கொரோனா வைரஸ் குறித்து ஏற்பட்டுள்ள பீதியை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இதன்படி, அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் மற்றும் தேசத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களின் செயல்முறைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால், நாட்டு மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் வதந்திகள் மற்றும் போலி செய்திகளைப் நம்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் குறித்த பீதி காரணமாக நேற்று மாலை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் சன நெரிசல் காணமுடிந்தது.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் செரிசலாக நின்று தேவைக்கும் அதிகமாகவே எரிபொருளை பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
72 நாடுகளை தோற்கடித்து முல்லை மண்ணை சேர்ந்த மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு விஸ்வமடு வித்தியாலயத்தை சேர்ந்த டெரன்ஸ் என்ற மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
பிரதானமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் குறித்த மாணவன் தனது கண்டுப்பிடிப்பை உருவாக்கியுள்ளார். ஈழத்தில் யு த்த வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் எமது உறவுகள் தினம் தினம் பல இ ன்னல்களை அனுபவிக்கின்றனர்.
அவ்வாறு யு த்தத்தில் அ ங்கவீனமுற்றவர்களுக்கு இந்த மாணவனின் கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பெல்ஜியம் ஜீப்ரக் துறைமுகத்தில் நேற்று முதல் இந்தக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தடையை வெஸ்ற் ஃபிளன்டர்ஸ் மாகாண ஆளுநர் கார்ல் டெக்கலுவே விதித்துள்ளார்.
பெல்ஜியத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் கப்பல் ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெல்ஜியத்தில் நேற்று கொரோனா வைரஸால் 3 பேர் உ யிரிழந்த நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த கப்பலில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையிலேயே கப்பல் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
இத்தாலிக்குச் சொந்தமான குறித்த கப்பலில், சுமார் 2,500 பயணிகள் மற்றும் 640 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கார்னிவல் கோர்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான லைனர் என்ற இந்தக் கப்பல், ஹம்பேர்க், சௌத்தம்ரன், லி ஹவ்ரே, ஜீப்ரக்ஜ் மற்றும் ரோட்டர்டாம் ஆகிய இடங்களில் ஏழு நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறது. பெரும்பாலும் ஜெர்மனியைச் சேர்ந்த பயணிகள் இக்கப்பலில் உள்ளனர்.
இதேவேளை, பெல்ஜியத்தில் கொரோனா வைரஸின் தா க்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் சோஃபி வில்ம்ஸின், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மக்கள் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்துள்ளதுடன்,
அந்நாட்டு சுகாதாரத்துறை கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பெல்ஜியத்தில் இப்போதைய நிலைவரப்படி 314 பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர் களமிறங்கவுள்ளதுடன், ஒருவர் அரசியலுக்கு புதுமுகமாக களமிறங்கவுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள 9 பேரினதும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும்,
தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் அதிபர் க.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இதில் மூன்று மாகாணசபை உறுப்பினர்களுக்கும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் அதிபரான க.சிவலிங்கம் மாத்திமே அரசியலுக்கு புதுமுகமாக களமிறங்கியுள்ளார்.
உடற்பயிற்சி நிலையங்களே கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்தை கொண்ட இடங்களாக கருதப்படுவதாக வெளிநாட்டு செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.
வியர்வை மற்றும் உடலின் ஈரப்பதம் என்பன கிருமிகளின் பரவலை அதிகரிக்கும் என்றும் அந்த செய்திசேவை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய சுகாதார சேவையினர் இது தொடர்பில் அறிவுரைகளை விடுக்கவில்லை. எனினும் மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஈரப்பதன் உள்ள இடங்களில் பரவும் ஆற்றலைக்கொண்டிருப்பதால் ஜிம்ஸ் என்ற உடற்பயிற்சி நிலையங்கள் அதன் பரவலுக்கான வாய்ப்பை கொடுக்கும் என்று பிரித்தானிய ஊடகவியலாளரும், வைத்தியருமான நோர்மன் ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – இலுப்பையடி பகுதியில் நடைபாதையில் நேற்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையினால் மீண்டும் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலுப்பையடி பகுதியில் கடந்த வருடம் டிப்பர் வானகமொன்று மோதி சி றுமி ஒருவர் உ யிரிழந்துள்ளதையும், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக நெரிசல்கள், விபத்துக்கள் இடம்பெறுதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை செய்யுமாறு,
நகர வட்டார நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கத்தினால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்மொழியப்பட்டதையடுத்து சபையின் அனுமதியுடன் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரசபை தலைவர் இராசலிங்கம் கௌதமனினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு சிலர் முற்பட்டபோது நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராசலிங்கத்தின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நகரசபை தலைவரின் கவனத்திற்கு நகரசபை உறுப்பினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து நகரசபை தலைவர் நகரசபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உடனடியாக அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள மீளத்தடை செய்யப்பட்டுள்ளதுடன்,
அங்கு வியாபாரம் நடவடிக்கை மேற்கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளானதாக இரண்டாவது நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
44 வயதுடைய குறித்த நபர் இதற்கு முன்னர் அந்த வைரஸ் தொற்றியதாக உறுதியாகிய நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் தம்புளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்ததாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாவதாக தொற்றுக்குள்ளான இலங்கையருடன் இந்த நபருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பபப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபரும் சுற்றுலா வழிக்காட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் இரண்டாவது நபர் சென்ற இடங்கள் பழகிய நபர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையற்ற அ ச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் தொடர்ந்து சிறந்த சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் போன்று இலங்கையில் பாரிய ஆ பத்துக்களை ஏற்படுத்தும் என மக்கள் அ ச்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை இரண்டு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இந்த அ ச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் கடும் பி ரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து சுப்பர் மார்க்கெட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை மக்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
நாளாந்த மனித நுகர்வுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்து விற்பனை செய்து தீர்ந்துள்ளது. வழமையான பொருட்களை கொள்வனவு செய்ய செல்வோரும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இதேபோன்ற நிலைமை காணப்படுகிறது. பல நகரங்கள் மூடப்பட்டமையினால் தமக்கு தேவையான பொருட்களை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தமையினால் அனைத்து சுப்பர் மார்க்கெட்டுகளும் வெறுமையாக காணப்படுகின்றன. அதேபோன்றதொரு நிலைமை இலங்கையிலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அனைத்து பாடசாலைகளும் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் வவுனியா நகரசபையினால் 60க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர் , பட்டாணிச்சூர், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 2 மணியளவிலான நேரத்தினுள் 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்தில் அ டைத்து வைக்கப்பட்டுள்ளன.
மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா , தண்டம் 1000ரூபா , ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ளமுடியுமெனவும், பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இ டையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் சம்பந்தமாக அவசர நிலைமை ஏற்பட்டால், ஒரே நாளில் ஆயிரம் பேரை தனிமைப்படுத்த முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பரவுவது, இதனால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அவசர நிலைமை எதிர்கொள்வது சம்பந்தமாக பிரதமருடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்,
அமைச்சர்கள், செயலாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.
ஆடை உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சுமார் ஒரு பில்லியன் பெறுமதியான துணிகளை இறக்குமதி செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடை உற்பத்திகளை செய்ய முடியாமல் போயுள்ளது.
இதன் காரணமாக சிறிய மற்றும் நடு தர வர்த்தகர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு தேவையான முக மூடிகள் உட்பட சுகாதார பா துகாப்புக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உ யிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடை செய்வது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்யப் பணிப்பது போன்றவை இன்று அறிவிக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குளிருடன் இணைந்த அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக இதுவரை 8 பேர் உ யிரிழந்துள்ளதுடன் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தவறான தகவல் கசிந்ததனால் அங்கு இன்று மாலை ப தற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சிலர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எ திர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக போ ராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.
அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவரை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்ததன் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் ப தற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இளைஞர்களுடன் கலந்தாலோசித்ததுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாத்திரம்தான் இங்கு பரிசோதிக்கப்படுகின்றது எனவும் கொரோனா தொற்றுடைய நோயாளி எவரும் அனுமதிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் சோதனைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளிலே இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் அங்கொட தேசிய வைத்தியசாலையிலும், நால்வர் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் தனிமைப்படுத்தல் சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்த வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இதுவரையில் இரண்டு கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் கொரோனா பரவக்கூடுமென அ ச்சம் நிலவுவதால் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான பயணங்களை தடை செய்ய சவுதி அரேபியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலைமைக்கு மத்தியில் சவுதி அரேபியா இந்த தடையை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் நோக்கில், தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அதற்கமைய அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட 12 நாடுகளில் முன்னெடுக்கப்படும் விமான பயணங்கள் அனைத்தையும் தற்காலிகமாக தடை செய்வதற்கு சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், சூடான், சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கே சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் மருத்துவ செயல்முறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அ ச்சுறுத்தலை தேசிய பொறுப்பாக அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் பொ றுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாடு பா ரிய ஆ பத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி எ ச்சரித்துள்ளார். உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல பெரிய நாடுகள் தி ணறுகின்றன.
இந்நிலைமையில் இலங்கை மக்களை பா துகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு வழங்குவது கட்டாயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல், நாட்டுக்கும் மக்களுக்கும் சி ரமம் ஏற்படுத்தாத வகையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரினதும் முழு ஒத்துழைப்பும் தேவை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையர்கள் மற்றும் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.
தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் பிற வசதிகளை முடிந்தவரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மக்களின் பா துகாப்பிற்காக இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்குமாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
உலகத்தை உ லுக்கும் கொரோனா வைரஸின் காரணமாக உலகம் முழுவதும் ஒரே நாளில் 337 பேர் உ யிரிழந்துள்ளனர். புதிதாக 7352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 124 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா சீனாவில் ஆயிரக்கணக்கானோரை ப லி வாங்கி உள்ளது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது.
சீனாவில் நேற்று 11 பேர் உ யிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று தான் சீனாவில் தினமும் உ யிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 4ஆயிரம் பேர் வரையில் ப லியாகியிருக்கின்றனர்.
அதேபோல் நேற்று புதிதாக 18 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 80 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் 4 ஆயிரத்து 257 பேர் க வலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே எந்த நாட்டில் இருந்தும் சீனாவுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது சீனாவில் ஏற்பட்ட கடும் பாதிப்பு போன்று தற்போது ஐரோப்பிய நாடான இத்தாலியில் தினமும் நூற்றுக்கணக்கானோர் ப லியாகி வருகிறார்கள். இத்தாலியில் கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் 168 பேர் உ யிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் அதிக உ யிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 196 பேர் சிகிச்சை பலனின்றி ப லியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து நேற்று தான் அதிகம் பேர் உ யிரிழந்து இருக்கிறார்கள்.
அதேபோல் நேற்று 2 ஆயிரத்து 313 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 462 ஆக உயர்ந்தது.
இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடம் பீ தி நிலவுகிறது. சாலைகளில் நடமாட அ ச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக வடக்கு பிராந்திய பகுதிகள், ரோம், மிலன், வெனீஸ் ஆகிய நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது.
ஈரானில் நேற்று கொரோனா வைரசுக்கு 63 பேர் ப லியானார்கள். இதனால் உ யிரிழந்தோர் எண்ணிக்கை 354ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் 9 ஆயிரமாக உயர்ந்தது.
தென்கொரியாவில் ப லி எண்ணிக்கை 66ஆக உயர்ந்தது. நேற்று 6 பேர் உ யிரிழந்துள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 869 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஐரோப்பியாவில் உள்ள மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரான்சில் மேலும் 15 பேர் உ யிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ப லி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. புதிதாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்பெயினில் கொரோனாவுக்கு பலி 55-ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 19 பேர் உ யிரிழந்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 277ஆக (புதிதாக 582 பேர்) அதிகரித்தது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து 11 மாகாணங்களில் அவசர நிலை பிரடகனப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மேலும் 8 பேர் உ யிரிழந்ததால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நேற்று ஜப்பான் பெல்ஜியத்தில் தலா 3 பேரும், இங்கிலாந்தில் 2 பேரும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், லெபனான், பிலிப்பைன்ஸ், அயர்லாந்து, இந்தோனேஷியா, அல்பெனியா, பனாமா, பல்கேரியாவில் தலா ஒருவர் உ யிரிழந்தனர்.
உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 337 பேர் ப லியாகி இருக்கிறார்கள். 7 ஆயிரத்து 352 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 633 பேர் ப லியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தற்போது 124 நாடுகளுக்கு பரவி உள்ளதால் அதன் தா க்கத்தை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.