மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை : 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு : கதறும் கணவன்!!

மனைவியின் சோக முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் – பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் நவீன்குமாரை(26), சூர்யா காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சூர்யா வீட்டை விட்டு வெளியேறி நவீன்குமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை நவீன்குமார் மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டியில் யாரும் இல்லாதபோது சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது மனைவி இறந்துகிடந்ததை பார்த்து கணவன் நவீன் கதறியுள்ளார். சூர்யாவின் இடது கையில், ‘நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் இல்லை. என்னுடன் வந்து விடு’ என எழுதி வைத்து உள்ளார். வங்கி பாஸ்புத்தகத்தில், ‘‘நவி மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு’’ என எழுதி வைத்து இருக்கிறார்.

சூர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாத காலம் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. திருமணம் ஆகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 மாதமாக மாயமான சிறுமி : கதறும் பெற்றோர் : சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட பொலிஸ்!!

 

மாயமான சிறுமி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மா தம்பதிகளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப்போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி ஹரிணி காணாமல்போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதோடு, ‘ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டோம்’ என்று அங்கேயே தங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்துள்ளனர்.

இருப்பினும் ஹரிணி தொடர்பில் நம்பிக்கை தரும் எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையில், காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல்போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரிணி தொடர்பில் தகவல் அறிந்த லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலியம்மாள் தம்பதிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதோடு, மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது அமைப்பு மூலம் முயல்வதாகவும் குறிப்பிட்டார். இதனால் சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டு காவல்நிலைய பொலிசாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் சவுதியில் தற்கொலை : 4 மாதங்களின் பின் இலங்கை வந்த உடல்!!

 

சவுதியில் தற்கொலை

சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற, வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் நான்கு மாதங்களின் முன்னர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், கடந்த சனிக்கிழமையே அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

கணவன் இறந்து விட்ட நிலையில், இந்த பெண்ணே குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். இவரது உயிரிழப்பிற்கு கொழும்பிலுள்ள, முகவரே காரணமென பெண்ணின் உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குமாரவேல் அன்னக்கிளி (54) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது கணவர் எற்கனவே உயிரிழந்த நிலையில், ஐந்து பிள்ளைகளையும் அன்னக்கிளியே தனது உழைப்பில் பராமரித்து வந்தார்.

வறுமை காரணமாக அவர் எற்கனவே சில தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த எப்ரல் 18ம் திகதி கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றார். நான்கு மாதங்களாக உறவினர்களுடன் எந்த தொடர்பும்கொள்ளவில்லை.

எனினும் கொழும்பிலுள்ள முகவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனக்கு வேலையிடத்தில் அதிக துன்புறுத்தல், அதிக வேலை, தன்னை வேறிடத்திற்கு மாற்றும்படி அல்லது நாட்டுக்கு அழைக்கும்படி கேட்டு வந்துள்ளார். எனினும் முகவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்தார் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி அன்னக்கிளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் சவுதி அரேபியாவிலுள்ள உறவினர் ஒருவர், வவுனியாவிலுள்ள உறவினர்களிற்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும், இதை உறுதிசெய்ய முடியாமல், உறவினர்கள் தவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள முகவரை தொடர்பு கொண்டபோது, தமக்கு இது பற்றி தெரியாது என்னும், கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்புகொண்டபோது, அன்னக்கிளி தற்கொலை செய்து நான்கு மாதங்களும் 18 நாட்களுமாகி விட்டது என்ற தகவல் சொல்லப்பட்டது. சடலம் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

பின்னர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கடந்த சனிக்கிழமை சடலம் அதிகாலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெறப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

முகவர் நிறுவனத்தின் அசன்டையீனமே இந்த உயிரிழப்பிற்கு காரணமென குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்பவர்கள் சரியான முகவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இலங்கையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!!

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு இசிபத்தான, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், 22 பாடசாலைகளில் குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் சில பாடசாலைகள் மூடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து குறுஞ்செய்தி : தகவல் கோரும் ஊடகவியலாளர்!!

2019ஆம் ஆண்டுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி மக்களின் செல்போன்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பான தகவல்களை கோரி ஊடகவியலாளர் ஒருவர், ஜனாதிபதி செயலகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அனுப்பிய வாழ்த்து செய்தி, அதனை பொதுமக்களுக்கு அனுப்பிய தொலைப்பேசி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்பட்டதா அல்லது நிறுவனங்கள் அதனை இலவசமாக வழங்கியதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஊடகவியலாளர் சம்பத் சமரகோன் தனது விண்ணப்பத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் தொலைப்பேசி இலக்கங்கள் ஜனாதிபதிக்கு கிடைத்தமையானது அவர்களின் தனித்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் ஜனாதிபதியின் குறுஞ்செய்திக்கு பதிலளிக்க முடியாத வகையில் அது அனுப்பப்பட்டிருந்தமை ஒழுக்கநெறி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சம்பத் சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம்!!

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல- வெலிகம்பிட்டிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்டெயினர் வாகனத்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் கன்டெயினர் மோதியுள்ளது. இவ்விபத்தில் கன்டெயினர் வாகனத்தின் உதவியாளரும் வீதியால் பயணம் செய்த நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மொரவக்க பல்லேகந்த மற்றும் காலி பாலட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 32 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தப் பெண்களை தெரிந்தால் உடன் தகவல் அறிவியுங்கள்!!

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இரு பெண் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

2016ஆம் ஆண்டு கட்டாருக்கு பணிப் பெண்ணாக பொலநறுவையை சேர்ந்த சந்தியா குமாரி என்பவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று 2011ஆம் ஆண்டு ஜோர்தான் நோக்கி சென்ற வனாலுவாவவை சேர்ந்த கிரிபத்கொட லலானி என்பவர் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பணியகம் அறிவித்துள்ளது.

இந்த பெண்கள் தொடர்பில் தகவல் அறிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 0112-864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பணியகம் கேட்டு கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் மர்மமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : கணவனால் கொலை செய்யப்பட்டாரா?

 

உமயங்கி வீரசிறி

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். இலங்கையை சேர்ந்த 32 வயதான உமயங்கி வீரசிறி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாபோலி நகரத்திலுள்ள வீடொன்றில் பணியாற்றி வந்த உமயங்கி, அதே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது கணவருடன் நாபோலி நகரத்தில் பொலிஸிகோ பிரதேசத்தில் தங்கியிருந்து பணி செய்து வருகின்றார். இந்த பெண் பணி செய்வதற்கு வருகைத்தராமையினால் அவர் தங்கியிருந்த அறையில் சென்று வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார்.

அங்கு உமயங்கி தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட இத்தாலி பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அன்று காலை குறித்த பெண்ணின் கணவர் அந்த அறையில் இருந்து செல்வதனை வீட்டடின் உரிமையாளர் அவதானித்துள்ளார். எனினும் தற்போது அவர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 8 வருடங்களாக இந்த பெண் இத்தாலியில் பணி செய்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்துள்ளார். ஒக்ஸ்ட் மாதம் கணவருடன் அவர் இத்தாலி சென்றார் என உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.

தனது சகோதரி அவரது கணவருடன் நாபோலி நகரத்தில் உள்ள வீட்டில் ஒன்றாக பணி செய்ததாகவும், சகோதரியின் மரணத்தின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும், சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் கொலை என சந்தேகிப்பதாக நபோலி நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் – மாணவிக்கு இடையில் மோதல் : கத்தியால் குத்தியமையால் பெரும் பரபரப்பு!!

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரை சக மாணவன் கத்தியால் குத்தி காயப்படுத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிக்கடுவ, எகொடகொட பிரதேசத்தின் காட்டுக்குள் 11 வயது மாணவியை, 15 வயதான பாடசாலை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த மாணவி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் மற்றும் மாணவி எகொடகொட பிரதேசத்தில் எதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய போது மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

கோபமடைந்த மாணவன் மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாடு : விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சிறிய குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கையின் குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்

அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.

இவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும். இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.

கிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

குழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்துவது அவசியம்.

முக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.

நீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.

குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.

பொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு என சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் எப்போது கொடுக்கலாம்? பதினொரு வயதிற்கு மேலேயே நல்லது என 2017 வந்த ஒரு ஆய்வு கூறியது என குறிப்பிட்டுள்ளார்.

காட்டிக்கொடுத்த பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா? விளாசித்தள்ளும் பாலித!!

வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த சரத் பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் உச்சக்கட்ட கருத்து மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும மீது சுமத்திய குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா தொடர்பான காரசாரமான கருத்துக்களை தெவரபெரும பகிர்ந்துள்ளார்.

காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா? என பாலித தெவரபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மூளை இல்லாவிடில் உடம்பை பெரிதாக வைப்பதில் அர்த்தமில்லை, கடற்படையில் சாரதியாக இருந்து தப்பியோடியவர் தெவரபெரும. இப்படியானவர்களை அரசியலுக்கு வரவிடக் கூடாது. இனி இவருக்கு வேட்புமனு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவரை நாடாளுமன்றத்திற்கு வர விடமாட்டேன். கசிப்பு காய்ச்சியவரே இந்த தெவரபெரும என நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நண்பனுக்காக கதறி அழும் நட்பு : வெளிநாட்டவரின் செயலால் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!!

வெலிகம – கப்பரதொட கடலில் நீராட சென்று நேற்று முன்தினம் பிற்பகல் காணாமல் போன வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய நோர்வே நாட்டை சேர்ந்த குறித்த இளைஞர் , மேலும் மூன்று வெளிநாட்டவர்களுடன் கடலுக்கு நீராட சென்ற போது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

பின்னர் , மிரிஸ்ஸ கடற்படை முகாம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் இணைந்து குறித்த நபரை தேடியுள்ள போதும் அவரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் உள்ளிட்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட தனது நண்பரின் சடலத்தின் அருகில் படுத்து அவருடன் வந்த வௌிநாட்டு இளைஞரொருவர் அழும் காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

எரிகாயங்களுடன் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னா வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம், எரி காயங்களுடன், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அதிபர் கைது!!

 

அதிபர் கைது

வவுனியாவில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் சேஷ்டைகள் துன்புறுத்தல்கள் செய்து வந்த பாடசாலை அதிபரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் (04.01.2019) கைது செய்துள்ளனர்.

க.பொ.சாதாரண தர மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து வந்துள்ளதாகவும் பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனவும்,

மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதுடன் அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் கண்களை மூடி தேவாரம் பாடிக்காட்டவேண்டும் என்றும் அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார் என குறித்த பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது இதனையடுத்தே அதிபர் கைது செய்யப்பட்டார்.

55 வயதுடைய அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

சிறுநீரக கற்கள் – நீங்கள் அறிந்ததும் அறியாததும் : கண்டிப்பாக படியுங்கள்!!

 

சிறுநீரக கற்கள்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுடன் இந்த நோய்கள் காவு கொள்ளும் உயிர்களின் எண்ணிகையும் சமானமாக அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தினாலும் சுகாதார அமைச்சினாலும் பல் வேறுபட்ட செயல் திட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அமுல்படடுத்த பட்டும் பெருமளவு நிதி சிறுநீரக நோய்களுக்காக ஒதுக்கப்படட போதும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துவருவது கவலைக்கு இடமளிக்கின்றது .

சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக கல் அடைப்பு என்பது இன்று எம் மத்தியில் ஒரு பொதுவான சொற் பதம் ஆகியுள்ளது .இன்று வட மத்திய மாகாணதை பொறுத்த வரையில் தாங்க முடியாத இடுப்பு வலியுடன் வைத்தியசாலை வரும் நோயாளர்களின் 40 வீதமானவர்களுக்கு சிறுநீரக கற்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாக நமது குடிநீர் அமைகின்றது .`நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருப்பது தான் நம் உழைக்கும் மக்களின் பெரிய குறைபாடாக உள்ளது . இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் சிறுநீரக கல் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகள் சான்று பகிருகின்றன .

குடிக்கும் நீரை பொறுத்தவரையில் பல வகைவகையான கருத்து வேறுபாடுகள் நம் மக்களை காணப்படுகின்றது . கல்சியம் நீரை பருகினால் சிறுநீர் கற்கள் வரும் அபாயம் உண்டா ? Filter நீர் அருந்துவது அவசிஅவசியமா? எந்த அளவு நீர் பருக வேண்டும்? இப்படியான பல கேள்விகளுடன் நான் நோயாளர்களை தினமும் சந்தித்து வருகின்றேன்.

கல்சியம் நீரை பருகுவதால் சிறுநீரக கற்கள் தோன்றும் என்பது ஒரு மூட நம்பிக்கியாகும் . எமது உடம்பில் கல்சியம் அளவை கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்கு படுத்தும் சுரப்பிகள் உள்ளன. இவை ஒருவருக்கு தேவையான கல்சியத்தின் அளவை கட்டுப்படுத்துவதுடன் மிகையான கல்சியத்தை உடம்பில் அகத்துறிஞ்சாது வெளியேற்றி விடுகின்றன. எனவே அதிகளவில் கல்சியம் நீரை பருகுவதோ கல்சியம் வில்லைகளை பாவிப்பதோ சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற நம்பிகையில் இருந்து நீங்கள் வெளிவருவது முக்கியமாகும் .

இன்று filter நீரின் அதிகரித்த பயன்பாடு பல வியாபாரிகளை அதன் பக்கம் இழுத்து உள்ளது. Filter நீர் குடிப்பது என்பது ஒரு தவறான விடயமில்லை. ஆனால் filter நீர் குடிப்பதனால் சிறுநீரக கற்கள் தோன்றுவதை தட்டுக்கலாம் என்ற கறபனையில் filter நீரை பாவிப்பதில் தான் தவறு இருக்கின்றது.

இன்று அனுராதபுரம் பொலநறுவை போன்ற மாவட்டங்களில் காரணம் தெரியாத சிறுநீரக நோய்களின் தாக்கம் ( CKD U ) அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அத்துடன் இந்த மாவட்டங்களில் குடிநீரிலும் மாசுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் filter நீரின் பயன்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியது.

என்றாலும் காரணம் தெரியாத சிறுநீரக நோய்களுக்கும் குடிநீருக்குமான தொடர்புகள் இன்னும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

நாம் குடிக்கு நீரின் அளவு சிறுநீரக கற்களுடன் தொடர்புபட்டுள்ளது. எமது நெருக்கடி நிறைந்த வாழ்க்கையில் நம் மறந்து விடும் ஒரு விடயம் தான் நீர் அருந்துவது என்பது. இலங்கை ஒரு வெப்ப வலய நாடு என்பதாலும் பெரும்பாலான மக்கள் கடினமான வேலை செய்து உழைபவர்களாகவும் இருப்பதால் கணிசமான அளவு நீரை வியர்வையாக இழந்து விடுகின்றனர். இதை சமப்படுத்த அதிகளவு நீர் அருந்துதல் இன்றி அமையாதது .

சாதாரண மாசில்லாத ஆற்று, கிணற்று நீரை பருகிய காலங்கள் இன்னும் எம் நினைவில் நிற்க அக் காலத்தில் அருமையாக கேள்விப்பட்ட சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (RO Filter) செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது.

பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும் (Fast Food) துரித உணவிலும் உள்ள அதி க உப்புக்களும் சிறுநீரகக் கல் உருவாக காரணமாக அமையலாம் . சிறுநீரக குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் அல்லது சிறுநீர் வெளியேறுவதில் உள்ள சிக்கல்கள் சிறுநீர் சிறுநீர் பைகளில் தேங்கி நிற்க காரணமாகி சிறுநீர் கற்களை உருவாக்கி விடுகின்றன .

சிறுநீரக கற்கள் உங்கள் கிட்னியிலோ சிறுநீர் குழாயிலோ அல்லது சிறுநீர் பையிலோ உருவாகலாம் . சிறுநீரக கற்கலின் அற்குறிகளாக தாங்க முடியாத இடுப்பு வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் எரிவு, சிறுநீர் அடைப்பு போன்றவறறை குறிப்பிடலாம். எனினும் சிறுநீரகத்தில் உருவாகும் சில கற்கள் அமைதியாக இருந்து சிறுநீரக தொழிட்பாட்டை முடக்கி விடுகின்றன . சிறுநீரக கற்களை இன்றய நவீன மருத்துவ துறையின் தொழில்நுட்பம் இலகுவாக கண்டறிந்துவிடுகின்ற்றது .

X-Ray, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம 90 வீதமான சிறுநீரக கற்கள் கண்டறியப்படுகின்றது. CT Scan மூலம் நாம் 1௦௦ வீத சிறுநீரக கற்களை கண்டுபிடிக்கலாம். சிறுநீரக கற்கள் இலகுவாக எமது கிட்னியில் இருந்து அகற்றப்படக் கூடியவை. இன்று மருத்துவத் துறையில் இதற்கான தீர்வுகள் மிகவும் வளர்சி அடைந்துள்ளது.

வயிற்றை வெட்டி சிறுநீரக கற்கள் அகற்றிய காலம் மலையேறி சிறிய துளையினூடாக பெரியளவு கற்களையும் உடைத்து அகற்றும் மிக நுட்பமான சிகிச்சை முறைகள் பிரபல்யம் அடைந்து வருகின்றன.

‘கல்லடைப்பு’ என்று மருத்துவர் சொன்னதும் நீங்கள் பதறவேண்டியது இல்லை. அண்ணளவாக 8 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை. வலியைச் சமாளிக்கும் மருந்துகளை வைத்திய ஆலோசனையுடன் எடுப்பதும் கரைக்கும் மருந்தாக அதிகளவு நீர் பருகுவதும் போதுமானது.

அதே நேரத்தில், ‘அட… இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சிறுநீர் குழாய்களில் வரும் பொழுது அது சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும்.

மருத்துவ வசதிகள் வேகமாக முன்னேறிவருகின்ற போதும் பல வகையான பாட்டி வைத்தியம் பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். வாழைத்தண்டு சாறு பருகுதல், சதைக்கரைச்சான் சாப்பிடுதல், எலுமிச்சை சாறு குடித்தால் என்னும் அவர்களது அறிவுரைகளுக்கு விஞ்ஞானம் இடம் கொடுக்காதபோதும் நடைமுறையில் மறுக்க முடியாதுள்ளது.

சிறுநீரக கற்களுக்கான புதிய சிகிச்சை முறைகள்..

1 .லிதோற்றபிஸி

சிறுநீரக கற்களின் அளவை பொறுத்து அது eswl மூலமாகவா அல்லது லேசர் மூலமாகவா என்று வைத்தியர்கள் தீர்மானிக்கின்றார்கள். ESWL, அல்ட்ரா சவுண்ட் Waves சிறுநீரக கற்களை நேரடியாக தாக்கி பொடியாக்கி சிறுநீருடன் வெளியேற்றி விடுகின்றது. சிறுநீரகத்தில் உள்ள 2CM வரை யான கற்கள் இந்த முறைக்கு பொருந்தும். மயக்க மருந்துகள் இன்றி குறைந்த நேரதில் சிறுநீரக கற்களை அகற்றி விடலாம் .

2 . லேசர் சிகிச்சை

லேசர் சிகிச்சையின் அறிமுகம் சிறுநீரக கற்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே கருத வேண்டும். சிறுநீர் துவாரத்தினூடாக மெல்லிய கமராக்களை செலுத்தி சிறுநீரக கற்களை உடைத்து முற்றாக அகற்றும் தொழில் நுட்பம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இதன் மூலம் அண்ணளவாக 2CM வரைக்குமான கற்கள் சிறுநீர் வலியில் எங்கு இருந்தாலும் அகற்ற முடியும் .

3 . PCNL

பிசினல் சத்திர சிகிச்சை நுட்பம் பழைய வயிற்றை வெட்டி சிறு நீரக கற்கள் அகற்றும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து சிறுநீரக சத்திர சிகிச்சையில் ஒரு புது யுகம் படைத்துள்ளது.

பொது மயக்க மருந்தில் இடுப்பில் 1 CM அளவான துவாரத்தின் ( Key Hole ) ஊடாக சிறுநீரகத்தில் உள்ள எந்த அளவான கற்களையும் உடைத்து அகற்றிக் கொள்ளகொள்ளலாம் .
இம் முறையில் நோயாளர்கள் இரண்டு நாட்களில் வீட்டுக்கு செல்வதுடன் ஒரு வாரத்துக்குள் தமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல புதிய தொழிநுட்பங்களின் அறிமுகமும் துரித வளர்ச்சியும் சிறுநீரக கற்களுக்கான நிரந்தர தீர்வாக அமைகின்றன.

எனவே சிறுநீரக கற்கள் பற்றிய அறிவும் விழிப்புணர்ச்சியும் சுத்தமான நீர் பருகுதலும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பங்கு வகிக்கின்றது என்ற தெளிவே இந்த ஆக்கத்தின் வெற்றியாகும்.

தே.அரவிந்தன்
சிறுநீரக – சனனி சத்திர சிகிச்சை நிபுணர்
அனுராதபுரம்

பிரித்தானியாவில் 7 வயதுச் சிறுமியை கொலை செய்த 15 வயதுச் சிறுமி!!

 

சிறுமி கொலை

பிரித்தானியாவில் 15 வயதுடைய சிறுமியால் கொலை செய்யப்பட்ட தன்னுடைய 7 வயது மகள் குறித்து அவளின் தாய் இது தான் உன்னுடைய கடைசி கிறிஸ்துமஸ் கேட்டி ரப் என்று உருக்கமாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் Katie Rough(7) என்ற சிறுமி பூங்காவில் தினமும் தன்னுடைய 15 வயது பெண் நண்பருடன் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் குறித்த 15 வயது பெண்ணுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காரணம் தெரியாமல் கோபம் கொள்ளும் அந்த 15 வயது சிறுமி Katie Rough-ஐ கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவளது மார்பு பகுதியை முற்றிலும் சிதைத்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பூங்காவிற்கு வந்த நபர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்து, Katie Rough உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் Katie Rough -யை அந்த பெண் கொலை செய்துவிட்டு உடலை கடுமையாக சிதைத்திருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணையில் கொலை செய்த பெண் 2016 ஆம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அவர் சிறுமி என்பதால் அவர் பெயர் வெளியில் குறிப்பிட வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது. Katie Rough குறித்து அவரது தாய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான தகவல் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், Katie Rough நீ கொண்டாடிய கடைசி கிறிஸ்துமஸ் இதுதான். உனக்கு இந்த நிலைக்கு காரணமானவருக்கு 5 வருடம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார்.