தந்தை கண் முன்னே கொல்லப்பட்ட 23 வயது மகன் : மது விருந்தால் வந்த வினை!!

களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 51 வயதுடைய தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விருந்தில் காயமடைந்த தந்தையின் சகோதரர்களில் ஒருவருடன் நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி, பின்னர் வேறு பகுதியில் மற்றொரு வாக்குவாதத்தைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த இளைஞனும் காயமடைந்த நபரும் வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளனர்.

வாக்குவாதத்தை தொடங்கிய மற்றொரு நபர் கூர்மையான ஆயுதத்தால் தந்தை மற்றும் மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பிரேத அறை மேலும் விசாரணையின் போது, ​​காயமடைந்தவர்களை களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தபோது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். உடல் களுத்துறை நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் பலியான தாதி : கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்!!

புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பத்தனம்திட்டாவின் திருவல்லா புல்லாட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (38). இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சில ஆண்டுகள் ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதாவுக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்தது.

கேரளாவில் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்ற கனவோடு கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்று வேலையில் சேர்ந்தார். தற்போது ஊரில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால் அதனை கவனிக்க விடுமுறை எடுத்து கேரளாவுக்கு திரும்பினார்.

இந்த சூழலில், ரஞ்சிதாவுக்கு கேரளா சுகாதார துறையில் செவிலியர் வேலையும் கிடைத்தது. அரசு வேலையில் சேர தயாரான ரஞ்சிதா இங்கிலாந்துக்கு சென்று வேலை ஒப்பந்தத்தை முறைப்படி முடித்து கேரளா திரும்ப இருந்தார்.

இதற்கான லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.

இது தவிர விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த 50 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பயணிகளில் ரஞ்சிதாவும் ஒருவர். விமான விபத்துக்கு பிறகு ரஞ்சிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தாய் இன்று லண்டனுக்கு சென்று திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நம்பி பள்ளிக்குச் சென்றிருந்த இரு பிள்ளைகளையும் உறவினர்கள் சென்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் ரஞ்சிதாவின் மரணத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அதை கேட்ட குழந்தைகள் கதறி அழுதனர். இதனால், செவிலியரின் இல்லம் அமைந்திருந்த திருவல்லா புல்லாட் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

வீட்டு வேலை முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் லண்டன் சென்று திரும்பியதும் மீதி வேலைகளை விரைவாக முடித்திட எண்ணியிருந்த ரஞ்சிதாவை மரணம் இழுத்து சென்றுவிட்டது.

சொந்த வீடு கனவு இன்னும் சில நாட்களில் நிறைவேற இருந்த நிலையில் அந்த புது வீட்டுக்கு ரஞ்சிதாவின் உடல் மட்டுமே வந்து சேர போகிறது.

விமானத்துடன் சேர்ந்து சுக்குநூறாகி போன ஒரு குடும்பத்தின் கனவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க லண்டனுக்கு புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பிரதிக் ஜோஷி ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். தனது மனைவி மற்றும் மூன்று இளம் குழந்தைகளுக்கு லண்டனில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக அவருக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது.

பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பிறகு, அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதிக் ஜோஷியின் மனைவி கோமி வியாஸ், லண்டனுக்கு புறப்படுவதற்காக தனது மருத்துவ பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து, நேற்றையதினம்(12) ஏர் இந்தியா விமானத்தில் அவர்கள் ஏறி ஒரு புகைப்படம் எடுத்து அதனை மகிழ்ச்சியாக உறவினர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

எனினும், துரதிஷ்டவசமாக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். லண்டனில் புதிய வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களது கனவு விமானத்துடன் சேர்ந்தே நொறுங்கிப்போனது.

அகமதாபாத் விமான விபத்து : இறுதி நேரத்தில் உயிர் தப்பிய இளம்பெண்!!

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1.39இற்கு 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில செக்கன்களில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தார்.

இந்த நிலையில் பூமி சௌஹான் என்ற பெண், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார். எனினும், அவர் செல்ல இருந்த விமானம்தான் பெரும் விபத்தில் சிக்கியது.

முன்னதாக, விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சௌஹானுக்கு, விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

சௌஹான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்ததோடு, இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.

கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த ரியா (Riya Puthanpurayil, 41), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோயல் (41) தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ட்ராவிஸ் (14) மற்றும் டைராவுடன் (7) கென்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

சுற்றுலாவை முடித்துவிட்டு ரியா, ஜோயல் குடும்பம் கேரளா செல்ல இருந்த நிலையில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 9ஆம் திகதி, அவர்கள் பயணித்த பேருந்து கென்யாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ரியாவும் அவரது மகளான டைராவும் அடங்குவர். ஜோயலும் ட்ராவிஸும் காயமடைந்து கென்யாவின் தலைநகரான நைரோபியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

பிள்ளைகள் வீட்டுக்கு வருவார்கள் என அவர்களை சந்திக்க ரியா மற்றும் ஜோயலின் பெற்றோர் ஆவலுடன் காத்திருக்க, ரியாவும் டைராவும் இறுதிச்சடங்குக்காக இந்தியா கொண்டுவரப்பட உள்ளதால் அவர்களுடைய குடும்பங்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா – மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று (12.06) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து கண்டி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக பூங்கா வீதியில் திரும்ப முற்பட்டவேளை குறித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்!!

நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சாரம் பற்றிய அதிக செலவுகள், உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாழ்க்கைச் செலவு ஏற்கனவே உயர்ந்துள்ள சூழலில், பல குடும்பங்கள் போஷக்கூறுகளான உணவுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, அண்மையில் அதிகரித்துவரும் தொற்றா நோயாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம், இவ்வளவான விலை உயர்வுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “இந்த ஆண்டு ஜனவரியில், மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 வீத்தினால் குறைத்தது.

இது நிதியளவில் எந்த அடிப்படையும் இல்லாமல், அரசியல் லாபத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இலங்கை மின்சார சபை (CEB) மேலும் நட்டமடைய நேரிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இப்போது மின்சாரசபைக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். “பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் விளக்கம் தர வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலையில் முறிந்து விழுந்த மரம் : ஒரு மாணவன் பலி – 17 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று (12) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 17 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழ் நகரில் யாசகம் பெற்று கோடீஸ்வரியாகும் பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் கையில் கட்டுடன் பாடசாலைக்கு அருகில் தினமுது நின்று யாசகம் பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்க உத்தியோகஸ்தர்களே மாத இறுதியில் அல்லாடும் நிலைக்கு செல்லும் நிலையில் குறித்த பெண் யாசகம் பெற்று சேர்க்கும் மாதவருமானம் பெரும் தொகை பணம் கிடைப்பதாக கூறப்படுகின்றது.

அதேவேளை வடக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு யாழ் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது நல்லூர் கந்தன் பெரு விழா காலத்தில் சில பெண்கள் யாசகம் பெற தமது குழந்தைகளையும் அழைத்து வருவதாகவும், இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கில் யாசகம் பெறுவோரை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட்டால் இருவர் பலி : மக்களே அவதானம்!!

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது.

இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.

இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.

அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

மரத்தில் இருந்து திடீரென வடிந்த நீர் : அதிசயம் என குவிந்த மக்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி பிரேம்லோக் பூங்கா அருகே இருக்கும் ஒரு குல்மோகர் மரத்திலிருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது.

இந்த மரம், மே-பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மரத்திலிருந்து வருவது “புனித நீர்” கருதிய மக்கள் அதனை வழிபட இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஏராளமான மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.

அவர்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். சிலர் இந்தத் தண்ணீருக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பி, அதைத் தீர்த்தம் போல் பருகியதாகவும் கூறப்படுகின்றது.

அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகப் பரவிய நிலையில் இது பிம்ப்ரி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மரத்திலிருந்து தண்ணீர் கசிந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர்.

அதாவது நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே தண்ணீர் கசிந்துள்ளதாகவும், அந்தக் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் வெளியேறுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு : நடந்தது என்ன?

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.

அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யுவதியே தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் இந்நிலையில் நேற்று (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் : மகன் படுகொலை : தந்தை படுகாயம்!!

களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 51 வயதுடைய தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விருந்தில் காயமடைந்த தந்தையின் சகோதரர்களில் ஒருவருடன் நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி, பின்னர் வேறு பகுதியில் மற்றொரு வாக்குவாதத்தைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த இளைஞனும் காயமடைந்த நபரும் வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளனர்.

வாக்குவாதத்தை தொடங்கிய மற்றொரு நபர் கூர்மையான ஆயுதத்தால் தந்தை மற்றும் மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

மேலும் விசாரணையின் போது, ​​காயமடைந்தவர்களை களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தபோது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். உடல் களுத்துறை நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரை கைது செய்ய மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் மீது சந்தேகம் தீ வைத்துக் கொளுத்திய கணவன்!!

சிலாபம் – அம்பகண்டவில பகுதியில், கணவன் ஒருவர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான காயங்களுக்கு உள்ளான மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(11) உயிரிழந்துள்ளார்.

தனது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர் இவ்வாறு மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணவர் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையை சேர்ந்த நபர்!!

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்க விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

2009க்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்துள்ளது.

இதற்கான பொலிஸ் பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் பொலிஸ் திணைக்களத்திடம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, இந்த விடயத்திற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதால், விரைவில் அந்தத் திணைக்களம் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையிடமிருந்து ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுள்ளனர். மேலும் இவர்களில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் 2009இற்கு முன்னர் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டுள்ளனர்.

இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவை கனரக வாகன ஓட்டுநர் உரிமங்கள். அவற்றைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை. அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.