முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!!

சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதில் சிக்குண்டு 4 வயதுடைய சிறுவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற மின்சாரத்தில் சிக்குண்டு ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மக்களின் காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம்!!

 

காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம்

வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22.01) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார். அதனை ஆளுநர் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார்.

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74ஏக்கர் அரச காணிகளும், 13.64ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் விடுவித்த நிலங்களை காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், வவுனியா அரச அதிபரிடம் தெரிவித்துள்ள நிலையில் அவை விரைவில் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் அரச அதிபருடன் வவுனியா பிரதேச செயலர் கா.உதயரசா, செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

வெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்!!

 

பெண் கண்ணீருடன்

காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவன ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய துர்காதேவி ரமீஸ் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து மூன்று வருடம் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு, அவர் குடும்பத்தினரால் பார்த்துவைக்கப்பட்ட வேறொரு பெண்ணுடன் நேற்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

இதையறிந்த துர்காதேவி சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளார். பின்னர் இந்தியா வந்த அவர் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்த திருமண மண்டபத்துக்குள் பொலிசாருடன் நேரில் சென்றுள்ளார்.

அங்கு ராஜ்குமார் இல்லாத நிலையில், அங்கிருந்த உறவினர்கள், ராஜ்குமாருக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த துர்காதேவி தன் கணவனை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

அதைப் பெற்றுக்கொண்ட நிர்மல்ராஜ் நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்காதேவியிடம் கூறினார். இதற்கான இலவச சட்ட உதவிகளை துர்காதேவிக்கு பெற்று தரவும் பொலிசுக்கு உத்தரவிட்டார்.

தந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

 

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் தந்தையின் மருத்துவ செலவுக்காகவும், குடும்ப செலவுகளை சமாளிக்கவும் சகோதரிகள் ஆணாக மாறி 4 ஆண்டுகள் சவரம் செய்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ நாராயணன். சலூன் கடை நடத்தி வந்த துருவ்வுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு படுத்த படுக்கையானார்.

அதன் பின்னர் இவரது மகள்களான ஜோதி குமாரி(18), நேகா(16) ஆகியோர் சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தனர். ஆனால், இளம்பெண்களிடம் சவரம் செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் தயங்கினர். சிலர் இவர்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

இதன் காரணமாக தங்களது தோற்றத்தை மாற்றிக்கொள்ள நினைத்த சகோதரிகள் இருவரும், தலைமுடியை ஆண்களைப் போல் வெட்டிக் கொண்டனர். கையில் காப்பு போட்டுக்கொண்டு தங்களின் பெயர்களையும் தீபக், ராஜு என்று மாற்றி வைத்துக் கொண்டனர்.

இந்த விடயம் கிராமத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்திருந்தபோதும், பக்கத்து ஊர்களில் இருந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தெரியவில்லை. சகோதரிகள் இருவரும் தினந்தோறும் குறைந்தது 400 ரூபாய் சம்பாதித்தனர்.

இந்த பணத்தை வைத்து தந்தையின் மருத்துவ செலவை சகோதரிகள் இருவரும் பார்த்துக் கொண்டனர். காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியத்துக்கு மேல் இருவரும் கடையை திறப்பார்கள்.

தற்போது ஜோதி பட்டதாரியாகிவிட்டார். நேகா இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைப் பற்றிய செய்தி வெளியான பின்னர், சகோதரிகளை அரசு அதிகாரிகள் அழைத்து கௌரவித்துள்ளனர். அனைத்துப் பிரச்சனைகளையும் போராடிக் கடந்து வாழ முடியும் என்பதற்கு இவர்களின் கதை ஓர் ஆச்சரிய உதாரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நேகா கூறுகையில், ’ஆரம்பத்தில் கிராமத்தில் சிலரே எங்களை கிண்டல் செய்வர். ஆனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினோம். ஏனென்றால் அப்போது எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், இப்போது எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. நாட்கள் செல்ல செல்ல எங்களுடைய நிஜ அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தினோம்.

பெரும்பாலானோர் எங்களைப் புரிந்துகொண்டனர். அக்கா (ஜோதி) மீண்டும் தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் என்னைப் பார்த்தால் இப்போது கூட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

கடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மொடல் : சோகத்தில் ரசிகர்கள்!!

 

கவர்ச்சி மொடல்

தாய்வானில் கவர்ச்சி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் Gigi Wu (36) பனியில் உறைந்து உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தாய்வானில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகின்றது. இந்நிலையில் கவர்ச்சி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் ஆனா Gigi Wu மலைபரப்பில் தங்கி உள்ளார்.

இது கடல் மட்டத்தைவிட 5577 அடி உயரம் கொண்ட மலை. அங்கு தற்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலைய Gigi Wu கடந்த 11 ஆம் தேதி மாலையில் சென்றுள்ளார். அங்கேயே தங்கி சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அவர் பெரும்பாலும் நீச்சல் போன்ற ஆடையை அணிந்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி தனது தோழிக்கு அழைத்து தான் ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அங்கிருந்து எங்கும் செல்ல முடியாமல் மட்டி கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தோழி island’s National Airborne Service Corps என்ற சேவை மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் காலநிலை சீராக இல்லை என்று ஹெலிகாப்டர் அனுப்புவது சிரமம் என்று கூறியுள்ளது. இருந்த போதிலும் இறுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பி தேடும் பணியை துவங்கினர்.

இந்நிலையில் 28 மணி நேரத்திற்கு பின் Gigi Wu இருந்த இடம் ஹொலிகாப்டரில் தேடியவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் மோசமான காலநிலையால் உடல் இன்னும் மீட்கபடாமல் உள்ளது. இது குறித்து Gigi Wu ரசிகர்கள் கடும் அதிர்ப்தியில் ஆள்துள்ளனர். Gigi Wu – வின் மரணம் அனைவருக்கும் பாடம் என்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணிப் பாடகி ரம்யா!!

 

பாடகி ரம்யா

பின்னணிப் பாடகி ரம்யா சமூகவலைளத்தில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. அதற்கு காரணம் இவரது உடல் எடை 120 கிலோவில் இருந்து 60 கிலோவாக குறைந்திருக்கிறார்.

120 கிலோவுக்கும் அதிகமாக என் உடல் எடை இருந்துச்சு. அதனால, உடல்நிலை ரொம்பப் பாதிக்கப்பட்டது. எனவே, உடல் எடையைக் குறைக்கத் தீர்க்கமா முடிவெடுத்தேன். ஜிம்முக்குப் போக ஆரம்பித்தேன்.

தினமும் மூணு மணிநேரம் தவறாம உடற்பயிற்சி செய்றேன். ஆனா, உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாம, பிடிச்ச உணவுகளைத் திருப்தியாச் சாப்பிடுவேன். ரொம்பக் கஷ்டப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன். இப்போ 60 ப்ளஸ் உடல் எடையில் இருக்கிறேன்.

பல வருட உடற்பயிற்சியின் பலன்தான். நான் பத்து வருஷத்தைவிட இப்போ ரொம்ப இளமையா இருக்கிறதாப் பலரும் சொல்றாங்க. அதைவிட, இப்போ உடலளவிலும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார் ரம்யா.

நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்!!

 

நாசாவின் புதிய திட்டம்

சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டுவது குறித்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

நிலவில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள சீனா, ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை நிலவின் இருள் நிறைந்த பகுதியில் ஆராய்ச்சி செய்ய அனுப்பியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் மீண்டும் நிலவில் தனது ஆய்வை தொடர ஆர்வம் கொண்டுள்ளது. இதற்காக சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டதில், நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தான் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில், நிலவிற்கு ரோபோ-வை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்!!

 

வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமா பாணியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இன்று காலை 11 மணி அளவில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சிலர் இந்தச் சம்பவத்தை சினிமா படஷூட்டிங் என முதலில் கருதினர். அதன்பிறகுதான் அது நிஜம் என தெரிந்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தலைதெறிக்க அலறியடித்து ஓடினர்.

விசாரணையில் குமரேசன் என்ற ரவுடிதான் கொலை செய்யப்பட்டவர் என தெரியவந்தது. குமரேசனைக் கொலை செய்தவர்கள் யார், யார் என்று அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

எங்களின் முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாகத்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. ஸ்கெட்ச்’ போட்டு குமரேசனை அவரின் எதிரிகள் கொலை செய்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கழிப்பறையின சிறிய ஓட்டையில் இருந்து வெளியில் வந்த மலைப்பாம்பு : அடுத்த நடந்த சம்பவம்!!

அவுஸ்திரேலியாவில் வெஸ்டன் கழிப்பறையில் இருந்து மலைப்பாம்பு வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்பேனில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது உள்ளிருந்து ஒரு மலைப்பாம்பு வெளியில் வருவதை பார்த்து அதிர்ந்த அவர் குடும்பத்தாரை அழைத்தார்.

எல்லோரும் மலைப்பாம்பை பார்த்து பதறிய நிலையில் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுத்தார்கள். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பாம்பானது கழிவுநீர் அமைப்பின் வழியாக உள்ளே வந்திருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் லைக்குகளை பெற்று வருவதோடு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் ஹட்டனில் அதிரடியாக கைது!!

 

ஜேர்மன் நாட்டு பெண்கள்

ஜேர்மன் நாட்டுப் பெண்கள் இருவரை ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்துக் குறித்த காரை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன் போதே இரு பெண்களிடமிருந்தும் 1105 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா பகுதிக்குச் சுற்றுலா சென்ற இரண்டு பெண்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இரண்டு பெண்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்காக உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : பெற்றோருக்கு எச்சரிக்கை!!

தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பல் அங்காடியில் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப்பொருள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப் சிற்றியில் கொள்வனவு செய்யப்பட்ட சீஸ்களில் புழு முட்டை நிறைந்து காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்காக பயன்படுத்தும் இந்த உணவுப் பொதியில் புழு முட்டைகள் இருந்தது தென்னிலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனை கொள்வனவு செய்தவர் துறைசார் அதிகாரிகள் பலரிடம் முறைப்பாடு செய்த போதும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

குறித்த சீஸ் பெட்டி, காலாவதியாகுவதற்கு நாட்கள் உள்ள போதிலும் புழுக்களுடன் காணப்பட்டது எவ்வாறு? என பாதிக்கப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புழு முட்டைகளுடன் உள்ள சீஸ் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!!

 

கமலாதேவி ஹாரிஸ்

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப் போவதாக அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான கமலாதேவி ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு வருகிறது. இத் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண்

. தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது.

யாழில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கும்பல் : சிறுமிக்கு செய்த கொடூரம்!!

 

சிறுமிக்கு செய்த கொடூரம்

யாழ். வலி வடக்கில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமியொருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலி வடக்கு பகுதியில் மூவரடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று இரு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளது. அதன்போது ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது பெரியம்மாவும், மற்றுமொரு உறவினரான பெண்ணுமாக மூன்று பேர் இருந்துள்ளனர்.

அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு, வீட்டில் இருந்த 27000 ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள் : தீக்குளிப்போம் எனவும் மிரட்டல்!!

 

வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்

வவுனியா தினசரி சந்தை வீதியில் இன்று (22.01.2019) காலை 10 மணியளவில் நகரசபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கைகளை வவுனியா நகரசபை முன்னெடுத்தனர். இதன் ஒரு கட்டமாக சுற்றுவட்ட வீதியில் உள்ள நடைபாதை வியாபார பொருட்களை அகற்ற நகரசபை ஊழியர்கள் வாகனத்தினை எடுத்துச் சென்றனர்.

இதன் போது நகரசபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. இதனையடுத்து நகரசபை வாகனத்தினை நடைபாதை வியாபாரிகள் மறித்து அதற்கு முன்பாக அமர்ந்து எமது பொருட்களை அகற்றினால் தீக்குளிப்போம் என தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தினசரி சந்தை வீதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்தது. அதன் பின்னர் அவ்விடத்தில் போக்குவரத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா நகரசபை ஊழியர்களுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நடைபாதை வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபாதையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறிகள், பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றனர்.

இந்த விடயம் குறித்து நகரசபை ஊழியர்களிடம் வினவிய போது, அண்மை காலமாக நடை பாதையில் வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு முன்னறிவித்தல் வழங்கியிருந்தோம்.

நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு நகரசபையினால் ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மாறாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றமை எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

நடைபாதை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு நகரசபையினர் பள்ளிவாசலுக்கு முன்பாக வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு சட்டமும், இலுப்பையடியில் வியாபாரம் மேற்கொள்ளும் எமக்கு ஒரு சட்டத்ததையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

எதிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அகற்றும் பட்சத்தில் அல்லது அவ்விடத்தில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யும் பட்சத்தில் நாங்களும் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்காக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்!!

 

வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுத்தருமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (22.01.2019) முன்னெடுத்தனர்.

விபுலானந்தா கல்லூரியின் அதிபர் பி.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், கல்லூரி வளாகத்திலிருந்து வீதிக்கு வந்த பெற்றார்கள் சிலமணிநேரம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லூரி ஆரம்பித்த காலம் தொடக்கம் விளையாட்டு மைதானம் ஒன்று பாடசாலைக்கு இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இது விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திலெடுத்து விளையாட்டு மைதானத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  

வவுனியாவில் மதுக்கடைகளிற்கான அனுமதிகளை ரத்துசெய்யவேண்டும் : வெகுஜன அமைப்பு கோரிக்கை!!

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பிரகடனபடுத்தியிருக்கும் ஐனாதிபதியின் ஆட்சியில் மதுப்பாவனையை அதிகரிக்கசெய்ய, மதுபானசாலைகளிற்கு அனுமதிவழங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு புதிதாக வழங்கபட்ட அனுமதிகளை உடன்ரத்துசெய்யுமாறு சமூகநீதிக்காகன வெகுஐனஅமைப்பின் வவுனியா மாவட்டசெயளாளர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, வவுனியா புதிய பேருந்துநிலையத்திற்கு அருகாமையில் மதுபானசாலை அமைக்க அனுமதித்திருப்பது மிகவும் கண்டணத்திற்குரிய ஒன்றாகும்.

மக்களின் குடியிருப்பிற்கு மத்தியிலும் பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதியிலும் வைத்தியசாலை, மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம் என்பவற்றிற்கு அருகாமையில் குறித்த மதுபானசாலையை அனுமதித்திருப்பது மது பாவனையை ஊக்கபடுத்துவதாகவே அமையும்.

வவுனியா நகர்புறத்தில் மாத்திரமன்றி வளர்ந்துவரும் கிராமமான ஓமந்தையிலும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. இது ஊர்தோரும் மதுபாவனையை பரவலாக்கும் செயற்பாடேயாகும்.

இது ஒரு மக்கள் விரோத செயற்பாடேயாகும். மதுபானசாலைகள் பெருகுவது ஒரு சில தனிநபர்கள் பணம்சேர்பதற்கு உதவுமேயன்றி நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை பயக்காது. தீமையையே விளைவிக்கும்.

அரசுக்கு வருமானமாக மதுவரி கிடைக்கின்றபோதும் மதுவினால் ஏற்படும் நோய்களை குணமாக்க அரசுசெலவிடும் மருத்துவசெலவு அதிகமானதாகும். எனவே மதுபானசாலைகள் அமைப்பதை அனுமதிக்கமுடியாது. புதிய மதுபானசாலைகளிற்கான அனுமதியை ரத்துசெய்யவேண்டும்.

அத்துடன் பொதுமக்களிற்கு இடையூறாக அமைந்துள்ள மதுபானசாலைகளின் அனுமதிகள் ரத்து செய்யபடவேண்டும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.