முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து வவுனியா பகுதி நோக்கி பயணித்த வேளையில் இவ் விபத்தில் சிக்கியுள்ளது.
தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும் விபத்தில் காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானில் இன்றும், நாளையும் தோன்றும் சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் வரும் முதல் சந்திர கிரகணம் Super Moon அல்லது Wolf Moon என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 20, 21ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காற்றில் கலந்திருக்கும் அதிக மாசு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே இன்று தோன்றும் இந்த சந்திர கிரகணத்திற்கு Super Blood Wolf Moon என்று அழைக்கப்படுகிறது.
இந்த சந்திரகணம் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளில் தெரியும் என்றும் இந்தியா, அவுஸ்திரேலியா நாடுகளில் இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அதிசய நிகழ்வு விண்ணில் 62 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை காண எந்த விதமான சிவப்பு கண்ணாடிகளும் தேவையில்லை எனவும், விண்ணில் தோன்றும் இந்த சிவப்பு நிலவினால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் உள்ளடக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகிறார். அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது. மாநிறமான மகாதேவன், ஆடை அலங்கார உலகில், தெற்காசியாவை சேர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
தனது உடல் நிறம் குறித்து தான் பெருமை கொண்டாலும் ஆசியாவை சேர்ந்த பலர் இன்னும் வெள்ளை நிற தோலை எதிர்பார்ப்பதாக மகாதேவன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஜனாதிபதியே எங்களை ஏன் கைவிட்டீர்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? என போராட்டக்காரர்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, போராட்டமே தமிழினத்தின் வாழ்வா, 10 வருட மௌனம் போதும் நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பிய வண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதுடன் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் விசேட பாதுகாப்பு பொலிஸ் படையினர் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி வினோதினிக்கு பெற்றோர்கள் இல்லை. அவர் தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். வினோதினிக்கு கம்மல் அணிந்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
ஆனால் அவள் பள்ளிக்கு அனுப்பப்படுவதே பெருங்கொடுப்பினை என்றெண்ணுகிற வீட்டுச் சூழல். பிறகு, எங்கிருந்து கம்மல் குத்துவது? காதணி விழா நடத்துவது? ஒருநாள் தன் பள்ளித் தோழிகளிடம் இது குறித்து வருந்தியிருக்கிறார். அதை அவர்கள் ஆசிரியைகளிடம் சொல்ல, கடந்த வாரம் பள்ளிக்கூடத்திலேயே வினோதினிக்கு காதணி விழா நடத்தி முடித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள்.
மாணவ மாணவிகள் சீர்வரிசைத் தட்டுகளை ஏந்திவர, ஆசிரியைகள் மடியில் வினோதினிக்கு நடத்தப்பட்ட காதணி விழாவுக்குத் பாராட்டுகள் குவிகின்றன. வினோதினியின் பெற்றோருக்கு என்ன ஆனது என்பது குறித்து அவரே கூறினார். அவர் கூறுகையில், அப்பா செத்துட்டாரு, அம்மா எங்கே ன்னு தெரியலை. பாட்டிதான் என்னை வளர்க்குறாங்க என்றார்.
வினோதியின் பாட்டி கூறுகையில், நாலு பசங்க, மூணு பொண்ணுங்க ன்னு ஏழுபேரை பெத்து வளர்த்தவ நான். இது மூத்தவன் பொண்ணு. அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க. மொத பொண்ணு பிறந்த கொஞ்ச நாள்லயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தக் கோவத்தில் இவங்க அம்மா அவங்க வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டா.
ரெண்டாவது சம்சாரத்துக்கு ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. என்ன சண்டையோ சச்சரவோ தெரியலை அவளும் கோவிச்சு தன் பிள்ளைகளைத் தூக்கிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. அதுக்குப் பிறகு, முதல் சம்சாரத்தை சமாதானம் பண்ணி அழைச்சுட்டு வந்து வாழ்ந்தான். முதல் குழந்தையைத் தன் அம்மாவீட்லயே படிக்க வெச்சிருந்தா.
இங்கே வந்து நல்லா வாழ்ந்தாங்க, அப்போதான் வினோதினி பொறந்தா. இவளுக்கு ஒரு வயசுகூட ஆகலை. அவங்க அப்பன் உடம்புக்கு முடியாமல் செத்துப் போய்ட்டான். இவ அம்மா மனசில் என்ன நினைச்சாலோ தெரியலை. இந்தக் குழந்தையை இங்கேயே போட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் ஓடி போயிட்டா.
இதெல்லாம் என் மகன் பண்ணின பாவம். அதை நான்தானே கழுவணும். மத்த பிள்ளைகளோட ஆதரவும் இல்லை. இந்தப் பிள்ளையை எப்படியாவது வளர்த்து ஆளாக்கிரணும் என்பது தான் ஆசை என கூறியுள்ளார்.
மலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலத்தின் கட்டாஞ்சல் என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு இரு கோழிகளை விழுங்கியது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில், பகுதி நேர ஊழியரான முகமது என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பைப் பிடித்தார்.
அப்போது, மலைப்பாம்பின் வயிற்றை மிதித்து உள்ளேயிருந்த இரு கோழிகளையும் வெளியே கக்க வைத்தார்.
இரு கோழிகளும் இறந்த நிலையில் பாம்பின் வயிற்றில் இருந்து வெளியே விழுந்தன. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
முகமது பாம்பின் வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுக்கும் வீடியோ வைரலானது.
இதைத் தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர் ஏஞ்சல் நாயர் என்பவர் பாம்பை கொடுமைப்படுத்தியாக முகமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள வனத்துறைக்குப் புகார் அளித்தார்.
ஆனால் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏஞ்சல் நாயர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாம்பைக் கொடுமைப்படுத்திய முகமது மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள வனத்துறைக்குக் கேள்வி எழுப்பியதோடு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வெவ்வேறு காரணங்களுக்காக 3,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபாவனையில் வாகனம் செலுத்தியோர் 1,066 பேரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் 851 பேரும், வெவ்வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 823 பேரும் மற்றும் ஹெரோய்ன் மற்றும் போதைப் பொருள் தம்வசம் வைத்திருந்தவர்களென 967 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரமின்றியும், பிரபல இடங்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 99 பேரும், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய வாகனங்கள் மீதான வழக்குகள் 5,215 பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவில் காரில் ஏறி சென்ற இளம்பெண் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அர்ஜென்டினாவை சேர்ந்த 17 வயதான Agustina Imvinkelried என்கிற இளம்பெண், அரைநிர்வாணமாக சாண்டா ஃபே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனவும், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய முகத்தில் மோசமான காயங்கள் இருந்ததால், பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது தடுக்க நினைத்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்ற Agustina, அங்கிருந்து ஒரு காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் காரை ஒட்டிய 39 வயதான பப்லோ ட்ரியோன்ஃபினி என்பவரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் பொலிஸார் பெரிதும் குழப்பத்துடன் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, தன்னுடைய 12வது பிறந்தநாளில் வாழ விரும்பவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த Imarni Chowdhury என்கிற 11 வயது குழந்தை சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது the Diana, Princess of Wales மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர் கூறுகையில், சிறுமி சிறுநீர் கழிப்பதற்கு கூட அதிக அளவிலானா மருந்தை உட்கொண்டு வருகிறார்.
இந்த நோயால் லின்கோல்ன்ஷையரில் பாதிக்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும் தான் என கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முறையான சிகிச்சை பெற சிறுமியின் குடும்பத்தார் திணறி வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை ரஹ்மான் பேசுகையில், என்னுடைய மகள் ஒரு சிறுமி அனுபவிக்க கூடிய மகிழ்ச்சி எதையும் அனுபவிக்க முடியவில்லை.
அவளுடைய வலியை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலி மூன்றாம் கட்ட தீக்காயங்கள் அல்லது நான்காவது நிலை புற்றுநோய் வலியை போல இருக்கிறது. அதிலிருந்து திசை திருப்ப கார்ட்டூன் படங்களை டிவிகளில் போட்டு காண்பித்து வருகிறோம்.
அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் 12 வது பிறந்தநாளில் என்ன பரிசு வேண்டும் என கேட்டபொழுது, உயிருடன் இருக்க விரும்பவில்லை என கூறுவதாக வேதனை தெரிவித்திருக்கிறார். மேலும் பேசுகையில், நாங்கள் சிகிச்சைக்காக திணறி வருகிறோம். மருத்துவர்கள் ஏன் சிகிச்சை கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
என்னுடைய மகளை காப்பாற்ற உறவினர்களிடம் பிச்சை எடுக்க கூட நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய எலும்புகள் தேயும் வரை நான் வேலை செய்து பணத்தடை சேமிப்பேன் என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஷெஃபீல்ட் குழந்தை சிறுநீரக மருத்துவரும், NHS குழந்தைகள் அறக்கட்டளை ஆலோசகருமான பேராசிரியர் பிரசாத் கோட்கோபில், சிறுமிக்கு உதவுவதற்கான வேளைகளில் விரைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.
பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை தேடும் சமூகவலைதளம் மூலம் தன்னுடைய சொந்த மகளுக்கு காதல் வலை வீசியுள்ளார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மகளுக்கு அவர் பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த நபரின் மனைவி, மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என்று கூறியுள்ளார். இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெயர் மற்றும் தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை, முழு விசாரணைக்கு பின் அனைத்து தகவல்கள் தெரிய வரும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஆபிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோ மலையில் வைத்து, தனது காதலி டட்யானா ஜயரத்னவிடம் தனது திருமண யோசனையை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தானும், தனது காதலியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித்த ராஜபக்சவுக்கும் அவரது காதலி டட்யானா ஜயரத்னவுக்கும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வெளியாகிய இந்த செய்தியில் உண்மையில்லை என ரோஹித்த ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் தற்போது தனக்கு திருமணம் நடக்கவிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்
இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் ஆவார். சந்திர குப்தருக்கு மட்டுமின்றி சாணக்கியரின் அறிவுரைகள் அனைத்து மக்களுக்கும் உபயோகமானதும், பொதுவானதுமாகும்.
வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார். ஒருவர் வாழக்கையில் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாணக்கியர், என்ன செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அதன்படி உங்கள் வாழ்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் என்னென்னெ செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதி பிரச்சினைகள் : பணம் எப்பொழுதும் கட்டுப்பாட்டின் அடையாளமாகும். எனவே உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளை தேவையில்லாத சூழ்நிலைகளில் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பணப்பிரச்சினைகளை அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.
குரு மந்திரங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள் : உங்களது குரு உங்களுக்கு கூறிய அறிவுரையையோ அல்லது மந்திரத்தையோ ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புனித தன்மை வாய்ந்த இந்த மந்திரங்கள் பகிரப்படும் போது அதன் புனித தன்மையை இழப்பதோடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் குடும்ப சண்டைகளை வெளியே சொல்லாதீர்கள் : அனைத்து குடும்பத்திலுமே உயர்ந்த குணங்கள், சில மோசமான குணங்கள், மோதல்கள் என அனைத்தும் இருக்கும். ஆனால் அவற்றை பொதுவெளியில் வெளியிடுவது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுறத்துவதோடு உங்களை கேலிக்கும் உள்ளாக்கும்.
தெரியாமல் தானம் செய்வது : ஞானமுள்ள மனிதன் எப்பொழுதும் தான் செய்த தானத்தையோ, நன்கொடையை பற்றியோ வெளியே கூறமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளால் மதிக்கப்படுவார்கள். ஆனால் தற்பெருமைக்காக இதனை வெளியே சொல்வதோ அல்லது பிறர் அறியும்படி செய்வதோ உங்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது.
உங்கள் வயதை வெளிப்படுத்தாதீர்கள் : வயதிற்கும் உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே யாரும் கேட்காத வரை உங்கள் வயதை வெளிப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனமான இளமை உணர்வை உணரும் வாய்ப்பின் மீது, உங்கள் மனம் அதிசயங்களை உண்டாக்கி அற்புத பலன்களை அளிக்கும்.
உங்கள் பாலியல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருங்கள் : உங்களின் பாலியல் வாழ்க்கை என்பது உங்களின் தனிப்பட்ட விஷயமாகும், அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள எந்த அவசியமும், உரிமையும் இல்லை. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூறும்போது மற்றவர்கள் உங்களை பற்றி எளிதில் எடை போட்டுவிடுவார்கள்.
அதிகார துஸ்பிரயோகம் : ஒருவேளை நீங்கள் அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ பெரிய பொறுப்பிலே இருந்தால் அந்த அதிகார போதை உங்கள் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் நிலை கண்டு பொறாமை கொள்ளலாம், அதேபோல நீங்களும் உங்களின் தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகளை அதிகாரத்தின் மூலம் பணியில் திணிக்கக்கூடாது.
உங்கள் சொந்த அவமானங்களைப் பற்றி கேலி செய்யாதீர்கள் : உங்களின் முட்டாள்த்தனத்தை எண்ணி எப்போதாவது நீங்களே சிரித்திருப்பீர்கள். அதனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதை வெளிய சொன்னால் மற்றவர்கள் இதனை பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்த நேரிடலாம். சிலசமயம் உங்களின் வருங்காலம் கூட இதனால் பாதிக்கப்படலாம்.
வவுனியா சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் ஒளவையாரின் நினைவு தினம் இன்று(20.01) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபைத்தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.
ஒளவையாரின் நினைவுப் பேருரையை வவுனியா தெற்கு கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி நிறைமதி நிகழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து வருகைதந்த பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.கண்டீபன், சமந்தா செபநேசராணி, பாஸ்கரன் ஜெயவதனி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் விக்னா நகரசபை ஊழியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்தோனேஷியாவில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடை குறைந்து சாதித்து காட்டியுள்ளான். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் சிபுர்வசரி குக்கிராமத்தை சேர்ந்த தம்பதி அதி சோமந்திரி (47)-ரொகாயா (37).
இந்த் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆர்யா பெர்மனா என்ற சிறுவன் தன்னுடைய பத்து வயதில் 190.5 கிலோ எடை கொண்டிருந்தான். இதனால் இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று அதிகளவில் பேசப்பட்டான். சிறுவன் நாள் ஒன்றிற்கு 5 வேளை சாப்பிடுவான்.
சாதம், மீன், மாட்டிறைச்சி, காய்கறி சூப் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவான். அதுவும் 2 ஆண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுவார்களோ, அந்தளவுக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளவன். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், உடல் எடை அதிகரித்தது. உடல் எடை அதிகரிப்பின் காரணமாக சிறுவன் நிற்க முடியாமல் தரையில் தான் படுத்து கிடந்தான்.
இவர் பிறக்கும் போது சாதரண குழந்தை போன்று தான் இருந்துள்ளான். 2 வயதிற்கு மேல் சென்றவுடன் இவனின் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. இப்படி உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றதால், அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவனது பெற்றோர்கள், கிராமத்தில் இருக்கும் மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து பார்த்துள்ளார்.
ஆனால் மருத்துவர்களால் அவனிடம் எந்த ஒரு குறைப்பாட்டையும் பார்க்க முடியவில்லை. சிறுவனின் எடை தொடர்ந்து அதிகரித்த படி இருந்ததால், மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். இறுதியில் மருத்துவர்கள், உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி இனிப்பு, இனிப்பு கலந்த குளிர்பானங்கள், சர்க்கரை சேர்த்த உணவு வகைகளை ஆர்யாவுக்கு தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கடும் உடற்பயிச்சி எப்படி மேற்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆர்யா பெர்மனாவுக்கு வயது 12. இரண்டு ஆண்டு கடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் தற்போது 95 கிலோ எடையைக் குறைத்து சாதித்துவிட்டான்.
கடந்த ஏப்ரல் மாதம் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் ஆர்யாவுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 3 வாரங்களில் அவனது எடை கணிசமாகக் குறைந்தது. தற்போது நன்றாக நடக்கிறான். நன்றாக படித்து வந்த ஆர்யா, எடை அதிகரிப்பால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.
சுறுசுறுப்பாக இருக்கிறான், நண்பர்களுடன் பேட்மின்டன், கால்பந்து ஆடுகிறான். தினமும் 3 கி.மீற்றர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்கிறான். பழைய டி ஷர்ட்டை அணிந்து கொள்கிறான். மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்.
இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நடக்கிறேன், விளையாடுகிறேன். கால்பந்தாட்டம் தான் எனது விருப்பம். தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. லிவர்பூல் எப்சி கிளப்தான் எனக்கு பிடித்தமானது. ராபர்ட்டோ பிர்மினோதான் எனக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர். அவரை போல நான் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆர்யாவின் எடை குறைப்புக்குப் பின்னால் அவனது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள் அதிகம். அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் எல்லாம் கடன் வாங்கி, ஆர்யாவைக் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்தரத்தேர் பவனி இன்று(20.01) காலை இடம்பெற்றது.
சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பிரமண்டமான 24 அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத்தேர் நேற்றைய தினம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முருகப்பெருமான் பிரதான வீதியூடாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தத்தை காணக்கூடியதாக இருந்தது.