கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கை வருவோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை இரா ணுவ ஊடகப் பேச்சாளளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க விடுத்துள்ளார். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்க மறுப்போர் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் எ ச்சரித்துள்ளார்.
இத்தாலி, தென் கொரியாவில் இருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்தி சோ தனை செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சோ தனையின் பின்னர் பரிந்துரைக்கப்படுவோர் இந்த நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
எனினும் இந்த செயற்பாட்டுக்கு பலர் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கு ழப்ப நி லை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் ஊடக அமைச்சின் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இரா ணுவ ஊடகப் பேச்சாளளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
சிலாபம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் அவர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிலாபம் சேருகெலே பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் இத்தாலியில் தொழில் புரிந்து வந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.
இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றதை அடுத்து, வைத்தியசாலை அதிகாரி விசேட பா துகாப்பு வேலைத்திட்டங்களை வகுத்துள்ளனர்.
இது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிலாபம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் கே.பி. மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிரசவ அறைக்கு செல்லும் முன்பு, லிப்டுக்கு அருகிலேயே ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்க லிப்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அ திர்ந்தனர்.
Julie Anne Longanoவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, அவரால் வீட்டிலிருந்து வெளியே வந்து காரில் கூட ஏற முடியவில்லை.
நான்கு கால்களால் தவழ்ந்து சென்றுதான் காரிலேயே ஏறியிருக்கிறார். எப்படியோ மருத்துவமனை வந்து சேர, ஸ்ட்ரெச்சரில் படுக்கவைக்கப்பட்ட Julieயை பிரசவ அறைக்கு செல்வதற்காக லிப்டுக்கு காத்திருந்திருக்கிறார்கள் அவரது கணவரும் நர்ஸ் ஒருவரும். ஆனால் அதற்குள் Julieக்கு பிரசவம் தொடங்கிவிட்டது.
குழந்தையின் தலை வெளிவே வருவதைக் கண்ட அந்த நர்ஸும் Julieயின் கணவர் Trentம் அவர் பிரசவிக்க உதவ, சரியாக அந்த நேரம் பார்த்து லிப்டின் கதவு திறந்திருக்கிறது.
லிப்டை விட்டு வெளியே வந்தவர்கள் அங்கு ஒரு பிரசவம் நடைபெறும் என எதிர்பார்க்காததால் அ திர்ச்சியுடன் அங்கிருந்து வேகவேகமாக நடையைக் கட்டினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த CCTVகமெரா ஒன்றில் பதிவாகியுள்ளன.
யாருக்கு எங்கே பிரசவம் ஆகவேண்டும் என்று இருக்கிறதோ, அங்குதானே ஆகும் என்று Julie கூற, தன் மனைவியின் பிரசவம் கமெராவில் பதிவு செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறார் Trent.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்தமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள இத்தாலியின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அஞ்சி குடியிருப்புக்குள் முடங்கிப் போன மக்கள், இதனால் அ லறியடித்துக் கொண்டு தெருவில் குவிந்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 2.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சே தம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் எந்த அறிக்கையும் இல்லை,
இருப்பினும் Camaiore மற்றும் அருகிலுள்ள Viareggio பகுதியில் உள்ள மக்கள் அதிர்வுகளை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,172 என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு தோன்றிய சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது இத்தாலி.
இதனிடையே ‘குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பா துகாக்க எல்லோரும் எதையாவது விட்டுவிட வேண்டும் என்று பிரதமர் Giuseppe Conte நேற்று இரவு அறிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் அவசர தேவை இன்றி குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருமணம், இறுதிச்சடங்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பொதுமக்கள் கூடும் அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாக பரவுவதால், மருத்துவர்களுக்கு உறுதியான முடிவெடுக்க முடியவில்லை என தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் குறித்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 20,000 ஊழியர்களுடன் சுகாதார சேவையை விரைவாக உயர்த்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஓய்வு பெற்ற மருத்துவர்களை அரசாங்கம் திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 168 பேர் ம ரணமடைந்துள்ள நிலையில் இத்தாலி அரசு ஒட்டு மொத்த குடிமக்களையும் தீவிர க ண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியின் ஒருபகுதி மட்டுமே முடக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது ஒரே நாளில் 168 பேர் ப லியானதை அடுத்து ஒட்டுமொத்த இத்தாலியும் உச்சகட்ட க ண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் மூன்று அடி இடைவெளி விடவேண்டும் என்று இத்தாலி அரசாங்கம் புதிதாக விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக வணிக வளாகங்களுக்கு வெளியே வரிசைகள் நீண்டுள்ளன.
நோய் அறிகுறிகளுடன் காணப்படும் எவரும் குடியிருப்புகளில் இருந்து வெளியே செல்வது கு ற்றச்செயல் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,
ஒட்டுமொத்த இத்தாலியும் தற்போது க ண்காணிப்பு வளையத்தில் இருப்பதால், எதிர்காலம் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் இத்தாலியின் நகரங்கள் வெறுச்சோடி காணப்படுவதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அரிதாக காணப்படுகிறது.
மட்டுமின்றி முக்கிய பகுதிகளில் பொலிசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்கள் கண்டிப்பாக குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளை ஒதுக்கும்போது வயது மற்றும் உ யிர்பிழைக்கும் வாய்ப்புகளை பரிசீலிக்க மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10,149 பேர் இலக்காகியுள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா பாதிப்புக்கு அதிகமானோர் இலக்காகும் நாடாக இத்தாலி மாறியுள்ளது.
மட்டுமின்றி ஒரேநாளில் சுமார் 977 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 168 என தெரியவந்துள்ளது.
சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிக மரணம்(631) ஏற்பட்டுள்ளது இத்தாலியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணன் தங்கை பாசம் என்பது மிகவும் விசித்திரமானது. குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள்.
அதுவும் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமானதாக இருக்கும்.
இங்கு சிறிய அண்ணன் ஒருவர் தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து ஊட்டி விடும் காட்சியே இதுவாகும். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதை வாங்கி விட முடியாது.
I want to give this little guy a big hug. So kind hearted ?
இந்திய மாநிலம் கேரளாவில் அசுர வேகத்தில் பாய்ந்த கார் ஒன்றால் மோ தப்பட்டு பாடசாலை மாணவிகள் மூவர் அந்தரத்தில் தூ க்கி வீ சப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பூச்சக்கல் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசுர வேகத்தில் பாய்ந்த அந்த வெள்ளை நிற கார் முதலில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது மோ தியுள்ளது.
தொடர்ந்து நிற்காமல் பறந்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையருகே நடந்து சென்றுகொண்டிருந்த பாடசாலை மா ணவிகள் மூவர் மீது மோதி, அவர்களை அந்தரத்தில் தூக்கி வீசியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக விரைந்து சென்று விபத்தில் சி க்கிய மாணவிகள் மூவரையும் மீட்டுள்ளனர். மொத்தம் ஆறு பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அந்த கார், பின்னர் மின் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
அதில் பயணம் செய்த இருவரும் கா யங்களுடன் உ யிர் த ப்பியுள்ளனர். இந்த வினோத விபத்தானது செவ்வாய்க்கிழமை நண்பகல் நடந்துள்ளது.
காரில் இருந்த இரண்டு பேரும் மனோஜ் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மனோஜ் காரை ஓட்டி வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், பாடசாலை மாணவிகள் மூவரும் காரில் இருந்த இருவரும் என ஐந்து பேரும் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பெண் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகை நீபா. இவரை நாம் பல சீரியல்களில் பார்த்திருப்போம்.
மேலும் பல படங்களிலும் இவர் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். ஆம் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தளபதி விஜய், வடிவேலு, அசின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் காவலன்.
இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதை போல் தோட்டா, அம்முவாகிய நான் என்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின் பல தொலைக்காட்சி தொடர்களில் கூட இவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த த்ரில்லிங்கான கேம் ஷோ ஒன்றில் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.
இதில் விளையாட்டின் ஒரு போகுதியில் சில கடினமான விஷயங்களை செய்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது குழந்தையின் கண் முன்னாள் தட்டு தடுமாறி கீழே விழுந்து முகத்தில் பலமான அ டிப்படுகிறது.
மேலும் கீழே விழுந்த நடிகை நீபவை விரைந்த வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. இதோ அந்த வீடியோ.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை வருடக்கணக்கில் காதலித்த போதே வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலையை சேர்ந்தவர் தேவி (30) மாற்றுத்திறனாளியான இவர் குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் காப்பகத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (31) என்பவர் அன்னதானம் வழங்க அடிக்கடி வருவார்.
அப்போது தேவியிடம் அவர் ரூபாய் 70 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருந்த இந்தப் பழக்கம் மெல்ல காதலாக மாறியதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கண்ணன் அதற்கான ஏற்பாட்டை செய்யச்சொல்லி தேவி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் திகதி திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கண்ணன், தேவிக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்ப அதை பார்த்த அவர் அ திர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கண்ணன் மீது ச ந்தேகப்பட்டு அவர் பற்றி தேவி விசாரிக்கும் போது கண்ணனுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருப்பது தெரியவந்தது.
மேலும் கண்ணன் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோ சடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தேவி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
அதுமட்டுமின்றி புதிய புதிய வைரஸ் தோற்றம் பெற்று நமது உ யிரை ப றிக்கும் அளவிற்கு மாறிவிட்டது. இதற்கு முழு காரணம் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதது தான். அவற்றில் இன்று உலகம் முழுவதும் பேசும் பொருளாக கொரோனா வைரஸ் மாறிவிட்டது.
இந்த வைரஸ் பரவி வரும் நேரத்தில் அன்றாடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால், எளிதில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, கொரோனா வைரஸ் தா க்கத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பா துகாக்கும் சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம்.
1/2 டீஸ்பூன் நற்பதமான நெல்லிக்காய் பேஸ்ட்டை, நன்கு அரைத்த 1 பூண்டு பல்லுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் பலவீனமான ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.
வேப்பிலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரிக்கும்.
இஞ்சி மற்றும் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எ திர்த்துப் போ ராடும் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த டீயை தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும்.
ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து தினமும் குடியுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இயற்கையாக வலுபெறும்.
நற்பதமான இஞ்சியைக் கொண்டு சாறு எடுத்து, அதில் சிறிது துளசி இலையின் சாற்றினையும் சேர்த்து கலந்து, அத்துடன் தேன் கலந்து உட்கொள்ளுங்கள். இப்படி தினமும் குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5-7 துளசி இலையுடன், 2 மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். முக்கியமாக இதை சாப்பிட்ட 1/2 மணிநேரத்திற்கு தண்ணீர் பருகக்கூடாது. இப்படி உங்களின் தினத்தை இவ்வாறு ஆரம்பித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் பசு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் சுக்கு/ காய்ந்த இஞ்சிப் பொடி சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டையாக பிடித்து, தினமும் 2-3 முறை உட்கொள்ள வேண்டும். இதனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்.
ஒரு டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதுவும் தினமும் இரவு தூங்குவதற்கு 20-30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.
வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடம் அமைந்துள்ள நகரசபை கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையின் கட்டிடத்தொகுதியில் பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் கடை ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டிருந்த பெண்மீது கட்டிடத்தின் மேல்தளம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் பொலிஸ் மற்றும் நகரசபைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள காயமடைந்த பெண்னை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தொகுதியின் கடை உரிமையாளர் தெரிவிக்கையில், வவுனியா நகரசபைக்கு குறித்த கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டும் நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
தென்னிலங்கையிலுள்ள உனவட்டுன கடற்கரையில் கடும் மோ தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களில் ஒருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் தொடர்பில் இந்த வெளிநாட்டவர்கள் இருவருக்கும் இடையில் மோ தல் நீண்ட தூரம் சென்றுள்ளது. பிரித்தானிய நாட்டவர் ஒருவரும், இத்தாலி நாட்டவர் ஒருவருமே இவ்வாறு மோ தலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு காரணமாக இந்த மோ தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பிரித்தானிய நாட்டவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த காதல் தொடர்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் வேறு வெளிநாட்டவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த காதல் தொடர்பு காரணமாக பிரித்தானிய நாட்டவரினால் இத்தாலி நாட்டவர் மீது அ டிதடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா பாதிப்பு காரணமாக உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது. ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உ யிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தாலியில் இதுவரை 463 பேர் உ யிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதனை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொழில் வாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவு இலங்கையர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில் குறித்த நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களைப் பா துகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் தொடர்பில் அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சேவை செய்யும் நாடுகளின் தூதரகங்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையிலும் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய தகவல் பெற்றுக் கொள்வதற்காக அந்த நாடுகளின் தூதரக அலுவலகங்களின் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 1989 என்ற இலக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
வேலை மற்றும் உடல்நலன் பிரச்சினைகளை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என இத்தாலியில் நாடு முழுவதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் பொது இடங்களில் கூடுவது மற்றும் பொது இடங்களை திறந்து வைப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது அடுத்த சில வாரங்களில் பிரித்தானியாவிற்கும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இது வரையில் ஆறு பேர் உ யிரிழந்துள்ளதாகவும், 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் தேவை ஏற்படலாம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக பிரித்தானியாவும் அடுத்த சில வாரங்களில் இத்தாலி போன்று நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் பிராங்கோயிஸ் பலூக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரித்தானியா தற்போது வட இத்தாலியின் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், பிரித்தானியாவின் Southall நகரில் வசிக்கும் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று அ ச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் சில பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அ பாயம் உள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸ் பரவி, நாட்டிலுள்ள ஒரு பகுதி மூடப்படட வாய்ப்புகள் உள்ளது.
எனவே சுகாதார அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொடர்ந்து சுகாதார பிரிவுகளின் ஆலோசனைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே மட்டக்களப்பு நோக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என இயக்குனர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.