இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : விமான நிலையத்தில் உண்மை மறைக்கப்பட்டமையால் ஏற்பட்ட விபரீதம்!!

கொரோனா வைரஸ்

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்காத இரண்டு நபர்களுக்கு வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர்கள் இருவரின் சுயநலவாத செயற்பாடு தொடர்பில் நாட்டு மக்கள் கடுமையான எ திர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து வரும் போதே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் இது தொடர்பில் உண்மையை மறைத்தமையினால் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நபர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்காத நிலையில் பெரசிடமோல் போன்ற மருந்துகளை அருந்தி நோயை மறைத்துள்ளனர்.

இதனால் அவர்களின் நோய்த்தன்மை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதனை அறிந்தும் விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்காமை மற்றும் ஏனைய நபர்களுக்கு ஆ பத்து ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எ திராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எ திர்பு வெளியிடும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிப்பு!!

அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களுக்கும் தற்காலிக பூட்டு!!

பூங்காக்களுக்கு பூட்டு

இலங்கையிலுள்ள மிருகக்காட்சி சாலை, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இவை முழுமையாக மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் வழிபாடுகள் நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுவிஸ், இத்தாலி சென்று வந்த மகனால் தாய்க்கு ஏற்பட்ட கொரோனா தொற்று : இந்தியாவில் ப லி எண்ணிக்கை இரண்டு!!

கொரோனா தொற்று

இந்தியாவில், கொரோன தொற்றால் இரண்டாவது ந பர் ப லியாகியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் லட்சகணக்கானோர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இதில், 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் உ யிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்நோயின் தா க்கத்தால் 83பேர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 76 வ யதான மு தியவர் ஒ ருவர் உ யிரிழந்தார். தொடர்ந்து தற்போது, 68 வ யதான மூ தாட்டி ஒ ருவர் ப லியாகியுள்ளார்.

இவரது மகன் சுவிட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 23ம் திகதி திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ப ரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது தாயாரான 68 வ யது மூ தாட்டிக்கு நடத்தப்பட்ட ப ரிசோதனையில், அவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மூ தாட்டி இ றந்துள்ளார். அவரது இ றப்புடன் இந்தியாவில் கொரோனாவால் உ யிரிழந்த வர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களுரில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அந்த நபர் பணிபுரிந்த அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இருந்து அ னைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.

கொரோனா அ ச்சம் : நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ள முக்கிய கடிதம்!!

நடிகர் அரவிந்த் சாமி

உலகமெங்கும் கொரோனா மி ரட்டி வரும் நிலையில் நடிகர் அரவிந்த் சாமி அது குறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ப லியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சர்வதேச அளவில் இருக்கும் வைரஸ் தொற்று பற்றி என் சிந்தனைகள். உலகின் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதைக்குக் குறைவாகவே உள்ளது. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நம்மில் பலரில் யார் அந்த தொற்றைக் கொண்ட அறிகுறியல்லாதவர்கள் என்று நமக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை தொற்றை நாம் நிறுத்தக் கூடிய, நிறுத்த வேண்டிய முக்கியமான கட்டம் இதுவே.

அடுத்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை தற்காலிகமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட, பொது நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் ஒத்திவைக்க அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

ஏற்கெனவே சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இதை நாம் தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நிகழ் நேரத்தில் கிடைக்கும் விஷயங்களை, இந்த கோவிட்-19 தொற்றை எ திர்த்துப் போ ராடிக் கொண்டிருக்கும் மற்ற அரசுகளின் ஆய்வுகளை வைத்து, அதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படும் என நான் நம்புகிறேன்.

மனித இனத்துக்கு இப்படியான சர்வதேச நெ ருக்கடி நேரும்போது, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

அனைத்து அமைப்புகள், நிறுவனங்களும், அவர்கள் பணியிடத்தில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏற்றவாறு நாம் தயாராகி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இது சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழல் மற்றும் அதன் தாக்கம். அரசாங்கம் மட்டும் தனியாக இதை எ திர்த்துப் போராட முடியாது. அதனால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து, கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

அறிகுறிகள் இருந்தால் அதை உரியவர்களுக்குத் தெரிவித்து, இந்த தொற்று பரவ வாய்ப்பு இருக்கும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டியிருக்கும் விழாக்களை நடத்தாமல், இது போன்ற சூழலில் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அமைதியாக, பா துகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் மையமாக உள்ள ஐரோப்பா : உலக சுகாதார மையம் எச்சரிக்கை!!

கொரோனா..

கொரோனா வைரஸின் மையமாக இன்று ஐரோப்பா உள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகள் முழுமையான சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயிர்களை கா ப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனொம் ஜிப்ரேயஸீஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் என்ற இந்த தீயை எரிய விடவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிகமானோர் கொரோனா வைரஸினால் உ யிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 250 பேர் ப லியாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு உ யிரிழந்தோர் தொகை 1266 ஆக உயர்ந்துள்ளது. 17ஆயிரம் 600 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஸ்பெயினில் 120 பேர் ப லியாகியுள்ளனர். 4231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 79 பேர் ப லியாகியுள்ளனர். 2876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் ஐந்து பேர் உ யிரிழந்தனர். 3062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் 11 பேர் உ யிரிழந்தனர் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் உ யிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!!

கொரோனா

இரண்டாம் இணைப்பு : இலங்கையில் மேலும் இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்ற பெண் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவரின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

56 வயதுடைய பெண் ஒருவருக்கும் 17வயதுடைய யுவதிக்குமே கொரோனா தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய மொத்தமாக 10 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் இணைப்பு : இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கந்தகாடு முகாமிலும் மற்றைய நபர் நாத்தாண்டிய முகாமிலும் சோதனையிடப்பட்ட போது, கொரோனா தொற்று ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை எட்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!!

அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வைத்தியசாலைகளின் விபரங்களை இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உலகளாவிய ரீதியில் உ யிரிழந்துள்ளதுடன் மேலும் பல் ஆயிரக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் மேலும் 160 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையர்கள் எவெரேனும் தமக்கு கொரோனா தொற்றிற்குரிய அறிகுறிகள் இருக்ககூடுமென சந்தேகம் கொண்டால் இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் அதற்குரிய சோதனைகளை மேற்கொள்ள முடியுமென அறிவுறுத்தியுள்ளது.

பெற்றோரை எதிர்த்து தமிழனை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டுப் பெண் : குவியும் வாழ்த்துக்கள்!!

வெளிநாட்டுப் பெண்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த தம்பதி கோபால்-வசந்தி. இவர்களின் மூத்த மகனான நிர்வின் பொறியியல் படித்து முடித்துவிட்டு, சிங்கப்பூரில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இதே நிறுவனத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், காதலர்களாக மாறியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெண் வீட்டார் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்ததால், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே கலந்து கொண்டனர். உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை.

தற்போது உறவினர்களின் சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் சம்மதத்தை வாங்கிவிடுவோம் என மணமகள் தெரிவித்துள்ளார்.

இவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு கொரோனா வைரஸ் : இளம் பெண் செய்த மோசமான செயல் : அதன் பின் தெரிந்த உண்மை!!

இளம் பெண்..

தமிழகத்தில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக தனக்கு கொரோனா இருப்பதாக கூறியது, உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் பீ தியடைய வைத்துள்ளது.

சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் கோயமுத்தூர் சென்ற ஆம்னி பேருந்தில் சுஜிதா என்ற பெண் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்த போது, அவர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ஓட்டுனர் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேருந்தை இயக்கியதால்,

அந்த பெண், திடீரென்று அடுத்து, தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு முன்னர் பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தவே, கீழே இறங்கிய அவர், பின்னால் வந்த தன்னுடைய நண்பரின் காரில் ஏறிச் சென்றார்.

இதையடுத்து, பேருந்தில் இருந்தவர்கள் கொரோனா விழிப்புணர்வு தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளனர். சுங்கச்சாவடி அருகே சுகாதாரத்துறை அலுவலர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, அனைத்து பயணிகளும், தங்களை பரிசோதனை செய்யுமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து, டிக்கெட் முன்பதிவு பட்டியலின் அடிப்படையில் அந்தப் பெண் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

காவல்துறைக்கும் தகவல் சென்று அவர்கள் விசாரிக்க, அந்தப் பெண் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்டம் படிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அவரிடம் நேரில் சென்று பொலிசார் விசாரித்த போது, விளையாட்டாக நண்பர்களிடம் சவால் விட்டு அப்படி சொன்னதாக கூறியுள்ளார்.

விளையாட்டுக்காக இப்படி பொதுமக்களை அ ச்சப்பட வைப்பதா என்று அவரை க டுமையாக க ண்டித்த பொலிசார், இனியும் இப்படி யாராவது செய்தால் கு ற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எ ச்சரித்துள்ளனர்.

தேனிலவுக்கு சென்று திரும்பிய கணவருக்கு கொரோனா : தனியே தவிக்கவிட்டு விமானத்தில் தப்பி ஓடிய மனைவி!!

கணவருக்கு கொரோனா..

இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீ தியடைந்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த மாதம் அவருக்கும், ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இருவரும் சேர்ந்து கடந்த மாதத்தில் இத்தாலிக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

அதன்பின் இந்தியா வந்த அப்பெண்ணின் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் கொரோனா பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவரை தனிமைப்படுத்திக் க ண்காணிப்பில் வைக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் , அப்பெண் யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து விமானம் ஏறி டெல்லிக்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து ரயில் மூலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பெங்களூருவிலிருந்து த ப்பித்து ஆக்ரா சென்ற தகவல் ஆக்ரா அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் அவரின் தந்தையோ அங்கு இல்லை எனக் கூறி அதிகாரிகளை உள்ளே விட மறுத்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் காவலர்களோடு அங்குச் சென்ற அதிகாரிகள், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி மருத்துவ க ண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கரோனா பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ள அந்த பெண், கரோனா பாதிக்கப்பட்ட தனது கணவனை விட்டுவிட்டு பொது போக்குவரத்து வாயிலாகத் தகுந்த பா துகாப்பு இன்றி டெல்லி வரை சென்றது பொதுமக்களிடையேயும், அப்பகுதி பயணிகளிடையேயும் ஒரு வித அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!

அதிசயம்..

நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் வருகிற 9ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுவதால் ஏராளமான மக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இயேசு நாதர் கால் விரல்களில் இருந்து நீர் வடிந்தது, இத்தகவல் காட்டுத்தீ போல் பரவவே சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து குவிந்தனர். பலர் அந்நீரை குடித்தும், உடலில் பூசிவிட்டும் சென்றனர், இதனால் அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியது.

திருகோணமலையில் ஆணொருவரின் ச டலம் மீட்பு!!

திருகோணமலையில்..

திருகோணமலை, இலிங்கநகர் பகுதியில் உள்ள கலப்பு பிரதேசத்தில் ஆணொருவரின் ச டலம் ஒன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலிங்கநகர், முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த குட்டி என்றழைக்கப்படும் காத்தீபன் என்னும் 34 வயதுடைய நபரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவியோடு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ம து அரு ந்துவதற்காக சென்றுள்ளதாகவும் கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் கலப்பு பகுதியில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய ம ரணம் கொ லையா அல்லது இயற்கை ம ரணமா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு சென்றுள்ளதாகவும்,

மரணம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்து : மூவர் படுகாயம்!!

பஸ் விபத்து..

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற சொகுசு பஸ் களுதாவளை கலாசார மண்டபத்திற்கு அருகிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவரை மோதி குறித்த பஸ் மின்கம்பத்தினையும் உடைத்துகொண்டு மதிலில் மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக வீதியால் சென்ற மீன் வியாபாரி, பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துக் காரணமாக களுதாவளை பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!!

கொரோனா

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கந்தகாடு முகாமிலும் மற்றைய நபர் நாத்தாண்டிய முகாமிலும் சோதனையிடப்பட்ட போது, கொரோனா தொற்று ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஏழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா அ ச்சத்தில் உறைந்துபோன கண்டி!!

கண்டி

கொரோனா வைரஸ் என்கிற அ ச்சம் நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பரவிவருகின்றது. கொழும்பு உட்பட நகர்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்பொருள் அங்காடிச் சந்தைகளில் மக்கள் திரளாக நின்று ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களும் காணமுடிந்தது.

இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமும், வழிபாட்டுத் தலமுமாகிய கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகைதருவது சடுதியாகக் குறைந்துவிட்டது.

அதேபோல அதிக சன நெரிசல்வாய்ந்த வர்த்தக வீதிகளில் ஒன்றாகிய கண்டி நகர் வீதிகளும் இன்று வெறிச்சோடியே காணப்பட்டன.