கொழும்பில் பெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நுகேகொடயில் தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண்களின் அந்தரங்க பகுதிகளை அதன் முகாமையாளர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
தொழில் முகவர் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், பல வருடங்களாக பெண்களை ஆபாசமாக அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.
பல பெண்கள் இந்த நபரின் இரகசிய காணொளிக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொழில் எதிர்பார்ப்பில் வரும் பெண்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை, குறித்த நபர் மிகவும் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார்.
அலுவலக முகாமையாளரின் மேசைக்கு கீழ் ஒரு பையை வைத்து அதற்குள் கையடக்க தொலைபேசி ஒன்றின் கமராவை இயக்கிய நிலையில் மறைத்து வைக்கப்படுகின்றது.
அதற்கு நேராக பெண்கள் அழைக்கப்படுகின்றார்கள். அந்த பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களின் அந்தரங்க பகுதிகள் அந்த கமராவில் பதிவாகின்றது.
அந்த கமரா சரியாக படம் பிடிக்கின்றதா என்பதனை குறித்த முகாமையாளர் தொடர்ந்து சோதனையிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடியான கும்பல்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெண்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் சேவை செய்யும் நபர்களுக்காக பிரித்தானிய அரசு வருடாந்தம் விருது வழங்கி வருகிறது.
இந்தப் பட்டியலில் OBE – Order of the British Empire என்ற விருது இலங்கையை சேர்ந்த ட்ரூடி நிமாலி செனவிரத்ன என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
நிமாலி பிரித்தானியாவில் மனநல வைத்தியராக செயற்பட்டு வருகின்றார். நிமாலியின் தந்தை வைத்தியராக செயற்பட்டதுடன் அவரது தாயார் ஒரு தாதியாக செயற்பட்டுள்ளார்.
7 வயதாக இருக்கும் போது பிரித்தானியா சென்ற நிமாலி, வைத்தியராக பட்டம் பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள மோட்ஸ்லி தேசிய சுகாதார அறக்கட்டளையில் நிமாலி பணியாற்றி வருகிறார். அவர் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பின்னரும் மன நல ஆலோசனை மற்றும் சுகாதார அபிவிருத்திக்காக செயற்பட்டு வரும் வைத்தியராகும்.
விருது வழங்கப்பட்டமை தொடர்பில் நிமாலி பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டார்.
தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இவ்வாறு ஒன்று நடக்கும் என தான் நினைக்கவே இல்லை என்றும் நிமாலி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கள் வவுனியா வடக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஏனைய மாவட்டங்களிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வவுனியா வடக்கிற்கு வழங்கபடவில்லையென நேற்று வவுனியா வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் பிரதேசசபையின் தவிசாளர் ச.தணிகாசலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளமானது எமது பிரதேசத்தை மிகுந்த பாதிப்பிற்குள்ளும், இடர்பாடுகளிற்குள்ளும் தள்ளியுள்ளது. கடந்த காலத்தில் எம்மால் முடிவுறுத்தபடும் நிலையில் இருந்த சில அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெறும் நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டமையால் பாரிய பின்னடைவுக்களுக்குள்ளாகியுள்து.
இதனால் பல இலட்சம் ரூபா நிதி வீணாகிபோயுள்ளது, வெள்ளபாதிப்புகளால், விவசாயகாணிகள் பல அழிவடைந்துள்ளதுடன், தொடர்மழை காரணமாக கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போன்றனவும் அதிகளவில் இறந்திருக்கின்றது. யானைகளின் தொல்லைகளும் அதிகரித்த நிலையில் உள்ளது.
குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட மாறாயிலுப்பை, கந்தரோடை, காஞ்சிராமோட்டை, ஊஞ்சல்கட்டி மக்களுக்கான உதவிகள் மேலும் தேவைப்படுகின்றன.
மக்கள் தமது வீடுகளில் குடியேறுவதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது வீடுகள் வசிப்பதற்கு ஏற்றவையானவையாக இல்லை. பாதிக்கபட்ட வீதிகள் என்ற வகையில் 37 வீதிகள் காணப்படுகின்றது. அது தொடர்பான தகவல்களை நாம் அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம்.
தற்போது அவசர நிதியாக 20 மில்லியன் ரூபா எமக்கு தேவைபடுகின்றது. இது தொடர்பாக அரசிற்கு அழுத்தங்களை வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியபடுத்தியுள்ளோம்.
அரச நிர்வாகமோ, அமைச்சரைவையோ, உயர்மட்ட தலைவர்களோ எமது பிரதேசம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் மனவருத்ததிற்குரியது. போர் பாதிப்புகள் உட்பட பல விதமான பாதிப்புகளை சந்தித்துள்ள வவுனியா வடக்கை புறந்தள்ளபடுவதையிட்டு நாம் விசனம் அடைகின்றோம்.
போரிற்கு பின்னர் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்ட நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களிற்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் வவுனியா வடக்கிற்கு வழங்கபடவில்லை.
அத்துடன் எமது பிரதேசத்தில் உள்ள சில வட்டாரங்களினால் பூதாகாரமான பிரச்சனைகள் உருவாகி வருகின்றது. அதாவது 14 வட்டாரங்களை கொண்ட எமது பிரதேச சபையிலே நான்கு வட்டாரங்களான கல்யாணபுர, தெவிட்டநுவர, போகஸ்வெவ , சம்பத்நுவர போன்ற பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டதின் நிர்வாக பிரிவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் உள்ளுராட்சி சபை எல்லையாக வவுனியா வடக்கு நிர்ணயிக்கபட்டிருக்கிறது. இதனால் அபிவிருத்தி திட்டங்களிற்கான நிதி பகிர்வு, உட்கட்டுமானம், அபிவிருத்தி போன்ற விடயங்களில் பல்வேறு சிக்கல் நிலைமைகளை சந்தித்து வருகின்றோம். அதற்கான விசேட நிதிகள் எவையும் எமக்கு எந்த வழியிலும் கிடைப்பதில்லை.
இதனை எப்படி தீர்ப்பது என்பது எமக்கு தெரியவில்லை. இது அரசியல் காரணங்களா அல்லது வேறு உள்நோக்கங்களா என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களால் ஒதுக்கப்படும் நிதிகளை வைத்துக்கொண்டே ஒட்டுமொத்த பிரதேசத்தின் அபிவிருத்தியையும் செய்யவேண்டியுள்ளது.
இவ்வட்டாரங்களில் பெரும்பாண்மையின மக்களே வாழ்கின்றனர். மகாவலி அதிகாரசபை என்ற நிர்வாக அலகு அங்கு இருக்கிறது. அப்பகுதியில் எந்த அபிவிருத்தியை மேற்கொள்வதாக இருந்தாலும் மகாவலி அதிகாரசபையிடம் அனுமதி பெறவேண்டிய நிலை இருக்கிறது.
அப்பகுதியில் இருந்து பிரதேச சபைக்கான வரிப்பணம் கிடைப்பது மிகவும் குறைவு. ஒரு சில கடைகளில் இருந்து மாத்திரமே வரி அறவிட்டு வருகின்றோம். உதாரணமாக காணி முத்திரை தீர்வைவரி, போக்குவரத்து தண்டபணம் போன்றவை அனுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு போன்ற பகுதிகளிற்கே செல்கின்றது. அது நியாயமானது அல்ல சட்டரீதியற்றது.
பல்வேறு தரப்புகளிற்கு இவ்விடயம் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளோம். அமைச்சு மட்டதிலும் இது தொடர்பான சந்திப்புகளை மேற்கொண்டுள்ளோம். அமைச்சினுடைய சட்டவல்லுனர் ஒருவர் சொல்கிறார் இப்படி ஒரு நிர்வாக அலகு இருப்பதாக தங்களிற்கே தெரியாது என்று. நாம் நியாயமான விடயங்களை கூறவிளையும் போது அது வேறுவிதமாக அர்த்தம் கொள்ளபடுகின்றது. தட்டிக்கழிக்கபடுகின்றது.
எனவே நகர் பகுதிகள் போல எங்களிற்கான நிதி உதவிகள் அதிகரிக்கபடவேண்டும் என்பதே எமது வேண்டுகோள் என்று மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு பாடசாலை மாணவி ஒருவர் வித்தியாசமான கண்டுபிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார். தருஷி விதுஷிக்கா ராஜபக்ச என்ற 17 வயதான மாணவி சுற்றுச் சூழலுக்கு நெருக்கமான பை ஒன்றையே தயாரித்துள்ளார்.
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலீத்தின் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவியின் கண்டுபிடிப்பு அந்த பிரச்சினையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொலீத்தின் பைகள் வீசப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய துணி வகை ஒன்றின் உதவியுடன் அவர் இந்த பையை தயாரித்துள்ளார். அந்த பையை சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் சூரிய ஒளி ஊடாக அழிந்து போய்விடும் எனவும் அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தருஷி தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தருஷி பல்வேறு கண்டுபிடிப்புகளின் ஊடாக சாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது கண்டுபிடிப்பை பிபிசி உலக சேவை பாராட்டி அவரது கற்கை நடவடிக்கைகளுக்கு புலமை பரிசில் ஒன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று (04.01.2019) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர்பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வடபிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் பணியாற்றி வருவதாகவும்,
இதுவரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வடபிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம். இன்றுவரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் எமது நன்மையினை கருதி வடபிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக போக்குவரத்து செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் என்று உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை வடக்கைச் சேர்ந்த ஒருவர் மன்னார் பகுதியில் விவசாயப் போதனா ஆசிரியராகக் கடமையாற்றுகிறார்.
அவரது தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் நேற்றிரவு 8 மணியளவில் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
வீட்டின் முன்கதவை ஆயுதங்களால் கொத்தி அதனை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு வாள்களைக் காண்பித்து மிரட்டியுள்ளது.
அந்த சமயம் விவசாயப் போதனா ஆசிரியர், அங்கிருந்த இளம் பெண்ணை இழுத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசர சேவை 119 ஆகியவற்றுக்கு பெண்ணின் உறவினர்களால் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் காதல் விவகாரமாக இருக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கொடிகாமம் பொலிஸாரால் பதிலளிக்கப்பட்டதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, கடத்தல் கும்பலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் துரத்திச் சென்ற போது, கொடிகாமம் சந்தியில் பொலிஸார் கடமையிலிருந்த நிலையில் கும்பல், பெண்ணை மோட்டார் சைக்கிளிலிருந்து வாகனத்துக்கு மாற்றி ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ஆணைக்கோட்டைப் பகுதியில் கடத்தல் கும்பலின் வாகனம் பயணித்த போது, பெண்ணின் அவலக் குரல் கேட்டு அந்தப் பகுதி இளைஞர்கள் வாகனத்தை துரத்தி மடக்கப்பிடித்தனர். பெண்ணை மீட்டனர். பெண் மீட்கப்பட்டதை அடுத்து கடத்தல்கார்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.
அந்நிலையில், பெண் கூறிய தகவலின் அடிப்படையில் அவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு 10 மணியளவில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன், கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கை பெறுவது பொலிஸாரின் கடமை. எனினும் கொடிகாமம் பொலிஸார் இன்று நண்பகலுக்கு பின்னரே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர் என தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தாமல் அந்தப் பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தியமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் மீது பெண்ணின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்த பின்னரே பொலிஸார் இன்று மாலை விடுவித்துள்ளனர்.
எனினும் முறைப்பாட்டுக்கு அமைய விவசாயப் போதனா ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வழங்கப்பட்ட போதும் கடத்தல் கும்பலைக் கைது செய்வதற்கு கொடிகாமம் பொலிஸார் முயற்சிக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
மும்பையில் செயல்பட்டு வரும் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரத்தின் முகம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 1,500 ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் காலத்தில் பம்பாயின் சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து வந்த காமத்தி எனும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கே தங்கவைக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், பிரிட்டிஷ் வீரர்கள் இங்கிருக்கும் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
அதுவே நாளடைவில் சிவப்பு விளக்குப் பகுதியாக உருமாற்றமடைந்தது என்பது காமாத்திபுரத்தின் வரலாறாக கூறப்படுகிறது. முன்பு அது அந்தந்த வசதிக்காரர்களுக்கு ஏற்றார்போல தொழில் இருந்து வந்தது, இப்போது பணக்காரர்களுக்காக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உயரும் ரியல் எஸ்டேட் மதிப்பு இங்குள்ள 500 சதுர அடி நிலத்தை இரண்டு கோடி ரூபாய் மதிப்பு மிக்கதாக மாற்றியிருக்கிறது. 250 சதுர அடி வீடுகள் 25 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், இனியும் எல்லாத் தரப்பினருக்குமானதாக பாலியல் தொழில் இங்கு நடத்துவது சிரமம் என கூறுகின்றனர். பாலியல் தொழில் இவ்வளவு வேகமாக வீழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும்கூட இன்னும் கும்பல்களின் ஆதிக்கம் முழுமையாக மாறவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
கியாஸ் கசிவினால் ஏற்பட்ட ரஷிய கட்டிட விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்த நிலையில் 11 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பில், இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் விபத்து நடந்தது.
37 பேர் உயிர் பலி வாங்கிய ரஷிய கட்டிட விபத்தில் தொடர்ந்து மீட்பு குழுவினர் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடைந்த பகுதிகளை அகற்றி இறந்தவர்களின் உடலை மீட்கும் பணிகளில் இருந்த மீட்பு குழுவினருக்கு, குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்த அந்த பகுதியை அகற்றினர்.
இந்நிலையில் அங்கு ஒரு 11 மாத குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர். அந்த குழந்தையை மீட்டு ஆடையை மாற்றி ஒரு போர்வையால் முடியவாறு ஆம்புலன்ஸ் நோக்கி ஓடும் காட்சி வெளியாகி உள்ளது.
மருத்துவமனை தரப்பில் குழந்தையின் தலை பகுதியில் அடிபட்டுள்ளது என்றும். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாய் தனது 3வயது குழந்தையுடன் விபத்திலிருந்து தப்பி உள்ளார். அவர் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தையை கண்டு ஆறுதல் அடைந்தார்.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் விபத்து நடந்த கட்டிடத்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று திரும்பிய 15 வயது சிறுமி மர்ம நோயால் அவதிப்பட்டு வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Missouri பகுதியைச் சேர்ந்தவர் Jordyn Walker, 15 வயதான இவர் 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அதன் பின் வீடு திரும்பிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. வயிற்று போக்கின் போது, அவருக்கு இரத்தம் வந்துள்ளது. இதனால் அவர் Missouri-ல் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சென்ற காத்திருந்த மூன்று, நான்கு மணி நேரத்திலே தன்னுடைய பார்வை திறனை இழந்துள்ளார்.
அதாவது சாதரணமாக கண்களில் இருகும் Pressure-ன் அளவு 12-22 மில்லி மீற்றர் மெர்குரி இருக்குமாம், ஆனால் இவருக்கு 85 மில்லி மீற்றர் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கண்கள் இரத்த வழிந்து சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. அவருக்கு என்ன பிரச்சனை? இது என்ன வகை நோய்? என்பதை மருத்துவர்கள் அறியமுடியாமல் தவிப்பதாக பிரபல ஆங்கில பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த நோயின் காரணமாக அவருக்கு சுவை, வாசனை போன்ற உணர்வுகளை இழந்து தவித்து வருகிறார். தற்போது இவர் கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவர் சுற்றுலா சென்று திரும்பு போது, கப்பலில் தான் வந்துள்ளார். அப்போது தான் ஏதோ ஒரு பிரச்சனை இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு தான் அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக Jordyn Walke-ன் பெற்றோர் கூறியுள்ளனர். Jordyn Walker-ன் சிகிச்சைக்காக Go Fund Page மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது முன்னாள் கணவனுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.
Mary Zeigler – Bill Henrichs ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். 14 வயதில் காதலர்களாக மாறிய இவர்கள் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டனர்.
சுமார், 24 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ஆதாரமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டு, வேறு ஒரு மணவாழ்க்கையை அமைத்துக்கொணடனர்.
விவாகரத்துக்கு பிறகு சந்தித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் கணவர் Bill Henrichs சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதனை அறிந்த முதல் மனைவியான Mary Zeigler தனது சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான விமான விபத்தில் பலியானோர்களின் பட்டியலை விமான பாதுகாப்பு இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி 556 பேர் கடந்த ஆண்டு மட்டும் விமான விபத்தில் பலியாகி உள்ளனர். இது 2017ஆம் ஆண்டைவிட மிகவும் அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு 44 பேர் மட்டுமே விமான விபத்தில் பலியாகி உள்ளனர்.
2018 ஆண்டில் நடைபெற்ற விமான விபத்தில் லையன் ஏர்-க்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஜகார்தாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இந்த விபத்து கடந்த ஆண்டின் மோசமான விமான விபத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கியூபாவில் நடந்த விமான விபத்து ஒன்றில், 112 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதத்தில் ஈரான் நாட்டின் ஜாக்ரோஸ் மலையில் மோதிய விமானம் நொறுங்கியதில் 66பேர் பலியாகினர். இதேபோல், மார்ச் மாதத்தில் நேப்பாள் நாட்டின் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் 51 பேர் பலியாகினர். இப்படி மொத்தம் 15 விமான விபத்துக்கள் நடந்துள்ளதாக விமான பாதுகாப்பு இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விமான விபத்து வீதம் 10 ஆண்டுகளுக்கும் முன் இருந்தது போலவே இருந்திருந்தால், கடந்த ஆண்டு 39 மோசமான விபத்துகள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று விமான பாதுகாப்பு இணையதளத்தின் முதன்மை செயல் அதிகாரியான CEO Harro Ranter தெரிவித்தார்.
அதேபோல் 2000ஆம் ஆண்டின் விபத்து வீதத்தின்படி, 64 மோசமான விபத்துகள் நிகழ்ந்திருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக விமான பாதுகாப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்றார் அவர். கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்துகள்தான் பெரும் பிரச்சினையாக இருந்ததாகவும், கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில், அத்தகைய விபத்துகள் 10 நிகழ்ந்துள்ளன என்றும் விமான பாதுகாப்பு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த, கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்துகள் என்பவை, இயந்திரக் கோளாறுகள், மனித தவறுகள், சுற்றுப்புற இடையூறுகள் போன்றவற்றால் நிகழ்ந்திருக்கலாம். இத்தகைய விபத்துகளில் பெரும்பாலானவை, விபத்தில் சிக்கிய யாரையும் காப்பாற்ற முடியாத அளவு மோசமாக இருந்தன என்கிறது விமான பாதுகாப்பு இணையதளம்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன் என இலங்கையில் பிறந்த நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் பிரதி மேயரான கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்குள்ள பெண்கள், இளைஞர் யுவதிகளுக்கு முக்கியத்துவமளித்து சந்திப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளேன்.
நாமனைவரும் சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக நம்பிக்கை, உண்மையைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கைக்கான விஜயம் குறித்து கம்சாயினி குணரத்னம் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரமாக சிந்திப்பதிலும் மக்களுக்கு இருக்கும் அதிகாரத்திலும் நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
அத்தோடு ஜனநாயகத்தின் மீது நம்மனைவருக்கும் இருக்க வேண்டிய நம்பிக்கையின் முக்கியத்துவம் தொடர்பிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
ஜனநாயகம் என்பது வெறும் சொல் என்பதற்கும் அப்பாற்பட்டது என்பதுடன் ஜனநாயகம் என்பது எப்போதும் முடிவுறாதவாறு தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயன்முறையாகும்.
ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் என்ற வகையில் ஒஸ்லோவை பசுமையாக்குவதிலும் செழிப்பாக்குவதிலும் புத்தாக்கம் நிறைந்ததாக மாற்றியமைப்பதிலும் அனைவருக்கும் தங்குவதற்கான இடமொன்றை உருவாக்குவதிலுமே எனது பணியின் மிகுதியான காலத்தை செலவழித்திருக்கின்றேன்.
சிறந்த நாடொன்றில் வாழ்வதற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு இவை இன்றியமையாதனவாகும்.
அன்றாடம் நாமாக முன்வந்து நம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும். எமக்காவும் எமது எதிர்கால சந்ததியின் நன்மைக்காகவும் நாம் அதனைச் செய்ய வேண்டும்.
நான் பதினொரு வருட காலமாக அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன். உலகம் முழுவதும் சென்று வருவதற்கும், எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் அதன்மூலம் வாய்ப்பு அமைந்ததுடன் என்னுடைய சொந்த நாடான நோர்வேயிலேயே தூதுவராக இருந்து, சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.
இம்முறை நான் பிறந்த நாடான இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன். என்னுடைய அனுவங்களை சமூகத்தின் கடைநிலை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதன் ஊடாக அவர்களை சிறந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுதலை வழங்க விரும்புகின்றேன்.
உன்னுடைய நாடு உனக்கு என்ன செய்ய முடியும் எனக் கேட்காதே, உனது நாட்டிற்காக உன்னால் என்ன செய்ய முடியும் எனக் கேட்டுப்பார் என்ற மறைந்த ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடியின் வார்த்தைகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இம்மாதம் 3 – 12 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வுள்ளேன். அங்கு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளேன்.
அப்பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன். குறிப்பாக பெண்கள், இளைஞர் யுவதிகளுக்கு முக்கியத்துவமளித்து சந்திப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளேன்.
நாமனைவரும் சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக நம்பிக்கை, உண்மையைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு வீடுகளில் திருடிய நபர் ஒருவரை கிராமவாசிகள் மடக்கிப் பிடித்து தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தள பொலிஸ் பகுதிக்குட்பட்ட உனாவட்டுன பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் இன்று அதிகாலை நுழைந்து வீட்டினுள் இருந்த பொருட்களையும் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடியதுடன் பின்னர் மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் கிராமவாசிகள் குறித்த திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைகள் மற்றும் கால்களை கட்டி தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் குறித்த நபரை புத்தள பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரும் மற்றொருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மற்ற நபர் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புதுருவாகல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் இன்று சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தள பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கிய இரு இளைஞர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவபொம்மையொன்று வவுனியா எ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உருவபொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரு இளைஞர்களை நேற்றையதினம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு இளைஞர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அவ்விடத்திலிருந்த பொலிஸ் உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் குமரபிரசாத். இவர் தன்னுடைய 5 வயது மகனுடன் சென்று, ஒரகடம் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி சாலையிலேயே குடித்து உள்ளார்.
அப்போது போதை தலைக்கேறியதால், இவர் சாலையிலே படுத்து உறங்கியுள்ளார். இதனைக் கண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுவனை கடத்திச் சென்றுள்ளார். வெளியில் சென்ற கணவன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அவரின் மனைவி முருகம்மாள், மகனையும், கணவனையும் தேடிச் சென்றுள்ளார்.
அப்போது கணவன் அங்கிருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டு, மகனை எங்கே என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு போதை அதிகமாகியதால், சரிவர கூறாமல் இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் மகன் கடத்தப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து அருகில் இருக்கும் ஒரகடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் அங்கு பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவைப் பார்த்த போது, சிறுவனை அடையாளம் தெரியாத நபர் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதைக் கேட்டு மனைவி முருகம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த கணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்ததால், அவரது மனைவி, சந்தோசமாக வாழ வந்தேன், இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு சுதா, சினேகா என இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணனின் கூட்டாளியாக சில ஆண்டுகளாக முன்பு இருந்து வந்தார்.
கடந்த 2000-ம் ஆண்டில் மிகப் பெரும் ரவுடியாக வலம் வந்த சந்தானம், சில காரணங்களுக்காக திருந்தி வாழத் துவங்கி, பெயிண்டராக வாழ்ந்து வந்தார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை, அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு அண்ணாநகர் வழியே இவர் சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள், மிளகாய் பொடியை தூவி சரமாரியாக சந்தானத்தை வெட்டியுள்ளனர். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், பிரபல ரவுடி ராதாவின் கூட்டாளியான சந்தானம், சில ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்தார். மனைவி சுதாவுடன் குடியிருந்தார். அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள சிலருடன் சந்தானத்துக்கு தகராறு இருந்துவந்துள்ளது.
இதனால் பழிக்குப் பழிவாங்க சந்தானத்தை அந்தத் தரப்பு கொலை செய்துள்ளது. அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சந்தானத்தின் அம்மா ஷீபாராணி கூறுகையில், என்னுடைய மகனைக் கொலை செய்தவர்கள் பலரையும் வெட்டிவிட்டு சிறைக்குச் சென்றவர்கள்.
என் மகன் சில ஆண்டுகளாக தான் உண்டு, அவன் வேலை உண்டு என திருந்தி வாழ்ந்து வந்தான். அவனை இப்படி அநியாயமாக கொலை செய்துவிட்டார்களே, இவர்கள் எல்லாம் சிலரின் செல்வாக்கில் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் சந்தானத்தின் மனைவி சுதா கூறுகையில், எவ்வளவு பேரை இப்படி கொல்லப்போகிறார்கள்? சந்தோஷமாக வாழவந்தேன். இன்று எனக்கு வாழ்க்கை இல்லை என்று கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.