மலையகத்திற்கு பெருமை சேர்த்த விக்னராஜ் வக்சான்!!

மலையகத்தின் தலவாகலைப் பகுதியைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள வீரர் விக்னராஜ் வாக்சன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று 15 நிமிடங்கள் 56 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். வக்சானுக்கு இப்போட்டித் தொடரில் கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும்.

போட்டி ஆரம்பித்த முதல் நாளில் நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டத்தில், அவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

வக்சான் இதற்கு முன்னர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி ஆசியப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. இதுவரை போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதேவளை, ருசிரு சதுரங்க வீரர், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே அவர் 1,500 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவி நிமலி லியனாராச்சி, பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று பிரகாசித்தார். அவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் பெற்றிருந்தார்.

மேலும், குறுகிய தூர ஓட்ட வீரர் அயோமல் அகலங்க, 400 மீட்டர் தடைகளை உடைய ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்று இலங்கையின் பதக்க பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துள்ளார். இலங்கை அணிக்காக 8 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். போட்டி இன்று முடிவடைகிறது.

வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரை ஏமாற்றிய நபர் : கொழும்பில் 5 கோடியுடன் சிக்கிய இளைஞன்!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையை சேர்ந்த 37 வயதுடையவராகும். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்!!

புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஆவார்.

தாக்குதல் தொடர்பாக 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

200 பயணிகளுடன் மயிரிழையில் ஆபத்திலிருந்து தப்பிய விமானம்!!

கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் கத்தாருக்கு சொந்தமான விமானம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ள தகவல் வெளியாகிய்யுள்ளது.

குறித்த விமானத்தில் இலங்கைப் பயணிகளும் இருந்ததாக கூறப்படுகின்றது. அல்-உதெய்த் விமானப்படைத் தளம் மீதே இந்த தாக்குதல் நாத்தப்பட்டுள்ளது. சுமார் 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் அங்கு இருக்கின்றன.

இதையடுத்து போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், அதன்பின்னர் ஈரான் இஸ்ரேல மிது தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதேவேளை ஈரானின் தாக்குதல் இடம்பெற்றபோது கத்தாருக்கு சொந்தமான விமானம் ஒன்று வான்வெளியில் 200 பயணிகளுடன் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை அடுத்து சர்வதேச விமானக்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் நாடும் கண்டனம் வெளியிட்டிருந்த்து.

கொழும்பு கடலில் மிதந்த மர்மப் பொருள்!!

கொழும்பு மொரட்டுவ, கோரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு சாதனத்தின் ஒரு பகுதி கரைக்கு கொண்டு வரப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வட்ட வடிவ சாதனத்தின் நடுவில் ஒரு சிறிய சுற்று மற்றும் மொபைல் போன்களைப் போன்ற நான்கு சிறிய சோலார் பேனல்கள் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பொருள், அது ஏதோ ஒரு சாதனத்தில் இணைக்கப்பட்டு, தளர்வான பிறகு கடலில் மிதந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பதவி விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார்.

மேலும், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

50000 ரூபா கடனுக்காக நண்பனுக்கு மனைவியை விற்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக கணவன் , நண்பனுக்கு மனைவியை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூதாட்டத்தில் ரூ.50,000 வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கடனை அடைப்பதற்காக அவர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் வழங்கியவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், கடனுக்காக ஒருவருக்கு தனது மனைவியை விற்பனை செய்துள்ளார்.

அந்த பெண்ணை கணவரின் நண்பர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த பெண், இந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

பெண்னின் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த கணவரின் நண்பரையும் போலீசார் தேடி வருகின்றதாக கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கெலேகால பகுதியில் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் மற்றும் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து, கெலேகால பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடனும் மோதி வீதியில் குடைசாய்ந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையை தமிழ்கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றியது றிசாட் தரப்பு!!

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கியமக்கள் சக்தி) உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக்கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர தெரிவு, வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவை பகிரங்கமாக நடத்துமாறு 12 உறுப்பினர்களும் ரகசியமாக நடாத்துமாறு 6 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இம்தியாஸுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட தாவீது இசையாஸ் மிரால் அவர்களுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் முகமது இம்தியாஸ் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் இரண்டு உறுப்பினர்ளும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக தமிழரசுக் கட்சி சார்பில் தேவசாகயம் சிவானந்தராசா போட்டியிட்டார்.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த அவர் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை சுயேட்சைகுழு உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேக கட்டுப்பாட்டை இழந்து கார் -லொறியுடன் மோதி விபத்து : இருவருக்கு நேர்ந்த கதி!!

கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியில் போவத பகுதியில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.

பன்னலவில் இருந்து பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தெஹிவளையில் திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் வண்டி……!!

தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லொறியுடன் மோதியவருக்கு நேர்ந்த சோகம்!!

கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் திங்கட்கிழமை (23.06) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது நண்பரும் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது 54ஆம் கட்டையடியில் எரிவவாயு சிலிண்டர் ஏற்றிவந்த வாகனத்துடன் மோதி படுகாயமடைந்தார்.

இந்நிலையில் அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (22) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (22) உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்த்!!

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதோடு வெளிநாடு செல்லமாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

இருப்பினும் பிணை வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் பிணை வழங்க கோரி, மனுதாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கைதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் விளக்கமறியல் நீடிப்பு!!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் , நிர்வாக உதவியாளர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவினால், செவ்வாய்க்கிழமை (24) பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, அதே மருத்துவமனையின் மேலாண்மை உதவியாளர் கெகுலந்தல லியனகே இந்திகா

மற்றும் மருத்துவரால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் நிமல் ரஞ்சித் ஆகியோர் ஜூன் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சற்று குறைந்தது தங்கத்தின் விலை!!

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (24.06) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண்டு 22 கெரட் தங்கத்தின் விலை 248,000 ரூபாவாக குறைந்துள்ளது. அதேவேளை இது கடந்த ஜூன் 13 ஆம் திகதி தங்கத்தில் விலை 250,600 ரூபாவாக பதிவாகியிருந்து.

அதேபோல், 24 கெரட் தங்கத்தின் விலை கடந்த ஜூன் 13 ஆம் திகதி 271,000 ரூபாவாக இருந்தது. இந்த நிலையில், இன்று 268,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற மோசமான சம்பவம் : அச்சத்தில் சிதறி ஓடிய பக்தர்கள்!!

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் (23) ஆலய பொங்கல் திருவிழாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு நாகதம்பிரானை வழிபட வருகை தந்திருந்தனர்.

வவுனியா மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் புதூர் நாகதம்பிரானை வழிபட பெரும் தொகையாக வருகை தந்திருந்ததுடன், காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர்களின் தாக்குதலால் நாகதம்பிரானை தரிசிக்க வந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி ஓடியிருந்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், ஆலய திருவிழாவில் இளைஞர்களின் மோசமான செயலுக்கு சமூக ஆர்வர்கள் விசனக்களை வெளியிட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.