இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தற்போது 170நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்நாடுகளில் பல நாடுகள் சர்வதேச ரீதியாக மூடப்பட்டுள்ளதுடன் விமான பயணங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில் அல்லது வேறு காரணங்களுக்காக இவர்கள் இந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

குறைந்தது 26 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.

இலங்கையர்கள் தமது தாய் நாடு அல்லாத வேறு நாடுகளில் இருந்து கொண்டு கொரோனா வைரஸ் நிலைமையை எதிர்கொள்வது உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் உணர்ச்சிபூர்வமான நிலைமையாகும்.

தாம் ஊடாக தாய் நாட்டுக்கு கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற காரணத்தினால் தாம் இலங்கைக்கு செல்லவில்லை என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக பல நாடுகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்து பணிகளை முடக்கியுள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது வீடுகளுக்குள் இருக்கின்றனர்.


































