பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் காயம்!!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் தில்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13.06) இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி படேல் என தெரிய வந்துள்ளது. இந்தியாவிற்கு குறுகிய பயணம் மேற்கொண்டு மீண்டும் கனடா திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

2019ஆண்டில் கனடாவில் குடியுரிமை பெற்ற நிராலி மிசிகாசாவிலுள்ள பல் வைத்தியாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பிரம்டனில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்தில் 242 பேர் பயணித்த பயணிகளில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள் ஒரு கனேடியர், 7 போர்துக்கல் பிரஜைகள் ஆகும்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற வந்த கணவர் மரணம் : லண்டனில் தவிக்கும் குழந்தைகள்!!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள்.

தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.

லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில், தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் பலியாக, பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை பற்றி அறியும் யார் ஒருவருக்கும் மனம் கலங்கத்தான் செய்கிறது.

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு ஆரம்பம்!!

வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை வவுனியாவில் செயற்பட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் இல்லாததனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் மீற்றர் பொருத்துவதன் மூலம் நியாயமான கட்டண முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கட்டண திட்டத்தின் கீழ், முதல் கிலோமீற்றருக்கு 130 ரூபாவும் அடுத்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 100 ரூபா என்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

274 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து : அடுத்த மாதமே ராஜினாமா : விமானி தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி!!

இந்தியா குஜாரத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த துயர விபத்தில் கிய நிலையில், உயிரிழந்தவர்களில், 56 வயதான அனுபவம் வாய்ந்த விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது.

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி திருமணமாகாத சுமீத், மும்பையில் உள்ள தனது 90 வயது தந்தை புஷ்கராஜுடன் வசித்து வந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த தன் தந்தையை கவனிக்க, அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்ய போவதாக, விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தந்தையிடம் உறுதியளித்திருந்தாராம்.

சுமீத்தின் குடும்ப நண்பர் லாண்டே என்பவர், என் நண்பன் இறந்ததை நம்ப முடியவில்லை. விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், நான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து முழுநேரமும் உங்களை கவனித்துக்கொள்கிறேன்’ என்று தந்தையிடம் சுமீத் உறுதியளித்தார்.

ஆனால், அதற்குள் இந்தத் துயரம் நடந்துவிட்டது என்று கண்ணீருடன் கூறினார். மகனின் இழப்பால் மனம் உடைந்த தந்தை புஷ்கராஜியால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும்,

அவரது கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருவதாகவும் லாண்டே தெரிவித்தார். அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதி வெடித்துச் சிதறி இருந்தமை துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை : தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!

பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பேசி கருத்து விடுவது என சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார்.

இவரது வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயம் அதிகமான எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளது, சமீபத்தில் இவர் ஒரு ரவுடி பற்றி பேசி பதிவிட்டிருந்தார்.

அதற்கு அந்த ரவுடி இவரை மிரட்டியுள்ளார். மேலும் ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி பேசி பதிவிட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருந்ததுள்ளது.

இந்நிலையில் கமல் கவுர் தனது வலைதள பக்கத்தில் சிக்கிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி பதிவிட்டுள்ளார். இது சிக்கிய மதத்தை முழுமையாக பின்பற்றி வந்த ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் என்ற இருவரை காயப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த பதிவை நீக்க கோரி கமல் கவுர் இடம் கேட்டுள்ளனர். ஆனால் கமல் கவுர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே இருவரும் தங்களது மதத்தையும், கொள்கையையும் தவறாக பேசிய கமல் கவுரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக கமல் கவுரை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை உண்மை என நம்பிய கமல் கவுரி நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு அழைத்து வர இருவரும் கமல் கவுரி வீட்டுக்கு கார் அனுப்பியுள்ளனர். அதை மறுத்து தனது காரில் வருவதாக கமல் கவுரி கூறிவிட்டு தனது காரில் நிகழ்ச்சி நடப்பதாக சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.

வழியிலே கமல் கவுரியின் காரை மறித்து ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் அவரது காருக்குள் சென்று கமல் கவுரியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

பின்னர் கவுரியின் உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் காரிலேயே வைத்து சுற்றியுள்ளனர். ஒரு தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆகியும் கார் அதே இடத்தில் நின்றிருப்பதை பார்த்த அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் காரின் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது பெண்ணின் அழுகிய சடலம் இருந்துள்ளது.

அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் இறந்தது கமல் கவுரி என்றும் சிக்கிய மதத்தை பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் இருவரால் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தள பதிவால் 8 லட்சம் மாத வருமானத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்!!

மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்தார்.

அமெரிக்கா தூதரகத்திற்கு உள்ளே பைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதால், அங்கு வருபவர்களின் பைகளை வாங்கி வைத்து, அதற்கு ரூ.1000 கட்டணம் வசூலித்து வந்தார்.

இதன் படி, ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 20-30 பேர் வருகையில், மாதம் ரூ.8 லட்சம் அளவிற்கு வருமானம் ஈட்டி வந்தார்.

Lenskart நிறுவனத்தின் உயரதிகாரியான ராகுல் ருபானி இந்த விடயத்தை linkedin தளத்தில் பகிர்ந்த பின்னர், இந்த விடயம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

இந்த விடயம் வைரலானதையடுத்து, அவரது வருமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த விடயம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது போன்று, தூதரகத்திற்கு வருபவர்களின் தனிப்பட்ட உடமைகளை எந்த அனுமதியுமின்றி பெற்று வைத்திருந்தது சட்டவிரோதமான ஒன்று. பாதுகாப்பு காரணங்களுக்காக தூதரகத்தின் வெளியே வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளனர்.

மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த அந்த நபர், ஒரு சமூகவலைத்தள பதிவின் மூலம் தனது வருமானத்தை இழந்துள்ளார்.

பாடசாலை மீது விழுந்த மரத்தின் கிளை : உயிரிழந்த மாணவர் தொடர்பில் வெளியான தகவல்!!

பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த மாணவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் கிவிர ஹிருஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரத்தின் கிளை விழுந்த கட்டிடம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகும்.

காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு : காருக்கு தீ வைத்த கணவன் கைது!!

கொழும்பு – பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (12.06.2025) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ள நிலையில் காருடன் தனது உடலில் தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

பின்னர் இவர் சிறிது நேரத்தில் காரில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் காரில் பரவிய தீயை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் காரானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோர விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11.06.2025) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பரகொட, அலுதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து 41 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏர் இந்தியா விபத்து : லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை : அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள்!!

இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது இறந்த மனைவியின் அஸ்தியை உள்ளூர் ஆற்றில் கரைக்க சென்றிருந்தார்.

படோலியாவின் மனைவி பாரதிபென் ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் பரிதாபமாக இறந்தார். அவரது இறுதி ஆசை என்னவென்றால், ஒரு மலர் கலசத்தில் அவரது அஸ்தி இந்தியாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற இந்தியா திரும்பிய படோலியா, தனது கிராமத்தில் உறவினர்களுடன் பல இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, வியாழக்கிழமை தனது இரண்டு மகள்களைப் பார்க்க லண்டனுக்குத் திரும்பத் தயாரானார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பயணித்த ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், படோலியாவின் நான்கு மற்றும் 8 வயது பெண் பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமானது புறப்பட்டு சில நிமிடங்களில், உள்ளூர் நேரப்படி 1.40 மணியளவில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும், ஒருவர் தவிர மரணமடைந்துள்ளனர்.

229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இறந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட பிறகு மிக முக்கியமான கட்டத்தில் திடீரென அதன் கட்டுப்பாட்டு விசைகள் செயலிழந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கான சாத்தியமான காரணங்களாக கூறப்படுவது, காற்றில் ஏற்படும் விரைவான மாற்றம், இயந்திரம் நின்று போவது அல்லது இரண்டு இயந்திரங்களிலும் பறவை மோதிக் கொள்வது ஆகியவை அடங்கும்.

விமான விபத்து : வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழந்த சோகம்!!

லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது, ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்.

இவர்களில் கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா நாயர் என்ற பெண்ணும் ஒருவர். கேரளாவின் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர்(வயது 39), இவர் ஓராண்டாக லண்டனில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக கேரளா வந்த ரஞ்சிதா நாயர், லண்டனுக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பலியானார், இச்சம்பவம் அவரது உறவினர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு!!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில் “எனது மகன் மதிய உணவு இடைவேளையின் போது விடுதிக்குச் சென்றிருந்தார்.

விமானம் அங்கே விபத்துக்குள்ளானது. என் மகன் பாதுகாப்பாக இருக்கிறார், நான் அவனிடம் பேசியுள்ளேன். அவன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தான், அதனால் அவனுக்கு சில காயங்கள் ஏற்பட்டன” என்று ரமிலாபென் கூறினார்.

மேலும், தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்த பலர் பகிர்ந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி : 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி?

அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

அதற்கு காரணம் அவர் அமர்ந்திருந்த 11ஏ இருக்கை தான். இந்த இருக்கையானது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்து ஜன்னலுக்கு அருகில் இருக்கும்.

இந்த இருக்கைக்கு இடைவெளி அதிகமாக இருக்கும். மேலும், அவசர கதவுக்கு அருகே இறக்கைக்கு பக்கத்தில் இருக்கும்.

இது விமானத்தின் பலமான பகுதியாக இருப்பதால் விபத்து நடைபெறும் போது இந்த இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் விரைவில் தப்புவதாக நம்புகிறார்கள்.

நிபுணர்களின் கருத்துப்படி, அவரச கதவுக்கு பக்கத்தில் இருக்கும் 5 இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏனென்றால், அவசரம் என்றால் உடனே வெளியேற முடியும்.

விமான விபத்தை பொறுத்தவரை உயிர் பிழைப்பது என்பது விபத்தை பொறுத்து தானே தவிர, இருக்கையை வைத்து அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, 11ஏ இருக்கை இறக்கை பகுதி பலமாக இருந்ததால் சேதமடையாமல் உடைந்திருக்கிறது. அதன் வழியாக அவர் குதித்துள்ளார்.

மாம்பழ பிரியர்களா நீங்கள்? மறந்தும் கூட மாம்பழத்துடன் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் பல அடங்கியதும் கூட. இது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகளை பயக்கக் கூடியது.

எனினும் சில உணவுகள் சாப்பிட்டபின், அல்லது சில உணவுகள் சாப்பிடும் போது மாம்பழத்தை சாப்பிடுவது, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

பப்பாளி

மாம்பழத்துடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. வாந்தி குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் தூண்டலாம். இதனால் சுவாசம் தொடர்பான உடல்நல கோளாறுகள் ஏற்படும் பாதிப்பு உண்டு.

குளிர்பானங்கள்

அப்பளம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதோடு, குளிர் பானங்களில் இருப்பதெல்லாம் சர்க்கரைகளும் பிசிர்வேட்டிர்களும் மட்டுமே. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே பொதுவாக இதனை தவிர்ப்பது நல்லது.

தயிர்

மாம்பழம் சாப்பிட்ட பின் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

தயிரும் மாம்பழமும் சேர்ந்த தயிர் லஸ்ஸி போன்ற பானங்களை பலர் அருந்துகின்றனர் என்றாலும், இதனால் செரிமான பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகற்காய்

கசப்பு தன்மை கொண்ட பாகற்காய், நீரழிவு முதல் பல விதமான உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

அதேபோன்று மாம்பழமும் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் நிறைந்தது சிறந்த பழம். ஆனால் பாகற்காய் சேர்த்த உணவுகளை சாப்பிட்ட பின் மாம்பழம் சாப்பிடுவதால்,

இரண்டு சிறந்த உணவுகளையும் நன்மைகளையும் பெற முடியாமல் போகலாம். அஜீரண கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கக்கூடும்.

கார உணவுகள்

அதிக காரம் கொண்ட உணவுகளுடன், மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும். இதனால் நெஞ்செரிச்சல், போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாம்பழம் சாப்பிடுவதற்கான சரியான முறை

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன், அதனை 30 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

இதனால் உடலுக்கு அது சூட்டை கொடுக்காமல் இருக்கும். கோடைகாலத்தின் மிகச்சிறந்த பழமான மாம்பழத்தை இவ்வாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய பலன்களை முழுமையாக அடையலாம்.

அதோடு அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். எனவே அளவோடு சாப்பிடுவதால், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம்.

 

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 24 வயது இளைஞனின் மரணம் : தீவிரமாகும் விசாரணைகள்!!

நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து,

பெல்மடுல்லை நோனாகம வீதியின் கொஸ்வெட்டிய பகுதியின் வீதியில் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடகவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வியாழக்கிழமை (12.06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொடகவெல அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.