கொரோனா வைரஸ் தொற்று : இலங்கையில் 4வது நபர் மரணம்!!

4வது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருடனாக இருந்து திருந்தி வாழ்ந்தேன் : கொரோனாவால் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன : த ற்கொ லை செய்து கொண்ட தொழிலாளி!!

தொழிலாளி

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த மேகாலயாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் வீட்டில் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். மேகாலயாவின் ஷில்லாங்கைச் சேர்ந்த ஆல்ட்ரின் லிங்டோ என்ற தொழிலாளி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள ஓர் உணவு விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆல்ட்ரின் தான் த ற்கொ லை செய்து கொள்வதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ` நான் ஆல்ட்ரின் லிங்டோ, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பிறந்ததும் என் தாய் இறந்துவிட்டார்.

வளர்ந்த பிறகு என் சுய தேவைக்காக ஷில்லாங்கில் திருடனாக இருந்தேன். பின்னர் அது அனைத்தையும் விடுத்து புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக ஆக்ரா வந்தேன். இங்கு உணவகத்தில் வேலை செய்து சம்பாதித்து வந்தேன். 21 நாள்கள் ஊரடங்கால் அந்த வேலையும் போய்விட்டது. இனி நான் எங்கு செல்வேன்.

எனக்கான எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. தற்போது என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. என் கடையின் உரிமையாளரும் என் மீது இரக்கம் காட்டவில்லை. அவர் என்னை எங்கு வேண்டுமானாலும் செல் எனக் கூறிவிட்டார். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள், எனக்குத் த ற்கொ லையைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால் என் உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிடுங்கள். நான் விளையாட்டுக்கு எதுவும் சொல்லவில்லை, தயவு செய்து என் உடலை எடுத்துச் செல்ல உதவுங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரின் ஃபேஸ்புக் தகவலை அறிந்த ஆக்ரா பொலிசார் ஆல்ட்ரினின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் தூ க்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின்னர் ஆல்ட்ரினின் இறுதி ஆசை போலவே அவரது உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தால் பொது வைத்தியசாலைக்கு வெப்பத்தினை அளவிடும் கருவிகள் அன்பளிப்பு!!

வெப்பத்தினை அளவிடும் கருவிகள்

வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவிகள் இன்று (02.04.2020) மாலை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியர் பிரசன்னாவின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதியுதவில் மனிதனின் வெப்பத்தினை அளவீட்டு கொரோனா தொற்று உள்ளதா என்பதினை காண்காணிக்கும் கருவிகள் இரண்டு வழங்கி வைக்கப்பட்டது.

இரு கருவிகளையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், உறுப்பினர்கள் இணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரிடம் கையளித்தனர்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தரும் அனைவரும் குறித்த கருவியின் பரிசோதனையின் பின்னரே வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளிகளை இலகுவாக இனம்கான முடிவதுடன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்று பரவுவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மரணத்தை விற்பனை செய்யவேண்டாம் : அனில் ஜாசிங்க கோரிக்கை!!

அனில் ஜாசிங்க கோரிக்கை

வியாபாரத் தளங்களின் உரிமையாளர்கள் சிகரட்டுக்களை விற்பனை செய்யவேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிகரட் கொரோனா வைரஸ் மரணங்களுடன் தொடர்புள்ளதாக உள்ளது. அது விற்பனை செய்வது மரணத்தை விற்பனை செய்வது போன்றது. எனவே அதனை விற்பனை செய்வதில் இருந்து விலகியிருக்குமாறு அனில் ஜாசிங்க கேட்டுள்ளார்.

இந்த விடயத்தில் வர்த்தகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். புகைப்பிடிப்பவர்களுக்கு ஏனையவர்களைள காட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே புகைப்பிடிப்பவர்களும் அதனை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் அனில் ஜாசிங்க கோரியுள்ளார். இதன் மூலம் தமது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் உறவினர்களுக்கும் தொற்று உறுதி!!

கொரோனா நோயாளியின்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மூன்றாம் நபரின் மருமகனும் பேரப்பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

72 வயதுடைய மருதானை பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது பேரப்பிள்ளைக்கும் மருமகனும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியாகி 24 மணி நேரங்கள் கடப்பதற்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உயிரிழந்த நபருடன் நெருக்கமாக செயற்பட்ட 300 பேர் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 300 பேரை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளி வந்த வாடகை வாகனத்திற்கு தீ வைத்த பிரதேசவாசிகள்!!

கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வானை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் இந்த வாகனத்தில் நுண்ணுயிர் தொற்றுக்கு நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் கடந்த 31 ஆம் திகதி இரவு வானுக்கு தீவைத்துள்ளனர்.

இந்த வானின் உரிமையாளர் கம்பளை புஸ்ஸல்லாவை பகுதியை சேர்ந்தவர். இவர் தனது வாகனத்தை விமான நிலையத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நீர்கொழும்பை சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

அக்குரணையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமானத்திற்கு வந்து அங்கிருந்து இந்த வாகனத்திலேயே தனது வீடடுக்கு சென்றுள்ளார்.

வாகனத்தில் வந்தவர் கொரோனா நோயாளி என தெரியவந்தை அடுத்து, வானின் உரிமை மற்றும் சாரதி ஆகியோர் இந்த தகவலை மறைத்துள்ளதுடன் வானையும் மறைத்து வைத்திருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் தொற்று – நோயாளிகளின் எண்ணிக்கை 150ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் இன்று மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவரின் சடலம் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

வவுனியாவில் மரணித்த பெண்ணுக்கு கொரனா தொற்று இல்லை!!

வவுனியாவில்..

வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த பெண்ணுக்கு கொரனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56) என்ற குடும்ப பெண் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மருத்துவர்கள் குறித்த பெண்ணுக்குகொரனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ம னைவி மற்றும் ம களை கொ லை செய்து விட்டு த ற்கொ லை செய்துகொண்ட நபர்!!

கொ லை..

கம்பஹா ஹேனேகம, கஹாடான முத்தேட்டுவவத்தை பிரதேசத்தில் கொ லை செ ய்யப்பட்ட 28 வ யதான பெ ண், 3 வ யதான ம கள் மற்றும் வீ ட்டில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் வீ ட்டின் உ ரிமையாளர் ஆ கியோரின் ச டலங்களை தாம் மீ ட்டுள்ளதாக மல்வத்துஹிரியபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ம னைவி மற்றும் 3 வ யதான ம களை கொ ன்று விட்டு பெ ண்ணின் க ணவர் த ற்கொ லை செ ய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டுள்ளனர்.

வீட்டில் க ட்டிலில் கா ணப்பட்ட பெ ண்ணின் ச டலத்தில் வெ ட்டுக்கா யங்கள் இருப்பதாகவும் ம களின் க ழுத்தி கீ றல் கா யங்கள் இ ருப்பதாகவும் பொ லிஸார் கூ றியுள்ளனர்.

28 வ யதான எச்.ஜீ.தில்ருக்ஷி, 3 வ யதான கே.கே.ஷனுதி சாவிந்தியா ஆ கியோரே கொ லை செ ய்யப்பட்டுள்ளனர். 37 வ யதான ந பர் இ வர்களை கொ லை செய்து வி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.

இ ந்த கொ லைக்கான கா ரணங்கள் இ துவரை க ண்டறியப்ப டவில்லை எ னவும் ம ரணத்திற்கு பின்னரான வி சாரணைகள் இன்று கம்பஹா வை த்தியசாலையில் ந டைபெறவுள்ளது.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமானப் பயணிகள் விடுவிப்பு!!

விமானப் பயணிகள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 45 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 45 பேர் இன்று 02.04.2020) விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

56 படைப்பரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜாலித தலைமையில் அவர்கள் வழிஅனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழந்த மூன்றாவது நோயாளி தொடர்பான தகவல்!!

மூன்றாவது நோயாளி

கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது இலங்கையர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தொடர்பில் சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினமே அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நோயாளியை அடையாளம் கண்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பிய போது உயிரிழந்துள்ளார். இந்த நோயாளி நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், நீண்டகாலமாக சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கொரோனா நோயாளி உயிரிழப்பு : 400 குடும்பங்கள் வெளியேற தடை!!

400 குடும்பங்கள் வெளியேற தடை

கொழும்பில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழந்த நிலையில் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருதானை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா நோயாளி என உறுதி செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் தங்கியிருந்த மருதானை பகுதியை சேர்ந்த 400 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறவோ உள் செல்லவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா முடக்கத்தால் உலகம் முழுவதும் என்ன மாற்றம் ஏற்படும் : ஐ.நா எச்சரிக்கை!!

ஐ.நா எச்சரிக்கை

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் முடக்கத்தை அறிவித்துள்ளதனால் சர்வதேச வர்த்தகம், உணவுப் பரிமாற்றங்கள் ஆகியவை நாடுகளுக்கிடையே மிக மந்தமாக நடந்து வருகிறது.

மக்கள் கொரோனாவுக்கும் முடக்கலுக்கும் பீதியடைந்து பொருட்களை வாங்கிக் குவிப்பதால், பல நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகள் பொருட்களின்றி வெறிச்சோடி உள்ளன.

உணவுப் பொருட்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டால், உலக நாடுகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும். இது சர்வதேச சந்தையில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைவர் கு டாங்யு, உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம், உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்ட்டோ அசேவோடே ஆகியோர் கூறியுள்ளனர்.

அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா முடக்கத்தின் காரணமாக உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, வர்த்தகம் சுமூகமாக நடப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

மக்களின் சுகாதாரத்தை காக்க, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

நீண்டகால தொடர் முடக்கம், பயணத் தடை ஆகியவற்றால் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்படும். இதனால், சந்தைகளுக்கும் உணவு பொருட்கள் வராது.

எல்லைகள் முடக்கம், விவசாய தொழிலாளர்களின் பயண முடக்கம் ஆகியவை விவசாய பொருட்களை வீணாவதை அதிகரிக்கும். அதனால், உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பாதுகாத்து, உணவு மரிமாற்றத்தை பராமாரிக்க வேண்டும். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறையை உருவாக்கி, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது. இவ்வாறு கூட்டறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்த மூன்று ஹோட்டல்களின் உரிமையாளர்கள் கைது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய 7 வெளிநாட்டவர்கள் தலைமறைவாகி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

திருகோணமலை – நிலாவெளி சுற்றுலா வலய பகுதியில் உள்ள மூன்று ஹோட்டல்களில் இந்த வெளிநாட்டவர்கள் மறைந்து இருந்துள்ளனர்.

இந்த தகவலை மறைத்த மூன்று ஹோட்டல்களினதும் உரிமையாளர்களை நேற்றிரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயந்த விஜய ஸ்ரீயின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் இந்த ஹோட்டல்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இதனடிப்படையில், ஹோட்டல்களில் இருந்த இரண்டு அமெரிக்க பிரஜைகள், இரண்டு சீனப் பிரஜைகள், ஒரு பின்லாந்து பிரஜை, ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய பிரஜைகள் உட்பட ஏழு பேரையும் ஹோட்டல்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உப்புவெளி பொலிஸார் உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இந்த வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வெளிநாட்டவருக்கு விசா அனுமதி கலாவதியாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த வெளிநாட்டவர்கள், யாழ்ப்பாணம், ஹபரணை, அனுராதபுரம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் அவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

வவுனியாவில் பெண் ஒருவர் திடீர் மரணம் : கொரோனா என சந்தேகம்!!

பெண் ஒருவர் திடீர் மரணம்

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

வவுனியா கற்குழியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில், இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

விபத்து

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஏறாவூர் – சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம், பனை மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியை சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.