இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் : அவர் சொன்னதைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!!

 

உயிர்பெற்று எழுந்த பெண்

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செயின்ட் அன்டன் ஸ்கை ரிசார்ட்டில் நண்பர்களோடு பனிசறுக்கில் விளையாடினர்.

அப்போது சக நண்பருடன் மோதி நிலைகுலைந்த ரிஹானா, மற்றொரு எல்லை பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து பதறிப்போன அவருடைய நண்பர்கள், 9 நிமிடமாக அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.

ஆனால் அவர் தன்னுடைய செல்போனை எடுக்கவில்லை. அதன் பிறகு நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், ரிஹானாவின் கால்பகுதியை கண்டுபிடித்தனர். அப்பொழுது அவருடைய உதடு முழுவதும் ஊதா நிறத்திலும், முகம் முழுவதும் வெள்ளை நிறத்திற்கும் மாறியிருந்துள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த ரிஹானா,

நான் நண்பருடன் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு 200மீ தாழ்வான பகுதிக்கு தூக்கி வீசப்பட்டேன். முதலில் பயங்கரமாக கத்தினேன். ஆனால் யாரும் என்னுடைய குரலுக்கு செவி கொடுக்கவில்லை. என்மேல் அந்த அளவு பனி மூடியது.

பிறகு மெதுவாக கத்துவதை குறைத்துவிட்டு, என்னுடைய மூச்சையும் நிறுத்தினேன். அப்போது ஒரு கனவு கண்டேன். “நான் அமைதியான, வெளிறிய காட்டில் ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் இருபுறமும் பெரிய உயரமான பசுமையான இடத்தை கொண்டிருந்தது.

“வழக்கமான நாள் போல பிரகாசமாக இருந்தது, மிகவும் அமைதியாக இருந்தது. தரையில் பனி படர்ந்திருந்தது. ஆனால் எனக்கு தெரியும் அது பனி இல்லை.” அப்பொழுது தான் என்னுடைய நண்பர் எனக்கு முத்தம் கொடுத்து எனக்கு உயிர் கொடுத்தார். அதன் பிறகு என்னிடம் மருத்துவர் கூறினார், மூச்சுத்திணறலிலிருந்து நான் உயிர் பிழைக்க 6 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது என தெரிவித்துள்ளார்.

அப்பாவிக் குடும்பத்தை வீதியில் தள்ளிய திணைக்களம் : போராடிய 14வயதுச் சிறுமி!!

 

அங்கவீம்முற்ற தந்தை மற்றும் தாயுடன் வாழும் 14 வயது சிறுமியொருவர் தங்களுக்கு நிம்மதியாக வாழ இடம் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் குறித்த சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களே நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானதா? என எழுதிய பதாகையினை ஏந்தியபடி கண்ணீருடன் சிறுமி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில், அம்பறை நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் குறித்த இடத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய். தாய் மற்றும் தந்தையுடன் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு அருகில் வீட்டைக் கட்டி வசித்து வந்துள்ளார்.

குறித்த இடம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமானது எனக் கூறி குறித்த இடத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தால் குறித்த குடும்பம் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 700 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில். பொலிஸ் விசேட அதிரடிப்படை, அம்பறை மனநல வைத்தியசலை மற்றும் நகர சபை என்பன அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட குறித்த குடும்பத்திற்கு அப்பகுதி கிராம உத்தியோகத்தர் தான் வசிக்கும் இடத்தில் ஒரு பகுதியில் தங்குவதற்கு இடம்கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதாகக் கூறி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறுமியின் தாய்க்கு எதிராக அம்பாறை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சிறுமியின் தாய் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதிக் காணி ஆணையாளர், தக்ஷிலா குணரத்ன குறித்த இடத்திற்கு சென்று சிறுமியுடன் கலந்துரையாடி, அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குறித்தசிறுமி மாவட்ட செயலாளரிடம் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீய ஆவிகள் என்ற பெயரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை!!

 

மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை

சீனாவில் திருமணத்திற்கு முன்னதாக மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகள் விரட்டப்படும் சடங்கு என்ற பெயரில் மணமகனை அடித்து உதைத்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

Ai Guangtao என்ற 24 வயது நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சீனாவில் ஒரு பகுதியினர் திருமணத்திற்கு முன்னர் மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகளை விரட்ட வேண்டும் என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு மணமகன் Ai Guangtao இன் உடலை மைகளை தெளித்தும், முட்டைகளை அடித்தும், கயிறு மற்றும் மூங்கில் தடிகளால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். வலி பொறுக்க முடியாத மணமகன் தலைதெறிக்க ஓடியும் அவரை விடவில்லை. இதில் நிலைகுலைந்து போன மணமகனை ஒரு சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை முடித்து வீடு திரும்பிய மணமகன் சில நாட்கள் கழித்து தனிப்பட்ட முறையில் திருமணம் செய்துள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை தயாரித்த சீனா : அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

 

அதிர்ச்சியில் உலக நாடுகள்

அமெரிக்கா உருவாக்கிய ராட்சத வெடிகுண்டுக்கு போட்டியாக, சீனா தற்போது உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுதம் இல்லாத குண்டை தயாரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா வீசிய ராட்சத வெடிகுண்டு ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று அழைக்கப்பட்டது.

இதற்கு ஜிபியு-43/பி என பெயரிடப்பட்டிருந்தது. சுமார் 103 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இது 9,800 கிலோ எடையும், 9 மீற்றர் நீளம் மற்றும் ஒரு மீற்றர் விட்டமும் கொண்டதாகும்.

அத்துடன் இந்த வெடிகுண்டு, GPS கருவியின் வழிகாட்டுதலுடன் சென்று இலக்கை தாக்கி அழிக்க வல்லது என்று கூறப்பட்டது. மேலும் 11 டன் வெடிபொருள் ஏற்படுத்தும் சேதத்திற்கு இணையான அழிவை இது உண்டாக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்பு துறை இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ராட்சத குண்டு மிகப் பெரிய அளவில் வெடிப்பை ஏற்படுத்தும் என்றும், இது தொடர்பான வீடியோவை சீனா கடந்த டிசம்பர் இறுதி வாரத்திலேயே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 கோடி ருபாய் பணத்துடன் தலைமறைவான சணச வங்கியின் பெண் முகாமையாளர்!!

பலாங்கொட மொரகெல- உடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சணச வங்கியில் 15கோடி ரூபாய் பணத்துடன் தப்பியோடிய குறித்த வங்கியின் முகாமையாளராக பெண்ணை தேடி பின்னவல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.பீ.அமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாங்கொட நீதிமன்றில் இது தொடர்பான அறிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்தபெண்ணும் அவரது கணவரும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாலத்திற்கு அடியில் கிடைத்த பிரபல நடிகையின் உடல் : கணவரே கொலை செய்தாரா?

 

பிரபல நடிகையின் உடல்

பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே Goira Matha என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தின் அடியில் கிடந்துள்ளது. சிம்ரன் இதுவரை பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

உடலை கண்டதும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் பார்த்தபோது அவரது முகம் மற்றும் தலையில் அதிகம் காயங்கள் இருந்துள்ளது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என போலீசார் துப்பறிந்து வருகின்றனர். நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என புகார் கூறியுள்ளனர்.

வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பலபாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்களை சந்தித்து மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலை முடித்துக்கொண்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்!!

 

42 வயதில் 21 குழந்தைகள்

பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு உணவளித்து, படிக்கவைத்து, திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் விலைவாசி அப்படி.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த ரஃபோட் என்ற பெண் தனது 42வது வயதில் 21வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 13வது வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் குழந்தைகளை வளர்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனி குழந்தையை பெற்றெடுக்க போவதில்லை எனவும் விரைவில் குடும்ப கட்டுப்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆடை விற்பனை நிலையமாக மாறிய கிராம சேவையாளர் அலுவலகம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேனி ஒலுமடு கிராமசேவையாளர் அலுவலகம் நேற்றையதினம் (03.01.2019) ஆடை விற்பனை நிலையமாக மாறியமை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேனி ஒலுமடு மகாவித்தியாலத்தில் நேற்றையதினம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
இதனை கேள்வியுற்று வவுனியாவில் இயங்கிவரும் குறித்த ஓர் வர்த்தக நிலையத்தின் ஊரிமையாளர் வவுனியாவிலிருந்து பாடசாலை சீருடை துணி மற்றும் பாதணிகளை வாகனமொன்றில் ஏற்றிச்சென்று ஒலுமடு கிராம சேவையாளர் அலுவலகத்தினுள் (அனுமதியின்றி) வைத்து மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த கிராம சேவையாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டதினையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஒலுமடு கிராமசேவையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

இச் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் நான் சேனைப்புலவு கிராமத்தில் பதில் கடமையில் இருந்தேன். எனது அனுமதியின்றியே குறித்த விற்பனை நிலைய ஊழியர்கள் எனது அலுவலகத்தினை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளகோரி இன்றையதினம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இச் சம்பவம் தொடர்பாக கேட்டபோது, வவுனியா வடக்கு நெடுங்கேணி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டேழுந்து வந்து கொண்டிருக்கின்றோம். நெடுங்கேணியில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் விற்பனை செய்யும் ஐந்து வர்த்தக நிலையமும் பாதணிகளை விற்பனை செய்வதற்கு ஆறு வர்த்தக நிலையங்களும் உள்ளன.

இப்படியான மோசமான செயலை வவுனியா பெரிய வர்த்தகர்கள் செய்வது கவலையளிக்கின்றது. அன்றாடம் நாங்கள் சிறு லாபத்திற்காக வர்த்தக நிலையத்தினை நடாத்தி வருகின்றோம். எமது வயிற்றில் அடிப்பது போல் அமைந்துள்ளது.

எனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது இருப்பதுக்கு உரிய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

 

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா குமார் என்ற பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 2.97 கிலோகிராம் எடையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து சில வாரங்கள் கழித்து குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சளி, வயிற்று வலி மற்றும் விறைப்பு உள்ளிட்டவைகளால் குழந்தை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக சர் சுந்தர்லால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றுக்குள் இறந்த நிலையில் இரட்டை கருக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் திங்கட்கிழமையன்று குழந்தைக்கு ஒன்றரை மணிநேர அறுவைசிகிசிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக கரு அகற்றப்பட்டது.

கைகள், கால்கள், வயிறு, மார்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அந்த கருவின் புகைப்படத்தை தற்போது மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பலத்த சர்ச்சைக்கு மத்தியில் சபரிமலை சென்ற இலங்கைப் பெண்!!

 

இலங்கை பெண்ணொருவர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்த சம்பவத்தை இந்தியாவின் கேரள பொலிஸார் உறுதி செய்துள்ளார்கள்.

சகிகலா என்ற பெயருடைய 46 வயதுடைய பெண் நேற்றிரவு 18 படிகளில் ஏறி ஐயப்பனுக்கு பூஜை செய்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சபரிமலை தேவஸ்தானத்திற்கு மாதவிடாய் வயதுடைய பருவத்தைச் சேர்ந்த பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தத் தடை அரசியல் யாப்பிற்கு முரணானது என இந்தியாவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்றத் தீர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.

எனினும் மருத்துவ சான்றிதழுடன் சென்ற இலங்கை பெண்ணுக்கு சபரிமலை ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சகிகலா கருத்து வெளியிடுகையில்,

“நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்து விட்டேன்.

அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன.

நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் ஒரு வருடமாக அதிபரின்றி இயங்கும் பாடசாலை!!

வவுனியா – புளியங்குளம், முத்தமிழ் வித்தியாலத்தில் ஒரு வருடமாக அதிபர் நியமிக்கப்படாமை காரணமாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்றைய தினம் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில், கடந்த ஒரு வருடமாக எமது பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படவில்லை. முன்னர் கடமையாற்றிய அதிபர் இடமாற்றம் பெற்று சென்றிருந்தாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே பாடசாலை தற்போதும் இயங்கி வருவதாக பாடசாலை சமூகம் எமக்கு கூறுகின்றது.

தற்போது பாடசாலைக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் பாடசாலையின் மாணவர்களையோ, உபகரணங்களையோ சரியான முறையில் கவனிப்பதில்லை. பாடசாலையின் சிற்றூழியர், காவலாளி போன்றோர் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்வதில்லை.

பாடசாலையின் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயற்பட்டு வருகின்றனர். எமது பாடசாலை பின் தங்கிய பகுதியில் காணப்பட்டாலும் கடந்த காலங்களில் பல்வேறு துறைகளிலும் வெற்றி நடை போட்டமை யாவரும் அறிந்ததே.

தற்போது அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் காரணம் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் ஒருவர் இல்லாமையே என்பதை எம்மால் ஊகிக்க முடிகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளிற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வலயக்கல்வி பணிப்பாளர் எமக்கு ஒரு வாரத்திற்குள் நல்ல தீர்வு வழங்குவாராயின் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அந்த மகஜரில் தெரிவிக்கபட்டுள்ளது.

மகஜரை பெற்றுக் கொண்ட வடக்கின் வலயகல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர், இது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் இராமியன்குளம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04.01) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலப்பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர்பிரிவிற்குட்பட்ட இராமியன்குளம் பகுதியில் உள்ள காணிகள் கடந்த 1965ஆம் ஆண்டு தொடக்கம் அக்கிராம மக்களால் விவசாயம் மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

போர் சூழலால் வெளியேற்றப்பட்ட அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களில் குடியேறியிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்க அதிகளவிலான நிலங்கள் தேவைப்பட்டதையடுத்து அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் இராமியன்குளம் பகுதி நிலத்தை விட்டுத்தருமாறும் இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதும் அவர்களது நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 2013ம் ஆண்டளவில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தபட்டபோதும் இராணுவத்தினர் குறித்த நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் இதுவரை குறித்த நிலங்கள் விடுவிக்கப்டவில்லை.

இதனை கண்டித்தும் தமது நிலங்களை இராணுவத்தினர் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விடுவிக்குமாறு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இராமியன்குளம் மக்கள் செட்டிக்குளம் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன் இராணுவம் தமது காணிகளிலிருந்து ஏன் வெளியேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள் தங்களின் விளைநிலங்களில் பயிர் செய்யும் இராணுவம் அம் மரக்கறிகளை தங்களுக்கே விற்று பணம் சம்பாதிப்பதாகவும் மக்கள் வேலையின்றி கூலிவேலை தேடி அலைவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் இராணுவ முகாம்களை அண்டிய பிரதேசங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் தங்கள் கால்நடைகளை இராணுவத்தினர் சுட்டு கொல்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அழகில் மயங்கிய இளைஞர்கள் : ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமணத்துக்கு பெண் தேடி வந்துள்ளார்.

இதையறிந்த புரோக்கர் கண்ணன் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரில் தனக்கு தெரிந்த ரம்யா என்ற ஒரு பெண் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறி சக்திவேலிடம் அந்த பெண்ணின் போட்டாவை காட்டி உள்ளார்.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய சக்திவேல் உடனடியாக நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு செய்ய கேட்டுள்ளார்.

அதன் படி 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு 1 பவுனில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது சக்திவேலிடம் இருந்து கமிஷனாக 25 ஆயிரம் ரூபாயை பெற்று சென்ற புரோக்கர் கண்ணன் அத்தோடு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த தேதியில் திருமணமும் நடக்காததால் அந்த பெண்ணின் சொந்த ஊருக்கு தேடிச்சென்ற போது அப்படி ஒரு பெண் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் புரோக்கர் கண்ணன் அதே பெண்ணின் புகைப்படத்தை காட்டி பெயர் காவ்யா என்று கூறி ஆத்துர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஸ்வநாதன், விவசாயி பாலமுருகன் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்து ஆளுக்கு ஒரு பவுன் மோதிரத்தையும், கமிஷனாக தலா 25 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றியது வெளிச்சத்துக்கு வந்தது.

அழகான பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தும், திருமணம் ஆகாத சோகத்தில், பணத்தையும் இழந்து தவித்த அந்த முதிர் காளையர்கள் மூவரும் புரோக்கர் கண்ணனை தேடி வந்தனர்

இந்த நிலையில் ஆத்தூர் அடுத்த கள்ளகுறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கேரள பதிவெண் கொண்ட காரில் வேறொரு ஒரு பெண்ணுடன் புரோக்கர் கண்ணன் சுற்றுவதை அறிந்து அங்கு சென்ற மூவரும் புரோக்கர் கண்ணனை காருடன் மடக்கி பிடித்தனர். கண்ணன் மாற்று திறனாளியாக இருந்தாலும் ஏமாற்றி சென்ற ஆத்திரத்தில் அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவருடன் காரில் வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தருவதாக கூறி கள்ளகுறிச்சி பகுதியில் ஒரு இளைஞரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் கண்ணன் இதுவரை எத்தனை பேரிடம் இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விரிவாக விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த புரோக்கர் ஹரி மற்றும் மூன்று பவுன் மோதிரங்களுடன் தலைமறைவான அந்த பெண்ணையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் : இருவர் மரணம் : இன்னொருவர் படுகாயம்!!

 

இருவர் மரணம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மற்றுமொருவர் இன்று உயிரிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்தைச் சேர்ந்த 71 வயதான சின்னத்தம்பி கந்தையா என்பவரே இன்று உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் விபத்து ஏற்பட்ட நிலையில் மீசாலையைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி விமலரூபன் ஸ்தலத்தில் உயிரிழந்தார். விபத்தின் போது படுகாயம் அடைந்த மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் டிப்பருடன் ஹைஏஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கொழும்புக்குச் சென்று கட்டுப்பணம் செலுத்தித் திரும்பிய வழியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3.45 மணியளவில் முகமாலைப் பகுதியில் ஒரு டிப்பர் வாகனத்தைப் பொலிசார் மறித்துச் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஹைஏஸ் மோதியுள்ளது.

வாகனத்தில் பயணித்த மூவரும் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். விமலரூபன் ஸ்தலத்தில் உயிரிழந்ததை பளை வைத்தியசாலை உறுதி செய்தது. ஏனைய இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சின்னத்தம்பி கந்தையா சிகிச்சை பயனளிக்காத நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த விபத்து தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட நாய் : ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு!!

 

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட நாய்

உயிருடன் நாய் ஒன்று எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாளை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Save a Pet With Love என்ற மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட, சாலி என்ற பெயருடைய நாயொன்றை, அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

உயிருடன் எரிந்துகொண்டிருந்த நாயை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு கால் நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நாளை (04) நீர்கொழும்பு பிரதேசத்தில், மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், மிருகங்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் அனைத்துக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த நாயை இவ்வாறு தீயிட்டு கொழுத்திய நபர் பற்றி தகவல்கள் தெரியவருமாயின், உடனடியாக அறிவிக்கும்படியும், குறித்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுமென்றும் அறிக்கப்பட்டுள்ளது.

save a pet with love அமைப்பால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.