வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை தடுத்து வைக்க விசேட சிறைப் பிரிவு!!

சிறைப் பிரிவு..

பல்வேறு கு ற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விமான நிலையம் மற்றும் வேறு இடங்களில் கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை தடுத்து வைக்க அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட சிறைப் பிரிவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் சிறைச்சாலைக்குள் பரவுவதை தடுப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறைப்பிரிவில் தடுத்து வைத்து அவர்களை க ண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக எடுக்க வேண்டிய அவச நடவடிக்கைகள் அடங்கிய ஆலோசனைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த கைதிகளை தனிமைப்படுத்தி க ண்காணிப்பதற்காக தேவையான மேலதிக வசதிகள் சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் : மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் தோல்வியடைந்தால், இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என மருத்துவர்கள் எ ச்சரித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது அத்தியவசியமான விடயம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான விசேட நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க வேண்டும். அதிகமாக சன நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் மக்கள் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் இருப்போர் தமது வீடுகளில் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒன்று சேரக் கூடாது. காய்ச்சல், இருமல் என்பன அதிகரித்தால், சிகிச்சைக்காக மருத்துவரை நாட வேண்டும்.

அனைவரும் அடிக்கடி தமது கைகளை சவர்க்காரத்தை பயன்படுத்தி கழுவ வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். இவ்வாறான பழக்கத்தை கடைபிடித்தால், நோய் சமூகத்திற்கு பரவுவதை தடுக்க முடியும் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க என்ற சுற்றுலா வழிகாட்டி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையிலேயே 44 வயதான மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மா ணவர் ஒ ருவர் தூ க்கி ட்டு த ற்கொ லை!!

மா ணவர்..

ப துளை – க ளுகல்ப் பி ட்டிய பி ரதேசத்தில் இ ளைஞர் ஒ ருவர் நே ற்று மா லை தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.

ஊ வா வெ ல்லஸ ப ல்கலை க்கழ கத்தில் ப யிலும் மா ணவர் ஒ ருவரே இ வ்வாறு உ யிரிழந் துள்ளார் எ ன்று ப துளை பொ லிஸார் தெ ரிவித்தனர்.

கு றித்த மா ணவர் 24 வ யதுடைய அ ம்பாறை நா மல்ஓயா பி ரதேசத்தைச் சே ர்ந்தவர் எ ன்று கூ றப்படு கிறது. இ ந்த த ற்கொ லைக் கு கா ரணம் இ துவரை க ண்டுபிடி க்கப்படவி ல்லை.

இன்று முதல் ஏப்ரல் 20வரை பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று கு ழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான போலியான தகவல்களால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக இன்று முற்பகல் தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதில் வைத்தே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் தனியார் கல்வி நிலையங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், என்ற போதும் மாணவர்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும், வைரஸ் தொற்று குறித்து போலியான தகவல்கள் காரணமாக சமூகத்தில் தனிப்பட்டவர்களால் ஏற்படுத்தப்படும் குழப்ப நிலையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தில் விபத்து!!

விபத்து..

வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இன்று (12.03.2020) காலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

செட்டிகுளம் வீரபுரம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு பயணிக்க இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மாங்குளத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நேரியகுளம் சந்தியில் மாங்குளம் நோக்கி பயணித்த பொழுது.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் குடைசாய்ந்த இ.போ.ச பேருந்தில் நான்கு பேர் மாத்திரமே பயணித்துள்ளனர் என்பதுடன் ஐவர் காயமடைந்த நிலையில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவை உள்ளடக்கிய வன்னி தொகுதியில் முடிவிற்கு வந்துள்ள கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுகள்!!

வேட்பாளர் தெரிவுகள்..

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியில் சார்ல்ஸ் நிர்மலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும்,

தமிழீழ விடுதலை இயக்கத்தில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக அறியமுடிகிறது.

இன்றய காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இன்றய காலநிலை..

இலங்கையில் இன்று அதியுயர் கடும் வெப்பம் நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் மேல்,சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை,குருநாகல்,மொனராகலை போன்ற மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தகுந்த முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி,காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களில் நாளைய தினம் மாலை வேளையில் மழை பெய்ய கூடுமெனவும்,ஏனைய பகுதிகளில் கடும் வெப்ப சூழ்நிலை நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் குறைந்த செலவில் தீயணைப்பு வாகனத்தை உருவாக்கி சாதனை!!

தெற்கு தமிழ் பிரதேச சபை..

சாதாரண தண்ணீர் தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் பரீட்சித்து பார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்,

எமது பிரதேச சபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றின் அவசியத்தை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது 5 இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன் பிரதேச சபையினரின் தொழில்நுட்ப அறிவினையும் பயன்படுத்தி குறித்த தீயணைப்பு வாகனம் உருவாக்கபட்டுள்ளது.

வடமாகாணத்திலே குறைந்தளவு நிதியினை செலவளித்து இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதனை இன்று பரீட்சித்து பார்த்துள்ளோம். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தீ விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த வாகனம் தீயணைப்பு வாகனத்தை ஒத்தவகையில் அதிதிறன் வாய்ந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன், பகல் வேளைகளில் 024-2225737என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் இரவு வேளைகளில் 0773634511 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : அரசாங்கம் எடுத்துள்ள திடீர் நடவடிக்கை!!

கொரோனா வைரஸ்..

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on-arrival visa என்ற விமான நிலையத்தில் வழங்கப்படும் வீசா அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரு உத்தியாக அரசாங்கம் இதனை செய்வதாக அரச தகவல் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோன வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பல நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தினை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி : சென்ற இடங்கள் தொடர்பான விபரங்கள்!!

கொரோனா நோயாளி

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கையர் தற்போது அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு 71 நாட்களின் பின்னர் இலங்கையில், உள்நாட்டு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இத்தாலி மொழி பேசக்கூடிய சுற்றுலா வழிக்காட்டியாகும். மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க என்ற அவர் கடந்த 3ஆம் திகதி இலங்கை வந்த இத்தாலி சுற்றுலா பயணிகளுக்காக பணியாற்றியுள்ளார்.

கடந்த 3ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை சீகிரியா, பொலநறுவை மற்றும் கண்டி பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் அந்த பிரதேசங்களில் உள்ள பல ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

இத்தாலி நாட்டவர்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்றுக்கொண்ட ஜயரத்ன, கடந்த 8ஆம் திகதி மத்தேகொடயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடையவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஜயந்த, சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் இத்தாலி நாட்டவர்கள் அந்தக் ஹோட்டல்களில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக சுகாதார பரிசோதனைக்கு செல்லுமாறு ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு!!

தெய்வீக கிராம நிகழ்வு..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வெங்கலச் செட்டிகுள பிரதேச செயலகம் நடாத்திய தெய்வீக கிராம நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் முகத்தான்குளம் ஶ்ரீ சித்தி விக்கனேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வுகளாக கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுடன் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நந்திக் கொடியேற்றல் அறநெறி கீதத்துடன் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து  ஆலய வழிபாடு, குரு பூசை, கோமாதா பூசை, பிடி அரிசி சேமிப்பு வஸ்த்திர தானம், ஞாபகார்த்த மர நடுகை முதலான பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இரண்டாம் கட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் K. சிவகரன் தலைமையில் நடைபெற்றன. மங்கல விளக்கேற்றல் இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பண்டிதர் வீ.பிரதீபனின் சிறப்பு சொற்பொழிவும் அறநெறி மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் அறநெறி  ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் S.Mசமன் பந்துல சேன மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் செட்டிக்குள பிரதேச செயலாளர் K.சிவகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகநாதன்,

இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு,

கிராம உத்தியோகத்தர்களான எஸ்.பாலஶ்ரீ, திருமதி தேவகி மற்றும் ஆலய பரிபாலன சபையினர் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் இந்து சமய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புர்கா சரியாக அணியாத பெ ண்ணிற்கு பட்டப்பகலில் நே ர்ந்த க தி : சிசிடிவி-யில் சிக்கிய காட்சி!!

சிசிடிவி-யில்..

ஈரானில் புர்கா சரியாக அணியாததால் பெண் ஒருவர் க டுமையாக அ டிக்கப்பட்ட ச ம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெ ளியாகி கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1979 பு ரட்சிக்குப் பின்னர், ஈரானில் 13 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெ ண்ணுக்கும் புர்கா கட்டாயமாகக் கருதப்படுகிறது. இதை எ திர்த்து ஈரானில் சமூக ஆர்வலர்கள் தொ டர் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புர்கா சரியாக அணியாத காரணத்தினால் பெண் மீது வ ன்முறை ந டத்தப்பட்ட ச ம்பவம் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் குறித்த ச ம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

வீடியோவில், நடைபாதையில் நடந்து வரும் நபர் ஒ ருவர், எ திரே வரும் பெ ண் புர்கா ச ரியாக அ ணியாத காரணத்தால் க டுமையான வா ர்த்தையால் து ஷ்பிர யோகம் செய்துள்ளார்.

பெ ண் அவரை கடந்து சென்ற நிலையில், திரும்பி செல்லும் அந்நபர், பெ ண்ணை வ ழிமறித்து கா லால் எ ட்டி உ தைத்து ச ரமாரியாக அ டிக்கின்றார்.

இதை கண்ட அங்கிருந்த இ ரண்டு பே ர் த டுக்க முயல, கோ பமடைந்த பெ ண் தி ருப்பி அ டிக்க மு யல்கிறார். இ றுதியில் வ ன்முறையில் ஈ டுபட்ட நபர் கா ரில் த ப்பிச்சென் றுள்ளார்.

பெ ண் சரியாக புர்கா அணியாததால் தான் அ டித்ததாக அந்ந பர் ஒ ப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

காரின் பதிவு எண்ணை வைத்து இச் ச ம்பவத்தில் ஈ டுபட்ட ந பரை க ண்டுபிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனி ஒரு உ யிர் போகக்கூடாது : நண்பனின் ம ரணத்திற்கு பின் நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

நெகிழ்ச்சி செயல்..

தமிழகத்தில் சாலை விபத்தில் நண்பன் உ யிரிழந்த நிலையில், அவர் இ றந்த நாளில் நண்பர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தவர் நிர்மல்குமார். இவர் கடந்த வருடத்திற்கு முன் ஒருநாள் பைக்கில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது, மறைமலை நகர் பகுதியில் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கினார்.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உடம்பில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதால், மருத்துவர்கள் உடனடியாக ரத்தம் வேண்டும் அப்போது தான் கா ப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நேரத்தில் ரத்தம் கிடைக்காததால், நிர்மல்குமார் ப ரிதாபமாக உ யிரிழந்தார். அவர் உ யிரிழந்ததை நண்பர்களால் தா ங்கிக் கொள்ள முடியவில்லை, இதனால் அவருடைய நினைவு நாளான இன்று,

நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தார்கள்.

அப்போது அவர்கள், இனி ரத்தம் கிடைக்காமல் ஒரு உ யிரும் போகக்கூடாது, இதன் காரணமாகவே நாங்கள் ரத்த தானம் செய்கிறோம், என் நண்பனின் நினைவுநாளில் இனி ஒவ்வொரு வருஷமும் இப்படி ரத்த தானம் செய்வோம் என்று கூறினர்.

அரசு மருத்துவமனைக்குள் திடீரென 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி திரண்டு வந்து நண்பனுக்காக ரத்ததானம் செய்த சம்பவம் அங்கிருந்த நோயாளிகள் உட்பட அனைவரையுமே க ண்கல ங்க செய்துவிட்டது.

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா வைரஸ் : இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி!!

இளம்பெண் மருத்துவர்

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என பீ தியை கிளப்பியதாக பெண் மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்படவுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவிவிட்டது. இந்தியாவில் இந்த நோய் பரவ தொடங்கியதுமே கொரோனா பாதிப்புடன் யாராவது இருந்தால் அல்லது ச ந்தேகம் வந்தாலே உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது அதிலும் கேரளாவில் இது தொடர்பில் அரசு ஆணை கூட பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷினு ஷியாமளன் என்ற பெண் மருத்துவர் கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரின் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் வந்திருக்கிறார்.

கட்டாரில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்த அவர் கடுமையான காய்ச்சலுடன் வந்திருந்தார்.
அவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் ஊருக்கு திரும்பினார் என்ற தகவலை அரசிடம் கூறவில்லை.

மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவர் மறுத்ததாக கூறிய மருத்துவர் ஷினு இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இதன் காரணமாக ஷினுவுக்கு பெரும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட மருத்துவ அலுவலகம் ஷினு மீது புகார் கொடுத்துள்ளது, இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலகம் விடுத்த அறிக்கையில், ஷினுவிடம் வந்த நோயாளிக்கு முழுமையான ப ரிசோதனை செய்யப்பட்டு அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் தேவையில்லாமல் பீ தியை கிளப்பி, ஒட்டு மொத்த மருத்துவ சமுதாயத்துக்கும் மருத்துவர் ஷினு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷினு கூறுகையில், நான் என் பணியை செய்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளேன்.
வெளிநாட்டுக்கு திரும்ப சென்ற அந்த நபருக்கு எந்த பி ரச்சனையும் இல்லை, ஆனால் நான் தான் என் பணியை இழந்துவிட்டேன் என க ண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதே மருத்துவமனையில் மீண்டும் பணியில் சேர மாட்டேன் எனவும் தனக்கு பணி கொடுக்க நிறைய மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் ஷினு கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட கு ழப்ப நிலை!!

விமான நிலையத்தில்..

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நாடுகளிலிருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வந்த 300க்கும் அதிகமானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அனைவரையும் தனிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, விமான நிலையத்தில் கு ழப்பமான நி லை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சோ தனையின் பின்னர் அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் த டுத்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை நி ராகரித்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கு ழப்பம் ஏ ற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு செல்லாமல், 14 நாட்கள் தங்களின் வீட்டிலேயே தங்கியிருப்பதாக கூறி கு ழப்பம் ஏ ற்படுத்தியுள்ளனர்.

ஒருசிலர் ஏ.சி அறைகள் உட்பட தமக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் மாத்திரமே தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு செல்ல முடியும் என வா திட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவில் ப ரிசோதிக்கப்படும் ந பர்கள், மட்டக்களப்பில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழத்தில் செயற்படும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.