வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாக 260க்கு மேற்பட்டவர்கள் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு இன்று (13.03.2020) மாலை 6.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பா துகாப்புடன் நான்கு பெரிய பேருந்துகளிலும் இரண்டு சிறிய பேரூந்துகளிலும் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் வவுனியா பம்மைமடு மற்றும் பூவரசங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் பூவரசங்குளம் கடற்படை முகாமிற்கு பெண்களும் பம்மைமடு இராணுவ முகாமில் ஆண்களும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அங்கு தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.
தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் பற்றிகலோ கம்பஸில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரா என்ற பரிசோதனைக்காகவும்,
மேலதிக சிகிச்சைக்காகவும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸிலிருந்து த ப்பிக்கும் முயற்சியில் கிம் ஜாங் உன் வட கொரிய தலைநகரிலிருந்து கடற்கரைக்கு தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில காலத்திற்கு மட்டும் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக Chosun Ilbo பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸானது தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள Wonsan நகரத்தில் இருப்பதாக உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய நிலையில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 180 வீரர்கள் இ றந்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தென் கொரியாவின் NK செய்தித்தாளிற்கு, வடகொரிய இராணுவத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
அதில், இ றந்தவர்களின் எண்ணிக்கையை கசியவிட்டதோடு, பெரும்பாலான இ றப்புகள் சீனாவின் எல்லைக்கு அருகிலேயே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் 3,700 வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோ தனையில் வைரஸ் உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக செவ்வாயன்று வட கொரிய ஊடகங்கள் வெளியிட்ட கிம் ஜாங் உன்னின் மிக சமீபத்திய புகைப்படங்கள், அறியப்படாத இடத்தில் ஒரு நேரடி தீயணைப்பு பீரங்கிப் பயிற்சியை மேற்பார்வையிடுவதைக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது மனைவியான சோபி கிரேகோயரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் பாதித்து வருகிறது. குறிப்பாக ஈரானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிலர் உ யிரிழந்துள்ளனர். அதே போன்று பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கனடா பிரதமர் மனைவி Sophie Gregoire-Trudeau பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் காரணமாக பிரதமர் Justin Trudeau-வும் அவருடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து தற்போது பரிசோதனையின் முடிவில் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், இருப்பினும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரின் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் 6000 கோழிகளை உ யிருடன் பு தைத்துள்ளார்.
கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அ ச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலும் தற்போது வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீ தியடைந்த பொதுமக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் கோழிக்கறியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் நுல்சூர் பகுதியை சேர்ந்த வியாபாரி மகந்தர் என்பவர் தன்னுடைய 6,000 கறிக்கோழிகளை உ யிருடன் பு தைத்துள்ளார்.
கு டும்பத்தினரை கொ லை செ ய்துவிட்டு த ற்கொ லைக்கு மு யன்றவரை உ றவினர்கள் கா ப்பாற் றிய நி லையில், அ வரை நீ திமன்றம் தூ க்கிலிட உ த்தரவி ட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சே ர்ந்தவர் தாமோதரன்(38). இவர், தா ய் சரஸ்வதி, ம னைவி தீபா(36), ம கன் ரோஷன்(7) ம கள் மீனாட்சி(5) ஆ கியோருடன் வ சித்து வ ந்தார்.
தாமோதரன், பம்மல் ஏழுமலை தெருவில் ஜவுளிக்கடை ந டத்தி வ ந்தார். ரோஷன், மீனாட்சி இருவரும் மீனம்பாக்கம் மற்றும் பல்லவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முறையே 2ம் வகுப்பு மற்றம் யு.கே.ஜி படித்து வந்தனர். தீபா வீட்டில் தையல் தொ ழில் செ ய்து வ ந்தார்.
இந்நிலையில், தாமோதரனுக்கு தொழிலில் ந ஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் உ றவினர்களிடம் கடன் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும், 5 வங்கிகளில், வீட்டுக்கடன் நகை கடன் ஆகியவையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதனை திருப்பி கொடுக்க இயலாத தமோதரன் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்துனர் ராஜாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு “எனக்கு வா ழ பி டிக்கவில்லை. த ற்கொ லை செ ய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு இ ணைப்பை து ண்டித் துள்ளார்.
இ தனால், ப தறிபோன ராஜா தனது பொ ற்றோரை தாமோதரன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் அங்கு சென்றபோது. க தவு வெ றுமனே சா த்தப்பட்டு இருந்தது. தாமோதரனின் மாமனார் க தவை தி றந்து உ ள்ளே செ ன்றுள்ளார்.
அங்கு ம கள் தீபா, பே ரன் ரோஷன், பே த்தி மீனாட்சி மற்றும் தாமோதரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் க த்தி யால் கு த்தப்ப ட்டும், க ழுத்து அ றுக்க ப்பட்டும் ர த்த வெ ள்ளத்தில் கி டந்தனர்.
தாமோதரன் க ழு த்து ம ற்றும் கை யில் அ றுப ட்டு சு வரில் சா ய்ந்து கி டந்தார். உடனடியாக அவர்கள் 5பேரும் குரோம்பேட்டை அரசு ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டுள்ளனர். அதில், தாமோதரன் மட்டும் பி ழைத்துக்கொ ண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார். சிகிச்சைக்கு பின் தாமோதரனை கை து செ ய்து சி றையில் அ டைத்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற வி சாரணையில், தாமோதரன் தா ன் கு ற்றவாளி என்று தீர்பளித்தது. இந்நிலையில், அவருக்கு சா கும்வ ரை தூ க்கு த ண்டனை வ ழங்கி நீதிபதி தீர்பளித்தார். த ற்கொ லைக்கு மு யன்றவரை கா ப்பாற்றி தூ க்கு த ண்டனை வ ழங்கிய ச ம்பவம் பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கணவர் திருநங்கையாக மாறி பிச்சையெடுத்து வருவதால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த மணிமேகலை என்ற பெண், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 1998ஆம் ஆண்டு எனக்கும் ராமானுஜம் என்பவருக்கும் திருமணமானது. ஆனால் எங்களுக்குள் எந்த தா ம்பத்ய உறவும் ஏற்படவில்லை.
அவருக்கு மருத்துவ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. 2009-ஆம் ஆண்டு என்னை அ டித்து து ன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். எனவே, எனக்கு ஒரு வீடு, ரூ.10 லட்சம், மாதம்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ராமானுஜம் தான் திருநங்கையாக மாறிவிட்டதாக தெரிவித்ததுடன், அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், திருமணம் முடிந்து கணவன்-மனைவி என்ற உறவு முழுமையடைய அவசியமான தா ம்பத்திய உறவு பூர்த்தி அடையவில்லை என்று இருவரும் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் சிறப்பு உரிமைகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ராமானுஜம் தான் பிச்சை எடுப்பதாகவும், அரசின் ஆதரவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்து முறைப்படி திருமணம் நடந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர் என்று தீர்மானிக்க இயலாது. எனவே ஜீவனாம்சம் பெற தகுதி இல்லை என்று தீர்மானித்து மனுவை தள்ளுபடி செய்கிறேன் என கூறியுள்ளார்.
வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சவுமியா சர்க்கார் திருமணத்தின் போது பயன்படுத்திய உடை காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான Soumya Sarkar கடந்த 26-ஆம் திகதி Prionti Debnath Puja என்ற 19 வயது பெண்ணை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் அங்கிருக்கும் Khulna Club-ல் நடைபெற்றுள்ளது.
அப்போது திருமணத்தின் திடீரென்று செல்போன்கள் காணமல் போனதால், பிரச்சனை ஏற்பட்டு, பொலிசார் வந்த பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திருமணத்தின் காரணமாக சவுமியா சர்க்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அதாவது குறித்த திருமணத்தின் போது சவுமியா சர்க்கார் மான் தோலால் ஆன உடை பயன்படுத்தியதல், இது சட்டப்படி குற்றம் எனவும் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆனால் அதே சமயம் சவுமியா சர்க்காரின் தந்தை கிஷோரி, இந்த உடை பாரம்பரியம், பாரம்பரியமாக மாற்றப்பட்டு வருகிறது.
எனக்கு என்னுடைய தந்தை கொடுத்தார், நான் இப்போது என்னுடைய மகனுக்கு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே சவுமியா சர்க்கார் சிறையில் தள்ளப்படுவாரா? தப்புவாரா? என்பது தெரியவரும்.
உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு தமிழக மாணவன் ஒருவர் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதை இணையவாசிகள் சுகாதார துறை அமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதியவர் ஒருவர் உ யிரிழந்தார்.
அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆனால் சுகாதார துறை அமைச்சர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அ ச்சப்பட தேவையில்லை, யாருக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள் அவரின் டுவிட்டருக்கு கீழே, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன், கொரோனா வைரஸிற்கு மருத்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அந்த சிறுவன் குறித்து செய்தி வெளியான நாளிதழை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் இதைக் கண்ட விஜயபாஸ்கர் அது குறித்து ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்று உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது.
கொரோனா வைரஸை குறித்து செய்திகள் பரவியதும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியிருக்கும் போது நம்மை அறியாமாலே சில தவறுகளை செய்து விடுகின்றோம்.
இது நோயின் தீவிரத்தை அதிகரிப்பதோடு அடுத்தவருக்கும் எளிதாக அதைப்பரப்பி விடுகின்றோம். எனவே அந்த தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொண்டாலே போதும் இந்த வைரஸிடம் நம்மை மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களையும் பா துகாத்து கொள்ள முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
தீவிர அறிகுறி தென்பட்டாலும் மருத்துவரை அணுகாமல் இருப்பது : காய்ச்சல், இருமல் , தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அதிக காய்ச்சல், உடல் பலவீனம், மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்பட்டாலோ மருத்துவரை அணுகாமல் இருப்பதும் பிறருடன் பழகாமல் தனித்து இருப்பதைத் தவிர்ப்பதும் பெரும்பாலானர்கள் செய்யும் தவறு.
செல்லப்பிராணிகளுடன் கூட நெருங்கிப்பழக கூடாது : செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது, அணைத்துக்கொள்வது, முத்தம் கொடுப்பது, நோயாளியின் எச்சில்பட்ட உணவை அவற்றுக்குக் கொடுப்பது போன்ற செயல்களையும் தவிர்க்கவேண்டும்.
தவறான தகவல்களை நம்ப கூடாது : சமூகவலைத்தளங்கள் மற்றும் இணைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி நோயின் தீவிரத்தை உணராமல் இருப்பது தவறான விஷயம்.
நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவங்கள் முயற்சி செய்ய கூடாது : பூண்டு சாப்பிட்டால் கொரோனாவைத் தடுக்கலாம், பசுவின் சாணத்தை எரிப்பதால் வரும் புகை கொரோனா வைரஸை அழிக்கும் என்பன போன்ற அறிவியல் பூர்வாக நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவங்கள் முயற்சி செய்து பார்ப்பது நிலைமையை மேலும் மோசாமாக்குமே தவிர சீராக்காது.
தனிநபர் சுகாதாரம் சார்ந்த விஷயங்களைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது : அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தனிமையில் இருத்தல், பிறருடன் நெருங்கிப் பழகாமல் தவிர்த்தல், கண்கள், வாய் , மூக்கு போன்ற தொடுவதைத் தவிர்த்தல், இருமும் போதும் தும்மும் போதும் வாயை முடிக்கொள்ளுவதல் போன்ற தனிநபர் சுகாதாரம் சார்ந்த விஷயங்களைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது. இது அந்த நபரை மட்டுமின்றி, உடனிருப்பவர்களுக்கும் ஆ பத்தாக முடியும்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதில் இருந்து மீண்ட நிலையில், அதன் அறிகுறி எப்படி இருந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக 1747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உ யிரிழந்துள்ளனர். நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், அதிபர் டிரம்ப் சில தடைகள் எல்லாம் விதித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Elizabeth Schneider என்ற பெண் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளார்.
அது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய நண்பர்கள் பலரும் இதைக் கேட்டுக் கொண்டதன் காரணமாக பதிவிடுகிறேன். ஏனெனில் இது ஒரு நல்ல பதிவாக இருக்கலாம்.
நான் சிறிய விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பாதிக்கப்பட்டேன் என்றே நம்புகிறேன். ஆனால் அந்த விருந்து நிகழ்ச்சியில் யாரும், இருமவில்லை, தும்மவில்லை, எந்த ஒரு நோயிக்கான அறிகுறிகளும் அங்கு தென்படவில்லை.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பின் 40 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. ஊடகங்களில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவினால், கொரோனாவை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
நான் அதை எல்லாம் பின்பற்றினேன். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் இல்லை என்றே நினைக்கிறேன். அந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நான் அவர்கள் அனைவருக்கும் 30 வயதிற்கு மேல் இருக்கும் என்றே நினைத்தேன்.
அதன் பின் மூன்று நாட்கள் தொடர் தலைவில், உடல்வலி, மூட்டு வலிகளால் அவதிப்பட்டேன். காய்ச்சலும் இருந்தது, வயிற்று போக்கும் ஏற்பட்டது.
காய்ச்சல் நின்றுவிட்டால், நாசி நெரிசல், தொண்டை வலி, லேசான அரிப்பு இருமல் இருந்தது. மிகச் சிலருக்கு மார்பு இறுக்கம் அல்லது பிற சுவாச அறிகுறிகள் இருந்தன. இப்படி 10 முதல் 16 நாட்கள் மிகவும் அவதிப்பட்டேன். இதில், முக்கிய பிரச்சினை என்னவென்றால், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.
அதன் பின், சியாட்டில் காய்ச்சல் ஆய்வு மூலம் சோ தனை செய்தேன். இது சியாட்டிலில் ஒரு ஆராய்ச்சி ஆய்வாகும், மேலும் அவர்கள் சமூகத்திற்குள் பரவுவதைப் படிக்க காய்ச்சல் பாதிப்புக்கு தன்னார்வலர்களை பரிசோதித்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்றுக்கான மாதிரிகளை சோதிக்கத் தொடங்கினர். அவர்கள் எனது மாதிரியை உறுதிப்படுத்த கிங் கவுண்டி பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பினர்.
இருப்பினும், ஆராய்ச்சி ஆய்வில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதாரத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அறிகுறிகள் தோன்றிய 7 நாட்களுக்குப் பிறகு தனிமையில் இருக்குமாறு கிங் கவுண்டி பொது சுகாதாரத் துறை பரிந்துரைத்தது.
நான் இரண்டு காலக்கெடுவையும் தாண்டிவிட்டேன், இதனால் நான் இனி என்னை தனிமைப்படுத்தவில்லை, இருப்பினும் நான் கடுமையான செயல்பாடு மற்றும் பெரிய கூட்டத்தைத் தவிர்த்து வருகிறேன், நான் பொதுவில் பார்த்தால் நான் உங்கள் அருகில் வரமாட்டேன்.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு நாடும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனையில் சேர்ப்பதில்லை. மேலும் பல சந்தர்ப்பங்களில், நான் மருத்துவரிடம் கூட செல்லவில்லை, ஏனென்றால் நான் சொந்தமாக குணமடைந்து வருகிறேன்.
இது ஒரு மோ சமான காய்ச்சல் பாதிப்பு என்று உணர்ந்தேன் இந்த பருவத்தின் காய்ச்சல் தடுப்பூசி மூலம் நான் பா துகாக்கப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும், எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத மோ சமான நபர்கள் ஒரு கட்சி அல்லது சமூகக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நபரின் அறிகுறிகளைப் போலவே இதை பரப்புகிறார்கள்.
அவர்கள் பார்க்கும் போது நல்ல நிலையில் இருப்பதால், கொரோனா நம்மை பாதிக்காது என்று மக்கள் சிலர் நினைப்பதை நான் அறிவேன். மோசமான சுவாச அறிகுறிகளைப் பெற்ற பின், நான் என்னைக் கா ப்பாற்றியிருக்கலாம் என்று நான் நம்புகின்ற ஒரு விஷயம் என்னவென்றால், நான் தொடர்ந்து Sudafed-ஐ எடுத்துக்கொண்டேன்.
Afrin நாசி தெளிப்பைப் பயன்படுத்தினேன் (ஒவ்வொரு நாசியிலும் 3 ஸ்ப்ரேக்கள், ஒரு நேரத்தில் 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் விடுமுறை), மற்றும் ஒரு Neti pot பயன்படுத்தினேன் (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருடன்) என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது எனது சைனஸை தெளிவாக வைத்திருக்கக்கூடும், இந்த அறிகுறிகள் என் நுரையீரலுக்கு பரவாமல் தடுக்கக்கூடும். இது மருத்துவ ஆலோசனை அல்ல, நான் செய்ததை மட்டுமே உங்களுக்கு பகிர்கிறேன், எனக்கு சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை முதல் 14 நாட்களுக்கு இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிசார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் இருந்து இலங்கை வரவிருந்த இறுதி விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த தடை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ச ட்டவிரோ தமான முறையில் முதிரை மர குற்றிகளை க டத்திச் சென்ற ந பரொருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் வி ஷேட அதி ரடிப் ப டையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஈச்சங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி ச ட்டவிரோ தமான முறையில் ம ரங்கள் க டத்தப்ப டுவதாக இ ரகசிய த கவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற புளியங்குளம் விஷேட அ திரடிப் ப டையினர் மற்றும் வனவள திணைக்களத்தினர் சாந்தசோலை பகுதியில் வைத்து இந்த மரக்க டத்தல் ந டவடிக்கையை மு றியடித்துள்ளனர்.
குறித்த மரக்க டத் தலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மரக்க டத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கப் வாகனம் வி ஷேட அ திரடிப் ப டையினரால் கைப்ப ற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், கப் வாகனம் மற்றும் 15 மரக்குற்றிகளுடன் வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந் கேத நப ர் வி சாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த கூடிய ஒன்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை கையாண்டால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் அந்த அமைப்பின் தலைவர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் பெருந்தொற்று. அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக அதனை கட்டுப்படுத்தலாம்.
எனினும், சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உ யிரிழந்துள்ளதுடன், 120,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா உட்பட வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் நேற்று முதல் ஏப்ரல் 20 வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு இந்த பணிப்புரையை அவர் விடுத்துள்ளார்.
இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கௌரவ வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை.
தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டால் கொழும்பிலிருந்து போதிய பொருள்களை வடக்கிற்கு அனுப்பிவைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் கூறியுள்ளார்.