ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்!!

 

தந்தை மற்றும் மகன்

இந்தியாவில் ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படி, ராம்லால் முண்டா என்ற நபரும் ஷகோரி என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 30 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மகன் ஜித்தீஷ்வர் என்பவரும் கடந்த இரண்டாண்டுகளாக அருணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் NIMMITA என்ற தொண்டு நிறுவனம் இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் நடந்த முடிவு செய்தது. அதன்படி ஒரே நேரத்தில் 132 பழங்குடி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதில் ராம்லால் – ஷகோரி தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஜித்தீஷ்வர் – அருணா திருமணமும் அடக்கம். இதன்மூலம் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.இது குறித்து ஜித்தீஷ்வர் கூறுகையில், நிதி பிரச்சனையால் தான் என் தந்தை எனது தாயை திருமணம் செய்து கொள்ளவில்லை, நானும் அதனால் தான் அருணாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தேன்.

தற்போது திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை செய்து கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

 

முக்கிய எச்சரிக்கை

தற்போது மோசடியான முறையில் பரிமாறப்படும் மின்னஞ்சல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் பரிமாற்றல்கள் இடம்பெற்று வருவதகாக வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, இந்த மோசடி இடம்பெற்று வருகிறது. ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தால், அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் போலி மின்னஞ்ஞல் சம்பந்தமாக, அனைத்து நிதி நிறுவனங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் எனத் தெரிவித்து மின்னஞ்சல் ஏதும் கிடைத்தால், அந்த மின்னஞ்சலை திறந்துப் பார்க்க வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

போலியான மின்னஞ்சல் ஊடாக தீங்கிழைக்கும் இணைத்தளங்கள் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களை (Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

புத்தளத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!!

அண்மையில் புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்களின் பின்னணியில் புதிய ஆயுத குழுவின் உருவாக்கம் உள்ளதாக என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் புதிதாக உருவாகிவரும் தீவிரவாத குழு ஒன்றின் ஆயுதங்களா? என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

80 ஏக்கர் தென்னந்தோட்டம் ஒன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் சந்தேகிக்கப்படும் 7 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தேடுதலின் போது 100 கிலோகிராம் சி4 வெடிப்பொருட்கள், 75 கிலோகிராம் அலுமினியம், 20 லீற்றர் நைற்றிக் அசிட் போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவை என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

 

துஷ்பிரயோகம்

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா உத்தரவிட்டார்.

வான்எல, ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதினான்கு வயதுடைய சிறுமியை ஏழு மாத காலமாக துஷ்பிரயோகத்ற்குட்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாகியுள்ளதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாய் வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதோடு, தந்தையின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளதாகவும் தந்தை வீட்டில் இருப்பதில்யெனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சிறுமி கந்தளாய் தள வைத்திய சாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின் தற்கொலை செய்த நபர்!!

 

தற்கொலை செய்த நபர்

நபரொருவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின்னர் தானும் உடம்பில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறே இந்த கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கம்புறுபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்த நபர் 42 வயதுடையவர் எனவும், மனைவி 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பல் பாணுக்குள் சிக்கிய மர்மம்!!

பாணுக்குள் சிக்கிய மர்மம்

மாத்தறையில் உணவுக்குள் போதைப்பொருளை ஒழித்து எடுத்துச் சென்ற முன்னாள் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேரோயின் போதைப்பொருள் பக்கட்டுகளை ரோல்ஸிற்குள் மறைத்து, சிறைச்சாலையில் இருக்கும் கைதிக்கு கொடுக்க முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை தலைமை பொலிஸ் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கே போதைப்பொருள் கொடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மாத்தறை, திஹகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான முன்னாள் கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை பார்க்க செல்வதற்கு குறித்த கடற்படை சிப்பாய் சென்றுள்ளார்.

சீனிச் சம்பல் பாண் மற்றும் ரோல்ஸ் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது 500 கிராம் போதைப்பொருள் பக்கட் ஒன்று கிடைத்துள்ளது. பின்னர் சந்தேகத்தில் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : 6 பேர் பலி, மூவர் படுகாயம்!!

 

கோர விபத்து

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சென்ற 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியின் பின்பக்கத்தில் மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவி.. 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

 

குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24).

இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணமும் செய்து கொண்டு., தற்போது இரண்டரை வயதுடைய பிரதீப் ராஜ் என்ற மகனும், பிறந்து நான்கு மாதங்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில்., மது பழக்கத்திற்கு ஆளான மதியழகன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தகராறு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார். இதன் காரணமாக சில நாட்கள் வேலைக்கு செல்வதும், சில நாட்கள் வீட்டில் படுத்துறங்கும் பழக்கத்தை வைத்துள்ளார். இதன் கரமாக இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த சமயத்தில், கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பண்டிகை என்பதன் காரணமாக மதியழகன் பணிக்கு செல்லவில்லை, நேற்று இரவு இல்லத்திற்கு வந்த மதியழகனிற்கும் – பொன்னிக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தை மீராவை சுவற்றில் ஓங்கி அடித்தார்.

குழந்தையை சுவற்றில் அடித்தவுடன் குழந்தையின் தலையில் இருந்து இரத்தம் ஒழுகவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மதியழகன் வீட்டில் இருந்து தப்பியோடினர், இந்நிலையில், உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பொன்னி மற்றும் அவரது உறவினர்கள், குழந்தையை மருத்துவர்கள் சோதித்த பின்னர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட பொன்னி மற்றும் அவரது உறவினர்கள் கதறியளவே, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில்., காணும் பொங்கலன்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த விரும்பி., மனைவியிடம் சென்று பணம் கேட்டேன், மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி சுவற்றில் வீசினேன். இரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தையை கண்டு அதிர்ச்சிடைந்து அங்கிருந்து தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

சாதியை காரணம் காட்டி ஒதுக்கிய கிராமத்தினர் : தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்!!

 

தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்

இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் அவரது மகன் தனது இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து சென்று அடக்கம் செய் சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கர்பாபஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா என்பவர். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 17வயது மகனுடன் அவர் தனியாக அந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அந்த பெண் வீட்டுக்கு அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது கால் தவறி விழுந்த அவர், அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜானகியின் இறுதிச் சடங்கை செய்ய கிராமத்தினர் சாதியை காரணம்’ காட்டி கலந்து கொள்ள மறுத்துள்ளனர்.

இதையடுத்து, யாரும் உதவிக்கு முன் வராததால் தனியொருவராக இறுதிச் சடங்குகளைச் செய்த மகன் சரோஜ், தனது தாயின் சடலத்தை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் தனிநபராக சைக்கிளில் வைத்து நடந்து சென்று காட்டுப் பகுதியில் அடக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் கேட்போரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுளத்தியுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினியுடன் கலக்கிய சிம்ரனுக்கு வந்த சோதனை!!

 

சிம்ரனுக்கு வந்த சோதனை

பொங்கல் ஸ்பெஷலாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வசூலும் வரவேற்பும் இருந்து வருகின்றது. அதே வேளையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்துடன் இப்படம் மோதியது. பேட்ட படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அஜித், விஜய் என முக்கிய நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவுக்கு இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார். இதில் இவரை மிக அழகாக நடுத்தர வயது பெண் போல காட்டியிருந்தார்கள். இது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

சிம்ரன் தெலுங்கு படங்களிலும் நடித்தவர். பேட்ட படம் தெலுங்கிலும் வெளியானது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காத திண்டாட்டம் இருந்தாலும் பின்னர் வரவேற்பு கூடியது.

இந்நிலையில் பேட்ட படத்தால் சிம்ரனுக்கு அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் அம்மாவாக நடிக்க வாய்ப்பு தேடிவந்துள்ளதாம். சூப்பர் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் இதனால் என்ன செய்வது என யோசனையில் இருக்கிறாராம்.

உயிருக்கு போராடும் தந்தை : மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் உயிருக்கு போராடு தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். 60 வயதான இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) என மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் பிப்ரவரி 15-ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் கடந்த 11-ஆம் திகதி, திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக அவரது இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதிகள் அகற்றப்பட்டதால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு இன்று காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.

அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் யோசித்துள்ளார்.

இதையடுத்து தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

கொன்றுவிடு என கூறிய காதலி : பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!

 

மனைவியை கொலை செய்த கணவன்

மும்பை பாந்ராவில் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஷேக் என்பவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தன்னுடன் வேலைபார்க்கும் ஜாஸ்மின் என்ற பெண்ணுடன் சல்மானுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. ஜாஸ்மினை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், இதற்கு மனைவி ஆயிஷா இடையூறாக இருந்துள்ளார்.

இதனால், தனது பிஞ்சு குழந்தைகளின் முன்பு மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கு காதலி ஜாஸ்மினும் உதவி செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு ஜாஸ்மினை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் அவர்களது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், ஆயிஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சல்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், சல்மான் கொலை செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரில் வீசப்பட்ட பிஞ்சுக்குழந்தை : தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸ்!!

 

காப்பாற்றிய பெண் பொலிஸ்

பெங்களூரு மாநிலத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெங்களூரு மாநிலம் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் சங்கீதா எஸ் ஹலிமனி. இவர் அப்பகுதியில் சாலையோரத்தில், பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு கிடந்த பச்சிளங்குழந்தையை மீட்டுள்ளார்.

கடும் குளிரில் எறும்புகள் மொய்க்க கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போது , அவர்களின் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், குழந்தை பிறந்து 10 முதல் 12 மணிநேரம் வரை மட்டுமே ஆகியிருக்கிறது.

குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுக்கப்படாமல் இருந்ததால், சர்க்கரை அளவு குறைந்து காணப்பட்டது. சங்கீதா சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததோடு, தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

தற்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். பின்னர் பெண் பொலிஸ் சங்கீதா பேசுகையில், தனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இந்த குழந்தையை தந்தெடுப்பது இயலாது என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் : கதறி அழும் குடும்பத்தார்!!

 

இளைஞர் மாரடைப்பால் மரணம்

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் Dammam நகருக்கு கார் ஓட்டுனர் பணிக்காக சென்றார்.

இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் திகதி தினேஷ்குமார் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் தினேஷ்குமாரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும், வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டும் அவர்கள் முயன்ற நிலையில் சடலத்தை கொண்டு வரமுடியாத நிலை நீடித்தது. இந்நிலையில் பெரும் போராட்டத்துக்கு பின்னர் அனைத்து விதமான சிக்கல்களும் தீர்க்கப்பட்டு தினேஷ்குமாரின் உடல் நேற்று சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

அவரின் சடலத்தை பார்த்து குடும்பத்தார் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. இதன்பின்னர் இன்று தினேஷ்குமாரின் இறுதிச்சடங்குகள் நடந்தது. இதில் உள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!

 

ஒருவர் பலி

யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம் 1.30 மணயளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற நகர்சேர் கடுகதி குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை, நாவற்குழி பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல்வெளிகளுக்கு ஊடாக சென்று கொண்டிருந்த போது, குறித்த வயல்வெளிகளின் ஊடாக வந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் சாரதி ஒலி எழுப்பியபோதும், குறித்த நபர் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை குறித்த ரயிலில் ஏற்றபட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் மீட்டு தற்கொலையா, விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் அபூர்வ பொருள் ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!

 

அபூர்வ பொருள்

உலகின் மிகப் பழமையான கிராம்பு வகை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகின் மிகப் பழமையான கிராம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழமையான மாந்தை துறைமுகத்தில் மிகப்பெறுமதி வாய்ந்த கறுப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது. இலங்கை தொல்பொருள் திணைக்களம், சீலிங்ஸ், மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, கி.பி 900 ஆம் ஆண்டுக்கும் 1100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

இது ஆசியாவின் மிகப் பழைய கிராம்பு மாத்திரமல்ல, உலகிலேயே மிகப் பழமையான கிராம்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டு மிளகுகள், கி.பி 600 தொடக்கம் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.