பொதுப்போக்குவரத்துக்களில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டில் படையினர் தமது ஒத்துழைப்பை வழங்குவர். இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் மற்றும் நிகழ்வுகளை முடியுமானளவு தவிர்ப்பது என்ற முடிவும் நேற்று எடுக்கப்பட்டது.
சீனாவில் தற்போது கொரோனவைரஸ் தொற்று சமூக பழக்கவழக்களின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே அதிகாரிகள் சீனாவின் இந்த ஏற்பாடுகளை அறிந்துக்கொள்வது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5436ஆக உயர்வடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 857ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாக கொரோனா தொற்றுக்கு 67ஆயிரத்து 890 பேர் இலக்காகியுள்ளனர். அத்துடன், 6500 பேர் வரையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஆ பத்தான கட்டத்தில் உள்ளனர்.
அத்துடன் இதுவரையில் 72 ஆயிரத்து 531 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தற்போது ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகின்ற நிலையில் அங்கு 120 பேர் உ யிரி ழந்துள்ளனர். ஈரானில் மேலும் 85 பேர் உ யிரிழந்துள்ள நிலையில் அங்கு உ யிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 514ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அண்டைய நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ள அதே நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டு அங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அரச தரப்பிலுள்ள பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது. கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார், எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து திரும்பிய பிரேசில் அதிபரின் தகவல் தொடர்பு செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் இல்லாத நிலையில் தான் விரைவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை செய்து கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு அமைச்சருக்கும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை காரணம் காட்டி பொது மக்களிடம் பணம் பறிக்கும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை, நாடு முழுவதும் உள்ள கடைகளை அவசரமாக ஆய்வு செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் ஆ பத்து காரணமாக கடைகளில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை பதுக்குதல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோ சடி வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் சுற்றிவளைப்பின் ஒரு நடவடிக்கையான இதுவரையில் புறக்கோட்டை சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிதாக பிறந்த குழந்தைக்கு லண்டனில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் தனி இடமொன்றில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் நேற்று இரவு தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவதற்கு இலங்கை போக்குவரத்து சபை அவதானம் செலுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று வைத்தியசாலையில் மேலும் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு எ
திர்ப்பு வெளியிட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எ திர்ப்பு வெளியிட்டு மிக மோ சமான முறையில் செயற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றைய நபர் பொலநறுவை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மன் நாட்டிற்கு சென்று நாடு திரும்பியவர் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குமாறும், அது தங்கள் குடும்பங்களுக்கும் நாடு முழுவதும் வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு எ திர்ப்பு தெரிவித்து வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று (14.03.2020) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போ ராட்டத்தில் பிரதேச சபை ஊழியர்கள், சபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே அகற்று அகற்று கொரோனா வைரஸ் முகாமை அகற்று , தமிழ் மக்களை கா ப்பாற்ற அகற்று அகற்று போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்,
எங்களுடைய மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக பீ தியில் காணப்படுகின்ற சமயத்தில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்ற போதிலும் வடகிழக்கில் இவ்வாறான நோயாளர்களை தங்க வைப்பது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் .
வடகிழக்கில் இவ்வாறு அமர்த்துவது ஓர் இன அ ழிப்பாக சிந்திக்க வேண்டியதாகவுள்ளது என தெரிவித்தார்.
வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தினை நேற்று (13.03.2020) இரவு க டத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் 6மணித்தியாலத்தினுள் கைது செய்ததுடன் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தில் அவரின் சாரதி நேற்றையதினம் இரவு ஏ9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் வாகனப்பிரிவுக்கு முன்பாகவுள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார்.
இதன் போது அவ்விடத்திற்கு வருகைதந்த இனந்தெரியாத நபர்கள் சாரதியினை தள்ளிவிட்டு வாகனத்தினை க டத்திச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் நகரசபை தவிசாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு மேற்கொண்டத்தினையடுத்து விரைந்து செயற்ப்பட்ட வவுனியா பொலிஸார் இன்று (14.03) அதிகாலைக்குள் குறித்த வாகனத்தினை கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
வாகனம் க டத்தப்பட்டமை தொடர்பில சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியுமென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட நிலையில், குறித்த விமானத்தில் இருந்து இ ருவர் உ யிரிழந்த நிலையில் மீ ட்கப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த விமானத்தில் வந்த இருவர் கடும் உடல் ந லக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானமே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் கிங்க் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திற்கு பயணம் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தா க்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், உ யிரிழந்த இருவரினதும் உடல்கூறுகள் ப ரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டு உ யிரிழந்த இரண்டு உடல்களையும் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் மீண்டும் இந்தோனேஷியாவுக்கான பயணத்தை ஆரம்பித்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ம ரணம் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் 76 வயதான ஒருவரே இந்த நோய் தொற்றினால் ம ரணமானமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சவூதி அரேபியாவில் இருந்து கடந்த 29ஆம் திகதி நாடு திரும்பியவராவார்.
இவர் விமான நிலையத்தின் ஊடாக வரும்போது அவருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.
எனினும் கடந்த 5ஆம் திகதியன்று மூச்சுத் தி ணறல் ஏற்படவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த வேட்புமனு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13.03.2020) கட்சியின் வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின் மாவட்ட செயலக முன்றலில் உள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு சென்ற வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் பண்டாரவன்னியனின் சிலைக்கு பொன்னாடை போர்த்தி நினைவு கூர்ந்திருந்தனர்.
இதேவேளை, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஆதரவுடன் சைவ மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி குறித்த கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் நிலைமை ஏற்பட்டால், பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை ஒத்திவைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா இன்னும் நாடு முழுவதும் பரவும் தொற்று நோயாக அறிவிக்கப்படவில்லை என்பதால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சட்டத்தின் 24 வது ஷரத்தின் 3வது உப ஷரத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் ஒத்திவைக்க முடியும்.
தேர்தல் நடக்கும் தினத்தை மாத்திரமே ஆணைக்குழுவினால் ஒத்திவைக்க முடியும். வேட்புமனு பெற்றுக்கொள்ளும் இறுதியான தினத்தை மாற்ற முடியாது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அ ச்சம் காரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இதில் பலர் சில மணித்தியாலங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் 30 பேர் வரை தற்போது வரை க ண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அ ச்சம் கொள்ளத் தேவையில்லை.
வீட்டிலேயே தனிமையில் இருக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமானால் மாத்திரம் மருத்துவ சிகிச்சைகளை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் 44 வயதுடைய நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கை வந்தவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரும் 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இத்தாலியில் இருந்து நாடு திருப்பிய நிலையில் கந்தன்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் பொலநறுவை வைத்தியசாலையிலும் மற்றையவர் அங்கொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இரண்டு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இலங்கையில் பல பகுதிகளில் சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எ திர்ப்பு தெரிவித்ததன் காரணமாக வைத்தியசாலை பகுதியில் ப தற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உள்பட கொரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு சென்ற நிலையில் அங்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெறச் சென்றுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர் சீனர்களுடன் தங்கி இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் மருத்துவர்கள் ச ந்தேகம் கொண்டதன் காரணமாக குறித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியூலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் 8 பேரை கைது செய்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின வுஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தா க்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு போன்று உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்த பிரபல சீன விஞ்ஞானி Zhong Nanshan இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தோல்விடையும் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவிற்கு வெளியே இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவல், சீனாவின் வுஹான் நகரத்திற்கு சமமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அது ம ரணத்தின் வீதம் 3:2 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக மக்கள் அதிகளவில் கரிசனை கொள்ளவில்லை.
உலகம் முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு தங்கள் தினசரி வாழ்க்கையை முன்னர் போன்றே மேற்கொள்வதற்கு தடை இல்லை என்றே பலர் நினைக்கின்றார்கள்.
எனினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இது மிகவும் கொ டூரமாக தலைதூக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு எ திராக எதிர்வரும் சில மாதங்களுக்குள் மருந்துகள் உற்பத்தி செய்துவிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
உலகத்தின் அனைத்து அரச தலைவர்களும் சீனாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கட்டாயமாகும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டும் என விஞ்ஞானி Zhong Nanshan தெரிவித்துள்ளார்.