காணாமல் போன குடும்பஸ்தர் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!!

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

காணாமல் போன குடும்பஸ்தரான ஆணொருவர் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகிழூர் – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ந.கோபால் (வயது 42) என்பவருடைய சடலமே மகிழூர் பெரியகுளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வராததினால் உறவினர்கள் குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் முதலைக் கடிக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு!!

வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதி

வவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த யாத்திரிகைக்குரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நிலைகள் காணப்பட்டுள்ளதுடன் காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எவையும் யாத்திரிகையை உரிமை கோரியவர்களிடம் இருக்கவில்லை.

எனினும் ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில் அது குறித்து சபையின் தீர்மானிப்பதாக பௌத்த தேரர்களிடம் நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் பட்டணசபை செயற்பட்ட காலத்தில் யாத்திரிகை விடுதிக்காக கண்டி வீதியிலுள்ள விகாரைக்கு குறித்த யாத்திரிகை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை பராமரித்து வந்த விகாரதிபதி மற்றும் பலர் தற்போது பௌத்த யாத்திரிகை விடுதி என்று அதனை அழைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அதற்குள் பல வியாபார நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு காணிக்கான ஆவணங்களை தயார்படுத்தும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த காணியின் ஆவணங்களை கோரி 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் ஒன்றிணைந்து நகரசபை தலைவர் தலைமையில் கூடி ஒரு மணி நேரமாக ஆரயப்பட்டுள்ளது.

இதன்போது நகரசபை தவிசாளர், உப நகர பிதா, நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், பிரதம கணக்காளர் ஆகியோர் முன்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது காணிக்கான ஆவணங்கள் எவையும் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவில்லை.

காணிக்கான ஆவணங்கள் பிரதேச செயலகத்திடம் உள்ளதாகவும் அதனைப் பெற்று தருவதாகவும் பௌத்த தேரர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நகரசபைக்கு வழங்கும் பட்சத்தில் நகரசபை உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பதிலினை வழங்குவதாக நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் சினிமா கல்லூரி மீது குற்றம் சாட்டும் யாழ். இளைஞன்!!

இயக்குநர் பாரதிராஜா மீது குற்றம்

தென்னிந்திய சினிமா இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தனது கல்லூரியில் சினிமா துறை தொடா்பாக கல்வி கற்க சென்ற தன்னிடம் பெற்ற 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை திருப்பி தரவில்லை என யாழ்ப்பாணத்தை சோ்ந்த இராசரட்ணம் வினோஐ் என்ற இளைஞன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த வினோஐ் என்ற குறித்த இளைஞன் மேலும் கூறுகையில், கடந்த 2017ம் ஆண்டு இயக்குனா் பாரதிராஜா உருவாக்கிய பிறிக் என்ற கல்லூரியில் சினிமா இன் ஒட்டோகிராப்பி டிப்ளோமா கற்கை நெறிக்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதன்போது எனக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கான வீசா பிரச்சினை இருந்தது.

அப்போது அந்த விடயத்தை கூறி எனக்கு வீசா மறுக்கப்பட்டால் கல்லூரிக்கு செலுத்திய பணத்தினை மீளப்பெற முடியுமா? என கேட்டிருந்தேன். அப்போது ஆம் மீளப் பெறலாம் என உத்தரவாதம் தரப்பட்டது. இந்நிலையில் நாம்

நினைத்ததுபோல் வீசா பிரச்சினை உருவானது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் எனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டிருந்தேன்.

பல தடவைகள் கேட்டும் எனது பணம் எனக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் பணத்தை கேட்டு அழைப்பை எடுக்கும்போது ஒரு வாரம், ஒரு மாதம் என கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடா்ந்து கடந்த வருடம் எனது பணத்தை தாருங்கள் என இறுக்கமாக கேட்டேன். அதற்கு எனக்கு 3 படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த படிவத்தில் இயக்குனா் பாரதிராஜா கையொப்பமிட்டிருந்தார்.

மேலும் அந்த படிவங்கள் பாரதிராஜா எனக்கு சேரவேண்டிய 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் பணம் எனக்கு கிடைக்கவில்லை. இதன் பின்னா் நான் தொலைபேசி அழைப்பை எடுத்தபோது அவா்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. தொடா்ச்சியாக அமைதி காத்து வருகின்றனா்.

இந்நிலையில் எனக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலுள்ள வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!!

 

விசேட அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ள சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் தமது சேவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட்ஸ்அப்பில் இருந்து நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் செய்தியை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு செய்தியை ஐந்து முறை மட்டுமே ஒரு உறுப்பினரால் பகிர்ந்து கொள்ள முடியும். முன்னர் அங்கத்தவர்களினால் 20 முறைகள் ஒரே செய்தியை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் பிழையான தகவல்கள் வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் 6 மாத கால ஆய்வின் பின்னரே நிறுவனம் இந்த முறைமையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பிரதான தொடர்பாடல் செயலியாக வட்ஸ்அப் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 40 வருட சேவை செய்த ஆசிரியையை கெளரவிக்கும் நிகழ்வு!!

 

ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி நடராஜா வசந்தாதேவி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.அப்துல் நஸார் தலைமையில் இந் நிகழ்வு இன்று(21.01) காலை இடம்பெற்றது. இதன்போது பாடசாலை பிரதான நுழைவாயிலில் இருந்து குறித்த ஆசிரியரை மாலை அணிவித்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியர்கள், மாணவர்கள் அழைத்து வந்ததுடன், பாடசாலை முன்றலில் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

திருமதி நடராஜா வசந்தாதேவி கடந்த 40 வருடமாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப்பாட ஆசிரியராக கடமையாற்றியுள்ளதுடன், வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயத்தில் 9 வருடமாக கல்வி கற்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு வலயம் சார்பாக பிரதிகல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம், உதவிக் கல்விப் பணிப்பாளர் பரணிதரன் உள்ளிட்ட குழுவினர் பாடசாலைக்கு வருகை தந்து ஆசிரியரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் : மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி!!

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று(21.01) காலை ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 இன்று முதல் 28வரை பிரகடனப்படுத்தப்பட்டு பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழியினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் இன்றைய ஆரம்ப தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின்போது பொலிசார், இராணுவத்தினரின் துண்டுப்பரசுர விநியோகம் மற்றும் ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட போதை ஒழிப்பு எதிர்ப்பு பிரகடன அறிக்கை என்பன மாணவர்கள் மத்தியில் உரையாற்றப்பட்டதுடன்,

ஆசிரியர்கள், மாணவர்களின் போதை ஒழிப்பு தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளதுடன் இன்று ஆரம்பமான போதை ஒழிப்பு வாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையும் பாடசாலையில் தினமும் ஒவ்வொரு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளதாகவும்,

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு போதைப் பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், இராணுவத்தினர், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிர்வாணமாக நிற்க கூறுவார்கள் : கண்ணீர் விட்டு கதறும் சிறுமிகள்!!

 

கதறும் சிறுமிகள்

வடகொரியவிலிருந்து சீனாவிற்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் கடத்தல்காரர்களிடம் சிக்கி, கணினி முன் பாலியல் பாவைகளாக காட்சிபடுத்தப்படும் கொடுமை நடைப்பெற்று வருகின்றது. வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு அழைத்துவரப்படும் சிறுமிகளில் கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வீராவு மற்றொருவர் ஜூயுன்.

இருவரும் வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு கடத்திவரப்பட்டு பாலியல் பாவைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை பாதிரியார் அர்சண்ட்கிவான் என்பவர் கண்டுபிடித்து மீட்டுள்ளார். அவர் அவர்களை தென்கொரிய தூதகரத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமிகளில் ஒருவர் கூறியது, அந்த வாழ்க்கை சிறைபோன்றது. கணினி முன்பே நேரம் கழிக்க வேண்டும். சில நேரம் பலர் முன்பே ஆடைகள் இல்லாமல் நிற்க கூறுவார்கள் அப்போது அவமானமாக இருக்கும். இதை வடகொரியாவில் கணினி பாலியல் என்பார்கள்.

ஒருதடவை போதை பொருள் அதிகம் உண்டு நான்காவது மாடியிலிருந்து குத்திக முயற்சித்திருக்கிறேன் ஆனால் முடியவில்லை என்று கூறினார். இதுபோன்ற பல சிறுமிகள் கடத்தப்பட்டு காட்சி படுத்தப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறுமிகள் பெரும்பாலும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ளவும் அல்லது பாலியல் பொம்மைகளாக காட்சிபடுத்தவும் செய்யப்படுகின்றனர்.

தற்போது இந்த இரு சிறுமிகளு மீழ் குடியேற்ற மையத்தில் சில நாட்கள் கழித்தபின் தங்களின் வாழ்க்கையை அந்த சிறுமிகள் புதிதாக துவங்க உள்ளனர், என்று அவர்களை காப்பாற்றிய பாதிரியார் அர்சண்ட்கிவான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

– BBC Tamil

கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்.. 10 ஆண்டுகளில் ஆளே மாறிப்போன பரிதாபம்!!

 

கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்

இந்தோனேசியாவின் அதிக உடல் எடை கொண்ட பெண்மணியை சிகிச்சைக்காக அவரது குடியிருப்பில் இருந்து வெளியே கொண்டுவர அரசின் உதவியை நாடியுள்ளார். இந்தோனேசியாவின் Palangka Raya பகுதியில் குடியிருந்து வருபவர் 37 வயதான டிட்டி வாதி. இவரது உடல் எடை தற்போது 356 கிலோ என்பதால் இவரால் நகர முடியாமல் ஒரே இடத்தில் படுத்த படுக்கையாகியுள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயாரான டிட்டி வாதி தமது மகளின் கவனிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் இவ்வாறு இல்லை எனவும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கமே தம்மை சீரழித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த 6 ஆண்டுகளாக குப்புற படுத்தவாறே உள்ளதாகவும், தமது 19 வயது மகளே தற்போது தமக்கு எல்லாம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது 356 கிலோ என்பதால் தம்மால் உட்காரவோ நிற்கவோ முடியாத சூழல் என்கிறார் வாதி.

தமது இந்த நிலை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், சிகிச்சைக்கு தாம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பல முறை உடல் எடையை குறைக்க முயன்றதாகவும், ஆனால் தோல்வியே மிஞ்சியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலை காரணமாக தமது சிகிச்சையை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வந்ததாகவும், ஆனால் தற்போது தமது மகளின் முயற்சியால் மாகாண அதிகாரிகள் உதவ முன்வந்துள்ளதாகவும், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்தால் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா 2019!!

 

லண்டன், ஹறோ பகுதியில் உள்ள பல்லின மக்களினால் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இவ்விழா நேற்று முன்தினம் லண்டன் பாபா சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹறோ தமிழ் கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இவ்விழாவில் ஹறோ கவுன்சில் தலைவர் மற்றும் பலர் உரையாற்றியுள்ளனர். அத்துடன் இந்நிகழ்வில் பெண்கள் செம்மொழி பாடலுக்கு நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி!!

 

பாலியல் துஷ்பிரயோகம்

பாடசாலை மாணவனான 7 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ரஷ்யா பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டுக்கு எதிரில் சைக்கிள் ஓட்டி விளையாட்டிக்கொண்டிருந்த போது, சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சந்தேக நபர் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் சிறுவனை காணாது அவரது தாயும் அயலவர்கள் தேடிய போது சிறுவன் கடற்கரையில் அழுதுக்கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரஷ்ய பிரஜையுடன் சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

105 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!

 

இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை வரலாற்றில் நூற்றுக்கும் அதிக ஆண்டுகளுக்கு பின்னர் மிக குறைந்த வெப்ப நிலை நேற்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதற்கமைய அந்த காலப்பகுதியினுள் நுவரெலியாவில் 4.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பொதுவாக வெப்பநிலையை விடவும் 5 செல்சியஸ் குறைவான வெப்பமாக பதிவாகியுள்ளது.

1914 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி இறுதியாக நுவரெலியாவில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது 3.7 செல்சியஸ் ஆகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் இறுதி வரை நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் 7 நாட்களுக்கும் நாட்டில் காலை மற்றும் இரவு வேளையில் அதிக குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து சற்று குளிர் குறைவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இன்று காலை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதி கூடிய வெப்பநிலையாக 33.2 செல்சியஸ் ஹம்பாந்தோட்டையில் பதிவாகியுள்ளது. அது சாதாரண வெப்பநிலையை விட 3 செல்யஸ் அதிகமாக குறிப்பிடப்படுகுின்றது.

கொழும்பில் வீடு இல்லாதவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

 

அதிர்ஷ்டம்

கொழும்பில் வருமானம் குறைந்த நிலையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைத்தது முதல் 2015ஆம் ஆண்டு வரையில் கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189ஆவது தோட்டத்தில் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டினார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!

 

சாதனை படைத்த ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி உலகிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் 1,353 காளைகள் இங்கு அவிழ்த்துவிடப்பட்டன. இதன்மூலம் இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு இதுதான்.

இதற்கு முன்பு பாலமேடு ஜல்லிக்கட்டில் 988 காளைகள் திறந்துவிடப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்தனர். முன்னதாக, விராலிமலை ஜல்லிக்கட்டில் 2000 காளைகள் களமிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

 

உயிரிழந்த இளம் தம்பதி

அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி மீனாட்சி மூர்த்தி. இளம் தம்பதிகளான இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்றிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் Yosemite Valley என்னும் சுற்றுலா பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில் 3500 அடி உயரத்தில் உள்ள இடத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்தார்கள்.

அப்போது விஷ்ணுவும், மீனாட்சியும் கீழே விழுந்த நிலையில் இருவருக்கும் தலை, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தடய நோயியல் நிபுணர் வெளியிட்ட அறிக்கையில் இருவர் உடலிலும் போதை வஸ்துகள் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு பிரேத பரிசோதனையில் இருவரும் மது அருந்திருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தளவுக்கு அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை!!

 

தமிழ் சினிமா நடிகை

முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம்.

சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார். அவர் ஊர் சுற்ற ஆட்டோவையே பயன்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் ஒரு பிரபல காசினோவுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் : கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது!!

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ் என்பவர் தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்தோணிதாஸ் கடைசியாக எழுதிவைத்துள்ள கடிதத்தில், 12 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன், இந்த உலகத்தில் எனது குடும்பத்தினரை தனியாக விட்டு செல்வதற்கு மனம் இல்லாத காரணத்தால், அவர்களையும் அழைத்து செல்கிறேன்.

இப்படி ஒரு முடிவை எடுத்த காரணத்திற்காக அனைவரும் என்னை மன்னியுங்கள், நாங்கள் ஆவியாக வந்து யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என எழுதியுள்ளார். அந்தோணிதாஸ் எழுதிய கடிதத்தையும், 5 பேர் உடல்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், திலகாவின் கணவர் தீபன் உயிருடன் இருக்கும்போதே குமாருக்கும், திலகாவுக்கும் 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த விவகாரம் அறிந்த குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த குமாரிடம், இனிகுடும்ப செலவுக்கு நீதான் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று கூறினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட குமார், திலகாவுக்கு 2 தூக்க மாத்திரைகள் கொடுத்து, அவர் மயங்கியதும் ரிப்பனால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். பின்னர் பொலிஸ் தேடுவதை அறிந்த குமார், தானே வந்து சரணடைந்தது தெரியவந்துள்ளது.