்களில் சிலர் இந்த தொடர்மாடி வீடமைப்பு தொகுதிகளில் தங்கியிருப்பதாகவும், மேலும் சிலர் அங்கு கூடுவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மதித்து, வெளியில் ஒன்று கூடாது வீடுகளில் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேவேளை நாட்டில் காணப்படும் நிலைமையில், சுகவீனமடையும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லும் கால்நடை மருத்துவர்கள், தமது தேசிய அடையாள அட்டை அல்லது நிறுவனத்தின் அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் 500 கி.மீ நடந்தே வந்த இளைஞன் பரிதாப மரணம் : கதறும் உறவுகள்!!

500 கி.மீ நடந்தே வந்த இளைஞன்..

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து 500 கிமீ நடந்தே வந்த தமிழக இளைஞன் மரணமடைந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் வேலை, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் ஏற்பட்டத்தை தொடர்ந்து தமிழகம் திரும்ப முடிவு செய்தார்.

இதனையடுத்து தன்னை போன்ற மற்ற 26 பேருடன் சேர்ந்து சுமார் மூன்று நாட்கள் நடந்தே வந்த லோகேஸ் புதன் இரவு தெலுங்கானா மாநிலத்தை அடைத்துள்ளார்.

அங்கே சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியிருந்த போது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லோகேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கொரோனா பயத்தில் த ற்கொ லை செய்து கொண்ட நபர் : சோதனையில் கொரோனா இல்லை என தெரிந்தது!!

கொரோனா பயத்தில்..

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் ப யத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் த ற்கொ லை செய்து கொண்டார். உலகம் முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா தொடர்பான செய்திகள், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளால் பெரும்பாலானோர் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண காய்ச்சல் வந்தால் கூட கொரோனாவாக இருக்கும் என்ற அச்சத்தில் த ற்கொ லை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அச்சத்தில் த ற்கொ லை செய்து கொண்டதாக செய்திகள் எழுந்தன.

ஆனால் இவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த போது அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

19 நாடுகளில் இதுவரை கொரோனா பரவவில்லை : எந்த நாடுகள் என்று தெரியுமா?

கொரோனா வைரஸ்

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொமரூஸ் கிரிபதி, லெசதோ, மலாவி, மாஷல் தீவு, மைக்ரோசியா, நாவுரு, வடகொரியா, பலாவு, சேமோவா, வனவாடு, யேமன், சாஹோ தோமோ, பிரின்சிபே, சொலமன் தீவுகள், தென் சூடான், தாஜிகிஸ்தான், டொங்கா, தர்கிமேனிஸ்தான், துவாலு போன்ற நாடுகளில் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வடகொரியா தொடர்பான புள்ளிவிபரங்களில் சிக்கல்கள் இருப்பதாக விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஒரே நாளில் ஆகக்கூடிய உயிரிழப்பை பதிவு செய்துள்ள அமெரிக்கா!!

அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 1169 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில் அங்கு தொழில் இழந்தோர் எண்ணிக்கை 66 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெய்னில் மீண்டும் இரண்டாவது நாளாக ஒருநாளில் 932பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 950 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வடகொரியாவில் இதுவரை ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளிக்கூட கண்டறியப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் முக்கிய இடங்களாக இருந்த சீனா மற்றும் தென்கொரியா ஆகியவற்றின் எல்லைகளை கொண்டிருக்கின்றபோதும் தமது நாட்டில் இன்னும் ஒருவராவது கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்படவில்லை என்று அந்த நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் ராய்பூரில் புதிதாக பிறந்த ஆண் பெண் இரட்டையர்களுக்கு கொரோனா மற்றும் கொவிட் என்ற பெயரிடப்பட்டுள்ளது.